Thursday, October 20, 2011

தபு ஷங்கர் காதல் கவிதைகள்


ன்
வீடு எனக்கு
பிடித்திருக்கு
எதிர் வீட்டில் நீ இருப்பதால்...

**
துடிப்பதை விட
உன்னை நினைப்பதற்கே
நேரம் சரியாக இருக்கிறது
என் இதயத்திற்கு
 
**
ரதட்சிணை
எல்லாம் கேட்டு
உன்னைக்
கொடுமைப்படுத்திவிட
மாட்டேன்.
ஆனால்
அதைவிடக்
கொடுமையாய் இருக்கும்
என் காதல்.

**

கூந்தலில் பூவாசனை வீசும்;
தெரியும்.
இந்தப் பூவிலோ உன் கூந்தல்
வாசனையல்லவா வீசுகிறது!

**

நீ கிடைக்கலாம்
கிடைக்காமல் போகலாம்
ஆனால்
உன்னால் கிடைக்கும்
எதுவும்
எனக்கு சம்மதம்தான்..

**

னது உறக்கத்தின்
வாசலில்
நான் காவல்
வைத்திருக்கிறேன்.
உனது கனவுகளை
மட்டும் அனுமதிக்க..

**

நீ
வெயில் காரணமாக
உன் முகத்தை
மூடி கொண்டாய்..
உன் முகத்தை
பார்க்காத கோபத்தில்
சூரியன்
எங்களை சுட்டெரிகிறது!!

**

நீ
சாய்வதற்கென்றே
வைத்திருக்கும்
என் தோள்களில்
யார்யாரோ
தூங்கிச் சாய்கிறார்கள்
பயணத்தில்

**

ன் தைல விரல்களுக்கு
ஏங்குகின்றன
என் தலைவலிகள்……

**

ன்
பிறந்த நாளையும்
பிறந்த நேரத்தையும்
காட்டுகிற
ஒரு கடிகாரம்
என் அறையிலிருக்கிறது.

"கடிகாரம் ஓடலியா?"
என யாராவது கேட்டால்
சிரிப்புத்தான் வரும்..

அது
காலக் கடிகாரம் அல்ல
என் காதல் கடிகாரம்

**

ரத்தின்
கீழ்
உனக்காக
காத்திருக்கையில்
மரமேறிப் பார்க்கும்
மனசு

**

னக்கு
லீப் வருடங்கள்
ரொம்ப பிடிக்கும்
அந்த வருடத்தில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாய் வாழலாம்
உன்னுடன்!

**

ன் பாட்டியின்
நினைவுநாளில்
நீ ஒரு சின்ன இலையில்
சாதத்தை வைத்துக்கொண்டு
‘ கா கா ‘
என கத்துவதைப்பார்த்ததும்
‘"அட...
குயில் கா கா ன்னு கூவுதே “
என்றேன்.
நீ இலையை கிணற்று
மேல் போட்டுவிட்டு
மானைப்போல் ஓடி மறைந்தாய்.

**

சீப்பெடுத்து
உன் கூந்தலைச் சீவி
அலங்கரித்துக்கொண்டாய்..
அந்த சீப்போ
உன் கூந்தலில்
ஒரு முடி எடுத்து
தன்னை அலங்கரித்துக்கொண்டது.

**

சொல்லாமல் வந்த
புயல்மழை நாளில்
நீயும் உனது தந்தையும்
வருகையில் குடைக்கம்பி
உன் தலையில்
குத்திவிட்டதற்காக
உன் தந்தையைப்பார்த்து

கெஞ்சலாய் நீ
சுழித்த முகச்சுழிப்பில்
இன்னொரு
புயல் உருவாகி
மழையால்
அடித்துவிட்டு போனது
என்னை மட்டும் .!

**
ல்லோரும் கோயில் சிற்பங்களை
ரசித்துக்கொண்டிருந்தார்கள்
சிற்பங்களெல்லாம்
உன்னை ரசித்துகொண்டிருந்தன !

**

ரே ஒரு முறைதான்
என்றியும்
உன் நிழல்
என் மீது பட்டதால்
நான்
ஒளியூட்டபட்டு
கவிஞனானேன்!

**

ழகான பொருட்கள்
எல்லாம் உன்னை
நினைவு படுத்துகின்றன.
உன்னை நினைவு படுத்தும்
பொருட்கள்
எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன..

**

நீ எந்த உடையிலும்
கவிதையாகத்தான்
இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும்
போதுதான்
தலைப்புடன் கூடிய
கவிதையாகிறாய்.

**

ன் கையசைவிற்காகவே
எத்தனைமுறை
வேண்டுமானாலும்
உன்னிடமிருந்து விடை பெறலாம்!

**

நீ தூங்குகிறாய்...
எல்லா அழகுகளுடனும்.
உன் கண்களை
மூடியிருக்கும்
இமைகளில் கூட
எனக்காக விழித்திருக்கிறது
உன் அழகிய காதல்.

**

ன்னை
காத்திருக்க வைக்கவாவது
நீ
என் காதலியாக வேண்டும்..
கடைசிவரை
வராமல் போனால்கூட
ஒன்றுமில்லை.

**

காதலிக்கும்போது
கவிதைதான்
கிடைக்கிறது.
காதலிக்கப்படும்போதுதான்
வாழ்க்கை கிடைக்கிறது.

**

நீ எவ்வளவு ஒருதலைப்பட்சமானவள்.
நடக்கையில் சிக்கிக்கொள்ளும் உன்
உடையுடன் சேர்ந்து என் மனமும் சிக்கிக்
கொள்கையில், நீயோ என்னை விட்டுவிட்டு
உன் உடையை மட்டும் இழுத்துவிட்டுக்
கொண்டு போகிறாய்!

**

ன்னைக் காத்திருக்க வைக்கவாவது நீ என்
காதலியாக வேண்டும். கடைசிவரை வராமல்
போனால் கூட ஒன்றுமில்லை!

**
-- தபு ஷங்கர்

தபு ஷங்கர் கவிதைகள்



*****

நீ
சாய்வதற்கென்றே
வைத்திருக்கும்
என் தோள்களில்
யார் யாரோ
தூங்கிச் சாய்கிறார்கள்
பயணத்தில்!

*****

உன் தைல விரல்களுக்கு
ஏங்குகின்ற
என் தலைவலிகள்

******

நீ எந்த உடையிலும்
கவிதையாகத்தான்
இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும் போது தான்
தலைப்புடன் கூடிய
கவிதையாகிறாய்..

*******

உன் கையசைவிற்க்காகவே
எத்தனைமுறை
வேண்டுமானாலும்
உன்னிடம் இருந்து விடை பெறலாம்...

*******

-- தபு ஷங்கர்

 




Thursday, October 13, 2011

இது எப்படி இருக்கு....



ராமசாமியும் கிருஷ்ணசாமியும் நண்பர்கள். சிறு வயது முதலே இருவரும் கிரிக்கெட் விளையாடுவார்கள். இப்போது இருவருக்கும் எண்பது வயது.

கிருஷ்ணசாமி படுத்த படுக்கையாக இருக்கிறார் என்று தெரிந்து அவரைப் பார்க்க வந்தார் ராமசாமி. நண்பரை சமாதானப் படுத்த எண்ணிய ராமசாமி, "கவலைப்படாதே கிருஷ்ணசாமி, உலகக் கோப்பை முடியறவரைக்கும் நீ சாகமாட்டே" என்றார்.

கிருஷ்ணசாமி சமாதானமாகவில்லை. "எனக்கு சாகறதைப் பத்திக் கூடக் கவலை இல்லைடா, என்னைப் பிரிஞ்சு நீ எப்படி வாழப் போறியோன்னு தான் கவலை" என்றார்.

ராமசாமி, "உண்மைதான்டா, சரி நீ ஒண்ணு மட்டும் செய், ஒரு வேளை இறந்து போயிட்டா மேல் உலகத்தில கிரிக்கெட் விளையாட முடியுமான்னு என் கனவில வந்து சொல்றியா?" என்று கேட்டார். "அதுக்கென்னடா, நிச்சயம் சொல்றேன்"னு சொல்லிட்டு கொஞ்ச நாளில் இறந்துவிட்டார்.

ஒரு நாள் இரவு, ராமசாமி தூங்கும்போது கனவில் கிருஷ்ணசாமி வந்தார். நண்பனைப்பார்த்து ஆனந்தமாகக் கேட்டார், "அந்த உலகத்தில ஏதாவது விசேஷம் உண்டா?"

"உண்டு, ஒரு நல்ல செய்தி, கெட்ட செய்தி ரெண்டு இருக்கு, எதை முதல்ல சொல்லட்டும்?" என்று கேட்டார் கிருஷ்ணசாமி.

"நல்ல செய்தி முதல்ல" - இது ராமசாமி.

"மேல் உலகத்தில கூட கிரிக்கெட் விளையாடறாங்க. இப்பக் கூட அங்கேயும் வேர்ல்ட் கப் மேட்ச் நடக்குது" என்றார் கிருஷ்ணசாமி.

"சரி, கெட்ட செய்தி?" ஆர்வமாகக் கேட்டார் ராமசாமி.


சோகமாகச் சொன்னார், கிருஷ்ணசாமி, "நாளைய மேட்சுல, நீயும் ஆடறே!"

Friday, October 7, 2011

எடுத்த காரியம் வெற்றிகரமாக முடிக்க ரஜினி சொல்லும் மந்திரம்..!

வாழ்க்கையில் வெற்றி பெறுவது முக்கியம் அல்ல. கிடைச்ச வெற்றியை , தொடர்ந்து தக்க வைக்க தெரிஞ்சு இருக்கணும். அதுக்கு குறுக்கு வழி வேலைக்கு ஆகாது. திறமை , நேர்மை ரெண்டும் வேணும்.

ரஜினிகாந்த் நமது சம கால சரித்திரம். அந்த மாமனிதரின் , இத்தகைய இமாலய வெற்றிக்கு, என்ன காரணம் என்பதை , நம் ஒவ்வொருவரும் தனித்தனியாக யோசனை செய்து பாருங்கள். அந்த பண்புகளை , முடிந்தவரையில் கடை பிடிக்க பாருங்கள் ! ஒரு சாதாரண மனிதரா இருந்தவருக்கு, வானத்தில இருந்து எந்த தேவதையும் ஆசீர்வாதம் கொடுத்திட்டு , ஒரே நாள்ல அவர் பெரிய ஆளா ஆகிடலை.
இலக்கு, உழைப்பு, பணிவு , சக மனிதனை மதிக்க தெரிஞ்ச குணம் - இது எல்லாத்துக்கும் மேல , ஆண்டவனை பரிபூரணமா நம்பி , அவன் கிட்ட எல்லாத்தையுமே ஒப்படைச்சது... இப்படி...நெறைய..

எனக்கு தனிப்பட்ட முறையில பிடிச்ச விஷயம்.. " நல்லவன் மாதிரி நடிக்கிறது இல்லை, முடிஞ்ச அளவுக்கு நல்லவனா வாழ்ந்து காட்டும் குணம்."! இன்னைக்கு தமிழ் பேச தெரிஞ்ச , உலகத்தில் உள்ள அத்தனை உள்ளங்களும் நேசிக்கும் - ஒரு மகா மனிதன் , நிஜமாகவே காந்தம்..!

சமீபத்துல நான் படிச்ச கட்டுரை ஒன்னு, நம்ம வாசகர்களுக்கு பயன்படுமே என்று கருதி , உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்...

ரஜினிகாந்த் சொல்லும் அந்த மெசேஜ் , நம் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று...!

அவர் பகிர்ந்துகொண்ட குட்டிக் கதை என்னவாம் தெரியுமா?

மூணு தவளைகள் இருந்ததாம். ஒரு மலைக்கு முன்னால் மூன்றும் ஒன்று கூடியதாம். மலைக்கு மேல இருக்கற கோயிலுக்குப் போக முடிவெடுத்ததாம். ஆனா, அது ரொம்ப ஆபத்தான மலை. பாம்பு, மிருகங்கள் என்று கொடூர ஜந்துக்கள் உலவும் இடம். போதாக்குறைக்கு, தவளைகள் மலைக்கு மேல் போய்விடக்கூடாது என்று வேறு சில சக்திகளும் முடிவு செய்தது.

முதலில் ஒரு தவளை மலை மேல் ஏற ஆரம்பித்த உடனேயே, ‘போகாதே போகாதே செத்துடுவே… பின்னால் பார்… பாம்பு படமெடுக்குது’ என்று குரல் கேட்டது. தவளை திரும்பி வந்துவிட்டது. அடுத்த தவளை ஏறியது. அதே குரல், ஆனா தவளைகண்டுக்கவில்லை. தொடர்ந்து பயமுறுத்தல் குரல் அதிகமாக , அதிகமாக - ஒரு கட்டத்தில் ரெண்டாம் தவளையும் கீழே வந்துவிட்டது.

இப்போது மூன்றாம் தவளை ஏற ஆரம் பித்தது.
அதே மிரட்டல் குரல்கள்… இப்போது சில மிருகங் களின் சத்தங்களும் கேட்க ஆரம்பித்தது. ஆனால் தவளை எதற்குமே ரியாக்ட் பண்ணவில்லை. நேராக மலை உச்சியில் இருந்த கோயிலை அடைந்த பிறகுதான் நின்றது!

இந்தக் கதையைச் சொல்லி நிறுத்திய ரஜினி. ‘அந்த மூணாவது தவளை மட்டும் இதை சாதிக்க என்ன காரணம் தெரியுமா? அதுக்குக் காது கேட்காது. அதனால் எந்த பயமுறுத்தலும் காதில் விழாமல், தன் லட்சியம் மட்டுமே மனதில் இருக்க… அது சாதிக்க முடிந்தது. நாமளும் அப்படித்தான் இருக்கணும்..பக்தியாகட்டும், எடுத்த காரியமாகட்டும்! மனசுல ஒரு முடிவு எடுத்த பிறகு வேண்டாத மிரட்டல்களை காதுல போட்டுக்கவே கூடாது. காது கேட்காத தவளைகளாகவே முன்னேறணும்’
என்றாராம்!

You may also like