Showing posts with label Love. Show all posts
Showing posts with label Love. Show all posts

Wednesday, January 4, 2012

தபு ஷங்கர் காதல் கவிதைகள் - II



வரதட்சிணை
எல்லாம் கேட்டு
உன்னைக்
கொடுமைப்படுத்திவிட
மாட்டேன்.
ஆனால்
அதைவிடக்
கொடுமையாய் இருக்கும்
என் காதல்.

**
கூந்தலில் பூவாசனை வீசும்;
தெரியும்.
இந்தப் பூவிலோ உன் கூந்தல்
வாசனையல்லவா வீசுகிறது!

**

நீ கிடைக்கலாம்
கிடைக்காமல் போகலாம்
ஆனால்
உன்னால் கிடைக்கும்
எதுவும்
எனக்கு சம்மதம்தான்..

**

எனது உறக்கத்தின்
வாசலில்
நான் காவல்
வைத்திருக்கிறேன்.
உனது கனவுகளை
மட்டும் அனுமதிக்க..

**

நீ
வெயில் காரணமாக
உன் முகத்தை
மூடி கொண்டாய்..
உன் முகத்தை
பார்க்காத கோபத்தில்
சூரியன்
எங்களை சுட்டெரிகிறது!!

**

நீ
சாய்வதற்கென்றே
வைத்திருக்கும்
என் தோள்களில்
யார்யாரோ
தூங்கிச் சாய்கிறார்கள்
பயணத்தில்

**

உன் தைல விரல்களுக்கு
ஏங்குகின்றன
என் தலைவலிகள்……

**

உன்
பிறந்த நாளையும்
பிறந்த நேரத்தையும்
காட்டுகிற
ஒரு கடிகாரம்
என் அறையிலிருக்கிறது.

"கடிகாரம் ஓடலியா?"
என யாராவது கேட்டால்
சிரிப்புத்தான் வரும்..

அது
காலக் கடிகாரம் அல்ல
என் காதல் கடிகாரம்

**

மரத்தின்
கீழ்
உனக்காக
காத்திருக்கையில்
மரமேறிப் பார்க்கும்
மனசு

**

எனக்கு
லீப் வருடங்கள்
ரொம்ப பிடிக்கும்
அந்த வருடத்தில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாய் வாழலாம்
உன்னுடன்!

**

உன் பாட்டியின்
நினைவுநாளில்
நீ ஒரு சின்ன இலையில்
சாதத்தை வைத்துக்கொண்டு
‘ கா கா ‘
என கத்துவதைப்பார்த்ததும்
‘"அட...
குயில் கா கா ன்னு கூவுதே “
என்றேன்.
நீ இலையை கிணற்று
மேல் போட்டுவிட்டு
மானைப்போல் ஓடி மறைந்தாய்.

**

சீப்பெடுத்து
உன் கூந்தலைச் சீவி
அலங்கரித்துக்கொண்டாய்..
அந்த சீப்போ
உன் கூந்தலில்
ஒரு முடி எடுத்து
தன்னை அலங்கரித்துக்கொண்டது.

**

சொல்லாமல் வந்த
புயல்மழை நாளில்
நீயும் உனது தந்தையும்
வருகையில் குடைக்கம்பி
உன் தலையில்
குத்திவிட்டதற்காக
உன் தந்தையைப்பார்த்து

கெஞ்சலாய் நீ
சுழித்த முகச்சுழிப்பில்
இன்னொரு
புயல் உருவாகி
மழையால்
அடித்துவிட்டு போனது
என்னை மட்டும் .!

**
எல்லோரும் கோயில் சிற்பங்களை
ரசித்துக்கொண்டிருந்தார்கள்
சிற்பங்களெல்லாம்
உன்னை ரசித்துகொண்டிருந்தன !

**

ஒரே ஒரு முறைதான்
என்றியும்
உன் நிழல்
என் மீது பட்டதால்
நான்
ஒளியூட்டபட்டு
கவிஞனானேன்!

**

அழகான பொருட்கள்
எல்லாம் உன்னை
நினைவு படுத்துகின்றன.
உன்னை நினைவு படுத்தும்
பொருட்கள்
எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன..

**

நீ எந்த உடையிலும்
கவிதையாகத்தான்
இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும்
போதுதான்
தலைப்புடன் கூடிய
கவிதையாகிறாய்.

**

உன் கையசைவிற்காகவே
எத்தனைமுறை
வேண்டுமானாலும்
உன்னிடமிருந்து விடை பெறலாம்!

**

நீ தூங்குகிறாய்...
எல்லா அழகுகளுடனும்.
உன் கண்களை
மூடியிருக்கும்
இமைகளில் கூட
எனக்காக விழித்திருக்கிறது
உன் அழகிய காதல்.

**

என்னை
காத்திருக்க வைக்கவாவது
நீ
என் காதலியாக வேண்டும்..
கடைசிவரை
வராமல் போனால்கூட
ஒன்றுமில்லை.

**

காதலிக்கும்போது
கவிதைதான்
கிடைக்கிறது.
காதலிக்கப்படும்போதுதான்
வாழ்க்கை கிடைக்கிறது.

**

Tuesday, December 20, 2011

கன்னுகுட்டி காதல்!

எங்கோ ஆட்டோ சத்தம் கேட்டு கண் விழித்தேன். தலை விண்ணென்று வலித்தது.
இரவு லேட்டாக தூங்கியதின் விளைவு. தலையை லேசாக திருப்பி, நைட் ஸ்டாண்டில்
இருந்த செல்ஃபோனை எடுத்து மணி பார்த்தேன், காலை மணி 5.00.
தலையணையை கட்டிலில் நேராக சாய்த்து அதில் தலை வைத்தபடி எழுந்து
அமர்ந்தேன். அருகில் படுத்திருக்கும் வருண்.....அன்றைய குறும்பு காதலன்
,இன்றைய என் ஆசை கணவன் தூக்கத்தில் புரண்டு படுத்தார்.

தூங்கும் போது கூட, மீசையின் கீழ் அதே குறும்பு புன்னகை......'கனவில்
ஜொள்ளு விட்டுகிட்டு இருப்பாரா இருக்கும், இல்லீனா தூங்கும்போது கூடவா
உதடு சிரிச்சுட்டே இருக்கும்', மனம் பொறுமினாலும்.........என்னை மயக்கி
கட்டி போடும் அந்த வசீகர புன்னகையிலிருந்து என் பார்வையை விளக்க
மனமில்லை.
வைத்தகண் வாங்காமல் அவரையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

நிச்சயம் இவரை பிரியத்தான் வேண்டுமா?? நாளையிலிருந்து காலையில் நான்
எழுகையில் இந்த மந்திரப்புன்னகையை ரசிக்க முடியாதா? இருவரும் பரஸ்பரம்
பேசி, சேர்ந்து எடுத்த முடிவுதானே..........பின் ஏன் பிரிவை நினைத்து
மனம் இரகசியமாய் உள்ளுக்குள் அழுகிறது.

மீண்டும் புரண்டு படுக்கிறார் வருண்........நான் அவரையே
பார்த்துக்கொண்டிருக்கிறதை கவனித்திருப்பாரோ?விழித்திருந்தும் ,
தூங்குவதாய் பாவனை செய்வதில்தான் இவர் கில்லாடி ஆச்சே, நான் யோசனையில்
திரும்பிய போது அரைக்கண் திறந்து பார்த்தாலும் பார்த்திருப்பார்.

சில மாதங்களுக்கு முன்பு வரை.......எங்களது முன் இரவில்,

நான் தூங்கும் அழகை ரசித்து,
எனக்கு முத்தம் கொடுக்கலாம்
என அவர் காத்திருக்க...
அவர் முத்தம் கொடுக்கும்
அழகை ரசித்துவிட்டு
தூங்கலாமென நான் காத்திருக்க.....
எங்கள் இருவருக்காகவும்
காதல் உறங்காமல் காத்திருக்கும்!!!

இப்போது மீண்டும் அவரது தூக்கத்திலும் சிரிக்கும் கள்ள சிரிப்பை ரசிக்க
என் கண்கள் தானாக அவர் பக்கம் சென்றது,
அவர் புரண்டு படுத்ததில், போர்வை சற்று உயர்ந்து, பாதி முகத்தை
மூடியிருக்கிறது.........விலக்கி விடலாமா??
விழித்துக்கொண்டால்??

முன்பாக இருந்தால்........போர்வையை சரி செய்ததோடு என் விரல்களும்
நின்றிருக்காது, விழித்துக்கொண்ட அவரும் சும்மா இருந்திருக்க மாட்டார்,
ஆனால்.......இப்போது இருவருக்கும் நடுவில்தான் வேலி அமைத்து
நாட்களாகிவிட்டதே.
மெதுவாக......போர்வையை சரிசெய்து விட்டேன், விரல் படாமல்...........என்
விரலையே என்னால் கட்டுபடுத்த முடியாமல் போய்விடுமோ என்ற பதட்டம்
இருக்கத்தான் செய்தது.

இப்போ ........இப்போ கூட அதே சிரிப்பு அவர் உதட்டில். தூங்கும் குழந்தையை
இரசிக்க கூடாதுன்னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க, இவரும் என்
குழந்தைதானே......என் முதல் குழந்தை.

இந்த குழந்தையை பிரியத்தான் வேணுமா, என்ன இது.......முடிவு பண்ணின பிறகு
இப்படி ஒரு தடுமாற்றம் எனக்குள்.

உன் குறும்பு புன்னகையை
உதிர்க்கும் உதடுகள்
என் கண்களை மட்டுமா
சிறை செய்தது?
என்னையும் சேர்த்தல்லவா
கட்டி போட்டிருக்கிறது...

எத்தனை முறை
இதே உதடுகள்
என் உதடுகளை பிரதி எடுத்திருக்கும்??
எடுத்த பிரதிகளை
எங்கே பத்திரப்படுத்தியிருக்கிறாய்?

அடடே, கவிஞரின் கன்னுகுட்டிக்கும் கவிதை எழுத வருதே!

ஹும்......அவர் என்னை செல்லமா 'கன்னுகுட்டி' னு தான் கூப்பிடுவார்.

இன்று இந்த கன்னுகுட்டி கட்டியணைக்கும் தொலைவில் இருக்கிறார்....நாளை???
மீண்டும் நெஞ்சு வலித்தது பிரிவை நினைத்து, முடிவெடுத்தது
.......முடிவெடுத்ததாகவே இருக்கட்டும். ஆனாலும் மனதில் முள்ளாய்
குத்துகிறது ஒரு கேள்வி......நிச்சயம் இவரை பிரியத்தான் வேண்டுமா??

இன்றாவது அவருக்கு பெட் காஃபி கொடுக்கலாமா?
பெட் காஃபி கொடுத்து எத்தனை மாதமாகிறது........இப்போது என்னால் முடியுமா??

பெட் காஃபி என்றதும்தான் நினைவிற்கு வருகிறது,
எங்களுக்கு திருமணமான புதிதில்.......பெட் காஃபியுடன் நான் அருகில்
வந்திருப்பது தெரிந்தும், அரைக்கண்ணில் என்னை ரசித்தபடி, தூங்குவதுபோல்
பாவனை செய்வார், அது தெரிந்தும்........தெரியாதது போல் நானும் அவர்
முழிப்பதற்காக காத்திருப்பது போல் பாவனை செய்துக்கொண்டு
அமர்ந்திருப்பேன்.

சில தெரிந்த பொய்களிலும், விரும்பி ஏமாறுவதிலும் தானே இருக்கிறது
வாழ்கையின் சுவாரசியமே .

பெட் காஃபியோடு நிறுத்த மாட்டார்......சரியான காஃபி வண்டி அவர்,
குளித்து முடித்து வந்ததும் அடுத்த காஃபி ரெடியா இருக்கனும் அவருக்கு.

அன்றும் அதுபோல் அவர் குளித்து முடித்து, ஷவர் நிறுத்தும் சத்தம்
கேட்டதும், கிட்சனில் காஃபி ரெடி பண்ணிக்கொண்டிருந்தேன். எனக்கு தெரியாது
என நினைத்து.......பூனை மாதிரி நைஸாக சத்தம் வராமல் மெதுவாக அடி வைத்து
கிட்ச்சனுக்குள் நடந்து வந்தார், சன்னமாக எதையோ பாடிய படி அடுப்பில் பால்
வைத்துக் கொண்டிருந்த நான்....

"என்ன வேணும் இப்போ உங்களுக்கு ?" திரும்பாமலேயே கேட்டேன் .

"ச்ச்ச.......எப்படிடி கண்டுபிடிக்கிற ஒவ்வொரு தடவையும்"

"நான் தான் ஹாலுக்கு காஃபி எடுத்துட்டு வரேன்னு
சொல்லியிருந்தேன்ல......இப்போ எதுக்கு கிட்ச்சனுக்குள்ள வந்தீங்க"

"உனக்கு ஹெல்ப பண்ணலாமேன்னு...."

"நெஜமாவே ஹெல்ப் பண்ண தான் வந்தீங்களா " இரண்டு கைகளையும் இடுப்பில்
வைத்துக் கொண்டு திரும்பினேன்.

உதட்டைச் சுளித்து புன்னகைத்தார் வருண் . கண்களில் அத்துனை குறும்பு
.....நான் ரசிக்கும் குறும்பு:))

" நம்பமாட்டியா ....நம்புடி குட்டிமா........ நேத்து உனக்கு நான் வைச்சு
விட்ட மருதானி மேல சத்தியமா" இன்னும் ஒரு அடி முன்னேறி என் கைகளை
பிடித்து சத்தியம் பண்ணும் சாக்கில் நெருங்கினார்.

"வேணாம்.......... நல்ல பிள்ளையா ஹால்ல போய் உட்காருங்க . நான் காப்பி
எடுத்துட்டு வரேன் " ஒரு அடி பின்னால் சென்றேன் .

சமையல் மேடை இடித்தது .

"ம்ம்.... சத்தியம் பண்ணாம கிட்சனை விட்டு நான் போறதா இல்ல " சமையல்
மேடையில் இரண்டு கைகளையும் ஊன்றி என்னை சிறை பிடித்தார் .

"எங்கே சத்தியம் பண்ணட்டும்........... "

"ஹ்ம்ம்......... " சவுண்ட் ஸ்பீக்கரை முழுங்கின மாதிரி சத்தமாக பேசும்
என் சத்தத்தின் டெசிபல்கள் அநியாயத்திற்குக் குறைந்திருந்தன .

"என்ன ஹும்ம்.........எங்கே சத்தியம் பண்ணட்டும்னு கேட்டேன்"

"காப்பி.........வேணாமா?"

"வேணாம்......"

"டீ...??"

"நீ........"

எனக்கே எனக்கு சொந்தமான வருணின் நறுமணத்துடன் அவர் போட்டு குளித்திருந்த
சோப்பின் மணமும் சேர்ந்து கிளர்ச்சி ஊட்டியது . மூச்சுக் காற்று உதட்டைச்
சுட்டது . கண்களை மூடிக் கொண்டேன்.

இப்பொழுதும் கண்களை அழுந்த மூடிக்கொண்டிருக்கிறேன்......இமைகளின்
இருக்கத்தையும் தாண்டி, வெளிவந்த நீர் துளிகள், என் கண்மையின் துணைகொண்டு
கன்னத்தில்.... வரைபடம் வரைந்து, உதடுகளை தொட்டு உவர்த்தபோது, விழி
திறந்தேன்,

இப்போதும் அதே மெளன புன்னகையுடன் அவர் ஆழ்ந்த உறக்கத்தில், என் அருகில்.......

இப்படி திகட்ட திகட்ட
காதலை அள்ளிதராமல்
தவணை முறையில் தந்திருக்க கூடாதா?
பிரிகையில் இத்துனை பாதிப்பு இருந்திருக்காதே,
மொத்தமாக நீ 'புகட்டிய' காதலே
இன்று நம்மை பிரிக்கிறது பார்:(

கட்டாயம் பிரியத்தான் வேண்டுமா??

இனிமேலும் இப்படியே உட்கார்ந்திருந்தால், நானே என் முடிவை மாற்றினால்
மாற்றி விடுவேன், மேலும்.......அவர் கண்விழித்துவிட்டால், கலங்கின என்
கண்களும்,கண்களை தாண்டி கனனத்தில் இழுகியிருக்கும் கண்மையும், நெற்றி
பொட்டில் பூர்த்திருக்கும் வேர்வையும்...........என் உள்ளுணர்வை அவருக்கு
வெளிச்சம் போட்டு காட்டி கொடுத்துவிடும். தண்ணீரிலேயே தடம் பார்க்கும்
திருடன் இவர்:))

எடுத்த முடிவில் மாற்றம் வேண்டாம் என்ற முடிவுடன், படுக்கையிலிருந்து
எழுந்துக்கொள்ள என் ஒருகையை படுக்கையில் ஊன்றியபடி மெதுவாக நான் கீழ்
இருங்குகையில்.........என் கையை அழுந்த பிடித்தது அவரது வலது கரம்.

மெதுவாக திரும்பினேன்.......

என் கரத்தை விடுவிக்க நான் முயல..........அவரது பிடியின் இறுக்கம் அதிகரித்தது,

அட! இதென்ன வம்பா போச்சு, நான் தான் தடுமாறுறேன்னா....இவருமா??

மேலும் அவர் வலு கரம் அழுத்த......

"அச்சோ......என்னங்க இது.......நேத்து வளைகாப்புல போட்ட கண்ணாடி வளையல்
உடைஞ்சுட போகுது, கையை விடுங்க........."

"........." குறும்பனின் புன்னகை மட்டும் பதிலாக வந்தது.

"அய்யோ........பிரசவம் ஆகுற வரைக்கும் வளையல் உடைய கூடாதுங்க, ப்ளீஸ்
விடுங்க..........."

பிடியை தளர்த்தியபடி அவர்,

"விட முடியலடி செல்லம்............"

அப்பாவி குழந்தையைபோல் முகத்தை வைத்துக்கொண்டு அவர் கேட்கையில், நெஞ்சம்
விம்மிக்கொண்டு வந்தது.......

"என்னாலயும் முடியலீங்க............"

அவர் நெஞ்சில் இப்போது என் காதணி தடம் பதித்துக்கொண்டிருந்தது,

"அப்போ.........போகாதே........என்னைவிட்டுட்டு......"

"முதல் பிரசவம் அம்மா வீட்லன்னு எல்லாரும் பேசிதானே முடிவு
பண்ணினோம்..........இப்போ..........எப்படி...."

"'கன்னுகுட்டி....... உன்னை நான் பாத்துக்கிறேன்டி......"

"ஒரு குழந்தையை அம்போன்னு விட்டுட்டு......இன்னொரு குழந்தையை பெத்துக்க
அம்மா வீட்டுக்கு போய்தான் ஆகனுமான்னு எனக்கும் தடுமாற்றமா இருக்குதுபா"

இப்போது, என் 'முதல் குழந்தை' என் நெஞ்சோடு.........சேர்த்தணைத்துக்கொண்டேன்,
மற்றொரு குழந்தை 'எனக்குள்' நடை பயின்றபடி உதைத்து காண்பித்தது தன் இருப்பை,
பெண்மையின் லயிப்பில், பரவச நிலையில் நான்:))

உன் சிரிப்பில்
மயங்கி காதலித்தது
உனக்காக மட்டுமல்ல....
உன்னைப் போலவே
'புன்னகை' மன்னனாய்...
ஒரு மகன் வேண்டும்
என்பதற்காவும்தான்...!!

"போகமாட்டேன்......உங்களை விட்டு எங்கேயும் போகமாட்டேன்"
உணர்ச்சிவசத்துடன் என் குரல் கிசுகிசுத்தது அவர் செவிகளில்.

அணைப்பின் இருக்கும் அதிகரிக்க..........
சில மணிதுளிகள் மெளனமாக அணைப்பில் கழிந்தது,
மெல்ல தலைநிமிர்ந்த அவரது பார்வையில்.......
நான் அவருக்கே அவருக்கு மட்டும் சொந்தம் என்ற கர்வம் தலைதூக்கி நின்றது.

-- திசைகாட்டி

Wednesday, June 8, 2011

வெட்கத்தை அடை காப்பவள் - காதலி அப்டேட்ஸ்

உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்று கேட்டால் எனக்கு சாக்லேட் பிடிக்கும், தனிமை பிடிக்கும், மழை பிடிக்கும் , என் குடும்பம் பிடிக்கும் , சாய்பாபா பிடிக்கும், இயற்கையை ரசிக்க பிடிக்கும் , எங்க வீட்டு மொட்ட மாடி பிடிக்கும், பக்கத்து வீட்ல இருக்கும் குட்டி குட்டி பசங்க பிடிக்கும்ன்னு நிறைய பிடிக்கும் சொன்னாயே தினமும் உனக்கு ஐஸ்கிரீம் சாக்லேட் வாங்கித்தர்றேனே என்னைப்பிடிக்காதா என்று கேட்டால் ''நீ தான் என்னைபிடிச்சிருக்கியேன்னு'' ஹி ஹின்னு நக்கலா சொல்றாப்பா...!!!

அன்னிக்கு ஒரு நாள் உன்னுடைய மீசை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னாயே எங்கே மீசையைப்பற்றி ஒரு கவிதை சொல்லு பார்ப்போம்ன்னா, ''என் முகத்தாளில் அன்போவியம் வரையும் தூரிகைன்னு'' சொல்லிட்டா, நான் கேட்டேன் அய்யய்யோ அப்போ கருப்பா இருக்குற என் மீசையை கலராக்கிடுவியான்னு, அட லூசே இதெல்லாம் ஒரு மீசைன்னு சொல்லி கவிதை சொன்னா கிண்டல் பண்றியான்னு சொல்லி மீசைய பிடிச்சு இழுத்திட்டா, படு பாவி வலிக்குதுடி இதுக்கெல்லாம் வட்டியும் முதலுமா மீசைய வச்சே உனக்கு ஊசி போடறேன் இருன்னா வவ்வவ்வேன்னு வக்கனை காட்டறாங்க...!

வெட்கப்பட்டிருக்கியான்னு ஒரு நாள் கேட்டேங்க அவகிட்ட , வெட்கப்பட்டிருக்கேன் ஆனா ஆம்பிளைப்பசங்கள பார்த்து வெட்கப்பட்டதே இல்லைன்னா ஏன்னு கேட்டா இது வரைக்கும் அவ மனசுக்கு பிடிச்ச யாரையுமே பார்க்கலைன்னா, ''ஏன் வெட்கத்தையெல்லாம் அடை காத்து வெட்ககுஞ்சு பொறிக்கப்போறியா'' ன்னு கேட்டதும் ஆமான்னு சொல்லிட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறா அப்போதாங்க கவனிச்சேன் எப்போவும் வெளீர்ன்னு இருக்கிற அவ முகம் அன்னிக்கு சிகப்பாகிருந்திச்சு...! ஹைய்யா முதல் வெட்ககுஞ்சு பொறிச்சிடுச்சேன்னு மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டேனுங்க...!!!

ஒரு நாள் என் ரூமுக்கு என்னைப்பார்க்க வந்தவளை கொஞ்சம் இங்கேயே உட்கார்ந்திருன்னு நான் குளிச்சிட்டு வந்திடறேன்னு அவளை ஹால்ல விட்டுட்டு நான் பாத்ரூம் போயிட்டேனுங்க உள்ள போனதுக்கப்பறம் வெளில இருந்து அவ யார் கூடவோ பேசிட்டு இருந்தது கேட்டுச்சு என்ன பேசுறான்னு ஒட்டுக்கேட்டா ''என்ன திமிர் இருந்தா எனக்கு முன்னாடியே அவனுக்கு நீ கிஸ் குடுப்ப இந்தப்பக்கம் உன்னை இனி பார்த்தேன் பிஞ்சிம்ன்னு'' சொன்னது தெளிவா கேட்டுச்சு , ஹைய்யய்யோ நான் யாரையும் தொட்டு கூட பார்த்ததில்லையே இவ என்னடான்னா கிஸ்ஸடிச்சேன்னு சொல்றாளேன்னு பதறிப்போய் வெளில வந்து பார்த்தா வில்ஸ் பாக்கெட்டை எடுத்து அதுல இருக்குற சிகரெட்டெல்லாம் நச்சு நச்சுன்னு பிச்சு போட்ருக்கா...!!!

''அப்பாகிட்ட சம்மதம் வாங்கிட்டியா''ன்னு மெதுவாத்தாங்க கேட்டேன் ஹேய் லூசே அதுக்குள்ள என்ன நம்ம கல்யாணத்துக்கு அவசரம் இப்போன்னு கேட்டாள், அட லூசே நேத்து உனக்கு நல்ல கம்பெனியில வேலை கிடைச்சிருக்குன்னும் உன்னோட அப்பா அந்த வேலைக்கு போக விடமாட்டேங்கிறார் அப்படின்னு சொன்னியே ஞாபகம் இருக்கா? அந்த வேலைக்கு போகத்தான் அப்பாகிட்ட சம்மதம் வாங்கிட்டியான்னு கேட்டேன்.பின்ன உன்னையெல்லாம் எவன் கட்டிக்குவான் எனக்கு ராத்திரி கனவுல ஒருத்தி வருவான்னு சொல்லியிருக்கேனே அவளையே கட்டிக்குவேன்னதும், மகனே உனக்கு நிஜத்துல மட்டுமில்ல கனவுலயும் நான் மட்டும்தான் மனைவியா இருக்கணும்ன்னு மீறி யாராவது வந்த மாதிரி தெரிஞ்சதுன்னு சொல்லி ஓங்கி வயித்துல ஒரு குத்து விட்டுட்டாங்க ... !!  அய்யோ அம்மா கொலை பண்றா!!!

என்னடி இன்னிக்கு ரொம்ப லேட்டுன்னு கேட்டா வீட்ல நிறைய வேலை இன்னிக்கு துணி துவைச்சு அதை காயப்போட்டு மடிச்சு வச்சி, வீடு கிளீன் பண்ணி,குளிச்சிட்டு, சாமி கும்பிட்டு விளக்கேத்தி வச்சிட்டு வந்தேன் அதான் லேட்டாகிடுச்சுன்னு சொன்னா நான் சொன்னேன் உனக்குத்தான் வீட்டு வேலையெல்லாம் தெரியுதே யாரையாவது இளிச்ச வாயன சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்கலாம்லன்னு , அவ சொல்றா எனக்கு இனிமேல் உன்னை மாதிரி ஒரு நல்ல இளிச்சவாயன் கிடைக்கமாட்டான்னு ... !!!

ஒகே ஜூட்ட் ...

-- ப்ரியமுடன் வசந்த்

You may also like