Tuesday, November 27, 2012

ரீவைண்ட் ராகம்!


ந்த ஒரு தொழில்நுட்பத்திலும் நன்மையும்  இருக்கிறது, தீமையும் இருக்கிறது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் தான் அது நமக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ அமைகிறது.
மாட்டு வண்டிகள் இருந்த காலத்தில் அதில் பயணித்த அனுபவத்திற்கும், இப்போது பல்சரில் (Pulzar) பறக்கும் அனுபவத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. எனினும் அந்த பழைய மாட்டு வண்டியில் பயணித்த நாட்களை நினைக்கும் போது மனதில் எழும் பசுமையான நினைவுகள் நம்மை சந்தோஷப்படுத்தும். இதனால் பல்சர் பைக்கே தேவையில்லை என்பது இல்லை. பழைய தொழில்நுட்பங்களில் இருக்கும் (இருந்த ?! ) மகிழ்ச்சியை மட்டுமே இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

நமக்கு நினைத்த நேரத்தில் பாடல்கள் கேட்க வேண்டும் எனில் கையில் இருக்கும் செல்போன் மட்டுமே இன்றைய காலத்தில் போதுமானதாக இருக்கிறது. எஃப்.எம்., மெமரி கார்டு மூலம் நினைத்த வேளையில் பாடல்களைக் கேட்கிறோம். இல்லையெனில் இணையத்தின் வாயிலாகவும், யூ-டியூப் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் மூலமும் நமக்கு தேவையான பாடல்களை கேட்கவும், பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடிகிறது. டூவீலர் ஓட்டும் போதும், பேருந்து பயணத்தின் போதும் ஹெட்-போன்களை காதில் சொருகியபடி பாடல்களை கேட்டுக் கொண்டே பயணிக்கிறோம்.

சற்று முன் நோக்கிச் சென்றால் சிடியில் நமக்கு பிடித்த பாடல்களை பதிந்து வீட்டில் அதிகப்படியான சத்தத்தில் வைத்து கேட்போம். அதற்கு முன்பு டேப்-ரெக்கார்டரில் பாடல்களை பதிந்து கேட்டுக் கொண்டிருந்தோம். எனக்கு தெரிந்து சில குடும்பங்களில் எந்தெந்த பாடல்களை கேசட்களில் பதிவு செய்வதற்கு பல சண்டைகள் நடக்கும்.
அண்ணன் ரஜினி ரசிகனாக இருப்பான். தம்பி கமல் ரசிகனாக இருப்பான். அப்பாவோ சிவாஜி காலத்து பாடல்கள் வேண்டும் என அடம்பிடிப்பார். ஒரு கேசட்டில் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஆசையும் நிறைவேறும். 'எஜமான்' படத்திலிருந்து ஒரு பாடல் பதிவு செய்ய முடிவு செய்தால், அண்ணன் 'ராக்கு முத்து ராக்கு'க்கு டிக் அடிக்க, தம்பி 'எஜமான் காலடி மண்ணெடுக்க' அடம்பிடிப்பான்.

ஒவ்வோரு படத்திலும் தங்களுக்கு பிடித்த பாடல்களை தேர்வு செய்து கொடுக்க, அதில் அப்பா கடைசியாக முன் பக்கம் ஆறு பாடல்கள், பின் பக்கம் ஆறு பாடல்கள் என இறுதி செய்து பாடல்களை பதிவு செய்ய கேசட் கடையில் கொண்டு கொடுப்பார்.
கடைக்காரர் வெயிட்டிங்கில் வைத்து, ஒரு வாரம் கழித்து வர சொல்வார். சொன்ன தேதியில் அப்பா சென்று கேசட்டை வாங்கி வந்து வீட்டில் போடும் போது, நமக்கு பிடித்த பாடல் எப்போது வருமென ஆர்வமாக கேட்பதுண்டு. இன்றும் அந்த பாடல்களை எங்காவது கேட்கும் போது கேசட்டில் இருந்தபடி அந்த பாடலுக்கு அடுத்து வரும் பாடலின் தொடக்கம் வாயில் முணுமுணுக்க வைக்கிறது.

இளைஞர்கள் இருக்கும் வீடுகள் என்றால் இன்னும் பல கலாட்டாக்கள் அரங்கேறும். ஸ்பீக்கர்களை வாங்கி அதை மண் பானையில் வைத்தால் சத்தம் அதிகமாக கேட்கும் என்பதால் மண் பானைக்குள் வைத்து பாடல்களை அலறவிடுவார்கள். அந்த பக்கம் "ஏண்டா ஸ்பீக்கரை போட்டு இப்படி காதை காலி பண்றீங்க" என்ற அம்மாவின் ஏச்சுக்களை காதில் போட்டுக் கொள்ளாமல் ' ராசாத்தி உன்னை எண்ணி ராப்பகலா கண் விழிச்சேன்' என்று எதிர்வீட்டுப் பெண்ணுக்கு 'பாடல் விடு தூது' அரங்கேறும் கதைகளும் உண்டு.

எதிர்வீட்டுப் பெண் மறுத்து, காதல் தோல்வியில் முடிந்தால் ''போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே'' என சோக கீதங்கள் வீட்டை ஆட்கொள்ளும்.

அந்த காலங்கள் கடந்து வேலை, பொறுப்பு என வெளி ஊருக்கு சென்ற பின் அதே அம்மா அந்த ஸ்பீக்கரை பார்த்து ஏக்கம் கொள்வதும் பல வீடுகளில் நடந்திருக்கும்.

'முதல்வன்' படத்தில் அர்ஜூன் சொல்வது போல் வாழ்க்கையில் 'ரீவைண்ட்' பட்டன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.. இல்லையா?

--- பானுமதி அருணாசலம்

Thursday, November 8, 2012

நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன் - வைரமுத்து (படம்: கடல்)



நெஞ்சுக்குள்ள
ஒம்ம முடிஞ்சிருக்கேன்- இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

வெள்ளைப் பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
இதத் தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வலதுகைக் கெடியாரம்
ஆனை புலியெல்லாம் அடுக்கும் அதிகாரம்

நீர் போன பின்னும்
நிழல் மட்டும் போகலயே போகலயே
நெஞ்சுக்குள்ள நிழல் வந்து விழுந்துருச்சே
அப்ப நிமிந்தவ தான்
அப்பறமாக் குனியலையே! குனியலையே!
கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே

நெஞ்சுக்குள்ள
ஒம்ம முடிஞ்சிருக்கேன்-இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?


பச்சி ஒறங்கிருச்சு
பால்தயிராத் தூங்கிருச்சு
இச்சி மரத்து மேல
எல கூடத் தூங்கிருச்சு

காச நோய்க் காரிகளும்
கண்ணுறங்கும் வேளையில
ஆசநோய் வந்தமக
அரை நிமிசம் தூங்கலையே!

நெஞ்சுக்குள்ள ஒம்ம
முடிஞ்சிருக்கேன்!- இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ ?


ஒரு வாய் எறங்கலையே
உள்நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா
எச்சில் முழுங்கலையே!

ஏழை இளஞ்சிறுக்கி
ஏதும் சொல்ல முடியலையே
ரப்பர் வளவிக்கெல்லாம்
சத்தமிட வாயில்லையே!

நெஞ்சுக்குள்ள ஒம்ம
முடிஞ்சிருக்கேன்!- இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ ?

-- கவிப்பேரரசு வைரமுத்து (படம்: கடல்)   

Thursday, September 13, 2012

அன்புடன் மகேந்திரன் !!



அன்றாடத் தேவைகளின் முக்கியத்தை உணர்ந்து, அதை நிறைவேற்றியபடியே உனது அடுத்த இலக்குக்காக முயல்வதும்... உன்னை மேலும் மேலும் 'அப்டேட்' செய்துகொண்டு, வாழ்வைக் கவனித்து கவனித்து உனது கலை மனசைக் கூர்மைப்படுத்திக் கொள்வதும்தான் அதிமுக்கிய மாகப்படுகிறது. ஆனால், இவற்றைவிடவும் பெரிதான ஒன்று உண்டு. இந்தப் பாடத்தை எனக்குக் கற்றுத் தந்தவர் எனது மாமா.

ஒருநாள் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். ஒரு சிறு பருக்கை கீழே சிதறிவிட்டது. அவர் புன்னகையோடு சொன்னார், ''இந்தப் பருக்கையோட நிலையைப் பாத்தியா... பாவம்!''

நான் வியப்பாக ''ஏன்?'' என்றேன்.

''இந்தப் பருக்கை எத்தனை இடத்தில் தப்பிச்சிருக்கு. அறுவடையில, களத்து மேட்டுல, அரவை ஆலையில, கடையில, அரிசி களைகையில, சாதம் வடிக்கையில... அப்படின்னு எத்தனை இடங்கள்! எங்கேயும் தவறாம அதோட பயனுக்காக எவ்வளது தூரம் கடந்து வந்துச்சு. இப்பப் பாரு... சாதமா மாறி உன் கைக்கு வந்து, கடைசி நொடியில் தவறி விழுந்துடுச்சே... எவ்வளவு பாவம் அது!''

நான் அதிர்ந்து, அப்படியே சிலையாக நின்றுவிட்டேன். எவ்வளவு எளிமையான மனிதரி டம் இருந்து எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்!

 
----- இயக்குனர் மகேந்திரன்

Wednesday, September 12, 2012

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி - கவியரசு கண்ணதாசன்



எங்கே நிம்மதி.... எங்கே நிம்மதி.....
எங்கே நிம்மதி.... எங்கே நிம்மதி.....
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே நிம்மதி.... எங்கே நிம்மதி.....
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்


எங்கே மனிதர் யாரும் இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எங்கே நிம்மதி.... எங்கே நிம்மதி.....
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது

என்ன நினைத்து என்னைப் படைத்தான் இறைவன் என்பவனே
கண்ணைப் படைத்து பெண்ணை படைத்த இறைவன் கொடியவனே
ஓ...... இறைவன் கொடியவனே

எங்கே நிம்மதி.... எங்கே நிம்மதி.....
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்


பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே

என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே
ஓ... உறங்குவேன் தாயே...

எங்கே நிம்மதி.... எங்கே நிம்மதி.....
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

-- கவியரசு கண்ணதாசன்

Thursday, July 19, 2012

அப்பா :)


4 வயதில்--"எங்கப்பா போல ஒரு ஆளைப் பார்க்கவே முடியாது."

6---"அவருக்கு எல்லா விஷயமும் அத்துபடி"

10---"தங்கமானவர்.ஆனால் பொசுக் பொசுக்கு கோபம் வந்திடும்.
மிட்டாய் தின்னதுக்காக என்னை அடிச்சிட்டாரு."

12---"நான் சின்னப்பிள்ளையா இருந்தபோது,
என்னை நல்லா கவனிச்சிக்கிட்டாரு

14--"அவருக்கு சீக்கிரம் திருப்தியே வராது,நாப்பது மார்க் எடுத்தால் அய்ம்பது
எடுக்கணும்பாரு.99மார்க் எடுத்தாகூட--ஒரு மார்க்கை ஏன் கோட்டை விட்டே'ம்பாரு'

16---என்னைச் சுத்தி என்ன நடக்கிதுங்கிரதை புரிஞ்சிக்கவே மாட்டேன் என்கிறாரு.
பழங்காலத்து மனுஷனாவே இருக்காரு."

18---"எடுத்தேன் கவிழ்த்தேன்னுதான் எல்லா நடவடிக்கையும்."

20---"அப்பப்பா,அந்த மனுஷனை புரிஞ்சுக்கவே முடியல.
அம்மா எப்படிதான் காலம் தள்ளறாங்களோ?"

25---"எது கேட்டாலிம் 'கிடையாது','இல்லை','கூடாது'ங்கிற பேச்சுதான்.
இவரெல்லாம் ஒரு மனுஷனா?"

30--என் பையனை சமாளிக்கிறது கஷ்டமா இருக்கு.
என்னை எங்கப்பா எப்படித்தான் சமாளிச்சாரோ?"

40--"என்னை எங்கப்பா எவ்வளவு ஒழுக்கத்தோட,
கட்டுப்பாட்டோட வளர்த்தார் தெரியுமா? அதனால்தான்,இந்தளவு நல்லா இருக்கேன்."

45--"எங்கப்பாவை நினைக்கும்போது ரெம்ப பெருமையா இருக்கு."

50--"ஒருத்தனை மேய்க்கிறதுக்கு எவ்வளவு சிரமப்படறேன்?நாங்க மூன்று பேரு.
ஒரு அண்ணன் மற்ற தம்பி அத்தனை பேரையும் கட்டுக்கோப்பா வளர்த்தார் எங்கப்பா.
அவர் கிரேட்."
55--"ஒவ்வொரு விஷயத்தையும் திட்டம் போட்டு முடிக்கிறதுல அவரை மிஞ்ச
ஆளே இல்லை."

60---"எங்கப்பா போல ஒரு ஆளை பார்க்கவே முடியாது."

(நான்கு வயதில் நாம் சொன்னது சரிதான் என்பதை உணர்வதற்குள்
56ஆண்டுகள் ஓடி விடுகின்றன).

-- மின்னஞ்சலிருந்து 

Monday, July 16, 2012

என் நண்பர்கள் :)



நனைந்த என் விழிகளை
நாசுக்காக துடைத்துவிட்டு
பூட்டிய என் இதழ்களில்
புன்னகையை மலரவிட்டு
நல்லவற்றை
நையாண்டியாய் எடுத்துரைத்து
நான்கு பக்கமும் நான் உண்டு என்று
நம்பிக்கை தரும் உறவாய்......

-- கருத்தவன்

Tuesday, July 3, 2012

காந்திஜி கொல்லப்பட்ட வழக்கில் கோட்சே யின் வாக்குமுலம்

காந்தி கொலை செய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பு. வீரசவர்க்கார் உள்பட வேறு எவருக்கும் தொடர்பு இல்லை" என்று கோட்சே கூறினான். டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கோட்சே தொடர்ந்து வாக்குமூலம் அளித்தான். வாக்கு மூலத்தின் பின்பகுதி... வருமாறு:-

ஜின்னாவின் இரும்புப்பிடி, எக்கு உள்ளத்தின் முன் காந்திஜியின் ஆத்ம சக்தி, அகிம்சைக் கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டன. ஜின்னாவிடம் தம் கொள்கை ஒருக்காலும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் அவர் கொள்கையை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார்.

தம் தோல்வியையும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. மற்ற மேதைகள் ஜின்னாவுடன் பேசி அவரை முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலைப் போன்ற பெரிய தவறுகளைச் செய்த வண்ணம் இருந்தார். நாட்டைப் பிளந்து துண்டு துண்டாக்கியவரைத் "தெய்வம்" என மற்றவர் மதித்தாலும் என் உள்ளம் ஏனோ அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, அவர் மீது கோபம்தான் வருகிறது.

காந்தியைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பதை அறிவேன். சிறிதும் சந்தேகம் இல்லாமல் என் எதிர்காலம் பாழாய்ப்போவது உறுதி. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலிருந்தும் அட்டூழியத்திலிருந்தும் இந்தியா விடுதலையடையும் என்பது என்னவோ உறுதியாகும். மக்கள் என்னை "முட்டாள்" என்று அழைக்கலாம். அறிவில்லாமல் அண்ணல் காந்தியடிகளைக் கொன்றதாகக் கூறலாம். நம் இந்தியா ஒரு பலமுள்ள நாடாகவும், சுதந்திர நாடாகவும் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

நம் நாடு வல்லரசாகத் திகழவேண்டுமானால், காந்தியடிகளின் கொள்கையை நாம் கைவிடவேண்டும். அவர் உயிரோடிருந்தால் நாம் அவர் கொள்கைகளிலிருந்து மாறுபட்டுச் செயல்பட முடியாது. நான் இந்த விஷயத்தை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆனால் நான் அதுபற்றி யாரிடமும் பேசவில்லை. எந்த வகையான யோசனையையும் எவரும் சொல்லவில்லை.

பிர்லா மாளிகையில் பிரார்த்தனை மைதானத்தில் 30_1_1948_ல் மகாத்மா காந்தியைச் சுட என் இரு கைகளுக்கும் வலிமையை நான் வரவழைத்துக்கொண்டேன். இனி நான் எதையும் சொல்வதற்கில்லை. நாட்டின் நலனிற்காகத் தியாகம் செய்வது பாவம் எனக் கருதினால் நான் பாவம் செய்தவனாவேன். அது கவுரவம் என்றால் அந்த கவுரவம் எனக்கு வரட்டும்.

நேதாஜி விடுதலைப்போரில், வன்முறையை ஆதரிப்பவர்களை மட்டும் காந்திஜி எதிர்த்தார் என்பதில்லை. அவருடைய அரசியல் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையவர்களையும் வெறுத்தார். அவருடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு சுபாஷ் சந்திரபோஸ் ஓர் எடுத்துக்காட்டு. காங்கிரசில் இருந்து சுபாஷ் சந்திரபோஸ் தூக்கி எறியப்படும் வரை, காந்திஜியின் வன்மம் முற்றிலும் அகலவில்லை.

சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை காந்திஜி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும் விட நேதாஜியை மக்கள் விரும்பினர். 1945_ல் ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால், இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் காந்தியின் அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு வெளியில் இறந்துவிட்டார்.

முஸ்லிம்கள் மீது காந்திஜி அதிகமான மோகத்தை வளர்த்துக்கொண்டார். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்த இந்துக்கள் மீது இரக்கப்பட்டு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மனிதாபிமானம் பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது. அது முஸ்லிம் மனிதாபிமானம். காந்திஜிக்கும், எனக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எவ்வித பகையும் இருந்தது இல்லை. காந்திஜி மீது நான் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளக் காரணம், நம் நாட்டின் மீது நான் கொண்டிருந்த பக்திதானே தவிர வேறு ஒன்றும் இல்லை. பாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகாவது, பாகிஸ்தானில் வாழும் இந்துக்களின் நலனைக்காக்க இந்த காந்தீய அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால், என் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால், விடியும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியைக் கொண்டு வந்தது.

15 ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த இந்துப்பெண்கள் சந்தைகளில் ஆடு_மாடுகள் விற்கப்படுவதுபோல விற்கப்பட்டனர். இதனால் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவை நோக்கி ஓடிவந்தனர். இந்தியாவை நோக்கி வந்த இந்திய அகதிகள் கூட்டம், நாற்பது மைல் நீளத்துக்கு இருந்தது. இந்தக் கொடிய நிகழ்ச்சிக்கு எதிராக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? அவர்களுக்கு விமானத்தில் இருந்து ரொட்டித் துண்டுகள் போடப்பட்டன. அவ்வளவுதான். "தேசத்தந்தை" என்று காந்தி அழைக்கப்படுகிறார். அது உண்மையானால் அவர் ஒரு தந்தைக்குரிய கடமையிலிருந்து தவறிவிட்டார். பிரிவினைக்கு (பாகிஸ்தான் அமைப்புக்கு) சம்மதம் தெரிவித்ததன் மூலம் இந்த தேசத்துக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்.

பிரிவினைக்கு காந்திஜி சம்மதித்ததால் அவர் இந்தியாவின் தேசத்தந்தை அல்ல; பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று நிரூபித்து விட்டார். பாகிஸ்தான் பிரிவினைக்கு நாம் இணங்கியிருக்காவிட்டால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று சிலர் கூறுவது தவறான கருத்து. தலைவர்கள் எடுத்த தவறான முடிவுக்கு அது வெறும் சாக்குப்போக்காகவே எனக்குத் தோன்றுகிறது. 1947 ஆகஸ்டு 15_ந்தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடானது எப்படி? பஞ்சாப், வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து முதலிய பகுதி மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் எந்த மதிப்பும் தராமல் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரிக்கக்கூடாத பாரதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியில் மதவாத அரசு நிறுவப்பட்டது. முஸ்லிம்கள் தங்கள் தேச விரோத செயல்களுக்கு வெற்றிக்கனியை பாகிஸ்தான் வடிவில் பெற்றனர். பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை.

சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை. கொலை பற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கவே விரும்பினேன். மரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம். என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்கவில்லை.

பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை. `கொலைக்கு நானே பொறுப்பு' என்னோடு பலர் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். கொலைக்கு சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் முன்பே கூறியபடி என் செயலுக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது. என் செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. அவர்களை என்னோடு குற்றம் சாட்டி இருக்காவிட்டால் எனக்காக எந்த எதிர்வாதமும் செய்திருக்கமாட்டேன். வீரசவர்க்காரின் தூண்டுதலில் நான் செயல்பட்டேன் என்று கூறுவதை நான் ஆணித்தரமாக மறுக்கிறேன். அது என் அறிவுத்திறனுக்கு ஏற்படுத்தும் அவமதிப்பாகக் கருதுகிறேன்.

1948 ஜனவரி 17_ந்தேதி சவர்க்காரை பார்த்தோம் என்றும் அவர் "வெற்றியோடு திரும்புங்கள்" என்றும் வாழ்த்தி வழியனுப்பினார் என்று கூறுவதையும் மறுக்கிறேன். இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. மானிட வர்க்கத்தின் நலனுக்காகவே இந்தச் செயலை செய்தேன். இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான். நம் நாடு "இந்துஸ்தான்" என்ற பெயரில் இனி அழைக்கப்படட்டும். இந்தியா மீண்டும் ஒரே நாடாக வேண்டும். இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது." இவ்வாறு கோட்சே கூறினான்.

Sunday, May 13, 2012

அம்மாவின் ஞாயிற்றுக்கிழமை

 
சனிக்கிழமை மாலையே
துவங்கிவிடுகிறது
ஞாயிற்றுக்கிழமை விடுமுறையின் குதூகலம்
... பள்ளி செல்கிற குழந்தைகளுக்கு

ஞாயிறு காலை செய்தித்தாள் இணைப்புகளுடன்
ஒன்றிவிடுகின்றார்
ஓய்வு பெற்ற தாத்தா

தொலைக்காட்சியின்
ஆட்டம் பாட்டங்களில்
ஆரவாரிக்கின்றனர்
அக்காவும் தங்கையும்

சூரியன் சுட்டெரிக்கத் துவங்கும் வரை
தூக்கத்தில் கிடக்கின்றனர்
அண்ணன்கள்

அசைவ உணவுத் தயாரிப்புக்காக
மார்க்கெட்டில் இருந்து திரும்புகின்றனர்
அப்பாவும் சித்தப்பாக்களும்
மெலிதான டாஸ்மாக் வாசனையுடன்

அவரவர் ஞாயிற்றுக்கிழமை
அவரவர் விருப்பம்போல

ஆனால்
அன்றாடம்போலவே
அடுப்படியில் தொடங்கி
அங்கேயே முடிகிறது
அம்மாவின் ஞாயிற்றுக்கிழமை!

- ரவி மோகனா
( விகடன், 2010)

Friday, April 13, 2012

திருநவேலி



திருநெல்வேலியை விட்டு எவ்வளவு தூரம் சென்று வாழ்ந்தாலும் ஊரை மறக்க முடியாமல் ஊர்நினைப்பிலேயே வாழும் எத்தனையோ பேரை சந்தித்திருக்கிறேன். திருநெல்வேலிக்காரரான எழுத்தாளர் வண்ணநிலவனால் சென்னைக்கு வந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் திருநெல்வேலியை மறக்க முடியவில்லை என்பதை அவர் எழுதும் கதைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். 'சென்னையில் வாழ்வது ஒரு பெரிய வாளை கையில் வைத்துக் கொண்டு சண்டை போடுவது மாதிரி இருக்கிறது. இப்போதே திருநெல்வேலியில் ஏதேனும் ஒரு பலசரக்குக்கடையில் ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு யாராவது வேலை கொடுத்தால் சந்தோஷமாகச் சென்று விடுவேன்' என்று ஒருமுறை சொன்னார். திருநெல்வேலிக்காரரான பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய 'புலிநகக்கொன்றை' நாவலைப் படித்தவுடன் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அப்போது அவர் தில்லியில் இருந்தார். 'திருநெல்வேலியை விட்டுச் சென்று எத்தனையோ ஆண்டுகள் நீங்கள் தில்லியில் வாழ்ந்து வந்தாலும் தினமும் சுலோச்சனா முதலியார் பாலத்தில் ஏறி ஏறி இறங்குகிறீர்கள் என்பதை உங்கள் நாவலைப் படிக்கும் போது உணர முடிந்தது' என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதை மகிழ்ச்சியுடன் ஆமோதித்து பதில் எழுதினார்.

சென்னைக்கு வந்த புதிதில் ஊர் நினைப்பு வந்து வாட்டும்போதெல்லாம் ரொம்பவும் சிரமப்படுவேன். சாலிகிராமத்திலிருந்து கிளம்பி பாரிமுனை திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகப் பேரூந்து நிலயத்துக்குச் செல்வேன். அப்போதெல்லாம் கோயம்பேடு பஸ்நிலையம் வந்திருக்கவில்லை. பாரிமுனைக்குத்தான் செல்ல வேண்டும். திருநெல்வேலிக்குச் செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதிக்குச் சென்று அங்கு சிறிது நேரம் அமர்ந்திருப்பேன். எப்படியும் எனக்குத் தெரிந்த ஒரு திருநெல்வேலி முகத்தையாவது பார்த்து விடுவேன். இல்லையென்றாலும் காது குளிர ஊர் பாஷையைக் கேட்டுவிட்டு திரும்பி விடுவேன்.

'ஏட்டி . ..இட்லி பார்ஸல் வாங்கிக்கிடட்டுமா?'

'இட்லியவே கெட்டி அளுங்கோ . . அதான் நெதமும் முளுங்குதேளே . . ஒரு சப்பாத்தி கிப்பாத்தி வாங்கினா என்ன கொள்ள?'

'நம்ம வீட்ல இட்லி வாயில வைக்க மாதிரியாட்டி இருக்கு?'

'நல்லா வருது என் வாயில . . . பெறகு ஈரமண்ணையா திங்கியொ . . . அவிச்சுப் போட்டு முடியல . . . பேசுதாவோ பேச்சு . . எவ நல்லா அவிச்சு போடுதாளோ அங்க போயி நிக்க வேண்டியதானே தட்டத் தூக்கிட்டு . . . . .'

திருநெல்வேலிக்காரர்கள் சுகவாசிகள். தாமிரபரணித் தண்ணீரும், குறுக்குத்துறைக்காற்றும், நெல்லையப்பர் கோயிலும், இருட்டுக் கடை அல்வாவும் லேசில் அவர்களை அந்த ஊரை விட்டு எங்கும் நகர விடாது. ஒரு சில இளைஞர்களைத் தவிர பெரும்பாலானவர்கள் கூடுமானவரை அந்த ஊரிலேயே இருக்க முனைவார்கள். எஸ்.எஸ்.எல்.சியோ, பிளஸ்-டூவோ முடித்து விட்டு ஆர்.எம்.கே.வி.யில் வேலைக்குச் சேர்ந்தால் போதும். மூவாயிரம் ரூபாய் சம்பளத்தில் ராஜா மாதிரி வாழலாம் என்பார்கள். ஆர்.எம்.கே.வி. வேலை என்றால் கண்ணை மூடிக் கொண்டு பெண் கொடுப்பார்கள் என்பது அவர்கள் நம்பிக்கை. அப்படி நடந்தும் இருக்கிறது. தினமும் தாமிரபரணிக்குச் சென்று குளியல். சனிக்கிழமை கண்டிப்பாக எண்ணெய்க் குளியல் உண்டு. மாலையில் சின்ன வாழையிலையில் சுற்றிய ஐம்பது கிராம் இருட்டுக்கடை அல்வா. கொசுறாகக் கொஞ்சம் காரச்சேவு. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை விடவும் பரப்பளவில் பெரிதான நெல்லையப்பர் கோயிலை ஒரு முறை சுற்றி வந்தால், 'ஆடு மேய்ச்சாப்புலயும் ஆச்சு அண்ணனுக்குப் பொண்ணு பாத்தாப்பிலயும் ஆச்சு' என்பது போல நடைக்கு நடையும் ஆயிற்று. சாமி கும்பிட்ட மாதிரியும் ஆயிற்று. மேற்படி சமாச்சாரங்களில் சிறு வயதிலிருந்தே முங்கிப் பழகிய மீனாட்சி சுந்தரத்திற்கு பட்டப் படிப்பு முடித்தவுடன் சென்னையில் வேலை பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. மறுத்துவிட்டான். சென்னையில் கிடைக்கும் சம்பளத்தில் இரண்டாயிரம் ரூபாய் கம்மியாகக் கிடைத்தாலும் திருநெல்வேலியில்தான் தனக்கு நிம்மதியாக இருக்க முடியும். அதுவே தனக்கு சந்தோஷம் என்று கறாராகச் சொல்லிவிட்டான். 'சித்தப்பா, திருநவேலில இருந்தா நமக்கு மனச்சிக்கலும் கெடையாது. மலச்சிக்கலும் கெடையாது. பெறகு என்ன மயித்துக்கு அசலூருக்கு போகணும்ங்கேன் . . என்ன சொல்லுதிய . . . தச்சநல்லூரைத் தாண்டுனாலே நமக்குக் காய்ச்சல் வந்துரும், கேட்டேளா' என்றான். திருநெல்வேலிக்கு அடுத்த ஊரான தச்சநல்லூர், திருநெல்வேலியிலிருந்து மதுரைக்குப் போகும் வழியில் உள்ளது.
நண்பன் குஞ்சு சிறுவயதில், 'இந்த ஊர்ல மனுஷன் இருப்பானாலெ . . நான்லாம் பெரியவனானா அமெரிக்கா போயிருவேன்' என்றே சொல்லிவந்தான். அதென்ன அமெரிக்கா என்று கேட்டால், 'பின்னே . . . என்ன இருந்தாலும் நாங்க பிறாமின்ஸ்ல்லா' என்று வேண்டுமென்றே நக்கலாக அழுத்திச்சொல்வான். நானும் அவனும் பாளையங்கோட்டையில் ஒரு கடைப்பக்கம் நின்று கொண்டு பெண்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பதினாறு வயது மதிக்கத் தக்க பையன் கடைக்கு வந்தான். நெற்றியிலும் உடம்பிலும் குழைத்துப் பூசப்பட்ட திருநீற்றுப்பட்டைகள். பிராமணப்பையன் என்பது அந்த நெற்றிப்பட்டையிலேயே எழுதிச் சின்னதாக ஒட்டியிருந்தது. வண்ணமாக இருந்தான். அபோதுதான் வேஷ்டி கட்டப் பழகியிருக்கிறான் என்பது அவனது கவனமான நடையிலேயே தெரிந்தது. வந்தவன் நேரே கடைக்காரரிடம் சென்று அங்கு நின்று கொண்டிருக்கும் மற்றவர்களைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் சத்தமாக, 'கடக்காரரே, கடக்காரரே . . எனக்கு ஒரு எல்.ஜி.பெருங்காய டப்பா ஒண்ணு குடுங்கோளேன்' என்றான். எனக்கு அவன் அப்படி கேட்டது அடக்க முடியாத சிரிப்பை வரவழைத்தது. உடனே குஞ்சு, ' ஆமா நீ இப்படி சிரிச்சுக்கிட்டே இரி . . .இன்னும் மூணு வருஷத்துல அம்பி அமெரிக்கா போயிருவான்' என்றான். அப்போதெல்லாம் அநியாயத்துக்கு குஞ்சு என்னை கிண்டல் பண்ணுவான். தான் அமெரிக்காவிலிருந்து குடும்பத்துடன் விடுமுறைக்கு வரும் போது நான் திருநெல்வேலியில் ஒரு அழுக்கு வேஷ்டியைக் கட்டிக் கொண்டு வெற்றிலை போட்டபடி திண்ணையில் சாய்ந்திருப்பேனாம். அப்போது அவனுடைய மகனிடம் என்னைக் காட்டி, 'பாத்தியா . . இவன்லாம் நான் அமெரிக்கா கெளம்பும் போது இப்படி சாஞ்சு ஒக்காந்தவன். இன்னும் எந்திரிக்கவே இல்லை' என்று சொல்வானாம். காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விட்டது. வெற்றிலைக்கு பதில் சிகரட் பிடித்தபடி இப்போது திண்ணையில் சாய்ந்தே இருப்பது அவன்தான். நான் எப்போதாவது ஊரூக்குப் போகிறேன்.

பிராமணர்கள் அதிகம் குடியிருக்கும் தெப்பக்குளத் தெருவில் ராமசாமி என்னும் செக்கச்செவேல் நண்பன் ஒருவன் இருந்தான். எங்களை விட ஒன்றிரண்டு வயது சீனியர்.தளதளவென்று உயரமாக இருப்பான். ரஜினி ரசிகன். நெல்லைவாசிகளான பிராமணர்களின் வாயில் பெரும்பாலும் பிராமண பாஷை வராது என்றாலும் ராமசாமியின் வாயிலிருந்து சுத்தமான திருநெல்வேலி பாஷை மட்டுமே கிளம்பும். மறந்தும் வேறு பேச்சு வராது. சொல்றேன் என்பதை நெல்லைக்காரர்கள் சொல்லுதேன் என்பார்கள். வரேன் என்பதை வாரேன் என்பார்கள். ராமசாமி வாரேன் என்பதையும் வருதேன் என்பான். அவனைத் தவிர எனக்குத் தெரிந்து எந்தத் திருநெல்வேலிக்காரனும் வருதேன் என்று சொல்லி நான் கேட்டதில்லை. ராமசாமிக்கும் தச்சநல்லூரைத் தாண்டினால் காய்ச்சல்தான். அது மட்டுமல்லாமல் தனக்குத் தெரிந்த யாராவது திருநெல்வேலியை விட்டு வெளியூருக்கு வேலை தேடிச் சென்று விட்டால் ரொம்பவே ஆத்திரப் படுவான். சுவற்றில் அடித்த பந்தாய் எப்படியும் அவர்கள் திரும்பி திருநெல்வேலிக்கே வருவார்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பான். அதன் படியே அவர்களில் யாராவது ஊரை விட்டு இருக்க முடியாமல் திரும்பி ஊருக்கே வந்து விட்டால் ராமசாமிக்கு குஷி அதிகமாகிவிடும். ' யோவ், யாரை கேட்டுய்யா திருநவேலியை விட்டுப் போனீரு . . மறுபடியும் ஒம்ம ஊருக்குள்ளெ சேக்கணும்னா நெல்லையப்பர் கோயில் வாசல்ல உக்காந்து நீரு செருப்பு தொடைக்கணும்' என்று சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்வான். ராமசாமி இப்போது இருப்பது பட்டுக்கோட்டையில்.

திருநெல்வேலியை விட்டு பட்டுக்கோட்டைக்குச் சென்றுவிட்ட ராமசாமி சுத்தமாக திருநெல்வேலியையும், அதைவிட ஆச்சரியமாக திருநெல்வேலி பாஷையையுமே மறந்து விட்டதாக எல்லோரும் சொன்னார்கள். சில நாட்களுக்கு முன் எனது மொபைல் ஃபோனுக்கு தெரியாத வெளியூர் லேண்ட்லைன் நம்பரிலிருந்து ஓர் அழைப்பு வந்தது. யாராக இருக்கும் என்று தயங்கியபடியே ஹலோ என்றேன்.

'சௌக்யமா? நான் ராமசாமி'

'தெரியலியே . . . எ . .ந்த ராமசாமி?'

'தெப்பக்குளத்தெரு ராமசாமி'

உற்சாகமானேன்.

'ராமசாமி . . . ஏ அப்பா . . .எவ்வளவு நாளாச்சு . . .சௌக்கியமா?'

'நல்லா இருக்கேன். நான் இப்போ பட்டுக்கோட்டையில இருக்கறேன். குஞ்சுக்கிட்டேதான் நம்பர் வாங்கினேன். ரொம்ப நாளாச்சுல்ல நாம பேசி'.

ஸ்டைலாக ராமசாமி பேசியது எனக்கு அந்நியமாக இருந்தது. மகிழ்ச்சி அனைத்தும் வடிந்து சம்பிரதாயமாகப் பேசினேன்.

'திருநவேலிக்கு இப்போதைக்குப் போகலியா ராமசாமி?'

'ம் ம் ம் . . .இங்கேயிருந்து திருநெல்வேலிக்கு எங்கே போறது? ரொம்ப நாளாச்சு'.

திருநவேலியை திருநெல்வேலி என்று சுத்தமாகச் சொல்லும் அளவுக்கு ராமசாமி மாறிவிட்டானே என்று வருத்தமாக இருந்தது. பேச்சை முடிக்கும் எண்ணம் வந்து விட்டது.

'அப்புறம் ராமசாமி . . .மெட்றாஸ் பக்கம்லாம் வாரதில்லையா . . '
'ஒரு ·பங்ஷனுக்கு வரவேண்டியதிருக்கு. வரும்போது ஃபோன் பண்ணிட்டு கண்டிப்பா நேர்ல பாக்க வருதேன்'.

எனக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

                                                                                                             -- 'வார்த்தை' மார்ச் இதழ்

திருநெல்வேலி - http://www.lovenellai.com

Tuesday, April 3, 2012

நட்பு காலம் II - அறிவுமதி



*********

நீ வயசுக்கு வந்தபோது
தடுமாறிய
என்
முதல் கூச்சத்திற்குக்
குட்டு வைத்து
நம் நட்பைக்
காப்பாற்றியவள்
நீ


*********

அம்மா அப்பாவிடம் அறிமுகப்படுத்த
முதன்முதலாக என்னை நீ
உனது வீட்டிற்கு அழைத்துச்
சென்றிருந்த போது
வழக்கமான அம்மாக்களின்
சந்தேகத்தையொத்த பரிமாறலுக்கு
நடுவே....
''எப்போதும் இவன் உன்
மருமகனாக முடியாது
ஏனெனில்
இவன் என்
நிச்சயிக்கப்பட்ட நண்பன்''
உன் குரல்
இப்போதும் கேட்கிறது
எனக்குள்.

*********

அடிவானத்தை மீறிய
உலகின் அழகு என்பது
பயங்களற்ற
இரண்டு மிகச்சிறிய
இதயங்களின்
நட்பில் இருக்கிறது

*********

 நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை ....

*********

என் காதலியை
உனக்கு நான்
அறிமுகம் செய்து வைத்தபோது
நீ விழுங்கிய
எச்சிலில் இருந்தது
நமக்கான நட்பு

*********

'எனக்கு மட்டும்' என்று
குவிகிற
மையத்தையே
காம்பாக்கிக் கொண்டு
'வெளி'வாங்கிப்
பூக்கிறது
நட்பு


*********

ஆய்வை முடிக்கிறவரை
காதலனை
வரவேண்டாம் என்று
கட்டளையிட்டாய்
வந்துகொண்டே
இருக்க வேண்டும்
என்று என்னிடம்
கெஞ்சினாய்
உன்னைக்
காதலிப்பவனும்தான்
எவ்வளவு
உயர்ந்தவன்
உணர்ந்து கொண்ட மௌனத்திற்கென்றே
ஒரு
புன்னகை
இருக்கத்தான்
செய்கிறது
என்பதை அவன்தானே எனக்குச்
சொல்லிக் கொடுத்தான் 

*********

-- கவிஞர் அறிவுமதி 

Wednesday, March 28, 2012

நட்பு காலம் I - அறிவுமதி


 *******

எல்லாவற்றிலும்
எனக்குப் பிடித்ததையே
நீ
தேர்ந்தெடுத்தாய்
உனக்குப் பிடித்ததையே
நான்
தேர்ந்தெடுத்தேன்
அதனால்தான்
நட்பு
நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறது

*******

கடற்கரையின்
முகம் தெரியாத இரவில்
பேசிக் கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும்
பாக்கியம்
எத்தனைக் கண்களுக்கு
வாய்த்திருக்கும்

********

உனக்கு மடல் எழுத
உட்காருகிற போது
மட்டும்தான்
அப்புறம்
எழுதிக் கொள்ளலாம்
என்பதற்கான
அர்த்தமற்ற காரணங்கள்
மிக எளிதாய்
எனக்குக் கிடைத்து
விடுகின்றன

*********

போக்குவரத்து அதிகமுள்ள
அந்தச் சாலையோரத்தில்
நாம் பேசிக்கொண்டிருந்த பொழுது
எத்தனை முறை
காதுகளுக்குத்
திரும்பினோம் என்று
சொல்லிவிட முடியுமா
உன்னால்.

***********

பேருந்து நிறுத்தத்திற்குச்
சற்றுத் தள்ளிநின்று
பேசுகிறவர்கள்
காதலர்கள்
நிறுத்தத்திலேயே
நின்று
பேசுகிறவர்கள்
நண்பர்கள்

***********

போகிற இடத்தில்
என்னை
விட
அழகாய்
அறிவாய்
ஒருவன்
இருந்து விடுவானோ
என்கிற
பயம்
நல்லவேளை
நட்பிற்கு
இல்லை

***********

  -- கவிஞர் அறிவுமதி 

Sunday, March 25, 2012

இங்கே கணவர்கள் விற்கப்படும்..!

ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது....அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..

அது என்னன்னா...!

1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.

2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும்
இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும்.

ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..

அப்டியே வெளிய தான் போக முடியும்.

இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா......கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது

முதல் தளத்துல அறிக்கை பலகைல "முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு

இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா


இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " அப்டின்னு போட்டுருந்துச்சு

இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.

மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்டின்னு போட்டுருந்துச்சு

அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும் ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.

நாலாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.
வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு.

இதை விட வேற என்ன வேணும்...நல்ல குடும்பம் அமைக்கலாமே?

கடவுளே...மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும்." அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.

ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.

வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு.

அவ்ளோ தான்.....அந்த பெண்மணியாள முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ...சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே..அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது...சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..

ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல

"இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை..வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது ..இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான் .

எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...

பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் " அப்டின்னு போட்டிருந்தது .
 -- மின்னஞ்சலிலிருந்து

Monday, February 13, 2012

காதல் ஆத்திசூடி

அவளிடம் மதி மயங்கு!
உனக்காகப் பிறந்தவள், உனக்கென்று ஒதுக்கப்பட்ட காதல் கணத்தில்... சட்டென்று உன் கண் முன்னே தோன்றுவாள்.
அந்த தேவ நிமிஷத்தில் நீ தொலைந்துபோவாய்!
உன் நண்பர்கள், அவளது வீதியில் தொலைந்துகிடக்கும் உன்னைக் கண்டெடுத்து வந்து உன்னிடம் கொடுப்பார்கள். அது அவர்கள் நட்பின் கடமை. உன் காதலின் கடமை என்ன தெரியுமா?
உன் நண்பர்கள் கொடுத்த உன்னை எடுத்துக்கொண்டு உடனே அவளிடம் ஓட வேண்டும்.
மீண்டும் தொலைப்பதற்காக!
*

ஆயிரம் முறை அவள் கண்ணில் படு!
அவள் திரும்பிப் பார்க்கும் இடத்தில் எல்லாம் நீ அவள் கண்ணில் பட வேண்டும்.
அதிசயமாய் அதிகாலை வாசல் தெளிக்க அவள் வரும் நாளில் பனித் துளி மாதிரி பார்வையில் படு. குடும்பத்தோடு அவள் இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டுத் திரும்பும் நள்ளிரவிலும் அவள் கண்ணில் படு. எங்கெங்கும் அவள் உன்னைப் பார்க்க வேண்டும்.
இவன் ஒருத்தனா... இல்லை ஏழு பேரா என அவள் குழம்ப வேண்டும்.
குட்டையைக் குழப்பி மீன் பிடிப் பதைப் போல, அவள் மனதைக் குழப்பி மனதைப் பிடிக்கும் வித்தை இது!
*

இதயத்தை அலங்கரி!
ஒருத்தி நுழையப் போகிறாள் என்பது தெரிந்த நொடியிலேயே, உள்ளங்கை அளவிலிருந்து உலக அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துவிடும் இதயம்! ஆகவே இதயத்தை அலங்கரி.
இனி அவளுக்கும் உனக்கும் ஏற்படப் போகும் நிகழ்வுகளின் ஆல்பங்களை அடுக்கிவைக்க, அதன் சுவர் முழுவதும் அலமாரிகளை அடி.
அவளை வரவேற்க வளைவுகளும், விளையாட ஊஞ்சலும், நீராடத் தடாகமும், துயில்வதற்கு மெத்தையும், முக்கியமாய் அவள் தன்னை அடிக்கடி அழகு பார்த்துக்கொள்ள அவளுயரக் கண்ணாடியும் அமை. அவள் கேட்க, துடிப்புகளில் இனிய இசையை உண்டாக்கு. சீக்கிரம்... அதோ அவள் வந்துகொண்டு இருக்கிறாள்!
*

ஈர்க்கும் படி நட!
இது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால், அவளை ஈர்ப்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப்படலாம்.
ஏன் என்றால், அவ்வளவு கஷ்டத் துக்கும் பரிசாகக் கிடைக்கப்போவது அவளின் அழகான இதயம்.
முதன்முதலாய் உன் கண்களை அவள் கண்கள் சந்திக்கிறபோதுதான் உன் காதல் பரிபூரணமாய் ஆசீர்வதிக்கப் படுகிறது.
கண்ணியம் என்பது அரசியலில் இருக்கிறதோ இல்லையோ, அவளை ஈர்க்கும் உன் முயற்சியில் அது இருந்தால், வெகு சீக்கிரமே அவள் மனதில் பட்டொளி வீசிப் பறக்கும் உன் கொடி!
*

உறுத்தாமல் பார்!

காதலிப்பதால் கிடைக்கும் சுகத்தில் பாதி சுகம் பார்த்துக் கொண்டு இருப்பதில்தான் இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.
பார்வைகள் ஒருபோதும் பார்ப்பதால் தீர்வதில்லை. மாறாக வளர்ந்துகொண்டே இருக்கிறது.
உன் பார்வை அவள் அழகைத் தின்னக் கூடியதாக இருக்கக் கூடாது. அவள் அழகுக்கு மகுடம் சூட்டுவதாக இருக்க வேண்டும். உன் பார்வையால் தனது அழகு வளர்வதாக அவள் உணர வேண்டும்.
இப்படி எல்லாம் எப்படிப் பார்ப்பதென்று நீ எங்கேயும் கற்றுக்கொள்ளத் தேவை இல்லை.
மனதில் காதலை மட்டும் வைத்து, ஒரு மலரைப் பார்ப்பதைப் போல் அவளைப்பார்.
உனது கண்களால் உன் உள்ளத்தில் உள்ள காதலுக்கு ஓராயிரம் ஊற்றுக்கண்கள் திறக்கும்!
*

ஊதியமின்றிக் காவல் செய்!

உலகத்திலேயே அழகான வேலை, உன் காதலியைக் காவல் காக்கும் கருப்பண்ணசாமி வேலைதான்.
நீ அவளைப் பின்தொடர்வதை அவள் தெரிந்துகொண்டால், எங்குவேண்டு மானாலும் துணிச்சலுடன் போவாள்.
அவள் அப்பா மாதிரியோ அண்ணன் மாதிரியோ 'எங்க போற' என்று நீ கேள்வியும் கேட்க மாட்டாய். அவளுக்கு ஏதாவது ஆபத்தென்றால் நீ பொங்குவாய் என்கிற மதர்ப்பே அதற்குக் காரணம்.
என்றாவது ஒரு நாள். குரைக்கும் நாய்க்குப் பயந்தோ, பாய்ந்து வரும் மாட்டைக் கண்டோ அத்தனை பேரையும் விட்டுவிட்டு உன் பின்னால் ஓடி வந்து ஒளிவாள். அதுதான் உன் காவலுக்கும் காதலுக்கும் அவள் தரும் மரியாதை!
*

எதற்கும் வழியாதே!

தவறுதலாய் அவள் கைக்குட்டை கீழே விழுவதைப் பார்த்துவிட்டால் ஓடிப்போய் சிதறு தேங்காய்ப் பொறுக்கு பவனைப் போல் பொறுக்காதே.
செடிக்கு அடியில் கிடக்கும் மலரைப் போல் நிதானமாய் எடு. அதை அவளிடம் தருகையில் 'உங்க கர்ச்சீப். மிஸ் பண்ணிட்டீங்க' என்று வழியாதே. "இது உன் கர்ச்சீப்பா' என்று பந்தாவாகக் கேள்.
இன்னொரு தெய்வாதீனத் தருணத்தில் நீயும் அவளும் அருகருகே நிற்க வேண்டிய வாய்ப்பு கிடைக்கலாம்.
அப்படி அவள் அருகில் நிற்கையில் உனக்குக் கைகால்கள் உதறலாம். அல்லது சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு வானத்தைப் பார்த்து ஏகாந்தமாய் நமட்டுச்சிரிப்பு சிரிக்கத் தோன்றலாம்.
இதில் நீ எதைச் செய்தாலும், உனக்கு அவள் போட்டுவைத்திருக்கும் மதிப்பெண் அம்பேல் ஆகிவிடும்.
ஒன்றும் தெரியாத பையனைப் போல அமைதியாய் நில்.
அமைதி ஓர் அற்புதமான வசிய மருந்து!
*

ஏகலைவனாய் இரு!

நீ எத்தனையோ காதல் காவியங் களைப் பார்த்திருக்கலாம். எத்தனையோ காதல் படங்களைப் பார்த்திருக்கலாம். ஆனால், அவை எதிலிருந்தும் உனக்கான காதலை நீ எடுத்திருக்க முடியாது.
அது அவளிடம் மட்டுமே கொடுத்தனுப்பப்பட்டு இருக்கிறது.
அதை, அவளை நீ பார்த்த நொடியி லேயே உன்னிடம் சேர்த்துவிட்டாள்.ஆகையால், காதலில் அவளே உனக்கு குரு.
அதற்கான குருதட்சணையாக, அவள் உன் உயிரைக் கேட்டாலும், ஏகலைவன் போல் யோசிக்காமல் கொய்து தரத் தயராய் இருக்க வேண்டும் நீ.
ஆனால், அப்படிக் கேட்க அவள் ஒன்றும் துரோணர் இல்லை. என்றாலும் அவள் எப்போது எது கேட்டாலும் தருவதற்குத் தயராய் நீ ஏகலைவனாகவே இரு!
*

ஐம்புலனிலும் அவளை வை!

கண்டும் கேட்டும் உண்டும் நுகர்ந்தும் தொட்டும் இன்புறும் ஐம்புலன்களின் இன்பமும் ஒன்றாய் இருப்பது பெண்ணிடம் மட்டுமே என்று அடித்துச் சொல்கிறது திருக்குறள்.
உன் காதலியும் இப்படித்தான் உன் ஐம்புலன்களையும் சொக்கவைக்கப் போகிறாள்.
ஆனால், அதற்கு முன்... உன் ஐம்புல னாலும் அவளை நீ காதலி.
கண்களில் அவள் உருவத்தை வை
காதுகளில் அவள் குரலை வை
சுவாசத்தில் அவள் வாசம் வை
உதடுகளில் அவள் பெயரை வை
உணர்வில் அவள் உயிரை வை!
*

ஒரு நாள் காதலைச் சொல்!

அவள் மகிழ்வாய் இருக்கும் நேரம் பார்த்து, "நான் ரொம்ப நாளாய் ஒருத்தியைக் காதலிக்கிறேன் அவள் நீயா?' என்று கேள்.
புன்னகையை அடக்கிக்கொண்டு 'ஏன்... அவள் யாரென்று உனக்குத் தெரியாதா?' என்பாள்.
'அவளை நினைக்க ஆரம்பித்த பிறகு என்னையே நான் மறந்துவிட்ட தால், அவள் யார் என்பது தெரியாமல் போய்விட்டது' என்று சொல்.
'உன்னை ஞாபகப்படுத்திக்கொள். அவள் யாரென்பது தெரிந்துவிடும்' என்பாள்.
'அவளை நான் மறந்தால்தானே என் ஞாபகம் எனக்கு வரும்' என்று கேள்.
'அவளை மறந்துவிட வேண்டியது தானே' என்பாள்.
'என் ஆயுள் காலம் வரை அவளை ஞாபகம் வைத்திருப்பேன்' என்பது நிஜமில்லைதான்.
ஆனால், அவளை நான் ஞாபகம் வைத்திருக்கும்வரைதான்...
'நான் உயிரோடு இருப்பேன் என்பது மட்டும் கண்டிப்பாய் நிஜம்' என்று சொல்.
'அப்படியானால் நீ காதலிக்கும் பெண் நான்தான்' என்பாள் தலையைக் குனிந்து.
'எனக்குத் தெரியும்' என்று சொல்.
செல்லமாய் கோபிப்பாள். பிறகு கண்டிப்பாய் கிடைக்கும் அழகான பிகு முத்தம்!
*

ஓர் உலகம் செய்!

அந்த உலகம் அற்புதமானது.
அங்கே கடற்கரை, திரையரங்குகள் எல்லாம் உண்டு. ஆனால் உங்களைத் தவிர வேற யாருமே இல்லை. அங்கே சில்லென சூரியன் உதிக்கும்... கதகதப்பாய் மழை பெய்யும்.
அந்த உலகம் எங்கே இருக்கிறது என்று கத்தாதே.
நீ உன் காதலியோடு எங்கெல்லாம் செல்கிறாயோ அங்கெல்லாம் அந்த உலகம் இருக்கும்.
ஆனால், நீங்கள் போகும் இடமெல்லாம் உங்கள் பின்னாலேயே வரும் ஒரு ஆப்பிள் மரம்.
அவசரப்பட்டு அந்த மரக்கனியைத் தின்றுவிடாதீர்கள்.
அதற்கின்னும் காலமும் கனிய வில்லை. ஆப்பிளும் கனியவில்லை!
*

ஒளவியும் ஒளவாமலும் பழகு!

இது என்ன வார்த்தை என்று முழிக்காதே.
தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும், அணைத்தும் அணைக்காமலும் என்ற வார்த்தைகள் எல்லாம் கலந்தெடுத்த, காதலுக்கென்றே கண்டுபிடிக்கப்பட்ட அழகான வார்த்தை இது.
தொடுவானம் எப்போதும் பூமியைத் தொட்டுக்கொண்டு இருப்பது மாதிரித்தான் தெரியும். ஆனால் தொடாது.
அதற்காக வானமும் பூமியும் தொட்டுக்கொள்வதே இல்லை என்று அர்த்தம் அல்ல.
மாபெரும் வானத்துக்குள்தான் இருக்கிறது இந்த பூமி. அப்படித்தான் நீயும் அவளும் பழக வேண்டும். அவள் வானமாய்... நீ பூமியாய்!
காதல் காலம் என்பது, பார்ப்பதற்கும் பேசுவதற்குமே போதாது.
ஆகையால் இப்போதைக்கு அவளைப் பார்த்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இரு.
தொடுதலையும் படுதலையும் அவ்வப்போது அனிச்சையாய் காதலே அரங்கேற்றிக்கொள்ளும்!
-- தபூ சங்கர், ஆனந்த விகடனிலிருந்து

Thursday, January 26, 2012

தபு ஷங்கர் காதல் கவிதைகள் - III



மௌனம்

அற்புதமான காதலை மட்டுமல்ல
அதை உன்னிடம் சொல்ல முடியாத
அதி அற்புதமான மௌனத்தையும்
நீதான்
எனக்குத்
தந்தாய்.

கோலம்
எதற்காக
நீ கஷ்டப்பட்டுக்
கோலம் போடுகிறாய்..?
பேசாமல்
வாசலிலேயே சிறிது நேரம்
உட்கார்ந்திரு, போதும்!


பூ
ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது
ஏன் இந்தப் பூ
நகர்ந்துகொண்டே இருக்கிறது?
என்று!

வானம்
நீ எப்போதும்
தலையைக் குனிந்தே
வெட்கப்படுவதால்
உன் மதிப்புமிக்க வெட்கத்தையெல்லாம்
இந்தப் பூமி மட்டுமே
தரிசிக்க முடிகிறது!
ஒரேயரு முறை
கொஞ்சம் உன் தலையை
நிமிர்த்தி வெட்கப்படேன்...
வெகுநாட்களாய் உன்
வெட்கத்தைத் தரிசிக்கத்
துடிக்கிறது வானம்!

-- தபு ஷங்கர்

Tuesday, January 24, 2012

காமராஜர் - The King Maker



மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற 'கே.பிளான்' போட்டுக் கொடுத்த இவரே முதல் ஆளாகப் பதவி விலகினார். 'எனக்கு எந்தப் பற்றும் இல்லைன்னு காட்டினாதான் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண முடியும்' என்றார்!

ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசுவார். பத்திரிகையாளர் சாவி ஒருமுறை சந்திக்கச் சென்றபோது ஜான் கன்டர் எழுதிய இன்சைட் ஆப்பிரிக்கா என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்தாராம்!

அவரளவுக்குச் சுருக்கமாக யாராலும் பேச முடியாது. உ.பி-யில் ஒரு பிரஸ்மீட். 50 கேள்விகளுக்கு ஏழு நிமிடத்தில் பதில் சொன்னாராம். இரண்டரை மணி நேரத்தில் எட்டு ஊர்களில் கூட்டம் பேசியிருக்கிறார். இசை விழாவைத் தொடக்கிவைக்க அழைத்தார்கள். 'இசை விழாவைத் தொடக்கிவைப்பதில் பெருமைப்படுகிறேன்' என்று மட்டுமே சொல்லி விட்டு இறங்கினார்!

நாற்காலியில் உட்காருவது அவருக்குப் பிடிக்காது. சோபாவில் இரண்டு பக்கமும் தனது நீளமான கைகளை விரித்தபடி உட்காரவே விரும்புவார். முதல்வராக இருந்தபோதும் தலைமைச் செயலகத்தில் பிரத்யேகமாக சோபா வைத்திருந்தார்!

கடிகாரம் கட்ட மாட்டார். சின்ன டைம்பீஸைத் தனது பையில் வைத்திருப்பார். தேவைப்படும்போது எடுத்துப் பார்த்துக்கொள்வார்!

'ஆறாவது வரை படித்தவர்தானே! என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது!' என்று அவரது அறிவாற்றலை மெச்சினார் ஆர்.வெங்கட்ராமன்!

தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார்!

தனது வலதுகரமாக இருந்த ஜி.ராஜகோபாலன் இறந்தபோது மட்டும்தான் காமராஜரின் கண்கள் லேசாகக் கலங்கினவாம். தாய் சிவகாமி இறந்தபோதுகூட அழவில்லை அவர்!

'தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடுஒட்டோ, உறவோ இல்லை. இந்தக் கட்சிகளோடு உறவு வைத் துள்ள கட்சிகளோடும் உறவு இல்லை' - காமராஜர் கூட்டிய கடைசி நிர்வாகக் கமிட்டியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இது. இதை அவரது மரண சாசனம் என்பார்கள்!

விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். 'இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!' என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர்.

கோடை காலத்தில் இரண்டே இரண்டு நாட்கள் குற்றாலத்தில் போய் தங்கிவிட்டு வருவார். அவரது அதிகபட்ச சந்தோஷமாக அதுதான் இருந்திருக்கிறது!

ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்!

இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு 1975 அக்டோபர் 2-ம் தேதி அதிகமாக வியர்த்தது. டாக்டர் அண்ணாமலைக்கு அவரே போன் செய்துவிட்டு, 'டாக்டர் வந்தா எழுப்பு... விளக்கை அணைச்சிட்டுப் போ' என்றார். அதுவே அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை. டாக்டர் வரும்போது காமராஜர் அணைந்துவிட்டார்

( காமராஜர் 25 - ப.திருமாவேலன் )

Sunday, January 15, 2012

அஸ்க் லஸ்கா - நண்பன்



ஏதோ தன்னாலே உன் மேலே ….காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே ….

அஸ்கா அஸ்கா அஸ்கா அஸ்கா
அஸ்கா அஸ்கா அஸ்கா அஸ்கா

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ – ஐ
அஸ்த் அஸ்த் லைபே
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே – லவ்
இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே

ஹுச்க் ஹுச்க் ….அஸ்கா அஸ்கா

அத்தனை மொழியிலும் வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன் ..
மொத்தமாய் கோர்த்து தான் காதல் செண்டு ஒன்று செய்தேன்…

உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன் ….

ஏதோ தன்னாலே உன் மேலே ….காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே ….

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ – ஐ
அஸ்த் அஸ்த் லைபே
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே – லவ்
இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே

ப்ளுட்டோவில் உனை நான் கூடேற்றுவேன்
விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன்
முக்கோணங்கள் படித்தேன்
உன் மூக்கின் மேலே
விட்டம் மட்டம் படித்தேன்
உன் நெஞ்சின் மேலே
மெல்லிடையோடு வளைகோடு நான் ஆய்கிறேன் ஒ.. ஓ…

ப்ளாட்டோவின் மகனாய் உன் வேடமா
ஆராய்ச்சி நடத்த நான் கூடமா
காதல் நோயில் விழுந்தாய்
உன் கண்ணில் கண்டேன்
நாளும் உண்ணும் மருந்தாய்
என் முத்தம் தந்தேன்
உன் நெஞ்சில் நாடிமானி வைக்க
காதல் காதல் என்றே கேட்க

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ – ஐ
அஸ்த் அஸ்த் லைபே
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே

லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே

தே ஜா வூ கனவில் தீ மூட்டினாய்
ராஜா என் மனதை ஏன் வாட்டினாய்
கப்பம் கேட்டு மிரட்டி நீ வெப்பம் கொண்டாய்
ரத்தம் மொத்தம் கொதிக்க என் பக்கம் வந்தாய்
வெண்ணிலவாக இதமாக குளிரூட்டவா

கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்
வெண் வண்ண நிழலை மண் வீசினாய்
புல்லில் பூத்த பனி நீ ஒரு கள்ளம் இல்லை
வைரஸ் இல்லா கணிணி உன் உள்ளம் வெள்ளை
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லைப் போலே

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ – ஐ
அஸ்த் அஸ்த் லைபே

அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே

லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே

ஓ…அத்தனை மொழியிலும் வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன்

மொத்தமாய் கோர்த்துதான் காதல் செண்டொன்று செய்தேன்
உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன்

ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே

-- கார்க்கி

Tuesday, January 10, 2012

மதுரனந்தபுரம் -- கி.பி.2212



நண்பன் கிருஷின் வற்புறுத்தலால் இந்தியா செல்லும்
சுற்றுப் பயணத்திற்கு சம்மதித்தான் மூர். அவர்களது குடும்பம் அமெரிக்காவில் குடியேறி நான்கைந்து தலைமுறைகளைக் கடந்துவிட்டது. தாத்தா என்றால் அத்தனை பிரியம் மூருக்கு. அவர் இறந்து பல வருடங்கள் கடந்துவிட்டாலும், இப்போது இந்திய சுற்றுப் பயணத்திற்கு சம்மதித்தது கூட தாத்தா பாசத்தால் தான். ஒரு தடவையாவது இந்தியாவையும் குறிப்பாக தமிழகத்தையும் தனது மூதாதையர்கள் வாழ்ந்த ஊர்களையும் பார்க்கவேண்டும் என ஆசைப்பட்டார். அவரால் ஆசைதான் பட முடிந்ததே தவிர, அதை செயல்படுத்த முடியவில்லை. எனவே அவர் ஆசைப்பட்டு, செல்ல முடியாத ஒரு இடத்திற்கு தான் போகப் போகிறோம் என நினைத்து சந்தோஷப்பட்டான் மூர்.

பயணத்திற்குத் தேவையானவற்றை எடுத்துவைக்கும்போது தாத்தவுடைய "டூரிஸ்ட் ப்லேசஸ் இன் இண்டியா" புத்தகதையும் எடுத்துக் கொண்டான். லீவ் அப்ரூவாகி, டிக்கெட் புக் செய்து, ஒருவழியாக இந்தியா வந்தே விட்டார்கள் இருவரும். டெல்லி விமான நிலையத்தில் இறங்கிய அந்த நொடி தாத்தவைத்தான் நினைத்துக் கொண்டான் மூர்.

வடஇந்தியாவில் பல இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு டெல்லியில் டெண்ட் அடித்தார்கள். ஓரிரு நாட்களில் தென்னிந்தியா செல்ல திட்டமிட்டார்கள்.

"மூர், கண்டிப்பா ஆந்திரா போகணும். அங்க திருப்பதின்னு ஒரு பில்க்ரிமேஜ் சென்டர் இருக்காம். அங்கே லட்டுன்னு ஒன்னு தருவாங்களாம். செம டேஸ்ட்டா இருக்கும்னு எங்க தாத்தா சொல்லியிருக்கார். முந்தியெல்லாம் அங்க வர்ற எல்லாருக்கும் 2 லட்டு குடுப்பாங்கன்னு எங்க தாத்தாவுக்கு அவங்க தாத்தா சொல்லியிருக்காராம். இப்போ அங்க வர்ற லோக்கல் பீப்பிளுக்கு லட்டே கிடையாதாம்.  ஒன்லி எக்ஸ்போர்ட் மட்டும் பண்றாங்களாம். பட், ஃபாரினர்ஸ் கோட்டா-ல நமக்கு குடுப்பாங்க. ஒரு பாஸ்போர்ட்டுக்கு 1 லட்டு", என்றான் கிருஷ்.

மூருக்கு லட்டின் மீது எல்லாம் ஆர்வம் அதிகமில்லை. அவனது எண்ணமெல்லாம் தமிழ்நாட்டுக்குப் போக வேண்டும் என்பதே. "சரி. போகலாம். அதை முடிச்சுட்டு கண்டிப்பா தமிழ்நாட்டுக்கு ஒரு விசிட் போடணும்" என்றான். "ஒன்னு பண்ணலாம். ரிட்டன் டிக்கெட் மும்பை-ல இருந்து போட்டிருக்கோம். ஸோ "கேப் காமரின்" (Cape Comorin) போயிட்டு, அங்க இருந்து ஒவ்வொரு இடமா பாத்துக்கிட்டே வந்து, திருப்பதியும் பாப்போம். அப்பறம்மஹாராஷ்டிரா வழியா மும்பை வந்துடுவோம்" என்றான் கிருஷ்.

ஓ.கே.  தாத்தா புக்-ல பாத்தேன். மதுரைன்னு ஒரு ப்லேஸ் இருக்கு. அங்க இருந்து கேப் காமரின் பக்கத்துல தான். நான் அந்த மதுரைக்கு ப்ளைட் டைமிங் பாக்கறேன் என்றான். இன்டர்நெட்டில் எவ்வளவு தேடியும் அவனால் மதுரை செல்லும் ப்ளைட்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக ஒரு ஏர்-லைன்ஸ் நிறுவனத்தின் கால்-சென்டர் நம்பரைத் தொடர்பு கொண்டான்.

பதிவு செய்யப்பட்ட கம்ப்யூட்டர் குரல் பேசியது. "தேங்க்ஸ் ஃபார் யூசிங் அவர் கால்-சென்டர் சர்வீஸ். வாட் இன்பர்மேஷன் டூ யூ நீட்?" என்று கேட்டது. ஐ நீட் ஃப்ளைட் டைமிங்ஸ் ஃப்ரம் டெல்லி டூ மதுரை? என்றான். "சாரி நோ ஸச் டெஸ்டினேஷன்" (அப்படி ஒரு இடம் இல்லை) என்று பதில் வந்தது. வாய்ஸ் ரெக்கனைஸ் சிஸ்டம் சரியில்லையோ என நினைத்து மீண்டும், ஐ ரிப்பீட், ஃப்ளைட் டைமிங்ஸ் ஃப்ரம் டெல்லி டூ மதுரை என்றான். "சாரி நோ ஸச் டெஸ்டினேஷன்". அதே பதில். மே ஐ ஸ்பீக் டூ ஏஜன்ட்? என்றான். வழக்கம் போல "ப்ளீஸ் வெயிட். யுவர் கால் வில் பீ ஆன்ஸர்டு ஷார்ட்லி" என பதில் வந்தது. சில நிமிடக் காத்திருப்புக்குப் பின், ஒரு பெண் குரல் "ஹலோ திஸ் இஸ் அஷ்வினி குப்தா. ஹவ் குட் ஐ ஹெல்ப் யூ?" என்றது.

ஹை, திஸ் இஸ் மூர். டெல்லி டூ மதுரை ஃப்ளைட் டைமிங்ஸ் வேண்டும் என்றான். கம்ப்யூட்டர் சொன்ன அதே பதில் தான் வந்தது. அந்த விமான நிலையத்தின் குறியீடு (Airport Code) தெரியுமா எனக் கேட்டாள். IXM என்றான் மூர். அந்த விமான நிலையத்தின் பெயர் "மதுரனந்தபுரம்" எனக் கூறி, அங்கு செல்லும் விமானங்களின் நேரத்தையும் சொன்னாள்.

"
நோ. அந்த ஊரின் பெயர் மதுரை தான்" என்றான் மூர். "நீங்கள் சொல்லும் அந்த ஊர் திருச்சினஹள்ளிக்கு பக்கத்தில் உள்ளது தானே?" எனக் கேட்டாள். திருச்சினஹள்ளி-யா? அது திருச்சிராப்பள்ளி (அ) திருச்சி தானே? ஏன் இப்படி எல்லா ஊர் பெயர்களையும் மாற்றிச் சொல்லிக் குழப்புகிறீர்கள்? ஐ வில் ரிப்போர்ட் திஸ் டூ யுவர் ஹையர் அஃபிஷியல்ஸ் என்றான். "நீங்கள் தான் சார் குழம்பியுள்ளீர்கள். வேண்டுமானால் இப்போதுள்ள மேப் (வரைபடம்) எடுத்துப் பாருங்கள் என்றாள்.


உடனே லேப்-டாப்பினான். அவள் சொன்னபடி தான் கொடுத்திருந்தார்கள். மூர் இப்போது தான் குழம்ப ஆரம்பித்தான். மீண்டும் "மதுரை" எனத் தேடினான். விக்கிபீடியாவில் "மதுரனந்தபுரம்" குறித்த பக்கங்கள் வந்தது. அதில் மதுரனந்தபுரத்தின் பெயர், சில நூற்றாண்டுகளுக்கு முன்பு மதுரை என இருந்தது எனக் குறிப்பிட்டிருந்தார்கள்.

அப்போது தான் அவன் கவனித்தான், "மதுரனந்தபுரம், கேரளா God's Own Country" எனக் கொடுத்திருந்தது அதிர்ச்சியாக இருந்தது. இந்திய வரைபடத்தை முழுமையாக டவுன்லோடினான். தமிழ்நாடு என்ற ஒன்றே இல்லை. தென்னிந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மட்டுமே இருந்தது.  "வாட்ட்ட்??? திஸ் இஸ் அன்பீலவபிள்" என தனக்குத் தானே கூறிக் கொண்டான்.

தாத்தாவின் புத்தகத்திலிருந்த மேப்பையும் இதையும் ஒப்பிட்டுப் பார்த்தான். கேரளா எல்லை மிகப் பெரியதாகி இருந்தது இப்போதிருக்கும் மேப்பில். பழைய மேப்பில் இருந்த மதுரை, தேனி, கம்பம், கூடலூர் போன்ற ஊர்கள், இப்போது மதுரனந்தபுரம், தேனீக்கரா, கம்பத்துப்புழா, கூடக்கரா எனப் பெயர் பெற்று, கேரள மாநிலமாக இருந்தது. முக்கியமாக எந்தெந்த கிராமங்கள் "பட்டி"யில் முடிந்தோ, அந்த ஊர் பெயர்கள் கண்டிப்பாக மாற்றப்பட்டிருந்தன.

கொஞ்சம் மேலே வந்தால், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் எல்லாம், திருச்சினஹள்ளி, தஞ்சனஹள்ளி என்ற பெயர்களுடன் கர்நாடக மாநிலமாக இருந்தது. தமிழகத்தின் தலைநகரமாக இருந்த சென்னை சென்ஹராபாத் என்றும், வேலூர்வேலுவாடா என்ற பெயர்களுடன் ஆந்திர எல்லைக்குள் இருந்தது.

எந்தந்த மாநிலங்களில் இருந்து தண்ணீர் பெறப்பட்டதோ, அந்த தண்ணீரைப் பயன்படுத்திய தமிழகப் பகுதிகள் அந்தந்த மாநிலங்களுடன் இணைக்கப்பட்டிருந்தன. அந்த அடிப்படையில் தான் ஒப்பந்தங்களே போடப்பட்டிருந்தன. 999 வருடங்களுக்கு. இந்தத் தகவல்களை கூகிள் ஆர்கைவிலிருந்து(Archive) தெரிந்துகொண்டான். அங்கு வாழ்ந்து வந்த தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறினர். அல்லது வெளியேற்றப்பட்டனர் என்ற தகவல் ஆர்கைவிலிருந்து டெலீட்டப்பட்டது அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

சரி. நம் மூதாதையர்கள் வாழ்ந்த ஊரின் பெயர் தான் மாறியிருக்கிறதே தவிர, ஊர் இருக்கிறது. அதையாவது போய்ப் பார்க்க வேண்டும் என நினைத்தான்.

"
ஹலோ Mr.மூர், ஆர் யூ ஹியரிங் மீ?" எனக் கேட்டாள் அஷ்வினி. அப்போது தான் அவனுக்கு அந்த ஞாபகமே வந்தது. "யா. சாரி. வேறு ஏதோ நினைத்துக் கொண்டிருந்தேன். குட் யூ ப்ளாக் 2 டிக்கெட்ஸ் டூ மதுரனந்தபுரம்?" என்றான்.

"
யுவர் பாஸ்போர்ட் நம்பர் ப்ளீஸ்" என்றாள். சொன்னான்.

கம்ப்யூட்டரில் தகவல்களைப் பார்த்தபடியே, சாரி சார். யுவர் ஃபேமிலி நேம் இஸ் நாட் "நாயர்". உங்கள் முழுப் பெயர் "மூர்த்தி அதியமான்" என உள்ளது. நீங்கள் தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கிறேன். அது தமிழர்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதி. நீங்கள் அங்கு செல்ல முடியாது. வீ இண்டியன்ஸ் ஆர் அல்சோ நாட் பெர்மிட்டட் டு டாக் வித் ஸச் பீப்பிள், எனக் கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டாள்.

தங்கள் இனம் புலம் பெயர்ந்ததற்கான காரணம் கொஞ்சம் புரிந்தது போல இருந்தது அவனுக்கு..
-- இணையத்திலிருந்து

Wednesday, January 4, 2012

தபு ஷங்கர் காதல் கவிதைகள் - II



வரதட்சிணை
எல்லாம் கேட்டு
உன்னைக்
கொடுமைப்படுத்திவிட
மாட்டேன்.
ஆனால்
அதைவிடக்
கொடுமையாய் இருக்கும்
என் காதல்.

**
கூந்தலில் பூவாசனை வீசும்;
தெரியும்.
இந்தப் பூவிலோ உன் கூந்தல்
வாசனையல்லவா வீசுகிறது!

**

நீ கிடைக்கலாம்
கிடைக்காமல் போகலாம்
ஆனால்
உன்னால் கிடைக்கும்
எதுவும்
எனக்கு சம்மதம்தான்..

**

எனது உறக்கத்தின்
வாசலில்
நான் காவல்
வைத்திருக்கிறேன்.
உனது கனவுகளை
மட்டும் அனுமதிக்க..

**

நீ
வெயில் காரணமாக
உன் முகத்தை
மூடி கொண்டாய்..
உன் முகத்தை
பார்க்காத கோபத்தில்
சூரியன்
எங்களை சுட்டெரிகிறது!!

**

நீ
சாய்வதற்கென்றே
வைத்திருக்கும்
என் தோள்களில்
யார்யாரோ
தூங்கிச் சாய்கிறார்கள்
பயணத்தில்

**

உன் தைல விரல்களுக்கு
ஏங்குகின்றன
என் தலைவலிகள்……

**

உன்
பிறந்த நாளையும்
பிறந்த நேரத்தையும்
காட்டுகிற
ஒரு கடிகாரம்
என் அறையிலிருக்கிறது.

"கடிகாரம் ஓடலியா?"
என யாராவது கேட்டால்
சிரிப்புத்தான் வரும்..

அது
காலக் கடிகாரம் அல்ல
என் காதல் கடிகாரம்

**

மரத்தின்
கீழ்
உனக்காக
காத்திருக்கையில்
மரமேறிப் பார்க்கும்
மனசு

**

எனக்கு
லீப் வருடங்கள்
ரொம்ப பிடிக்கும்
அந்த வருடத்தில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாய் வாழலாம்
உன்னுடன்!

**

உன் பாட்டியின்
நினைவுநாளில்
நீ ஒரு சின்ன இலையில்
சாதத்தை வைத்துக்கொண்டு
‘ கா கா ‘
என கத்துவதைப்பார்த்ததும்
‘"அட...
குயில் கா கா ன்னு கூவுதே “
என்றேன்.
நீ இலையை கிணற்று
மேல் போட்டுவிட்டு
மானைப்போல் ஓடி மறைந்தாய்.

**

சீப்பெடுத்து
உன் கூந்தலைச் சீவி
அலங்கரித்துக்கொண்டாய்..
அந்த சீப்போ
உன் கூந்தலில்
ஒரு முடி எடுத்து
தன்னை அலங்கரித்துக்கொண்டது.

**

சொல்லாமல் வந்த
புயல்மழை நாளில்
நீயும் உனது தந்தையும்
வருகையில் குடைக்கம்பி
உன் தலையில்
குத்திவிட்டதற்காக
உன் தந்தையைப்பார்த்து

கெஞ்சலாய் நீ
சுழித்த முகச்சுழிப்பில்
இன்னொரு
புயல் உருவாகி
மழையால்
அடித்துவிட்டு போனது
என்னை மட்டும் .!

**
எல்லோரும் கோயில் சிற்பங்களை
ரசித்துக்கொண்டிருந்தார்கள்
சிற்பங்களெல்லாம்
உன்னை ரசித்துகொண்டிருந்தன !

**

ஒரே ஒரு முறைதான்
என்றியும்
உன் நிழல்
என் மீது பட்டதால்
நான்
ஒளியூட்டபட்டு
கவிஞனானேன்!

**

அழகான பொருட்கள்
எல்லாம் உன்னை
நினைவு படுத்துகின்றன.
உன்னை நினைவு படுத்தும்
பொருட்கள்
எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன..

**

நீ எந்த உடையிலும்
கவிதையாகத்தான்
இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும்
போதுதான்
தலைப்புடன் கூடிய
கவிதையாகிறாய்.

**

உன் கையசைவிற்காகவே
எத்தனைமுறை
வேண்டுமானாலும்
உன்னிடமிருந்து விடை பெறலாம்!

**

நீ தூங்குகிறாய்...
எல்லா அழகுகளுடனும்.
உன் கண்களை
மூடியிருக்கும்
இமைகளில் கூட
எனக்காக விழித்திருக்கிறது
உன் அழகிய காதல்.

**

என்னை
காத்திருக்க வைக்கவாவது
நீ
என் காதலியாக வேண்டும்..
கடைசிவரை
வராமல் போனால்கூட
ஒன்றுமில்லை.

**

காதலிக்கும்போது
கவிதைதான்
கிடைக்கிறது.
காதலிக்கப்படும்போதுதான்
வாழ்க்கை கிடைக்கிறது.

**

Tuesday, January 3, 2012

காதல் ஆறு



என்னுள் நீ
மெதுவாய்த் தான்
நுழைந்தாய்.
மண்ணுள் நுழையும்
வேரைப் போல,
ஆழமாய்!

முதலில் யார் உனக்கு
வணக்கம் சொல்வதென
தினமும் காலையில் சண்டை
எனக்கும், சூரியனுக்கும்!

“என்னைத்
தொட்டுப் பேசாதே!”
என்று சொல்லிவிட்டு
நீ மட்டும்
என் உள்ளங்கையைக்
கிள்ளுகிறாயே
இது என்னடி நியாயம்?

அதிக நேரம்
கண்ணாடி முன் நிற்காதே!
நீ அதைத்தான் ரசிக்கிறாய்
என நினைத்துக்
கொள்ளப் போகிறது!

நீ வரைந்த கோலம்
அழகு என்கிறார்கள்!
நீ கோலம் வரைவது
அழகு என்கிறேன்!

நீ பிறந்த பிறகுதான்
உன் அப்பாவுக்கேப்
பெயர் வைத்தார்களா?
‘அழகப்பன்’ என்று!

--  அருட்பெருங்கோ

கண்ணம்மா !


தம்பி இதுல கண்ணம்மான்னு ஒரு பேரிருக்கும். எடுத்துக்குடு” - அந்தப் பெரியவர் தன் சீட்டிலிருந்து என்னிடம் அவரது நோகியாவை நீட்டினார். நோகியா 1100. பலரது ஆல்டைம் ஃபேவரைட் மொபைல்.
பேருந்தில் ஏறும் வாசலை ஒட்டிய, இடதுபுற இரட்டை சீட்டில் நானும் உமாவும் அமர்ந்திருந்தோம். வலது புறம் அந்தப் பெரியவர் அமர்ந்திருந்தார்.
நான் கண்ணம்மாவைத் தேடினேன். மொபைலில். ம்ஹும். ‘K' வரிசையில் அப்படி ஒரு பெயரே இருக்கவில்லை.

ஐயா.. அந்தப் பேரே இல்லீங்களே..

அடென்ன தம்பி.. உன்ரகூட ரோதனையாருக்கு. நமக்கு அதெல்லாம் பார்க்கத் தெரியாததாலதானே கேட்கறேன்.. ரெண்டு நாள் பேசலைன்னா நம்பர் அவிஞ்சு போயிருமா.... இல்லீன்ற?” என்றார் கொஞ்சம், கோபமும் கொஞ்சம் எரிச்சலும் கலந்த தொனியில்.

இல்லைங்கய்யா.. கே-ல கண்ணம்மாங்கற பேர் இல்லைங்க...

அதெ எவன்கண்டான் கேயாவது ஏயாவது... நல்லாப் பார்த்து எடுத்துக்குடு.. வூட்டுல சமைக்கச் சொல்லோணும்என்றார்.
மணி இரவு ஒன்பதரை. கோவையிலிருந்து திருப்பூர் சென்று கொண்டிருந்தது பேருந்து.
நான் மறுபடி தேடிவிட்டு இல்லைங்க...என்றேன்.
அவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, உமாவை நோக்கி நீ பாத்துக்குடும்மணி.. என்ர மருமவப்புள்ள மாதிரி நீயும் வெவரமாத்தான் இருப்பஎன்றார்.
நான் இந்த நேரத்துக்குள் அவரை ரசிக்கத் தொடங்கியிருந்தேன். உமா சிரித்துக் கொண்டே அந்தப் பேர் இல்லீங்கய்யா.. அவர் பார்க்கறப்ப நானும் பார்த்தேன்என்றார்.

ம்ம்ம்... அப்டீன்னா பாலு இருக்கான்னு பாரேன்என்றார்.
நான் ஃபோனை வாங்கிப் பார்த்தேன். Balu K, Bala, Balasubbu என்றொரு நான்கைந்து பாலுக்கள் இருந்தனர்.
அவரிடம் சொல்லி, கேட்டேன்.

எந்த பாலுங்க?”

என்ர மவன்தான்
உமா சிரித்துவிட்டார். அவர் பார்க்கவே, ஜன்னலோரம் முகம் திருப்பிக் கொண்டார்.

அதெல்லாம் இதுல இல்லீங்கய்யா.. என்ன பேர்ல பாலுவை நீங்க இதுல பதிவு செஞ்சிருக்கீங்கன்னு தெரியணும்என்றேன்.

என்ர மவனை மொதல்ல ஒதைக்கணும். இந்தக் கெரகம் வேணாம்னா கேட்டாத்தானே..என்று கொஞ்சம் உரக்கவே - சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் முந்திகூட கூப்டான் கண்ணு...என்றார்.

அப்டீன்னா இருங்கய்யா..என்று சொல்லிவிட்டு ரிசீவ்ட் காலை சோதித்தேன். பாலு.கே என்றிருந்தது.
அதை டயல் செய்து பேசுங்க..என்று அவரிடம் நீட்டினேன்.
என்னை ஆழமாக முறைத்து.. இப்ப மட்டும் எப்படிக் கெடச்சுதாம்?’ என்று கேட்டுவிட்டு அடே பாலு.. வூட்லயா இருக்கியா தோட்டத்துலயா?...’ என்று உரத்த குரலில் பேசத் தொடங்கியவர் பாலு... பாலு.... இதென்ன அவன் பேசமாட்டீங்கறான்..?’ என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.
நான் ஃபோனை வாங்கிப் பார்க்க ரிங்டோன் போய்க் கொண்டிருந்தது. இன்னும் அவர் எடுக்கலைங்கஎன்று சொல்லச் சொல்ல எடுத்தார் யாரோ. அந்தப் பெரியவரிடம் நீட்டினேன்.
அவர் மகன்தான். இரவே திரும்பிவிடுவதாகவும், அதனால் மருமகளை சமைத்து வைக்கச் சொல்லியும் கூறினார்.
அதற்குள் நான் என் ஃபோனில் Angry Birds விளையாட ஆரம்பித்திருந்தேன். அவர் ஃபோனை வைத்துவிட்ட கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவருக்கு ஒரு அழைப்பு வந்தது.
எடுத்தவர் பேசத் தொடங்கினார். இப்போது அழைத்தது அவர் மருமகள். பேசியவர் முடிவில்.. அவன் தோட்டத்துல இருப்பான். உன்ரகிட்டயே சொல்லிடலாமுன்னு பார்த்தா, இங்க ஒரு தம்பி இதுல உன்ர பேரே இல்லைன்னுடுச்சுஎன்று என்னைப் பற்றி புகார் வாசித்துக் கொண்டிருந்தார்.
ஃபோனை வைத்துவிட்டு இப்ப பேசிட்டேன்ல? படிச்சவனாட்டம் இருக்க.. இத்தாத்தண்டில போனை வெச்சு நோண்டிகிட்டிருக்க.. பேரில்லைன்றஎன்று அவர் சொல்லவும், ‘இங்க குடுங்கய்யாஎன்று அவர் ஃபோனை வாங்கி ரிசீவ்ட் காலைப் பார்க்க ‘Gannama” என்று இருந்தது.

ஐயா.. கண்ணம்மாக்கு கே தாங்க வரும்.. இதுல ஜி போட்டிருக்கு. அதான் தெரியல..என்றேன்.

அந்தக் கெரகெமெல்லாம் எனக்குத் தெரியுமா.. படிச்சவனுக. உங்களுக்குதான் தெரியணும்.. என்றவர் சரி விடு... என்ர மருமவன்கிட்ட பேசணும்... சுப்புன்னு இருக்கும்பாரு... எடுத்துக் கொடுஎன்றார்.
நான் 'A' விலிருந்து தேட ஆரம்பித்தேன்.

-- இணையத்திலிருந்து

You may also like