Tuesday, November 30, 2010

All Habits Are Impossible To Break If You Do This

“There is nothing wrong with change, if it is in the right direction.” ~ Winston Churchill

When was the last time you changed things in your world?
Taking the time to evaluate where you are in the hustle and bustle of life can help you gain the perspective you need to make the small adjustments that will improve your quality of life and enhance your confidence.
When you make a plan and set a goal for 30 days, you will be manufacturing a means to find a much more capable, confident you by the end of the month.
1. Choose a hobby. There is no shortage of hobbies to choose from. Rock climbing, jogging, pottery, cooking, photography. Any activity that engages your mind and holds your attention is well worth your minutes. Hobbies are an investment of time and usually require a certain skill. Take an inventory of your interests, then research your choice and socialize with people that have the same interests. With passion and a desire to enjoy something new, you’ll be well on your way to a happy mind.
2. Learn a new language. Learning to speak, read and write in a new language is a humbling, empowering experience. All you need is a willingness to work hard and practice your skills individually and with others. Choosing a country where your new language is represented is a great incentive to consider so that you can immerse yourself into the language, culture and people.
3. Read every day. Make a pact with yourself to read something that isn’t work related each day or night for 30 days straight. Language is powerful, and books deliver many messages and scenarios that help you travel in your mind. The sky is the limit with a book in your lap.
4. Eat well. Choosing a healthy diet doesn’t mean you need to be unrealistically thin or depriving yourself. It is about simplifying, having more energy and feeling great. The way you choose your food says a lot about who you are and how you feel. Adopting the habits of a healthy eater will improve your health, sharpen your memory, stabilize your mood, and boost your energy levels. Make a monthly meal calendar with healthy choices and stick with it for 30 days. See how great you will feel at the end of the month!
5. Finding an exercise regime that works. Being active and staying in shape boosts your mood, sex drive, and makes your body happy. Exercise helps you maintain a strong body, mind and spirit. Find a form of exercise you can maintain for the rest of your life and make your move today.
6. Avoid negative people. This is not always easy in the work place, but as a general rule choose friends or people you socialize with carefully. If you find yourself trapped by people with negative energy, remove yourself from the situation and lose the guilt. Shift your mindset by surrounding yourself with positive minded people.
7. Meditate for 10 minutes every day. Research shows meditation sharpens mental focus, empowers you over emotions, and enhances your life with a positive sense of well being. Meditation is a means to rid the negative forces in your mind and give you clarity. Light a candle and carve out 10 minutes a day for this simple practice. It will change your state of mind for a lifetime.
8. Early to bed. Getting a good night’s sleep is the only way your body and brain can recharge their batteries. Denying yourself the 8-10 hours an adult needs, affects your ability to learn and remember, not to mention it dims the longevity of your life.
9. Early to rise. Your productivity will be higher and you will have a greater sense of well being when you wake up early. Sure, it may be hard for the first 10 minutes, but there is a direct correlation between successful people and rising early in the morning.
10. Create an inspirational space. The way your room looks will dictate how you will feel about yourself and life. Take pride in your space by creating a room that is inviting and reflective of who you are. Taking charge of your personal space and surrounding your soul with positive colors will ground your thoughts and keep your energy flowing in a positive direction.

There is always room for self-improvement. Finding the courage to create a difference in your life will give you self-confidence and help you shift your mental makeup for a much more vibrant you!

- Written by Cindy Platt

இனிமேல் எனக்குப் பரிசு தராதே!

'உனக்கென்று தனியாக தலையணை வைத்துக் கொள். என் தலையணையை எடுக்காதே!" என்று நான் சொன்னதுதான் தாமதம்... உன் கண்ணில் நீர் முட்டிக் கொண்டுவிட்டது. 'ஏன் இப்படிப் பிரித்துப் பேசுகிறீர்கள்?' என்றாய். 'பிரித்தெல்லாம் பேசவில்லை. உனக்கென்று நீ தனியாகத் தலையணை வைத்துக் கொண்டால், நீ ஊருக்குப் போயிருக்கும் நாட்களில், உன் தலையணையை நீ என்று நினைத்துக் கட்டிக்கொண்டு தூங்கலாம். அதற்குதான்!' என்றேன். நீ தாவி வந்து என்னைக் கட்டிக்கொண்டு, 'ஒரு நிமிஷம்... நான் துடிதுடித்துப் போயிட்டேன், தெரியுமா!' என்றாய்.

காதல் அப்படிதான்... துடித்துக் கொண்டிருக்கிற இதையத்தைத் துடித்துக்க வைத்துவிடும்!

'நமக்கு கல்யாணம் நடக்கிற நாளில், அம்மி மிதித்து அருந்ததி பார்க்கச் செல்லும்போது, நான் உன்னைத்தான் பார்ப்பேன்' என்றேன். 'ஏன்.. என் முகத்திலா அருந்ததி இருக்கிறது?' என்றாய். 'இல்லை... அருந்ததியே உன் முகமாக இருக்கிறது!" என்றேன். நீ சிரித்துவிட்டு, 'அப்ப நான் மட்டும் வானத்தைப் பார்க்கணுமா?" என்றாய்.

'வேண்டாம்... வேண்டாம்... சீர் வரிசையில் கண்ணாடி இருக்கும் இல்லையா, அதை எடுத்துக் காட்டுகிறேன். அதில் உன் முகத்தையே நீயும் பார்த்துக்கொள்' என்றேன்.

'ம்ம்ம்... கூடியிருப்பவர்கள் சிரிக்க மாட்டார்களா?' என்றாய். 'சிரிக்கட்டுமே... அதைவிடச் சிறந்த வாழ்த்தொலி எது!' என்றேன். 'சடங்கில் இப்படியெல்லமா விளையாடுவது?' என்றாய்.

'சடங்கே ஒரு விளையாட்டுத்தானே!" என்றேன்.

உன் பிறந்த நாளையும் 
பிறந்த நேரத்தையும்
காட்டுகிற ஒரு கடிகாரம்
என் அறையிலிருக்கிறது.

'கடிகாரம் ஓடலியா' - என
யாராவது கேட்டால்
சிரிப்புத்தான் வரும்

அது காலக் கடிகாரம்  அல்ல
என் காதல் கடிகாரம்!

'என் பிறந்த நாளுக்காக நீ வாங்கித் தந்த பரிசுப் பொருளைப் பிரித்துப் பார்க்கக்கூட விருப்பமில்லை எனக்கு. அதை நீயே திரும்ப எடுத்துக்கொண்டு போய்விடு. இனிமேல் எப்போதும் எனக்கெந்த பரிசும் நீ தராதே!' என்றேன்.

கலங்கிப் போனாய். 'எவ்ளோ ஆசையா வாங்கிட்டு வந்தேன் தெரியுமா? இதைப் போய் வேணாங்கறீங்களே... ஏன், என்னைப் பிடிக்கலியா?' என்றாய் உடைந்த குரலில்.

'உன்னைப் பிடித்திருப்பதுதான் பிரச்சனையே! என் எல்லாப் பிரியத்தையும் நான் உன் மீதே வைத்திருப்பதால், நீ பரிசளித்தது என்பதற்காக எந்தப் பொருளின் மீதும் என்னால் பிரியம் வைக்க முடியாது.

உண்மையில், உன் மீது நான் வைத்திருக்கும் பிரியமே போதுமானதாக இல்லை எனக்கு. உன் மீது வைக்க இன்னும் கொஞ்சம் பிரியம் கிடைகதா என்று நான் ஏங்கிக்கொண்டிருக்கையில், நீ ஒரு பொருளை எனக்குப் பரிசளித்தால் அதை எப்படி வாங்கிக் கொள்ள முடியும், சொல்.

எனக்கு எதாவது பரிசு தந்தே ஆகவேண்டும் என்று உனக்குத் தோன்றினால், ஒரு முத்தம் கொடு!' என்றேன்.

'அது மட்டும் என்ன அப்படி உசத்தி?' என்றாய்.

'ஆமாம். உசத்தித்தான்! முத்தத்தைவிட சிறந்த பரிசை காதல் இன்னும் கண்டுப்பிடிக்கவில்லை!'.
                                                                   - தபு ஷங்கர் 
  

Monday, November 29, 2010

ஆசையா... மோகமா.. அதையும் தாண்டி காதலடி!

துயில் கலைந்து எழுந்து குளிக்கக் கிளம்பும் உன்னைத் தடுப்பதே, ஒவ்வொரு காலையும் அழகான போராட்டமாகிப் போகிறது எனக்கு.

'குளித்து சுத்தமாகதான் அடுப்பைப் பற்றவைக்க வேண்டும்' என்று உன் அம்மா சொல்லி அனுப்பியதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு... எழுந்தவுடன் குளித்தே ஆகவேண்டும் என்று ஏன் அடம்பிடிக்கிறாய் நீ.

ஒவ்வொரு நாளும் நீ தூங்கி எழும்போதெல்லாம்... நீ தூக்கக் கலக்கத்திலிருந்து மீண்டு வருகிற அந்த அழகான தருணங்கள்... பிறந்த குழந்தை தவழ்ந்து, எழுந்து, நடக்கின்ற பருவங்களாய் இருக்கிறதடி எனக்கு. நீ உடனே குளிக்கப் போய்விட்டால்... அந்த அழகு எல்லாம் தண்ணீரில் கரைந்து போய் விடாதா?

தூங்கி எழுந்த உன் முகத்தைச் சுற்றி 'இது புதிய முகமோ?' என்கிற ஆச்சர்யத்தோடு பறக்கும் உன் முடிகளின் அழகைப் பாரேன்... நீ குளித்து விட்டால் அந்த முடிகளின் சிறகுகள் எல்லாம் ஈரமாகி, பறக்க முடியாமல் தவிக்காதா?

குளித்து முடித்து ஈரம் அப்பிய உடையுடன் நீ இந்த வீட்டில் வளைய வருவது கொள்ளை அழகுதான் என்றாலும் அது வேறு அழகடி. அதற்க்காக இந்த இரவு அலங்கரித்து அனுப்பிய உன் அழகை ஒரு அரை மணி நேரமாவது நான் ரசிக்கவில்லை என்றால்... சொர்க்கத்தில் இருக்கும் லைலாக்களும் மஜ்னுக்களும், அனார்க்கலிகளும் சலீம்களும் என்னைத் திட்டுவார்களடி! 'அய்யோ... இவனுக்குக் காதலிக்கத் தெரியவில்லையே!' என்று தங்கள் தலைகளில் அடித்துக்கொண்டு கூடி வருந்துவார்களடி!

"போதும்... போதும். கசங்கிய இந்தச் சேலையை மாற்றிக்கொள்ளவாவது விடுங்களேன்" என்று திருவாய் மலர்ந்தாய்.

"அய்யோ... இது கசங்கலா? உன் சேலைக்கு இரவு போட்டு விட்ட இஸ்த்ரியடி!" என்றேன்.

"ஆ... எனக்கு மயக்கம் வருது' என்று சிணுங்கினாய்.

உன்னை மயக்க தினமும் இப்படி அரை மணி நேரம் போராட வேண்டி இருக்கிறது எனக்கு. ஆனால் நீயோ தூங்கி எழுந்து முறிக்கும் ஒரு அழகுச் சோம்பலில் என்னை மயக்கி விடுகிறாயே வெறும் அரை நொடியில்.

"இந்த மயக்கம் எல்லாம் எத்தனை நாளைக்கு. ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள்தானே!" என்றாய்.

அடிப்பாவி.. இது ஆசையா.. மோகமா.. அதையும் தாண்டி காதலடி! அய்யோ லைலாக்களே... கொஞ்சம் இறங்கி வந்து, 'காதல் என்பது காலத்தை வென்றது' என்பதை இவளுக்குச் சொல்லுங்களேன்.


உன் பிறந்த நாளைப் பார்த்து
மற்ற நாட்கள்
புலம்பிக் கொண்டிருக்கின்றன...
பிறந்திருந்தால்
உன் பிறந்த நாளாய்ப்
பிறந்திருக்க வேண்டும் என்று.

ரிலே
நான்தான் நன்றாக
பம்பரம் விடுபவன்
ஆனால் நீயோ
என்னையே பம்பரமாக்கிவிடுகிறாய்.

நீ இல்லாத நேரத்திலும்
உன் இருக்கையில் அமர்ந்திருக்கிறது
உன் அழகு.

கோடை விடுமுறை வந்தால்
குளிர்ப் பிரதேசம் தேடி
ஓடுவதில்லை நான்.
ஆனால்
ஒவ்வொரு கோடை
விடுமுறையிலும்
என்னையே தேடி ஓடிவருகிறது
ஒரு குளிர் பிரதேசம்.
அதற்குப் பெயர்
அத்தை மகள்.
                                                        - தபு ஷங்கர்

விற்றுவிட்ட இளமை...

பத்திரமாய் பதுக்கிவைத்த
உன் கடிதங்கள்;
தூங்காத விழிகளுக்குத்
தூக்கமாத்திரையாய்;
கனமான இதயத்திற்கு இதமாக;
கண்கள் குளமாக!

கதறி அழுதாலும்
காதில் விழாது;
கடல் கடந்துக்
கட்டிபிடிக்கும் உறவுகள்
கைப்பேசியில்;

ஊருக்கு வரச்சொல்லி;
கைப்பேசியை உன்
கரத்தில் அழுத்திவிட்டு
ஒடிவிடும் நம் பிள்ளை;
ஓடாய் தேயும்
என்னை விட;
ஓடிவிளையாடதான்
அவனுக்குப் பிடிக்கும்!

கொண்டு வந்த இளமையை
விற்றுவிட்டு ;
பாலையில் கொன்றுவிட்டு;
நரைத்த ரோமங்கள்;
நகைத்து நிற்க;
ஒதுங்கி நின்ற நீயும்
சிரித்து நிற்கிறாய்!

வழியும் கண்ணீர்
முகச்சுருக்கத்தில்
வழிந்தோட;
உதடுகள் இரண்டும்
ஒதுங்கிக் கொண்டு;
பற்களுக்கு வழிக்கொடுக்க;
மனதிற்கு வலிக்கொடுக்க!
                        -

Saturday, November 27, 2010

நாத்திகன்

ஏழையின் சிரிப்பில்
இறைவனை காணலாம
ஏனோ
இன்று வரை நான் கண்டதே இல்லை - இறைவனை..

                                               - பாஸ்கர் மூக்கன் 

Thursday, November 25, 2010

முத்தமிட...

தோற்றுப் போகவே
உன்னோடுப்
போட்டியிடுகிறேன்!

மலர் கொண்ட உன்
விரல் பட்டதும்;
மணம் வீசும்;
இனித்தாலும் வலித்ததுப்
போலவே விசும்புவேன்!

நீ எட்டி உதைக்கவே
வம்புச் செய்வேன்;
உதைப்பட்டதும்;
உளறியப்படியே
உருண்டுவிழுவேன்;
உன் கன்னத்தின் குழிக் காண!

முத்தமிட நான்
எட்டும்போதெல்லாம்;
கொட்டுப்படும் என் தலை!

விழித் திறந்திருந்தாலும் அழகு;
இமை ஊமையாகி
உறங்கினாலும் அழகு!

கண்மூடும் நேரத்திலும்
காதோடு ஒலிக்கும்;
உன் முணகல் சத்தம்;
என் விடுமுறை முடிந்து
நாடு திரும்பியப் பிறகும்!

பொத்திப் பொத்திப்
பொக்கிஷமாய்;
பத்திரப்படுத்திப்
புகைப்படமாய் நீ!

ஏக்கத்தோடு கனவிலும்
கரம் நீட்டும் உனக்கு;
என் பதில்;
அடுத்த வருடம்தான்
என் விடுமுறை!
                                    -

ரயிலை நிறுத்திய நெய் !!

ஒரு கிராமத்தான். அவனுக்குப் பட்டணத்தில் வேலை கிடைத்திருந்தது. ரயிலில் பயணம் புறப்பட்டான்.
அந்தக் கிராமத்தானுடைய பாட்டிக்கு அவன்மீது பாசம் அதிகம். ஒரு பெரிய டின் நிறைய நெய் கொடுத்தனுப்பினார்.
‘இது எதுக்கு பாட்டி?’ என்று கேட்டான் அவன்.
‘தினமும் நல்லா நெய் ஊத்திச் சாப்பிட்டாதான் நீ பலமா வளரமுடியும்’ என்றார் பாட்டி. ‘இதை எப்பவும் மறந்துடாதே!’
அவனுக்குப் பாட்டி சொல்வதைக் கேட்டு சிரிப்புதான் வந்தது. ‘நெய் சாப்பிட்டா பலமாயிடமுடியுமா? இதெல்லாம் சும்மா ஏமாத்து வேலை’ என்று நினைத்தான். ஆனாலும் பாட்டி மனம் கோணக்கூடாதே என்பதற்காக வாங்கிக்கொண்டான். ஒரு கையில் பெட்டி, இன்னொரு கையில் நெய் டின் சகிதம் ரயிலில் ஏறினான்.
அன்றைக்கு ரயிலில் பயங்கரக் கூட்டம். அவன் எப்படியோ அடித்துப் பிடித்து ஒரு மூலையில் இடம் பிடித்துக்கொண்டான். பெட்டியை ஓரமாக வைத்தான். நெய் டின்னை வைக்கதான் இடமே இல்லை. சுற்றும்முற்றும் பார்த்தான். சிவப்புக் கலரில் ஏதோ தொங்கிக்கொண்டிருந்தது. அங்கே நெய் டின்னைத் தொங்கவிட்டான்.
அந்தப் பட்டிக்காட்டானுக்குத் தெரியாத விஷயம், அவன் நெய் டின்னை மாட்டியது அபாயச் சங்கிலியில். டின்னின் கனம் சங்கிலியைப் பிடித்து இழுக்க, ரயில் நின்று போனது.
சிறிது நேரத்தில் அதிகாரிகள் வந்தார்கள். ‘யாருய்யா இங்கே இந்த டின்னை மாட்டினது?’
‘நான்தான்ங்க. ஏன்?’ அப்பாவியாக விசாரித்தான் இவன்.
‘யோவ், முதல்ல டின்னை எடுய்யா. அது ரயிலையே நிறுத்திடுச்சு!’
அதிகாரிகள் இப்படிச் சொன்னதும் இவன் கண்களில் நீர் வழிந்தது. ‘எங்க பாட்டி சொன்னது சரிதான். இந்த டின்னுக்குள்ளே இருக்கிற நெய் எவ்ளோ பலசாலி. இத்தனை பெரிய ரயிலையே இழுத்துப் பிடிச்சு நிறுத்திடுச்சே!’ என்று நெகிழ்ந்தான்.
பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜென் குரு அவன் தலையில் குட்டினார். ‘முட்டாளே, ஒருவர் நிலாவைச் சுட்டிக் காட்டினால், நிலாவைப் பார்க்கப் பழகு. சுட்டிக் காட்டுகிற விரலையே உற்று உற்றுப் பார்த்துக்கொண்டு வாழ்க்கையை வீணடிக்காதே!’ என்றார்.

நடுநிசி நாய்கள்

நடுநிசி நாய்கள் -
மென்பொருள் வல்லுனர்கள் !!

- Baskar Mookkan

Wednesday, November 24, 2010

ஒரு த்ரில் அனுபவம்




நான் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவன். ஆதி தாமிராவின் இந்த படைப்பு என்னை வெகுவாக கவர்ந்தது :). இனி அந்த அனுபவம்..
---
மயங்கும் மாலைநேரம். சூரியன் இப்போதுதான் மறைந்திருக்கவேண்டும். அந்த இடத்தில் மரங்கள் சூழ்ந்திருந்ததால் அதற்குள்ளாகவே இருட்டத் துவங்கியிருந்தது. சேரன்மகாதேவி விலக்கில் பஸ்ஸுக்காக காத்திருக்கிறேன். என்னுடன் இன்னும் நாலைந்து பயணிகள் காத்திருந்தனர். அங்கிருந்த பயணிகள் நிழற்குடையை யாரும் பயன்படுத்துவது போல தெரியவில்லை. அதனருகில் ஒரு சிறிய குடிசையில் ஒரு டீக்கடையும் இருந்தது. அதன் வெளியே போடப்பட்டிருந்த பெஞ்சில் ஒரு முதியவர் உட்கார்ந்து அந்த வெளிச்சத்திலும் பேப்பர் படிக்க முய‌ன்று கொண்டிருந்தார்.
நானும் அதற்கு மறுபுறம் அமைந்திருக்கும் ஒரு சிறிய கோவிலின் பின்புறமுள்ள‌ சிமென்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தேன். இந்த இடத்தில் சமயங்களில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக காத்துக்கிடக்க நேரிடும். ஆகவே எப்போதுமே சேரன்மகாதேவி சென்று திரும்புகையில் ஏதாவது புத்தகத்தை எடுத்துவருவது என் வழக்கம். ஆனால் இப்போது வெளிச்சமில்லாததால் படிக்கமுடியாமல் என்ன செய்யலாம் என நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கும் பல வருடங்கள் முன்னால் அம்மாவுடன் சேரன்மகாதேவி வந்து செல்லும் போது இந்த காத்திருத்தலை கழிப்பதற்காக சில கூழாங்கற்களை சேகரித்து 'களச்சிக் கல்' விளையாடுவோம். பஸ் வந்தபின் நாங்கள் செல்லும் போது அந்த கற்களை கோவிலின் பின்புறமுள்ள ஒரு குறிப்பிட்ட கல்லின் அடியில் போட்டுவிட்டு வருவோம், அடுத்தமுறை வரும்போது விளையாடுவதற்காக. அந்தக்கற்கள் இப்போதும் கிடக்குமா என்று நாங்கள் கற்களை போடும் இடத்திற்கருகில் தேடிக்கொண்டிருந்தேன்.
அப்போதுதான் அவரை நான் கவனித்தேன். தாமிரபரணியில் குளித்துவிட்டு இடுப்பில் ஈர வேட்டி மற்றும் தோளில் துண்டு போட்டுக்கொண்டு ஒருவர் தூரத்தில் வந்துகொண்டிருந்தார். ஏதோ தெரிந்தவராக இருக்குமா என்பதற்காகத்தான் அவரை கவனித்தேன் . இல்லை. 35 வயதிருக்கலாம். நல்ல உயரமான திடமான உடல்வாகு. இடதுகையில் கைக்கொள்ளும் அளவில் அகத்திக்கீரையை வைத்திருந்தார். ஆடுகளுக்காக இருக்கலாம். வலது கையில் ஒன்றரை அடி நீளத்தில் ஒரு பளபளப்பான அரிவாள் தெரிந்தது. வயலுக்கு சென்றுவிட்டு ஆற்றில் குளித்து வீடு திரும்பும் ஆண்கள் கையில் அரிவாள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமான விஷயமே அல்ல. அங்கே அது மிக சாதாரணம். அந்தக்காட்சி ஒன்றும் என்னை அவ்வளவாக கவரவில்லை. மீண்டும் நான் கற்களை தேடத்துவங்கினேன்..
அப்போதுதான் யாரும் எதிர்பாராத அந்த அரிய சம்பவம் நிகழ்ந்தது. அவர் வந்துகொண்டிருந்த நேரெதிர் திசையிலிருந்த அந்த டீக்கடை குடிசையிலிருந்து அதே போன்ற ஒன்றரை அடி நீள அரிவாளுடன் ஒரு இளைஞன் 'ஹோ..'வென ஒரு மாதிரி சத்தமாக கத்திக்கொண்டே அவரை நோக்கி ஓடினான். பாய்ந்தான் என்றுதான் சொல்லவேண்டும். அவனுக்கு ஒரு இருபது வயதுதான் இருக்கும், அவனும் நல்ல திடகாத்திரமாக இருந்தான். நான் அதிர்ச்சியில் உறைந்துபோனேன். அவரும் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனாலும் சுதாரித்துக்கொண்டார். முதல் வெட்டை அவர் தன் அதிவேக நடவடிக்கையால் தனது அரிவாளில் தாங்கிக்கொண்டார். 'டங்' என சத்தம் எதிரொலிக்கிறது. அவர்களிடமிருந்து ஒரு ஐம்பதடி தூரத்தில் நான் நிற்கிறேன். இந்த மெல்லிய இருளில் இரண்டு அரிவாளும் மோதிக்கொண்டதில் எழுந்த தீப்பொறியைக் கண்டேன். இரண்டாவது வெட்டை இருவருமே அனுமதிக்கவில்லை. இருவரும் சம பலத்தில் இருந்ததால் ஒருவரை ஒருவர் கைகளால் தள்ளிக்கொண்டதில் பத்தடி தூரத்தில் இருவரும் யார் முதலில் அரிவாளை வீசப்போகிறார்கள் என்று தத்தளித்துக் கொண்டிருந்தார்கள்.
இது ஒன்றும் சினிமா அல்ல, மணிக்கணக்காய் சண்டை போட.. யார் முதலில் தவறுகிறார்களோ அவர் இறப்பது நிச்சயம். சில விநாடிகள்தான்.. மேலும் சில வீச்சுகள் காற்றிலே போயின. அதற்குள் அந்தக்கடையின் உள்ளிருந்த சில ஆண்கள் ஓடிவந்தனர். பின்பக்கமாக அந்த இளைஞனை கொத்தாக தூக்கிப்பிடித்தனர். இப்போது மாட்டிக்கொண்ட அவனை வெட்டி விடக்கூடிய கோபத்திலிருந்த அவரையும் தனியாக பிரித்து தனித்தனி திசைகளில் இழுத்துச்சென்றுவிட்டனர். நான் ‘அப்பாடி’ என்று பெருமூச்சு விட்டு திரும்பிப் பார்க்கிறேன். என்னுடன் காத்திருந்த பயணிகள் பஸ் ஆசையை துறந்து விட்டு மேற்கு நோக்கி ஓடி அதற்குள் அரைகிலோமீட்டரை கடந்துவிட்டிருந்தனர். அந்த சம்பவம் குறித்து எனக்கு இன்னும் சில கேள்விகள் மனதில் உண்டு.
அந்த இளைஞன் அவர் அரிவாள் கொண்டு வராத இன்னொரு நாளாகப் பார்த்து ஏன் அட்டாக் செய்யவில்லை? அல்லது மரங்களுக்குப்பின்னால் ஒளிந்துகொண்டு அவர் தாண்டிச்சென்ற‌ பின்னர் பின்பக்கமாக சென்று ஏன் தாக்கியிருக்கக்கூடாது? அவர்கள் இருவரும் உறவினர்களாக இருந்திருப்பார்களோ? பின்னர் அவர்கள் சமாதானமாகி விட்டார்களா? அல்லது பிரிதொரு சமயத்தில் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டார்களா? அரிவாள்களுக்கு நடுவே புகுந்து அவர்களை பிரித்த நபர்கள் செய்தது வீரச்செயல்தானா? பின்னங்கால் பிடரியில் பட ஓடிய பொதுஜனம் செய்தது சரிதானா?
பின்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தைக் குறித்தும் ஜாதி, வன்முறை, அரிவாள் என்பது குறித்தும் பல்வேறு கதைகளும், ஒரு போலியான தோற்றமும் உருவாக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் உண்மைக்குப்புறம்பான கற்பனைக் கதைளே. அன்புக்காக எதையுமே விட்டுத்தரும் நல்ல உள்ளங்களை எங்கேயும் விட அதிகமாக அங்கு காண இயலும். இப்போதும் எங்கள் வீட்டு கதவுகள் இரவிலும் மூடப்படுவதில்லை. திருடர் பயம் என்பதை நான் கதைகள் தவிர நிஜத்தில் அங்கே கேள்விப்பட்டதேயில்லை.
காவல் தெய்வங்கள் மீதான பக்தியும், விளைநிலங்கள் மீதான நம்பிக்கையும், கடும் உழைப்பும் என் சிறு வயதில் பார்த்த அதே அளவில்தான் இன்னும் இருக்கிறது என நான் நம்புகிறேன். கடும் மூர்க்கமானவர்கள், தாக்குவதற்கு அஞ்ச மாட்டார்கள் என்ற கருத்தில் முழு உடன்பாடில்லை. மூர்க்கத்தனமானவர்கள் வேறெங்கும் இல்லையா? அவர்கள் எங்குமே நிறைந்திருக்கத்தான் செய்கிறார்கள். பதிலடியாக தாக்குவதற்கு அஞ்சுவதில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். நான் எங்கள் பகுதிகளில் ஜாதிக்கலவரங்கள் நடந்ததாக எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எனது சிறு வயதில் இரண்டு வன்முறைச் சம்பவங்களை பார்த்த சாட்சியாகவும் நான் இருந்திருக்கிறேன். அதில் ஒரு சம்பவத்தைத்தான் மேலே நினைவு கூர்ந்துள்ளேன். பதிவுக்கும், டிஸ்கிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை முரண் எனக்கொள்ளாமல் ஒரு பரபரப்பான சம்பவம் என்ற வகையில் மட்டுமே கொள்ளுங்கள்.

You may also like