Wednesday, December 28, 2011

போ நீ போ - தனுஷ்


போ நீ போ
போ நீ போ
தனியாக  தவிக்கின்றேன்
துணை வேண்டாம்  அன்பே  போ
பிணமாக  நடக்கின்றேன்
உயிர்  வேண்டாம்  தூரம்  போ
நீ  தொட்ட  இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ

இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் பெண்ணே போ
உயிரோடு  விளையாட  விதி  செய்தாய் அன்பே போ

உன்னாலே  உயிர் வாழ்கிறேன்
உனக்காக  பெண்ணே
உயிர் காதல் நீ காட்டினால்
வாழ்வேனே  பெண்ணே
இதுவரை  உன்னுடன்  வாழ்ந்த  என்  நாட்கள்
மறுமுறை  வாழ்ந்திட  வழி  இல்லையா
இருள்  உள்ளே  தேடிய  தேடல்கள்  எல்லாம்
விடியலை  காணவும்  விதி இல்லையா

போ நீ போ
போ நீ போ

என் காதல் புரியலையா
உன்  இஷ்டம்  அன்பே போ
என் கனவு  கலைந்தாலும்
நீ இருந்தாய்  அன்பே போ
நீ  தொட்ட  இடமெல்லாம்  எரிகிறது  அன்பே போ
நான்  போகும்  நிமிடங்கள்  உனக்காகும்  அன்பே போ

இது  வேண்டாம் அன்பே போ
நிஜம்  தேடும்  அன்பே போ
உயிரோடு  விளையாட  விதி  செய்தாய் அன்பே போ

தனியாக  தவிக்கின்றேன்
துணை வேண்டாம்  அன்பே  போ
பிணமாக  நடக்கின்றேன்
உயிர்  வேண்டாம்  தூரம்  போ

-- தனுஷ்

Tuesday, December 20, 2011

கன்னுகுட்டி காதல்!

எங்கோ ஆட்டோ சத்தம் கேட்டு கண் விழித்தேன். தலை விண்ணென்று வலித்தது.
இரவு லேட்டாக தூங்கியதின் விளைவு. தலையை லேசாக திருப்பி, நைட் ஸ்டாண்டில்
இருந்த செல்ஃபோனை எடுத்து மணி பார்த்தேன், காலை மணி 5.00.
தலையணையை கட்டிலில் நேராக சாய்த்து அதில் தலை வைத்தபடி எழுந்து
அமர்ந்தேன். அருகில் படுத்திருக்கும் வருண்.....அன்றைய குறும்பு காதலன்
,இன்றைய என் ஆசை கணவன் தூக்கத்தில் புரண்டு படுத்தார்.

தூங்கும் போது கூட, மீசையின் கீழ் அதே குறும்பு புன்னகை......'கனவில்
ஜொள்ளு விட்டுகிட்டு இருப்பாரா இருக்கும், இல்லீனா தூங்கும்போது கூடவா
உதடு சிரிச்சுட்டே இருக்கும்', மனம் பொறுமினாலும்.........என்னை மயக்கி
கட்டி போடும் அந்த வசீகர புன்னகையிலிருந்து என் பார்வையை விளக்க
மனமில்லை.
வைத்தகண் வாங்காமல் அவரையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

நிச்சயம் இவரை பிரியத்தான் வேண்டுமா?? நாளையிலிருந்து காலையில் நான்
எழுகையில் இந்த மந்திரப்புன்னகையை ரசிக்க முடியாதா? இருவரும் பரஸ்பரம்
பேசி, சேர்ந்து எடுத்த முடிவுதானே..........பின் ஏன் பிரிவை நினைத்து
மனம் இரகசியமாய் உள்ளுக்குள் அழுகிறது.

மீண்டும் புரண்டு படுக்கிறார் வருண்........நான் அவரையே
பார்த்துக்கொண்டிருக்கிறதை கவனித்திருப்பாரோ?விழித்திருந்தும் ,
தூங்குவதாய் பாவனை செய்வதில்தான் இவர் கில்லாடி ஆச்சே, நான் யோசனையில்
திரும்பிய போது அரைக்கண் திறந்து பார்த்தாலும் பார்த்திருப்பார்.

சில மாதங்களுக்கு முன்பு வரை.......எங்களது முன் இரவில்,

நான் தூங்கும் அழகை ரசித்து,
எனக்கு முத்தம் கொடுக்கலாம்
என அவர் காத்திருக்க...
அவர் முத்தம் கொடுக்கும்
அழகை ரசித்துவிட்டு
தூங்கலாமென நான் காத்திருக்க.....
எங்கள் இருவருக்காகவும்
காதல் உறங்காமல் காத்திருக்கும்!!!

இப்போது மீண்டும் அவரது தூக்கத்திலும் சிரிக்கும் கள்ள சிரிப்பை ரசிக்க
என் கண்கள் தானாக அவர் பக்கம் சென்றது,
அவர் புரண்டு படுத்ததில், போர்வை சற்று உயர்ந்து, பாதி முகத்தை
மூடியிருக்கிறது.........விலக்கி விடலாமா??
விழித்துக்கொண்டால்??

முன்பாக இருந்தால்........போர்வையை சரி செய்ததோடு என் விரல்களும்
நின்றிருக்காது, விழித்துக்கொண்ட அவரும் சும்மா இருந்திருக்க மாட்டார்,
ஆனால்.......இப்போது இருவருக்கும் நடுவில்தான் வேலி அமைத்து
நாட்களாகிவிட்டதே.
மெதுவாக......போர்வையை சரிசெய்து விட்டேன், விரல் படாமல்...........என்
விரலையே என்னால் கட்டுபடுத்த முடியாமல் போய்விடுமோ என்ற பதட்டம்
இருக்கத்தான் செய்தது.

இப்போ ........இப்போ கூட அதே சிரிப்பு அவர் உதட்டில். தூங்கும் குழந்தையை
இரசிக்க கூடாதுன்னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க, இவரும் என்
குழந்தைதானே......என் முதல் குழந்தை.

இந்த குழந்தையை பிரியத்தான் வேணுமா, என்ன இது.......முடிவு பண்ணின பிறகு
இப்படி ஒரு தடுமாற்றம் எனக்குள்.

உன் குறும்பு புன்னகையை
உதிர்க்கும் உதடுகள்
என் கண்களை மட்டுமா
சிறை செய்தது?
என்னையும் சேர்த்தல்லவா
கட்டி போட்டிருக்கிறது...

எத்தனை முறை
இதே உதடுகள்
என் உதடுகளை பிரதி எடுத்திருக்கும்??
எடுத்த பிரதிகளை
எங்கே பத்திரப்படுத்தியிருக்கிறாய்?

அடடே, கவிஞரின் கன்னுகுட்டிக்கும் கவிதை எழுத வருதே!

ஹும்......அவர் என்னை செல்லமா 'கன்னுகுட்டி' னு தான் கூப்பிடுவார்.

இன்று இந்த கன்னுகுட்டி கட்டியணைக்கும் தொலைவில் இருக்கிறார்....நாளை???
மீண்டும் நெஞ்சு வலித்தது பிரிவை நினைத்து, முடிவெடுத்தது
.......முடிவெடுத்ததாகவே இருக்கட்டும். ஆனாலும் மனதில் முள்ளாய்
குத்துகிறது ஒரு கேள்வி......நிச்சயம் இவரை பிரியத்தான் வேண்டுமா??

இன்றாவது அவருக்கு பெட் காஃபி கொடுக்கலாமா?
பெட் காஃபி கொடுத்து எத்தனை மாதமாகிறது........இப்போது என்னால் முடியுமா??

பெட் காஃபி என்றதும்தான் நினைவிற்கு வருகிறது,
எங்களுக்கு திருமணமான புதிதில்.......பெட் காஃபியுடன் நான் அருகில்
வந்திருப்பது தெரிந்தும், அரைக்கண்ணில் என்னை ரசித்தபடி, தூங்குவதுபோல்
பாவனை செய்வார், அது தெரிந்தும்........தெரியாதது போல் நானும் அவர்
முழிப்பதற்காக காத்திருப்பது போல் பாவனை செய்துக்கொண்டு
அமர்ந்திருப்பேன்.

சில தெரிந்த பொய்களிலும், விரும்பி ஏமாறுவதிலும் தானே இருக்கிறது
வாழ்கையின் சுவாரசியமே .

பெட் காஃபியோடு நிறுத்த மாட்டார்......சரியான காஃபி வண்டி அவர்,
குளித்து முடித்து வந்ததும் அடுத்த காஃபி ரெடியா இருக்கனும் அவருக்கு.

அன்றும் அதுபோல் அவர் குளித்து முடித்து, ஷவர் நிறுத்தும் சத்தம்
கேட்டதும், கிட்சனில் காஃபி ரெடி பண்ணிக்கொண்டிருந்தேன். எனக்கு தெரியாது
என நினைத்து.......பூனை மாதிரி நைஸாக சத்தம் வராமல் மெதுவாக அடி வைத்து
கிட்ச்சனுக்குள் நடந்து வந்தார், சன்னமாக எதையோ பாடிய படி அடுப்பில் பால்
வைத்துக் கொண்டிருந்த நான்....

"என்ன வேணும் இப்போ உங்களுக்கு ?" திரும்பாமலேயே கேட்டேன் .

"ச்ச்ச.......எப்படிடி கண்டுபிடிக்கிற ஒவ்வொரு தடவையும்"

"நான் தான் ஹாலுக்கு காஃபி எடுத்துட்டு வரேன்னு
சொல்லியிருந்தேன்ல......இப்போ எதுக்கு கிட்ச்சனுக்குள்ள வந்தீங்க"

"உனக்கு ஹெல்ப பண்ணலாமேன்னு...."

"நெஜமாவே ஹெல்ப் பண்ண தான் வந்தீங்களா " இரண்டு கைகளையும் இடுப்பில்
வைத்துக் கொண்டு திரும்பினேன்.

உதட்டைச் சுளித்து புன்னகைத்தார் வருண் . கண்களில் அத்துனை குறும்பு
.....நான் ரசிக்கும் குறும்பு:))

" நம்பமாட்டியா ....நம்புடி குட்டிமா........ நேத்து உனக்கு நான் வைச்சு
விட்ட மருதானி மேல சத்தியமா" இன்னும் ஒரு அடி முன்னேறி என் கைகளை
பிடித்து சத்தியம் பண்ணும் சாக்கில் நெருங்கினார்.

"வேணாம்.......... நல்ல பிள்ளையா ஹால்ல போய் உட்காருங்க . நான் காப்பி
எடுத்துட்டு வரேன் " ஒரு அடி பின்னால் சென்றேன் .

சமையல் மேடை இடித்தது .

"ம்ம்.... சத்தியம் பண்ணாம கிட்சனை விட்டு நான் போறதா இல்ல " சமையல்
மேடையில் இரண்டு கைகளையும் ஊன்றி என்னை சிறை பிடித்தார் .

"எங்கே சத்தியம் பண்ணட்டும்........... "

"ஹ்ம்ம்......... " சவுண்ட் ஸ்பீக்கரை முழுங்கின மாதிரி சத்தமாக பேசும்
என் சத்தத்தின் டெசிபல்கள் அநியாயத்திற்குக் குறைந்திருந்தன .

"என்ன ஹும்ம்.........எங்கே சத்தியம் பண்ணட்டும்னு கேட்டேன்"

"காப்பி.........வேணாமா?"

"வேணாம்......"

"டீ...??"

"நீ........"

எனக்கே எனக்கு சொந்தமான வருணின் நறுமணத்துடன் அவர் போட்டு குளித்திருந்த
சோப்பின் மணமும் சேர்ந்து கிளர்ச்சி ஊட்டியது . மூச்சுக் காற்று உதட்டைச்
சுட்டது . கண்களை மூடிக் கொண்டேன்.

இப்பொழுதும் கண்களை அழுந்த மூடிக்கொண்டிருக்கிறேன்......இமைகளின்
இருக்கத்தையும் தாண்டி, வெளிவந்த நீர் துளிகள், என் கண்மையின் துணைகொண்டு
கன்னத்தில்.... வரைபடம் வரைந்து, உதடுகளை தொட்டு உவர்த்தபோது, விழி
திறந்தேன்,

இப்போதும் அதே மெளன புன்னகையுடன் அவர் ஆழ்ந்த உறக்கத்தில், என் அருகில்.......

இப்படி திகட்ட திகட்ட
காதலை அள்ளிதராமல்
தவணை முறையில் தந்திருக்க கூடாதா?
பிரிகையில் இத்துனை பாதிப்பு இருந்திருக்காதே,
மொத்தமாக நீ 'புகட்டிய' காதலே
இன்று நம்மை பிரிக்கிறது பார்:(

கட்டாயம் பிரியத்தான் வேண்டுமா??

இனிமேலும் இப்படியே உட்கார்ந்திருந்தால், நானே என் முடிவை மாற்றினால்
மாற்றி விடுவேன், மேலும்.......அவர் கண்விழித்துவிட்டால், கலங்கின என்
கண்களும்,கண்களை தாண்டி கனனத்தில் இழுகியிருக்கும் கண்மையும், நெற்றி
பொட்டில் பூர்த்திருக்கும் வேர்வையும்...........என் உள்ளுணர்வை அவருக்கு
வெளிச்சம் போட்டு காட்டி கொடுத்துவிடும். தண்ணீரிலேயே தடம் பார்க்கும்
திருடன் இவர்:))

எடுத்த முடிவில் மாற்றம் வேண்டாம் என்ற முடிவுடன், படுக்கையிலிருந்து
எழுந்துக்கொள்ள என் ஒருகையை படுக்கையில் ஊன்றியபடி மெதுவாக நான் கீழ்
இருங்குகையில்.........என் கையை அழுந்த பிடித்தது அவரது வலது கரம்.

மெதுவாக திரும்பினேன்.......

என் கரத்தை விடுவிக்க நான் முயல..........அவரது பிடியின் இறுக்கம் அதிகரித்தது,

அட! இதென்ன வம்பா போச்சு, நான் தான் தடுமாறுறேன்னா....இவருமா??

மேலும் அவர் வலு கரம் அழுத்த......

"அச்சோ......என்னங்க இது.......நேத்து வளைகாப்புல போட்ட கண்ணாடி வளையல்
உடைஞ்சுட போகுது, கையை விடுங்க........."

"........." குறும்பனின் புன்னகை மட்டும் பதிலாக வந்தது.

"அய்யோ........பிரசவம் ஆகுற வரைக்கும் வளையல் உடைய கூடாதுங்க, ப்ளீஸ்
விடுங்க..........."

பிடியை தளர்த்தியபடி அவர்,

"விட முடியலடி செல்லம்............"

அப்பாவி குழந்தையைபோல் முகத்தை வைத்துக்கொண்டு அவர் கேட்கையில், நெஞ்சம்
விம்மிக்கொண்டு வந்தது.......

"என்னாலயும் முடியலீங்க............"

அவர் நெஞ்சில் இப்போது என் காதணி தடம் பதித்துக்கொண்டிருந்தது,

"அப்போ.........போகாதே........என்னைவிட்டுட்டு......"

"முதல் பிரசவம் அம்மா வீட்லன்னு எல்லாரும் பேசிதானே முடிவு
பண்ணினோம்..........இப்போ..........எப்படி...."

"'கன்னுகுட்டி....... உன்னை நான் பாத்துக்கிறேன்டி......"

"ஒரு குழந்தையை அம்போன்னு விட்டுட்டு......இன்னொரு குழந்தையை பெத்துக்க
அம்மா வீட்டுக்கு போய்தான் ஆகனுமான்னு எனக்கும் தடுமாற்றமா இருக்குதுபா"

இப்போது, என் 'முதல் குழந்தை' என் நெஞ்சோடு.........சேர்த்தணைத்துக்கொண்டேன்,
மற்றொரு குழந்தை 'எனக்குள்' நடை பயின்றபடி உதைத்து காண்பித்தது தன் இருப்பை,
பெண்மையின் லயிப்பில், பரவச நிலையில் நான்:))

உன் சிரிப்பில்
மயங்கி காதலித்தது
உனக்காக மட்டுமல்ல....
உன்னைப் போலவே
'புன்னகை' மன்னனாய்...
ஒரு மகன் வேண்டும்
என்பதற்காவும்தான்...!!

"போகமாட்டேன்......உங்களை விட்டு எங்கேயும் போகமாட்டேன்"
உணர்ச்சிவசத்துடன் என் குரல் கிசுகிசுத்தது அவர் செவிகளில்.

அணைப்பின் இருக்கும் அதிகரிக்க..........
சில மணிதுளிகள் மெளனமாக அணைப்பில் கழிந்தது,
மெல்ல தலைநிமிர்ந்த அவரது பார்வையில்.......
நான் அவருக்கே அவருக்கு மட்டும் சொந்தம் என்ற கர்வம் தலைதூக்கி நின்றது.

-- திசைகாட்டி

You may also like