பேச்சினூடே சாதாரணமாய் உனைக் கேட்டேன்.. ” காதல்னா என்ன? ” கிண்டலாகச் சிரித்துவிட்டு ” உன் தலை ” என்றாய். அதில் தான் எவ்வளவு உண்மை? நான் சுவாசிப்பது, சிந்திப்பது, பார்ப்பது, கேட்பது, அழுவது, சிரிப்பது, பேசுவது, உணவருந்துவது என சகலமும் என் தலையால்.. அதாவது என் காதலால்.. சரியாகத்தான் சொல்லியிருக்கிறாய்.. ” உனக்கு கிறுக்கு தான் பிடிச்சிருக்கு ” என்றாய் நகைத்து. ஆம் அதுவம் தலையில் தான்.. அதாவது என் காதலில் .. இதயம் மட்டும் தலையிலன்றி இடம்பெயரக் காரணம் என்னவோ? -- இந்திரா
நான் படித்த கவிதைகள் கதைகள் கட்டுரைகள் பிடித்த ஒரு தொகுப்பு..!!