Monday, February 6, 2017

வான்... வருவான்... காற்று வெளியிடை!


வான்
வருவான்
தொடுவான்

மழைபோல் விழுவான்
மர்மம் அறிவான்
என்னுள் ஒளிவான்

அருகில் நிமிர்வான்
தொலைவில் பணிவான்

கர்வம் கொண்டால்
கல்லாய் உறைவான்
காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்
*
என்னோடி ருந்தால்
எவளோ நினைவான்
அவளோடி ருந்தால்
எனையே நினைவான்

என்னைத் துறவான்
என்பேர் மறவான்
என்னை மறந்தால்
தன்னுயிர் விடுவான்

கண்கள் கவிழ்ந்தால்
வெளிபோல் விரிவான்
கண்கள் திறந்தால்
கணத்தில் கரைவான்.
-- கவிப்பேரரசு வைரமுத்து

You may also like