Friday, July 22, 2011

நதியே நதியே - ரிதம்

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு
ஹோ மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே
அது நங்கையின் குணமே
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)

தினம் மோதும் கரை தோரும் அட ஆறும் இசை பாடும்
...
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
...

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே
தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே
பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்
நீர் நினைத்தால் பெண் நினைத்தால்
கரைகள் யாவும் கரைந்து போகக் கூடும்

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா.

-- கவிப்பேரரசு வைரமுத்து

Tuesday, July 12, 2011

இறைவன்!


குரங்குக்கும்
கோவில் கண்டோம் - தேங்காய்
குடிமிக்கும் தெய்வம் கண்டோம் - சொறி
சிறங்கு பயலையும் சாமி என்றால்
சீவதம் உய்வதெந்நாள்?

மொட்டையே அடித்தடித்து மண்டையில் மயிரு போச்சு
மொட்டையில் வெயிலடித்து மூளையும் கருகி போச்சு
பட்டியில் ஆடு போச்சு
பணங்காசு தானும் போச்சு
வட்டிக்கு பணங் கொடுத்தோன்
வாசலில் நின்ற போது
கட்டிய தாலியிலே
கயிறு தான் மிச்சமாச்சு.

கெட்டு நாம் போன பின்னும்
கீழென ஆன பின்னும்
இட்டிடும் கல்லை தொட்டு
இன்னுமா வணங்க வேணும்?
- துளசிதாசன்.

Friday, July 8, 2011

இப்படியாய் யாவரும் !


முதல் சந்திப்பில்

வார்த்தையின் ஊடே.

ஊர் வரை நுழைந்து

சாதியின் பெயரை

நாசூக்காக கேட்டறிவதும்.

நடிகையின் புதிய அந்தரங்கத்தை

தேநீர் விலையில் பறிமாறிக் கொள்வதும்

அடங்க மறுத்திடும்

காமக் கடும்பசிக்கு

பார்வையின் ஊடே

கூடு பாய்ந்து பசியாறுவதும்

காதலின் புதிய கணக்கை

கடக்க நேரிடுபவர்களின்

மீது திணிப்பதும்

பொதுவான ஒரு வியாதி

இருக்கத்தான் செய்கிறது

எல்லாரிடத்திலும்.
-- . லட்சுமணன்.


You may also like