தோற்றுப் போகவே
உன்னோடுப்
போட்டியிடுகிறேன்!
மலர் கொண்ட உன்
விரல் பட்டதும்;
மணம் வீசும்;
இனித்தாலும் வலித்ததுப்
போலவே விசும்புவேன்!
நீ எட்டி உதைக்கவே
வம்புச் செய்வேன்;
உதைப்பட்டதும்;
உளறியப்படியே
உருண்டுவிழுவேன்;
உன் கன்னத்தின் குழிக் காண!
முத்தமிட நான்
எட்டும்போதெல்லாம்;
கொட்டுப்படும் என் தலை!
விழித் திறந்திருந்தாலும் அழகு;
இமை ஊமையாகி
உறங்கினாலும் அழகு!
கண்மூடும் நேரத்திலும்
காதோடு ஒலிக்கும்;
உன் முணகல் சத்தம்;
என் விடுமுறை முடிந்து
நாடு திரும்பியப் பிறகும்!
பொத்திப் பொத்திப்
பொக்கிஷமாய்;
பத்திரப்படுத்திப்
புகைப்படமாய் நீ!
ஏக்கத்தோடு கனவிலும்
கரம் நீட்டும் உனக்கு;
என் பதில்;
அடுத்த வருடம்தான்
என் விடுமுறை!
-
-
No comments:
Post a Comment