Showing posts with label Humour. Show all posts
Showing posts with label Humour. Show all posts

Sunday, March 25, 2012

இங்கே கணவர்கள் விற்கப்படும்..!

ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது....அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..

அது என்னன்னா...!

1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.

2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும்
இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும்.

ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..

அப்டியே வெளிய தான் போக முடியும்.

இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா......கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது

முதல் தளத்துல அறிக்கை பலகைல "முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு

இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா


இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " அப்டின்னு போட்டுருந்துச்சு

இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.

மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்டின்னு போட்டுருந்துச்சு

அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும் ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.

நாலாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.
வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு.

இதை விட வேற என்ன வேணும்...நல்ல குடும்பம் அமைக்கலாமே?

கடவுளே...மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும்." அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.

ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.

வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு.

அவ்ளோ தான்.....அந்த பெண்மணியாள முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ...சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே..அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது...சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..

ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல

"இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை..வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது ..இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான் .

எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...

பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் " அப்டின்னு போட்டிருந்தது .
 -- மின்னஞ்சலிலிருந்து

Tuesday, January 3, 2012

கண்ணம்மா !


தம்பி இதுல கண்ணம்மான்னு ஒரு பேரிருக்கும். எடுத்துக்குடு” - அந்தப் பெரியவர் தன் சீட்டிலிருந்து என்னிடம் அவரது நோகியாவை நீட்டினார். நோகியா 1100. பலரது ஆல்டைம் ஃபேவரைட் மொபைல்.
பேருந்தில் ஏறும் வாசலை ஒட்டிய, இடதுபுற இரட்டை சீட்டில் நானும் உமாவும் அமர்ந்திருந்தோம். வலது புறம் அந்தப் பெரியவர் அமர்ந்திருந்தார்.
நான் கண்ணம்மாவைத் தேடினேன். மொபைலில். ம்ஹும். ‘K' வரிசையில் அப்படி ஒரு பெயரே இருக்கவில்லை.

ஐயா.. அந்தப் பேரே இல்லீங்களே..

அடென்ன தம்பி.. உன்ரகூட ரோதனையாருக்கு. நமக்கு அதெல்லாம் பார்க்கத் தெரியாததாலதானே கேட்கறேன்.. ரெண்டு நாள் பேசலைன்னா நம்பர் அவிஞ்சு போயிருமா.... இல்லீன்ற?” என்றார் கொஞ்சம், கோபமும் கொஞ்சம் எரிச்சலும் கலந்த தொனியில்.

இல்லைங்கய்யா.. கே-ல கண்ணம்மாங்கற பேர் இல்லைங்க...

அதெ எவன்கண்டான் கேயாவது ஏயாவது... நல்லாப் பார்த்து எடுத்துக்குடு.. வூட்டுல சமைக்கச் சொல்லோணும்என்றார்.
மணி இரவு ஒன்பதரை. கோவையிலிருந்து திருப்பூர் சென்று கொண்டிருந்தது பேருந்து.
நான் மறுபடி தேடிவிட்டு இல்லைங்க...என்றேன்.
அவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, உமாவை நோக்கி நீ பாத்துக்குடும்மணி.. என்ர மருமவப்புள்ள மாதிரி நீயும் வெவரமாத்தான் இருப்பஎன்றார்.
நான் இந்த நேரத்துக்குள் அவரை ரசிக்கத் தொடங்கியிருந்தேன். உமா சிரித்துக் கொண்டே அந்தப் பேர் இல்லீங்கய்யா.. அவர் பார்க்கறப்ப நானும் பார்த்தேன்என்றார்.

ம்ம்ம்... அப்டீன்னா பாலு இருக்கான்னு பாரேன்என்றார்.
நான் ஃபோனை வாங்கிப் பார்த்தேன். Balu K, Bala, Balasubbu என்றொரு நான்கைந்து பாலுக்கள் இருந்தனர்.
அவரிடம் சொல்லி, கேட்டேன்.

எந்த பாலுங்க?”

என்ர மவன்தான்
உமா சிரித்துவிட்டார். அவர் பார்க்கவே, ஜன்னலோரம் முகம் திருப்பிக் கொண்டார்.

அதெல்லாம் இதுல இல்லீங்கய்யா.. என்ன பேர்ல பாலுவை நீங்க இதுல பதிவு செஞ்சிருக்கீங்கன்னு தெரியணும்என்றேன்.

என்ர மவனை மொதல்ல ஒதைக்கணும். இந்தக் கெரகம் வேணாம்னா கேட்டாத்தானே..என்று கொஞ்சம் உரக்கவே - சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் முந்திகூட கூப்டான் கண்ணு...என்றார்.

அப்டீன்னா இருங்கய்யா..என்று சொல்லிவிட்டு ரிசீவ்ட் காலை சோதித்தேன். பாலு.கே என்றிருந்தது.
அதை டயல் செய்து பேசுங்க..என்று அவரிடம் நீட்டினேன்.
என்னை ஆழமாக முறைத்து.. இப்ப மட்டும் எப்படிக் கெடச்சுதாம்?’ என்று கேட்டுவிட்டு அடே பாலு.. வூட்லயா இருக்கியா தோட்டத்துலயா?...’ என்று உரத்த குரலில் பேசத் தொடங்கியவர் பாலு... பாலு.... இதென்ன அவன் பேசமாட்டீங்கறான்..?’ என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.
நான் ஃபோனை வாங்கிப் பார்க்க ரிங்டோன் போய்க் கொண்டிருந்தது. இன்னும் அவர் எடுக்கலைங்கஎன்று சொல்லச் சொல்ல எடுத்தார் யாரோ. அந்தப் பெரியவரிடம் நீட்டினேன்.
அவர் மகன்தான். இரவே திரும்பிவிடுவதாகவும், அதனால் மருமகளை சமைத்து வைக்கச் சொல்லியும் கூறினார்.
அதற்குள் நான் என் ஃபோனில் Angry Birds விளையாட ஆரம்பித்திருந்தேன். அவர் ஃபோனை வைத்துவிட்ட கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவருக்கு ஒரு அழைப்பு வந்தது.
எடுத்தவர் பேசத் தொடங்கினார். இப்போது அழைத்தது அவர் மருமகள். பேசியவர் முடிவில்.. அவன் தோட்டத்துல இருப்பான். உன்ரகிட்டயே சொல்லிடலாமுன்னு பார்த்தா, இங்க ஒரு தம்பி இதுல உன்ர பேரே இல்லைன்னுடுச்சுஎன்று என்னைப் பற்றி புகார் வாசித்துக் கொண்டிருந்தார்.
ஃபோனை வைத்துவிட்டு இப்ப பேசிட்டேன்ல? படிச்சவனாட்டம் இருக்க.. இத்தாத்தண்டில போனை வெச்சு நோண்டிகிட்டிருக்க.. பேரில்லைன்றஎன்று அவர் சொல்லவும், ‘இங்க குடுங்கய்யாஎன்று அவர் ஃபோனை வாங்கி ரிசீவ்ட் காலைப் பார்க்க ‘Gannama” என்று இருந்தது.

ஐயா.. கண்ணம்மாக்கு கே தாங்க வரும்.. இதுல ஜி போட்டிருக்கு. அதான் தெரியல..என்றேன்.

அந்தக் கெரகெமெல்லாம் எனக்குத் தெரியுமா.. படிச்சவனுக. உங்களுக்குதான் தெரியணும்.. என்றவர் சரி விடு... என்ர மருமவன்கிட்ட பேசணும்... சுப்புன்னு இருக்கும்பாரு... எடுத்துக் கொடுஎன்றார்.
நான் 'A' விலிருந்து தேட ஆரம்பித்தேன்.

-- இணையத்திலிருந்து

Thursday, October 13, 2011

இது எப்படி இருக்கு....



ராமசாமியும் கிருஷ்ணசாமியும் நண்பர்கள். சிறு வயது முதலே இருவரும் கிரிக்கெட் விளையாடுவார்கள். இப்போது இருவருக்கும் எண்பது வயது.

கிருஷ்ணசாமி படுத்த படுக்கையாக இருக்கிறார் என்று தெரிந்து அவரைப் பார்க்க வந்தார் ராமசாமி. நண்பரை சமாதானப் படுத்த எண்ணிய ராமசாமி, "கவலைப்படாதே கிருஷ்ணசாமி, உலகக் கோப்பை முடியறவரைக்கும் நீ சாகமாட்டே" என்றார்.

கிருஷ்ணசாமி சமாதானமாகவில்லை. "எனக்கு சாகறதைப் பத்திக் கூடக் கவலை இல்லைடா, என்னைப் பிரிஞ்சு நீ எப்படி வாழப் போறியோன்னு தான் கவலை" என்றார்.

ராமசாமி, "உண்மைதான்டா, சரி நீ ஒண்ணு மட்டும் செய், ஒரு வேளை இறந்து போயிட்டா மேல் உலகத்தில கிரிக்கெட் விளையாட முடியுமான்னு என் கனவில வந்து சொல்றியா?" என்று கேட்டார். "அதுக்கென்னடா, நிச்சயம் சொல்றேன்"னு சொல்லிட்டு கொஞ்ச நாளில் இறந்துவிட்டார்.

ஒரு நாள் இரவு, ராமசாமி தூங்கும்போது கனவில் கிருஷ்ணசாமி வந்தார். நண்பனைப்பார்த்து ஆனந்தமாகக் கேட்டார், "அந்த உலகத்தில ஏதாவது விசேஷம் உண்டா?"

"உண்டு, ஒரு நல்ல செய்தி, கெட்ட செய்தி ரெண்டு இருக்கு, எதை முதல்ல சொல்லட்டும்?" என்று கேட்டார் கிருஷ்ணசாமி.

"நல்ல செய்தி முதல்ல" - இது ராமசாமி.

"மேல் உலகத்தில கூட கிரிக்கெட் விளையாடறாங்க. இப்பக் கூட அங்கேயும் வேர்ல்ட் கப் மேட்ச் நடக்குது" என்றார் கிருஷ்ணசாமி.

"சரி, கெட்ட செய்தி?" ஆர்வமாகக் கேட்டார் ராமசாமி.


சோகமாகச் சொன்னார், கிருஷ்ணசாமி, "நாளைய மேட்சுல, நீயும் ஆடறே!"

Monday, September 12, 2011

பரமார்த்த குரு கதை - பத்திரிகை

"குருநாதா! நாம் ஒரு ஓலைச் சுவடி பத்திரிகை ஆரம்பித்தால் என்ன?" என்று கேட்டான் முட்டாள்.
"பத்திரிகையா? அதனால் நமக்கு என்ன லாபம்?" என்றார் பரமார்த்தர்.
"தினம் தினம் நம்மைப் பற்றிப் புகழ்ந்து எழுதிக் கொள்ளலாம். நமக்குப் பிடிக்காதவர்களை விருப்பம் போல் திட்டலாம்" என்றான் மூடன்.
"அப்படியானால் நம் பத்திரிகைக்குத் 'தினப் புளுகு' என்று பெயர் வைக்கலாம்" என்றார் குரு.

"பெயருக்குக் கீழே "கெட்டிக்காரன் புளுகு - எட்டு நாள் உண்மை!" என்று போடலாம்" என்றான் மண்டு.

அன்று முதல் பரமார்த்தரின் மடம், பத்திரிகை அலுவலகம் ஆயிற்று. பரமார்த்தர், 'தினப் புளுகு' நாளிதழின் ஆசிரியராக பதவி ஏற்றுக் கொண்டார். மட்டியும், மடையனும் நிருபர்களாக நியமிக்கப்பட்டனர்.

இருட்டத் தொடங்கியதும், நிருபர்களான மட்டியும், மடையனும் வெளியே புறப்பட்டனர். அப்போது அந்த நாட்டு அரசன், நகர சோதனை செய்வதற்காக மாறு வேடத்தில் புறப்பட்டான்.

அதைக் கண்ட மட்டி, "அரசர் ஏன் மாறு வேடத்தில் போகிறார்?" என்று கேட்டான். "திருடுவதற்காக இருக்கும்" என்றான் மடையன்.
"ஒவ்வொரு வீடாக எட்டிப் பார்க்கிறாரே, ஏன்?" என்று சந்தேகம் கொண்டான், மட்டி.

"எந்த வீட்டில் கொள்ளையடிக்கலாம் எனத் திட்டம் தீட்டுகிறார்" என்று விளக்கினான், மடையன் "அப்படியானால் இதைச் சும்மா விடக் கூடாது. முதல் பக்கத்திலேயே பெரிதாக எழுத வேண்டும்!" என்றான் மட்டி.

மடத்துக்கு வந்ததும், திரட்டி வந்த செய்திகளை எழுதத் தொடங்கினார்கள்.
வேலியே பயிரை மேய்கிறது! பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்க அரசரே திட்டம்!! இரவு நேரத்தில், மாறு வேடத்தில் ஒவ்வொரு வீடாக எட்டிப் பார்த்தார். இந்தத் தலைப்பின் கீழ், அரசரைக் கண்டிபடித் தாக்கி எழுதினார்கள்.
மட்டியும் மடையனும் கீழ்க்கண்டவாறு செய்திகளை எழுதினார்கள்.
அரசு பணத்தில் அட்டகாசம்! தளபதி தம்புசாமி குடித்து விட்டுக் கலாட்டா!
அறிவுகெட்ட அமைச்சர் அப்புசாமி, ஆறு கட்டு சுருட்டு லஞ்சம் வாங்கினார்.
ஊழலோ ஊழல்! மந்திரி மலர்வண்ணன் மாடி வீடு கட்டிய மர்மம் என்ன?
இளவரசர் இந்திரனின் லீலை! இளம் பெண்ணின் கையைப் பிடித்திழுத்து வம்பு!

இதே போல் தங்களுக்குப் பிடிக்காதவர்களை எல்லாம் விருப்பம் போல் தாக்கி எழுதினார்கள்.

"நம்மைப் பற்றிக் கொஞ்சம் புகழ்ந்து எழுதிக் கொள்வோமே!" என்றான் முட்டாள். "என்ன எழுதுவது?" எனக் கேட்டான் மூடன்.

சுருட்டு மன்னர் பரமார்த்தரின் சாதனை! ஒரே நாளில் தொடர்ந்து முப்பது சுருட்டு பிடித்தார்! என்று எழுதினான், முட்டாள்.

'மண்ணில் புரளுவது எப்படி?' என்ற தலைப்பில் மண்ணில் புரளுவதால் உடல் நலம் ஏற்படும் எனப் பேட்டி கொடுத்தான் மட்டி!

'தொப்பை வளர்ப்பது எப்படி?' என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை 'அறிவியல்' பகுதியில் எழுதினார் பரமார்த்தர்.

'பரமார்த்தருக்குச் சிலை! மக்கள் போராட்டம்! 'தத்துவத் தந்தை' பரமார்த்த குருவுக்கும், அவரது சீடர்களுக்கும் சிலை வைக்க வேண்டும் என்று கோரி, மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்தச் சிலையை அரண்மனைக்கு எதிரேதான் வைக்க வேண்டும் என்றும் மக்கள் கோஷமிட்டபடி ஊர்வலம் சென்றார்கள்!' இதே போல் ஒவ்வொருவருக்கும் தங்களைப் பற்றிக் கண்டபடி கிறுக்கி வைத்தனர்.

எல்லாவற்றையும் கொண்டு போய்ப் பரமார்த்தரிடம் கொடுத்ததும், "எல்லாம் நன்றாகத்தான் எழுதியிருப்பீர்கள். விடிந்ததும் விற்றுவிட்டு வாருங்கள்" என்று கூறிவிட்டுப் படுத்து விட்டார்.

பொழுது விடிந்ததும், சீடர்கள் பத்திரிகைகளை எடுத்துக் கொண்டு விற்கப் போனார்கள்.

'தினப் புளுகு வாங்கலையோ, தினப் புளுகு! நாலு பக்கம் நாற்பது காசு!' என்று கத்தினான் முட்டாள்.

சிலர் ஓடிவந்து ஓலையில் எழுதப்பட்ட பத்திரிகையை வாங்கிப் பார்த்தனர். செய்திகளைப் படித்து விட்டு அதிர்ச்சி அடைந்தனர். செய்தி, அரசருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் எட்டியது. நீதி தவறாத மன்னனைப் பற்றியும், அவனது மந்திரிகளைக் குறித்தும் கண்டபடி தவறா எழுதியதற்காகப் பரமார்த்தர் மீதும், சீடர்கள் மீதும் 'குற்றப்பத்திரிகை' வாசிக்கப்பட்டது.

"பரமார்த்தரோ, "இதெல்லாம் உண்மை என்று யார் சொன்னது? பத்திரிகையின் பெயரைப் பாருங்கள்; 'தினப் புளுகு' என்று தானே போட்டிருக்கிறோம்" என்று கூறினார்.

அதன் பின் குருவும், சீடர்களும் விடுதலை செய்யப்பட்டனர்..

Monday, August 8, 2011

முட்டாள் சீடர்களும் பரமார்த்த குருவும் - நொண்டிக்குதிரை


பரமார்த்த குருவுக்கு ஒரு பணக்காரன் இலவசமாக ஒரு குதிரையைக் கொடுத்தான்.
அந்தக் குதிரையோ கிழடு தட்டிப் போயிருந்தது. ஒரு கண் நொள்ளை! ஒரு காது மூளி! முன் கால்களில் ஒன்று நொண்டி! பின் கால்கள் வீங்கிப் போய் இருந்தன.
உடம்பு பூராவும் சொறிபிடித்து, பார்ப்பதற்கு அசிங்கமாக இருந்தது. இருந்தாலும், பரமார்த்தருக்கும் சீடர்களுக்கும் பரம சந்தோஷம். 'பணம் செலவு செய்யாமல் இலவசமாகக் கிடைத்ததே!' என்று நினைத்தனர்.

"குருவே! கடிவாளம் கட்டுவதற்கு வார் இல்லை. அதனால் வைக்கோல் பிரியைச் சுற்றி விடலாம்!" என்று அப்படியே செய்தான் மட்டி.

குரு உட்காருவதற்காக, கிழிந்து போன பழைய கந்தல் கோணி ஒன்றைக் குதிரைமேல் போட்டான் மண்டு. எருக்கம் பூவைப் பறித்து மாலையாக்கி குதிரையின் கழுத்தில் அணிவித்தான், முட்டாள்.

இவர்கள் செய்வதைப் பார்ப்பதற்கு ஊரே கூடி விட்டது. குதிரைக்கு எல்லா அலங்காரமும் முடிந்தது.

தொந்தியும், தொப்பையுமாய் இருக்கும் பரமார்த்தர், குதிரையின் மேல் பெருமையோடு ஏறி உட்கார்ந்தார். அவ்வளவுதான்!

கனம் தாங்காமல் வலியால் குதிரை அலற ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாய் அப்படியே படுத்து விட்டது.

"சே, சே! இதென்ன சண்டித்தனம் பண்ணுகிறது?" என்று சலித்துக் கொண்டே கீழே இறங்கினார் குரு.

முட்டாளுக்கு ஒரு யோசனை தோன்றியது. கையில் வைத்திருந்த கொள்ளிக் கட்டையைக் கொண்டு போய் குதிரையின் காலில் வைத்தான். உடனே அது விலுக்கென்று உதைத்துக் கொண்டு எழுந்தது. இப்படியும் அப்படியுமாக கொஞ்ச தூரம் ஓடி நின்றது.

மறுபடியும் குரு அதன் மேல் உட்கார்ந்தார். இப்போது மட்டி, அதன் வாலைப் பிடித்து முறுக்கினான். கோபம் கொண்ட குதிரை எட்டி ஓர் உதை விட்டது.

அது உதைத்த உதையில் கீழே விழுந்து புரண்ட மட்டிக்கு நாலு பற்கள் உடைந்து விட்டன! வாயெல்லாம் ரத்தம்.
இதை எல்லாம் பார்த்த குருவுக்கு உதறல் எடுத்தது.

சீžடர்களே! எனக்குப் பயமாக இருக்கிறது. நான் கீழே இறங்கி விடுகிறேன்!" என்றார்.

"குருவே! நீங்கள் கவலையே பட வேண்டாம். அப்படியே உட்கார்ந்து இருங்கள். நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்!" என்று பதில் சொன்னான் முட்டாள்.

மண்டுவுக்கும் மடையனுக்கும் வேறு ஒரு யோசனை உதித்தது.

குதிரைக்கு முன்னால் நின்று கொண்டு, முகத்தைக் கோணலாக்கி, கண்களை உருட்டி, உதட்டைப் பிதுக்கி, "ஆ....ஊ....ஊ..." என்று ஊளையிட்டுப் பயம் காட்டினார்கள்.

இதனால் குதிரை ஒரேயடியாக மிரண்டு, மெல்ல மெல்லப் பின் பக்கமாக நடக்க ஆரம்பித்தது! குருவுக்கும், சீடர்களுக்கும் அதிசயமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. சுற்றி இருந்தவர்கள் கைதட்டிச் சிரிக்க ஆரம்பித்தார்கள்.

தொடர்ந்து பின்பக்கமாகவே குதிரை ஓடவும் தொடங்கியது.

"நொண்டிக் குதிரை! நொள்ளைக் குதிரை! குருவுக்கேற்ற குதிரை! கழுதைபோல எட்டி உதைக்கும்! நாயைப் போல் ஆளைக் கடிக்கும்! ஓரம் போங்கோ! வழியை விடுங்கோ!" என்று பாடியபடி சீடர்கள் போய்க் கொண்டு இருந்தனர்.

பின்பக்கமாகவே ஓடுவது குதிரைக்குப் பழகி விட்டது.

அப்போது அடுத்த ஊரின் எல்லை வந்தது. அங்கிருந்த மணியக்காரன் இவர்களை நிறுத்தினார்கள்.

"வெளியூர்க் குதிரைக்கு வரி கட்ட வேண்டும். பத்துப் பணம் எடுங்கள்" என்றான்.

"வரியா? நான் ஏறி வருகிற குதிரைக்கு வரிக வாங்கலாமா? அதுவும் இது இனாமாகவே வந்த குதிரை. இதற்கு வரி கட்ட மாட்டோம்!" என்று கூறினார் குரு.

"எதுவானாலும் சரி. வரி கொடுக்காவிட்டால் விடமாட்டேன்" என்று சொல்லி அவர்களை மடக்கினான், மணியக்காரன்.

"நாம் கொடாக்கண்டன் என்றால் இவன் விடாக்கண்டனாய் இருக்கிறானே!" என்று நினைத்து ஐந்து பணம் கொடுத்தனர்.

"இன்னும் ஐந்து பணம் கொடுங்கள்"

"ஒரு குதிரைக்கு ஐந்து பணம்தானே வரி?"

"ஒரு பக்கம் மட்டும் போகும் குதிரைக்குத்தான் ஐந்து பணம். உங்கள் குதிரை பின்னாலும் போகிறதே!"

"இதென்ன அநியாயம்?" என்று வருத்தப்பட்டு மேலும் ஐந்து பணம் தந்தனர்.

"இந்தக் குதிரையால் நமக்கு எவ்வளவு பணம் நஷ்டமாகிறது?" என்று சொன்னபடி பயணத்தைத் தொடர்ந்தனர்.

ஒரு வழியாக ஊருக்குள் நுழைந்து, ஒரு மடத்துக்குப் போனார்கள். அப்போது இரவு நேரம். எல்லோருக்கும் களைப்பாக இருந்ததால், குதிரையைக் கட்டிப்போட மறந்து, தூங்கி விட்டனர்.

காலையில் எழுந்து ஆளுக்கொரு பக்கமாகத் தேடிக் கொண்டு போனார்கள்.

கடைசியில் ஒரு வயலுக்குப் பக்கத்தில் அந்தக் குதிரை கட்டப்பட்டு இருந்தது!

"இது இரவு முழுவதும் என் வயலில் இறங்கி பயிர்களை எல்லாம் நாசம் செய்து விட்டது. அதற்குப் பதிலாகப் பத்துப் பணம் கொடுத்தால்தான் குதிரையை விடுவேன்" என்று சொன்னான், அதைக் கட்டி வைத்திருந்த உழவன்.

அவனிடம் பேரம் பேசி நான்கு பணம் கொடுத்து விட்டுக் குதிரையை ஓட்டி வந்தனர்.

"" இந்தக் குதிரையால் நமக்குப் பெரும் தொல்லை. என் மானமே போகிறது.! பேசாமல் இதை விட்டு விடலாம்! என்று வருத்தப்பட்டார் குரு.

அப்போது அங்கிருந்த ஒருவன், குதிரைக்குப் பீடை பிடித்துள்ளது. அதனால்தான் இப்படி ஆகிறது. அந்தப் பீடையைக் கழித்து விட்டால் எல்லாம் சரியாகி விடும். செலவோடு செலவாக எனக்கும் ஐந்து பணம் கொடுங்கள் என்று யோசனை சொன்னான். குருவும், žடர்களும் மூக்கால் அழுது கொண்டே அவனிடம் பணம் கொடுத்தனர்.

பிறகு, குதிரையின் ஒரு காதைப் பிடித்துக் கொண்டு "ஆ! பீடையெல்லாம் இந்தக் காதிலேதான் இருக்கிறது. இதனால்தான் ஏற்கனவே ஒரு காதை அறுத்திருக்கிறார்கள். இப்போது இந்தக் காதையும் அறுத்து விட்டால் சரியாகி விடும்!" என்றான், ஏமாற்றுக்காரன்.

உடனே மட்டி, மண்ணில் விழுந்து புரண்டு, "சீக்கிரம் காதை அறுங்கள்!" என்று குதித்தான். மூடனோ ஓர் அரிவாளைத் தீட்டிக் கொண்டு வந்து கொடுத்தான்.

எல்லோரும் பிடித்துக் கொள்ள, ஏமாற்றுக்காரன், குதிரையின் காதை அறுத்து எடுத்தான்! குதிரையோ வலி தாங்காமல் கீழே விழுந்து கதறியது. பிறகு உயிரை விட்டது!

எல்லோரும் அறுத்த காதைக் கொண்டு போய் ஆழக் குழி தோண்டிப் புதைத்தனர்.

"ஒழிந்தது பீடை! இனி மேல் கவலையில்லை!" என்றான், ஏமாற்றுக்காரன்.

கொலைகார பரமார்த்த குருவும் சீடர்களும் மகிழ்ச்சியோடு அடுத்த ஊருக்குப் புறப்பட்டார்கள்.

Monday, August 1, 2011

நாலணா நண்பேன்டா!


திடுதிப்புன்னு இப்படி பண்ணுவாங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கலை பாஸ்.. பொசுக்குன்னு இனிமே நாலணா செல்லாதுன்னுட்டாங்க..
நாலணா நம்ம வாழ்க்கைல எப்படி எல்லாம் விளையாடி இருக்கு. என்னமோ டிவி சீரியல்ல கால்ஷீட் சொதுப்புற நடிகைக்கு போட்டோ மாட்டி மாலை போட்டுவிடற மாதிரி, நாலணாவுக்கு கல்தா குடுத்துட்டாங்க. என்ன போங்கா இருக்கு பாருங்க..
ஸ்கூல் போகும்போது பாக்கெட் மணியா எப்பவாச்சும் 25 காசு குடுப்பாங்க. அந்த வயசுல பாக்கெட்ல அந்த நாலணா காயின் இருக்கும் போது ஒரு சந்தோஷம் பொங்கும் பாருங்க. இன்னிக்கு பாக்கெட்ல கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுன்னு நாலு கார்டு வெச்சிருந்தாலும் அந்த நாலணா காசுக்கு இதெல்லாம் ஈடாகாது பாஸ்!
பத்து காசா இருந்தா அன்னிக்கே செலவாகிடும். நாலணாவா இருந்ததுன்னா அதை செலவு பண்ண 4 நாள் ஆகும். அதை எப்படி செலவு பண்ணினா அதிகபட்சமா அனுபவிக்க முடியும்னு பெரிய லெவல்ல திட்டம் போடணும்.
இண்டெர்வெல்ல ஸ்கூல் வாசல்ல இருக்க ஆயா கடைக்கு போனா, அங்கே செமத்தியான கும்பல் இருக்கும். கய்யாமுய்யான்னு பசங்க ஒரே சத்தம் போட்டுகிட்டு இருப்பாங்க.
நெல்லிக்கா, கமர்கட், எலந்த பழம், கலாக்கா, மாங்கா பத்தை, பேரு தெரியாத ஒரு ஸ்வீட்டு... இன்னும் என்னென்னமோ இருக்கும். சின்ன பிளாஸ்டிக் விரிப்புல ஒரு மினி சூப்பர் மார்கெட்டே கிடக்கும். 'லக்கி கமர்கட்'னு ஒரு ஐட்டம்.. நாம கமர்கட் வாங்கி வாய்ல போட்டு கடிச்சு பாக்கணும்.. நமக்கு அதிர்ஷ்டம் இருந்தா கமர்கட்டுக்கு உள்ள காசு இருக்கும்.. அதிகபட்சமா நாலணா கூட கிடைக்க வாய்ப்பிருக்கு.
பள்ளிக்கூடம் வாசல்ல கடைபோட்டிருக்க ஆயாவோட கஜானா ஒரு சின்ன துணி தான். அந்த துணிக்கு அடில 5, 10, 20, 25, 50 காசு சில்லரைங்க கிடக்கும். ஆயா 'கஸ்டமர்'களுக்கு தேவையானதை எடுத்து கொடுத்துகிட்டே, "உனக்கு என்னா வேணும்..? உனுக்கு..? தம்பி.. வாங்கியாச்சுன்னா நிக்காத.. போ.."ன்னு பேசிகிட்டே வியாபாரத்தை நடத்தும். ஆயா மீதி சில்லரையை எடுத்து குடுக்கற அழகே தனி. குனிஞ்சு காசை பாக்காமலேயே கரெக்ட்டா கையால மீதி காசை எடுத்து குடுக்கும்.. பின்ன, காசை எடுக்க குனிஞ்சா அந்த அரை செகண்ட்ல பயபுள்ளைங்க நெல்லிக்காய அபேஸ் பண்ணிடுவானுங்களே.. ஆயா செம உஷாரு..!
ஆனா, எங்க 'பர்சேஸிங் பவரை' நம்பி கடை போட்ட அந்த ஆயாவோட தைரியத்தை இப்ப நினைச்சு பாத்தாலும் ஆச்சர்யமா இருக்கு.
பத்தாக்குறைக்கு பக்கத்துல குச்சி ஐஸ் வண்டி நிக்கும். "பால் ஐஸ்.. கப் ஐஸ்"னு அப்பப்ப கத்துவார் 'ஐஸ்'கார்.
கலர் ஐஸ் தின்னுருக்கீங்களா? ஒரு பட்டைல ஐஸ் வெச்சிருப்பாங்க.. மஞ்சள், ரோஸ், சிகப்புன்னு கலர் கலரா இருக்கும். ஐஸை தின்னு முடிச்ச பிறகு, நாக்கை வாய்க்கு வெளிய நீட்டி அது கலராகி இருக்கான்னு பாப்போம்.. ஐஸ் தீர்ந்த பின்னும் குச்சியை உறிஞ்சிட்டு நாக்கை சப்பை கொட்டுவோம்.
ரெண்டு மூணு பசங்க சேர்ந்து ஜாயிண்ட் அக்கவுண்ட்ல சேமியா ஐஸ் வாங்கி பங்கு போட்டுக்குவாங்க.. சேமியா ஐஸை தின்ன பிறகும் வாய் மேலண்ணத்துல சேமியா ஒட்டிகிட்டிருக்கும்.
பாக்கெட்ல சில்லரை காசு இருந்துச்சுன்னா, பால் ஐஸ் திங்கலாமா இல்லை நெல்லிக்கா வாங்கலாமானு மனசுக்குள்ள 'அந்நியன்' விக்ரம் மாதிரி ஒரு 'மல்டிபில் பெர்சனாலிட்டி' போராட்டமே நடக்கும்.

சில நேரத்துல ஆசைப்பட்டு பால் ஐஸ் வாங்கிடுவோம். ஆனா, பால் ஐஸ் வாங்கின உடனே 'பேசாம கமர்கட்டும், மாங்கா பத்தையும் வாங்கியிருக்கலாமோ..? பால் ஐஸ் சீக்கிரமா தீர்ந்துடும். கம்மர்கட் வாங்கியிருந்தா அதை கிளாஸ் நடக்கும்போது கூட திங்கலாம்..'னு மனசு கிடந்து அடிச்சுக்கும்.
அந்த பாழாப்போன ஐஸ் வண்டிக்காரன் வேற சும்மா இருக்காம ஐஸ் வண்டி மூடியை டமால் டமால்னு சத்தத்தோட தொறந்து தொறந்து மூடி, பிசினஸ் டெக்னிக்கால நம்மை கலங்கடிப்பான். அதை தொறந்து உள்ளேயிருந்து குச்சி ஐஸை எடுக்கும் போது சில்லுன்னு காத்து அடிக்கும் பாருங்க.. இப்பல்லாம் வீட்லயும் ஆபிஸ்லயும் ஏசி போட்டா வர குளிர் காத்து எல்லாம் அதும் முன்னாடி தூசி !
கிளாஸ்ல டீச்சர் பாடம் நடத்தும்போது, யாருக்கும் தெரியாம நெல்லிக்காயையோ, மாங்கா பத்தையையோ நைசா வாய்ல போட்டு மெல்லற சந்தோஷத்தை எந்த வார்த்தைகளால முழுசா விளக்கிட முடியும்..? இந்த சுவை என்று பிடிபடாத அந்த ரகசிய ருசி.. இனிப்பா.. உப்பா.. காரமா.. துவர்ப்பா.. இல்லை.. பால்யம். பால்யத்தின் ருசி அது.!
சில நேரம் கைல காசே இருக்காது.. இருந்தாலும் ஏனோ கடைகிட்ட போய் நின்னு, எவன் என்ன வாங்கறான்னு பாத்துகிட்டு, விண்டோ ஷாப்பிங் பண்ணிட்டு வருவோம்.
பாக்கெட் மணி காசுல பலூன், கோலி, பீப்பீ, பிகில்னு விளையாட்டு பொருட்களை வாங்கறது ஒரு பக்கம் இருக்க, காசையே விளையாட்டு பொருளா பயன்படுத்தறதும் உண்டு.
10 காசு 20 காசு நாணயத்தை பேப்பர் கீழ வெச்சு, பென்சிலால பேப்பர் மேல தேய்ப்போம்.. அந்த 'காசு அச்சு' பாக்க அழகா இருக்கும். எங்க கிளாஸ்ல கணக்கு டீச்சர் பாடம் நடத்தும் போது, நோட்டுல கடைசி பக்கங்கள்ல காசை வெச்சு, 'காசு அச்சு' வரைஞ்சுகிட்டிருப்போம்.. என கணக்கு நோட்டுல அப்படி 10 காசு 20 காசு அச்சா கிட்டத்தட்ட 35 ரூபாய் வரைக்கும் வரைஞ்சு வெச்சிருந்தேன்.
என் பக்கத்து சீட்டு ஆர்.பாலு 38 ரூபாய் 80 காசுக்கு அவன் நோட்டுல 'காசு அச்சு' வரைஞ்சு வெச்சிருந்தான். கணக்கு நோட்டுல யாரு அதிக ரூபா சேக்கறாங்கன்னு ஒரு நாள் எங்களுக்குள்ள கடும் போட்டி. என் நேரம்.. நான் வரையறதுக்கு என் கணக்கு நோட்டுல பேப்பர் வேற கம்மியா இருந்தது.
பத்து காசும் இருபது காசும் சைஸ்ல பெருசு. வரைய நோட்டுல பக்கம் பத்தாது. அதனால ரெண்டு பேரும் பேச்சு வார்த்தை நடத்தி, ஆட்டத்துல 25 காசையும் பயன்படுத்திக்கலாம்னு கலந்துரையாடி கூட்டுத் தீர்மானம் போட்டோம். பந்தயம்னு வந்த பிறகு பணம் இல்லாமலா..?
பந்தயப் பணம் = 25 காசு.
ஸ்கூல் விட்டு வீட்டுக்கு போனதும் விளையாடக் கூட போகாம, அம்மாகிட்ட கெஞ்சி கூத்தாடி நாலணா காயின் வாங்கி, உற்சாகத்தோட 'காசு அச்சு 'ஆட்டத்தை ஆரம்பிச்சேன்.
கள்ள நோட்டு அடிக்கறவன் கூட அவ்ளோ உஷாரா வேலை செய்வானானு தெரியாது பாஸ்.. நான் ரொம்ம்ம்ம்ப கவனமா கண்ணு முழிச்சு 'காசு அச்சு' வேலைய செஞ்சேன்.
கணக்கு நோட்ல கொஞ்சம் பக்கம் தான் பாக்கி இருந்தது.. ஸோ.. கவனமா இடத்தை வீணாக்காம வரையணும்.. கணக்கு நோட்டை எடுத்து, ரெண்டு பேப்பருக்கு நடுவுல நாலணாவை வெச்சேன்.. பென்சில் ஊக்கு கூரா இருந்தா இதுக்கு சரி வராது. அதனால, என் புத்திய கூர் தீட்டி, பென்சில் ஊக்கை மொண்ணையாக்கினேன். (இந்த மாதிரி நுணுக்கம் எல்லாம் சின்ன வயசுல நமக்கு டக்கு டக்குன்னு தோணும்.. வளர வளர புத்தி தேயும்) ஜாக்கிரதையா பென்சிலால பேப்பர் மேல தேய்ச்சேன்.. முதல் 25 காசு அச்சு நல்லா வந்திருச்சு..
வெறியோட மேற்கொண்டு வரைய ஆரம்பிச்சேன். அம்மா நான் என்னமோ கணக்கு பரிட்சைக்கு படிக்கறேன்னு நினைச்சுகிட்டு தூங்க போயிட்டாங்க.
பென்சிலை பிடிச்சு தேய் தேய்னு தேய்ச்சதுல கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் கருப்பு தொப்பி போட்டுகிச்சு. நகம் பூரா அழுக்கு.
ராத்திரி பூரா கண்ணு முழிச்சு 35 ரூபாய 68.75 ரூபாயா ஆக்கி முடிக்கும் போது பொழுது பொலபொலன்னு விடிஞ்சு கோழி, சேவல், வாத்து எல்லாம் கூவிடுச்சு.
கண்ணு எரிச்சலோட ஸ்கூலுக்கு போய் ஆர்.பாலுவை தேடினா அவனை காணோம்.. சரி அவன் வரதுக்குள்ள இன்னும் நோட்டுல இருக்க இண்டு இடுக்குல 25 காசு அச்சு வெக்கலாம்னு பேப்பரை புரட்டிட்டிருக்கேன்.... ஆர்.பாலு வந்துட்டான்.. அவன் கண்ணு ரெண்டும் ச்சும்மா கிரிக்கெட் பால் மாதிரி செவந்து கிடந்தது. பெருமையா என் கணக்கு நோட்டை அவன்கிட்ட நீட்டினேன்.. அரைக் கண்ணை கஷ்டப்பட்டு தொறந்து பாத்தான்.. சிரிச்சான்.. தன் கைல இருந்த நோட்புக்கை எங்கிட்ட நீட்டினான். எனக்கு புரிஞ்சு போச்சு.. அவனும் ராத்திரி பூரா கண்ணு முழிச்சு.. அட போங்கடா..
நாலணா தோத்துட்டேன் !
"டேய்.. சயின்ஸ் நோட்டுல யாரு அதிகமா காசு அச்சு போடறாங்கன்னு பாப்போமா..? 25 காசு பந்தயம் " விட்ட காசை பிடிக்க வழி தேடினேன்.
"வேண்டாம்டா.." சிரிச்சுகிட்டே சொல்லிட்டு நேரா ஸ்கூல் வாசலுக்கு போனான்.
நாலணாவுக்கு கண்டபடி வாங்கி சாப்பிட்டான். கணக்கு வழக்கில்லாம செலவு பண்ணான். என் நாலணா!
அன்னிக்கு மத்தியானம் கிளாஸ்ல கணக்கு டீச்சர் என் நோட்ல இருந்த காசு அச்சை பாத்து அடிச்ச அடி எனக்கு இப்ப கூட ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா.... வலிக்குது.
அதுக்கப்பறம் ஆர்.பாலு கூட பேச்சை கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுக்கிட்டேன். அவனைப் பார்த்தாலே வெறுப்பா வந்தது.
அடுத்த வருஷம் அவங்கப்பாவுக்கு வேலை மாத்தல் ஆனதால, ஸ்கூல்ல டிசி வாங்கிட்டு போயிட்டான்.
அப்பறம் பத்தாங்கிளாஸ் படிக்கும்போது ஒரு முறை ரோட்ல அவனை பாத்தேன். இருந்தாலும் கண்டுக்காம நகர்ந்துட்டேன். அதுக்குப் பிறகு பல வருஷங்கள் அவனை பாக்கவே இல்லை. கிட்டத்தட்ட அவன் முகமே மறந்து போச்சு.
போன வாரம் வேலை விஷயமா அவசரமா டெல்லிக்கு ஃப்ளைட்ல போக வேண்டியிருந்தது. ஃப்ளைட்ல என் சீட்ல போய் அக்கடான்னு உக்காந்தா, பக்கத்து சீட்ல வந்து ஒருத்தர் உக்கார்ந்தார்.. ஸாரி.. 'ர்' இல்லை.. 'ன்'.. உட்கார்ந்தான்.. ஆர்.பாலு. என் ஜென்ம விரோதி. என் நாலணாவை அபகரித்த நயவஞ்சகன்.
அவனை பாக்காத மாதிரி நடிச்சிடலாம்னு நான் முடிவு பண்ணின அதே நொடி, என்னைப் பார்த்து " ஹாய்.. ஆர் யூ மிஸ்டர் (என் பெயரைச் சொன்னான்)?"
ஆமாம்.. யெஸ் ரெண்டையும் கலந்து "ஆமெஸ்"னு உளறினேன்.
"என்னைத் தெரியலை.. நான் தான்டா பாலசுப்பிரமணி.. ஞாபகம் இருக்காடா.. ?" எத்தனை ' டா ' போடறான்.. மதிக்க மாட்டேங்கறான்.. மடையன்.
அப்பறம் என்னைப் பத்தி, பள்ளிக்கூடம் பத்தி, அவன் லவ் பண்ண பொண்ணைப் பத்தின்னு பத்தி பத்தியா பேசிட்டிருந்தான். எனக்கு பத்திகிட்டு வந்தது. அவன் சொன்னது சுத்தமா எதுவுமே மண்டைல ஏறல..
என் நினைவின் அடுக்குகளில் ஒளிந்து கொண்டிருந்த அந்த நாலணா இப்போது விஸ்வரூபம் எடுத்து புத்தி பூரா வியாபித்திருந்தது.
பேச்சை மாத்தறதுக்காக, "நீ இப்ப என்ன பண்ற?"ன்னேன்.
பெருமையா, "ரிசர்வ் பாங்க் ஆஃப் இண்டியால நல்ல போஸ்டிங்ல இருக்கேன்.. இப்ப 25 காசு செல்லாதுன்னு ஆர்டர் போட்டிருந்தோம் இல்லை.. அது சம்மந்தமா ஒரு கிளாரிஃபிகேஷன் கேட்டிருந்தாங்க.. நான் தான் இன்சார்ஜ்.. அதான் வந்துட்டு போறேன்.. ! "
அடப்பாவி..! அன்னிக்கு எங்கிட்டேந்து நாலணாவை பிடிங்கின.. இப்போ நாட்டுல எவனுமே நாலணாவை பயன்படுத்த முடியாம பண்ணிட்டியா..?
டெல்லி வந்ததும் கை குலுக்கிட்டு கிளம்பிட்டான். இவனை பாத்த குழப்பதுல நான் எதுக்காக டெல்லி வந்தேன்னே மறந்து போச்சு. கால, தேச, வர்த்தமான அவமானங்கள் எல்லாம் போய் ஒரு பள்ளிக்கூட பையன் மாதிரி ஆயிட்டேன்.
மேற்கொண்டு என்ன பண்றதுன்னு புரியாம பாக்கெட்ல இருந்த 25 காசு காயினை எடுத்து பாத்துகிட்டு நின்னுட்டிருக்கேன்..! வேற என்ன செய்ய முடியும் பாஸ்?!

மொத்தத்துல நாலணா இனி செல்லாது.. நம் மனதை விட்டும்!

-- விகடனிலிருந்து

Wednesday, June 1, 2011

முள்ளு!

ஒரு சின்ன முள்ளால என் வாழ்க்கையே தடம் மாறிப் போச்சு... பாஸ்..! எப்படியா..?
அடுத்தவன் உருப்படாம போனதை தெரிஞ்சுக்கறதுல என்ன ஒரு ஆர்வம்..?!
சரி, சொல்றேன்.. அதுக்கு முன்னாடி..
எப்பவாச்சும் கால்ல முள்ளு குத்தியிருக்கா உங்களுக்கு..? குத்தின முள்ளை எடுக்கற சுகம் இருக்கே.. ஹய்ய்ய்யோ.. அதை அனுபவிச்சு பாத்தா தான் தெரியும்!
பெரிய முள்ளு குத்தினா எடுக்கறது ஈஸி.. ஆனா, சின்ன முள்ளு குத்தி, அதை எடுக்கறது இருக்கே.. அதுதான் சேலஞ்ச்.. என்ன சொல்றீங்க..?
சின்ன முள்ளு தானேன்னு நீங்க சாதாரணமா அதை வெளில எடுத்துட முடியாது.. அது தொகுதில செல்வாக்குள்ள சுயேட்சை எம்.எல்.ஏ மாதிரி. காரியம் முடியற வரைக்கும் அதுக்கு குடுக்க வேண்டிய மரியாதைய குடுத்தே ஆகணும்.
முள்ளு குத்தின நேரத்துல அது பெரிசா வலிக்காது. ராத்திரி நேரம் ஆக ஆக, லைட்டா யாரோ கால்ல குண்டூசியால குத்தற மாதிரி இருக்கும். மறுநாள் காலைல 'இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க' நாம நடக்கும்போது தான் சின்ன முள் தன் சுயரூபத்தை காட்ட ஆரம்பிக்கும்.
மொதல் காரியமா முள்ளு குத்தின பாதத்தை நல்லா கழுவிட்டு, வாகான இடமா பாத்து உக்காந்து கால் மேல காலை மடக்கி போட்டுக்கிட்டு தயார் ஆவோம்.. முள்ளு குத்தினதால வலிக்குமே தவிர, கரெக்ட்டா இங்க தான் முள்ளு குத்தியிருக்குன்னு கண்டுபிடிக்க முடியாது.
முள்ளு குத்தின இடத்தோட சுத்து வட்டாரத்து மேல விரலால அமுக்கி, வலிக்குதான்னு பாப்போம்.. அதை செய்யும் போது, ஒரு ராக்கெட்டை தயார் பண்ற விஞ்ஞானி ரேஞ்சுக்கு நம்ம முகத்துல ஒரு சீரியஸ்னஸ் தெரியும்.
ஒரு ரெண்டு நிமிஷ போராட்டத்துக்குப் பிறகு, குத்துமதிப்பா முள்ளு இருக்க இடம் பிடிபடும். முள்ளு மேல சதை மூடியிருக்கும்.. முள்ளு எப்படி அவ்ளோ உள்ளே போச்சுன்னு யோசிக்கறதே ஒரு சந்தோஷ புதிரா இருக்கும்.
ஒரு குண்டூசியையோ, சேஃப்டி பின்னையோ வெச்சு முள்ளு குத்தின இடத்தை சுத்தி மெதுவா குத்துவோம். கால்ல கிணறு வெட்ற மாதிரி முள்ளை சுத்தி தோண்ட ஆரம்பிப்போம். ஒரு சிசேரியன் பண்ற நினைப்போட, முனைப்போட அந்த வேலையை செய்வோம்.
ஒரு கட்டத்துல முள்ளு லேசா தெரிய ஆரம்பிக்கும். ஆஹா.. நம் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.. வெள்ளை பாதத்துல அந்த சின்ன கருப்பு முள்ளு.. குகையின் மறுமுனையில் சிறிது வெளிச்சம்..!
இப்ப குண்டூசிக்கு ரெஸ்ட் குடுத்துட்டு, கட்டை விரலுக்கு வேலை குடுப்போம்.
முள்ளை சுத்தி கட்டை விரலால அழுத்து அழுத்துன்னு அழுத்தினாலும், சின்ன முள் லேசுல வெளிய வராது. எவ்ளோ அவமானப்படுத்தினாலும் ராஜினாமா பண்ணாத அரசியல்வாதி மாதிரி இடத்தை விட்டு நகராம அங்கேயே கம்முன்னு இருக்கும்.
நாமளும் விடாம தம் கட்டி அமுக்குவோம். ம்ஹூம்.. வராது. அமுக்கினதால ரத்தம் பாய்ஞ்சு முள்ளு ஏரியாவுல பாதம் சிவந்து இருக்கும்.
அந்த நேரம் பாத்து அம்மாவோ, அக்காவோ வந்து "முள்ளா..? நான் எடுக்கறேன்.."-ன்னு பக்கத்துல உக்காந்துக்குவாங்க.. வேண்டாம் வேண்டாம்னு நாம சொல்ல சொல்ல கேக்காம, நம்ம கைல இருக்க குண்டூசிய வாங்கி, ஜாக்கிரதையா குறி பாத்து, கரெக்ட்டா தப்பா முள்ளு மேலயே குத்திடுவாங்க.. "ஐயோ.."-ன்னு கத்திகிட்டே நாம ஒத்த கால்ல பரதநாட்டியம் ஆட ஆரம்பிச்சுடுவோம்.
"சாரி.. சாரி.. முள்ளு மேல பட்டுடுச்சாச்சா"ன்னு சிரிச்சுகிட்டே சொல்லுவாங்க. "உக்காரு.. ரெண்டே நிமிஷத்துல முள்ளை எடுத்துடறேன்.."
'வள்'ளுனு அவங்களை திட்டி அனுப்பிட்டு, நாம நம்ம அகழ்வாராய்ச்சியை தொடர்வோம். கண்ல தெரிஞ்ச கொஞ்ச நஞ்ச முள்ளும் இப்ப நல்லா உள்ளே போயிருக்கும். இப்ப முள்ளு குத்தின இடத்தை தொட்டுப் பாத்தா, அதுக்கு ஜுரம் வந்தா மாதிரி லைட்டா சூடா இருக்கும்.
வெய்யில் காலத்துல ரோட்ல தண்ணி லாரி பக்கத்துல டூவீலர்ல போற நம்ம மேல தண்ணி தெரிக்கும் போது, ஜில்லுனு இதமா இருக்கும் இல்லை.. அதை மாதிரி இந்த முள்ளு குத்தின பாதம் சூடா இதமா இருக்கும்.
மறுபடியும் கட்டை விரலால அழுத்து அழுத்துன்னு அழுத்தி, முள்ளு வெளிய வர வசதியா குண்டூசியால குத்தி வழி பண்ணி.. ஒருவழியா அந்த முள்ளை எடுப்போம். அது ரொம்ப குட்டியா, பொறந்த குழந்தை மாதிரி இருக்கும். அதை விரல்ல வெச்சு கொஞ்ச நேரம் பாத்துட்டு, கை காலை கழுவிட்டு வரும்போது என்னவோ பெரிய சாதனை பண்ணிட்ட மாதிரி ஒரு பெருமிதம் நம்ம முகத்துல தெரியும்.
முள்ளு கதைய விடுங்க.. நம்ம மேட்டருக்கு வருவோம்..
நான் ப்ளஸ் டூ படிக்கும்போது எனக்கு டியூஷன் எடுத்தவர் ஜெயராமன் சார். என்னை மாதிரி மக்குப் பசங்களை கூட நல்லா படிக்க வெச்சு பாஸ் பண்ண வெச்சுடுவார். க்ளாஸ்ல என்னை அப்பப்ப பொண்ணுங்க எதிரே அவர் திட்டுவார். இருந்தாலும், எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்.
ஒரு நாள் ஜெயராமன் சார் விந்தி விந்தி நடந்து வந்தார். அதைப் பாத்து காயத்ரி, பூஜா, கவிதா மூணுபேரும் தங்களுக்குள்ள ஏதோ கிண்டல் பண்ணி சிரிச்சிட்டிருந்தாங்க. எனக்கு கடுப்பாயிடுச்சு.
நேரா ஜெயராமன் சார்கிட்ட போனேன்.
"கால் என்ன சார் ஆச்சு..?"
"ஒரு சின்ன முள்ளு குத்திடுச்சு.. நேத்து அதை எடுத்தப்ப முள்ளு உடைஞ்சு பாதி இன்னும் உள்ளேயே இருக்கு போலருக்குடா.."
"சார்.. அதை வெளிய எடுக்க ஈசியான வழி இருக்கு.. இதோ வர்றேன் சார்..."
எங்க ஸ்கூல் பக்கத்துல நிறைய எருக்கஞ்செடி இருக்கு. அதுலேந்து ஒரு நாலஞ்சு இலைய பறிச்சுகிட்டு வந்தேன். ஜெயராமன் சார் கால்ல, முள்ளு இருந்த இடத்துல இலைலேந்து நாலு சொட்டு பாலை விட்டேன்.
"இன்னும் 5 நிமிஷத்துல முள்ளு தானா வெளில வந்துடும் பாருங்க சார்.." நமக்கு கொஞ்சம் கைவைத்தியமும் தெரியும்ல..!
5 நிமிஷம் ஆச்சு, 10 நிமிஷம் ஆச்சு.. கரெக்ட்டா 12-வது நிமிஷம் வந்துடுச்சு.. முள்ளு இல்லை, ஜெயராமன் சாருக்கு கோவம்..! பின்ன கோவப்படாம என்ன பண்ணுவாரு.. கால்ல பாலை சொட்டினதுல பாதம் சூடாகி, எரிச்சல் அதிகமாயிடுச்சு. சூடு தாங்க முடியாம தண்ணி பக்கெட்ல காலை விட்டுட்டாரு. எனக்கு செம திட்டு.!
கோவமா மாடிப்படி ஏறிட்டிருந்தார். அவர் பின்னாடியே போனேன். "சார்.. காலை காட்டுங்க சார்.. இப்பவே முள்ளை எடுத்துக் காட்டறேன்.."
அரை மனசோட படிக்கட்டுல உக்காந்தார். குண்டூசியை வெச்சு, அவர் பாதத்துல உத்து பாத்து குத்தினேன். கொஞ்ச நேரத்துல முள்ளு கண்ல தென்பட்டது. ஜெயராமன் சார் முகத்துல லேசா ஒரு வெளிச்சம் தெரிஞ்சது.
கவனமா முள்ளுக்கு பக்கத்துல குண்டூசியால குத்தும்போது தானா எனக்கு தும்மல் வந்து தொலைக்கணும்..?! குண்டூசிய குத்திகிட்டே தும்மினதுல... குண்டூசி முழுசா அவர் பாதத்துக்குள்ள போயிடுச்சு பாஸ்..! அவர் கத்திகிட்டே குனிய, நான் நிமிர, ஜெயராமன் சாரோட முன்வரிசை பல்லு ரெண்டு பணால் ஆயிடுச்சு..! அதுல ஒரு பல்லு என் தலைமுடியில போய் ஒளிஞ்சுகிச்சு.
நான் பதட்டப்பட்டு "சாரி சார்.. சாரி சார்"ன்னு சொல்லிகிட்டே அவரை பாக்கறேன்.. பல்லில்லாத ஜெயராமன் சாரை பாத்து சிரிப்பு சிரிப்பா வருது.. அதை அடக்க முடியாம, வாயை பொத்துகிட்டு ரிவர்ஸ்லயே படியிறங்கிட்டேன்.. 'முள்ளால வந்தது பல்லோட போச்சு'ன்னு பெரிய மனசு பண்ணி விட்டுடாம, அவர் என்னை அடிக்க அவசரமா படியிறங்க, கால் வழுக்கி... படிக்கட்டுல உருட்டி விட்ட சூட்கேஸ் மாதிரி தடக் தடக் தடக்கு உக்காந்த வாக்குலயே வழுக்கி கடைசி படிக்கட்டு வரைக்கும் வந்துட்டார்.
பயத்தோட அவர்கிட்ட போய்.. " சார்.. சாரி சார்.. அந்த முள்ளை எடுக்..."
பல்லு போனதால, அவர் என்னை மழலைல திட்ட ஆரம்பிச்சுட்டார்.. ஜெயராமன் சாருக்கு கெட்ட வார்த்தை எல்லாம் கூட தெரியுங்கறது அன்னிக்கு தான் எனக்கு தெரிஞ்சுது.
"சார்.. முள்ளை எடுத்துடறேன் சார்.. உள்ள இருந்தா ஆபத்து.."
"தேய்.. வேண்தாம்தா.. முள்ளு உள்ளயே இருக்கத்தும்.. எனக்கு சுகர் இருக்கு, BP இருக்கு.. அது மாதிரி இதுவும் இருந்துட்டு போகத்தும்.. என் முன்னாதி நிக்காத.. போ.. போதா.!".
ஜெயராமன் சார் ஒரு கைல தன்னோட உடைஞ்ச பல்லை கைல வெச்சிருந்தார்.. இடுப்பை பிடிச்சுகிட்டு பிள்ளைத்தாச்சி மாதிரி நடந்தபடி இன்னொரு பல்லை தேடிகிட்டே போனாரு.
மறுநாள் அவரை பாக்கலாம்னு போனேன்.
அப்பறம் எனக்கென்ன ஆச்சா..?
நான் ப்ளஸ் டூ முடிக்க ஒரு 2 வருஷம் ஆயிடுச்சு பாஸ்..!

- பட்டாணி


Monday, May 16, 2011

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்?

ஒரு ஞானியை அணுகிய சீடன்,காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான். `   அதற்கு அந்த ஞானி, ''அது இருக்கட்டும்.முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது. ''என்றார்.கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, ''எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? ''என்று கேட்டார். சீடன் சொன்னான், 'குருவே,வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது.அதை விட உயரமான செடி இருக்கக் கூடும்என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது. `   ' புன்முறுவலோடு ஞானி சொன்னார்,''இது தான் காதல்.'' `   பின்னர் ஞானி,''சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது.'' சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார்,''இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? ''சீடன் சொன்னான், 'இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை.' `   இப்போது ஞானி சொன்னார், ''இது தான் திருமணம்.''

--- ஓஷோ

Friday, April 29, 2011

ஐயையோ ரிசல்ட்..!

பரீட்சை அப்டீங்கற விஷயத்தை கண்டுபிடிச்ச புண்யவான் யாருன்னு தெரியலை.. தெரிஞ்சா, 108 தேங்காய் உடைக்கணும் - அவர் தலை மேல.!
பின்ன என்ன சார்.. பரீட்சைன்னு ஒண்ணு வெச்சா, ரிசல்ட்ன்னு ஒண்ணு வந்து தொலைக்குது.. எந்த பயத்தையும் விட இந்த ரிசல்ட் பயம் தான் பெரிய பயமா இருக்கு..!

பத்தாங்கிளாஸ்.. அதாங்க, எஸ்.எஸ்.எல்.சி-க்கு போனவுடனே, ஆளாளுக்கு 'பப்ளிக் எக்ஸாம்' 'பப்ளிக் எக்ஸாம்'னு நமக்கு பிரஷரை ஏத்துவாங்க.. வீட்ல நிம்மதியா கதை புக் படிக்க முடியாது, டிவி பாக்க முடியாது.. அட, ஒரு கல்யாணம், விசேஷம்னு யாராச்சும் கூப்பிட வந்தா, அவங்க கூட கொஞ்ச நேரம் பேசக் கூட விடமாட்டாங்க. படி படின்னு ஒரே ரோதணை. நாம படிச்சே தீரணும்னு ஒரு கூட்டமே நமக்கு எதிரா திரண்டிருக்கும்.
பரீட்சை நேரத்துல ஏற்கனவே பயந்து இருக்க நமக்கு, அட்வைஸ் பண்றேங்கற பேர்ல ஆளாளுக்கு ஆடியோ பேதி மருந்து குடுப்பாங்க.. இந்த பாட புஸ்தகம் இருக்கே.. ஹப்பா.. எனக்கு அதை தொறந்த அஞ்சாவது நிமிஷம் கொட்டாவி வரும், ஆறாவது நிமிஷம் தூக்கம் வரும்.
எட்டாவது நிமிஷம் டீ வரும்.
அம்மா டீ குடுக்கும் போது அவங்களை பாத்தா பாவமா இருக்கும். நம்மளை என்னவோ 'உலகம் சுற்றும் வாலிபன்' எம்ஜியார் (சயின்டிஸ்ட் முருகன்!) லெவலுக்கு மதிச்சு, மாத்தி மாத்தி டீ போட்டு குடுத்துகிட்டே இருப்பாங்க.. அது என்னமோ, என்ன மாயமோ தெரியலை.. அந்த டீயை குடிச்சா இன்னும் நல்லா Fresh-ஆ தூக்கம் வரும்.

பரிட்சை நேரத்துல என்னைத் தவிர எல்லாரும் என் படிப்பு மேலயே அக்கறையா இருப்பாங்க.. பத்தாக்குறைக்கு டிவில வர்ற விளம்பரம், பத்திரிகைகள்ல வர கட்டுரை எல்லாமே படிப்பு.. படிப்பு.. படிப்பு பத்தி தான்.
எனக்கு ஒரு சந்தேகம்.. அது எப்படி பரிட்சை நேரத்துல மட்டும் இந்த பாழாப்போன ஜுரம் வந்து தொலைக்க மாட்டேங்குது.? சினிமா பாட்டு கேக்கணும்னு ஏன் அவ்ளோ ஆசையா இருக்குது?

ஒரு வழியா கடைசி பரிட்சைய எழுதி முடிச்சதும் மனசுக்குள்ள வந்த சந்தோஷம் இருக்கே.. ஹைய்யோ.. அடுத்த ஒரு மாசம் கிரிக்கெட், சினிமா, ஃபிரண்ட்ஸ்னு கலக்கலா போச்சு..
காலைல எழுந்து பசங்களோட ஜாகிங்.. வீட்டுக்கு வந்து டிபன், மைதானத்துக்கு போய் கிரிக்கெட், மறுபடியும் வீடு. குளியல். சோறு. கிளம்பி எவன் வீட்டுக்காவது போய் செஸ் இல்லாட்டி கேரம் போர்டு ஆடிகிட்டே அரட்டை, டிவி, பிரவுசிங் சென்டர், நொறுக்கு தீனி, மறுபடியும் கிரிக்கெட். 6.30 மணிக்கு மேல Flood Light மேட்ச் நடக்கற இடத்துக்கு போய் அலப்பறை. ஆஹா.. நிம்மதியா போய்கிட்டிருந்தது.

"பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.. வரும் மே மாதம்.. " ஐயையோ.. அதுக்குள்ள ரிசல்ட்டா..?! என்ன அவசரம்.. நல்லா பொறுமையா டயம் எடுத்து இன்னும் ஒரு ரெண்டு மூணு மாசம் கழிச்சு ரிசல்ட்டை வெளியிடலாமே..

நல்லா படிக்கற பசங்களுக்கு கவலை இல்லை.. கண்டிப்பா புட்டுக்கும்னு தெரிஞ்ச பசங்களுக்கும் கவலை இல்லை.. என்னை மாதிரி மதில் மேல் மியாவ் தான் இதுல அவஸ்தைபடறோம்.

இன்னும் பத்து நாள்ல ரிசல்ட் வரப் போகுதுன்னு தெரிஞ்ச உடனே, எனக்கு மனசு பக் பக்குனு அடிக்க ஆரம்பிச்சிடுச்சு.. "பாஸ் பண்ணிடுவ இல்லை.. ?"னு அப்பா கேக்கும்போது "கண்டிப்பா.."ன்னு பலவீனமா சொன்னேன். அப்பா என் கண்ணையே ஒரு 3 செகண்ட் பாத்துகிட்டு இருந்தார்.. ஒருவேளை அப்பாவுக்கு நாம கணக்கு பரிட்சை சரியா எழுதலைன்னு தெரிஞ்சிருக்குமோ..?
அப்பா நகர்ந்ததும் அம்மா வந்து, " நல்லா தானே எழுதியிருக்க.. பாஸ் பண்ணிடுவ இல்லை..? உங்க அத்தை ஏற்கனவே என்னை மதிக்க மாட்டா.. நீ பெயில் ஆயிட்டா உங்க அப்பா பக்கத்து உறவுக்காரங்களுக்கு ரொம்ப இளக்காரமா போயிடும்டா.." அதாவது, நான் பாஸ் பண்ணி ப்ளஸ் ஒன் போறது கூட முக்கியமில்லை.. உறவுக்காரங்க மத்தில தலைக்குனிவு வந்திடக் கூடாது..! என்ன உலகம்டா இது..!

மறுநாள் பேப்பர் படிச்சிட்டிருந்த அப்பா, கண்ணாடியை கழட்டி வெச்சுட்டு, பாத்ரூமுக்கு போயிருந்தார் போல.. நான் கண்ணாடியை பாக்காம, பேப்பரை அப்டியே எடுக்க, கண்ணாடி 'க்ளிங்' ஆயிடுச்சு..!

அப்பா வந்து உடைஞ்சிருந்த கண்ணாடியை பாத்தார்.. கண்ணாடி போடாத அப்பாவோட முகத்தைப் பார்க்க சிரிப்பாய் இருந்தது. என்னை முறைச்சது கூட பரவால்ல.. திட்டியிருந்தா கூட திருப்தியா இருந்திருக்கும்.. ஒண்ணும் சொல்லலை.. உடைஞ்ச துண்டுகளை ஒரு பேப்பர்ல எடுத்து போட்டுகிட்டு, " ரிசல்ட் வரட்டும்.."ன்னு சொல்லிட்டு போயிட்டார். கண்ணாடி உடையறதுக்குக்கும், என் ரிசல்ட்டுக்கும் என்ன சம்மந்தம்.. ? கண்ணாடியை உடைச்சதுக்கு திட்டித் தொலைக்க வேண்டியது தானே. ரிசல்ட் புட்டுகிச்சுன்னா, இதுக்கு சேத்து வெச்சு.. ஐயோ..!

கடவுளே.. நான் எப்படியாவது பாஸ் ஆகிடணும்.. இந்த ஒரு தடவை மட்டும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணு.. உன் உண்டியல்ல 10 ரூபா போடறேன்.

எங்க செட்ல யாரெல்லாம் பெயில் ஆவான்னு யோசிச்சு பாத்தேன்.. ம்ஹூம்.. சொல்ல முடியாது.. எல்லாருமே பாஸ் ஆனாலும் ஆயிடுவானுங்க.. நான் மட்டும் பெயில் ஆகி, மத்தவன் எல்லாம் பாஸ் ஆகிட்டா.. ஐயையோ.. அதுமட்டும் நடக்கக் கூடாது.. குறைந்தபட்சம், பக்கத்து வீட்டு மகேஷ் மட்டுமாவது பெயில் ஆயிடணும்..அவன் பிட் அடிச்சிருப்பானோ.. கடவுளே.. என்னை பாஸ் பண்ண வெக்க முடியாட்டி, அட்லீஸ்ட் எனக்கு கம்பெனி குடுக்க
மகேஷையும் பெயில் ஆக்கிடு.. 20 ரூபா டீலிங்..!

அதுக்கப்பறம் எந்த எதிர்மறையான வார்த்தைகள் காதுல விழுந்தாலும், அது என் ரிசல்ட்டை பத்தி ஞாபகப்படுத்திகிட்டே இருந்தது. 'போச்சு' 'வராது' 'இல்லை'ன்னு எல்லா வார்த்தைகளையும் மாத்தி மாத்தி யாராவது சொல்லிகிட்டே இருந்தாங்க.

பஸ்ல போயிட்டிருக்கும்போது, கோவில், சர்ச், மசூதி எதையும் விடலை.. என் ரிசல்ட்டுக்காக எல்லா சாமிகிட்டயும் சொல்லி வெச்சாச்சு.. என் கணக்கு பேப்பரை திருத்தும்போது, திருத்தரவருக்கு பைத்தியம் பிடிச்சு, நூத்துக்கு 80 மார்க் போடற மாதிரி பகல் கனவெல்லாம் கண்டேன்.. திட்டமிட்டு காணும் கனவு எல்லாம் பலிக்குமான்னு தெரியலை.

ரிசல்ட் வந்த அன்னிக்கு பசிக்கவே இல்லை.. அம்மா என்னை விடாம "சீக்கிரம் சாப்பிட்டுடு.."ன்னு வம்படியா சாப்பிட வெச்சாங்க.. அன்னிக்கு வீட்ல எல்லாரும் மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி இருந்தாங்க.. அப்பா ஆபிஸுக்கு போவாரா மாட்டாரான்னு சந்தேகமா இருந்தது.. கடவுளே.. அவர் கிளம்பி ஆபிஸ் போயிடணும்.. உண்டியல் அக்கவுண்ட்டில் இன்னும் ஒரு 5 ரூபாய் கூடியது.

ரிசல்ட் பேப்பர் இப்ப வரும்.. அப்ப வரும்னு அலைகழிய வெச்சிட்டாங்க.. பக்கத்து தெரு, அடுத்த தெருன்னு நாயா பேயா அலைஞ்சு, பேப்பரை வாங்கினா கை காலெல்லாம் நடுங்குது.

பேப்பர்ல நம்பரை தேட முடியலை.. கண்ல பூச்சி பறக்குது.. வயத்துல பட்டாம்பூச்சி பறக்குது.. பேப்பர்ல டுடோரியல் காலேஜ் விளம்பரம் எல்லாம் போட்டிருக்காங்க.. ஒரே அபசகுனமா இருக்குது..

என் நம்பர் சுத்தமா மறந்து போச்சு.. பேப்பரை தரைல விரிச்சு, அது மேலயே மண்டி போட்டு உக்காந்து, நம்பரை ஞாபகப்படுத்தி, கஷ்டப்பட்டு தேடிப் பாத்ததுல.. நம்பர் இல்லை.. இன்னொரு தடவை ஒழுங்கா பாக்கறேன்.. ம்ஹூம்.. இல்லை.. என்னமோ தெரியலை.. எல்லா டென்ஷனும் போய், நிம்மதியா இருந்தது..

நாம ஸ்டேட் ஃப்ர்ஸ்ட் மார்க் எதிர்பார்த்து அது வரலைனா வருத்தப்படலாம்.. பேப்பர்ல போட்டோ வர வேண்டாம் பாஸ்.. வெறும நம்பர் மட்டும் வந்தா போதும்னு பொன் செய்யும் மருந்தா மனசை வெச்சிருக்கோம்.. அதுக்கு கூட வழியில்லாம போயிடுச்சு..

திடீர்னு மகேஷ் வீட்லேந்து பயங்கரமா சத்தம் கேட்டது.. மகேஷை திட்டிகிட்டிருந்தாங்க.. ஆஹா.. அவனுக்கும் புட்டுகிச்சா..?! நன்றி நண்பா..!
மேட்டரை கன்ஃபர்ம் பண்ணிக்க மகேஷ் வீட்டு கிட்ட போனேன்.  " பக்கத்து வீட்டு பையனும் உங்கூட தானே படிக்கறான்.. அவன் பாஸ் பண்ணிட்டான்.. நீயும் இருக்கியே தண்டம்.. தண்டம்.. "

என்ன சொல்றாங்க.. நான் பாஸா.. ? எப்படி?

அட, ஆமா.. பதட்டத்துல என் நம்பருக்கு பதிலா மகேஷ் நம்பரை பேப்பர்ல தேடியிருக்கேன்.

பேப்பரை எடுத்து பார்த்ததுல, என் நம்பர் என்னைப் பார்த்து கண் அடிச்சுது.
அப்பா வீட்டுக்குள்ளேயிருந்து பயங்கர சந்தோஷத்துடன் வெளியே வந்து, முதுகைத் தட்டி விட்டு ஆபிஸுக்கு போனார். கண்ணாடி போடாத அப்பாவின் முகம் இப்ப அழகா இருந்தது.

மறுபடியும் மறுபடியும் பேப்பரை தரைல பரப்பி, என் நம்பரை பாத்துகிட்டே இருந்தேன்.

இப்ப நினைச்சு பாத்தா அந்த ரிசல்ட் டென்ஷன் இருக்கே, அதுவும் ஒருமாதிரி நல்லா தான் இருக்கு, இல்லை.!
-- விகடனிலிருந்து

Friday, April 1, 2011

டேனியும் தில்லுதுரயும்

அன்று அலுவலகத்திலிருந்து மாலை அபார்ட்மென்ட்டுக்கு வந்த தில்லுதுர, தனது நாயை பார்த்ததும் அரண்டுவிட்டார்.

பக்கத்து வீட்டு சுட்டிப்பையன் டேனி பாசமாய் வளர்த்து வந்த கிளிக்குஞ்சை வாயில் கவ்வியபடி நின்றிருந்தது நாய்.

கிளியின் உடலை கவ்வியதோடு விடாமல், மண்ணில் போட்டு புரட்டி எடுத்து வந்திருந்தது நாய்.

பார்த்ததுமே தில்லுதுரக்கு தெரிந்துவிட்டது... கிளி கண்டிப்பாய் இறந்திருந்தது.

'நம்ம நாய் கிளிய கொன்னுடுச்சுனு தெரிஞ்சா இந்த டேனிப்பய நம்ம சும்மா விடமாட்டானே..!'

வேக வேகமாய் வெளியே வந்து பார்த்த தில்லுதுர கொஞ்சம்போல நிம்மதியடைந்தார்.

டேனியின் வீட்டில் எல்லோரும் எங்கேயோ போயிருந்தார்கள்.

யோசித்த தில்லுதுர நாயின் வாயிலிருந்த கிளியைப் பறித்து, பாத்ரூமுக்கு கொண்டு போய் ஷாம்பூ போட்டுக் கழுவி, ஹேர் ட்ரையரை எடுத்து அதன் ரெக்கை எல்லாம் காயவைத்து, வேகவேகமாய் ஃப்ளாட்டின் வாசலில் இருந்த, அதனுடைய கூண்டுக்குள்ளேயே திரும்பப் போட்டுவிட்டு வந்துவிட்டார்.

இனி யாராவது பார்த்தாலும், அது இயற்கையாய் அதனுடைய கூண்டிலேயே இறந்ததாய்த்தானே நினைப்பார்கள்.

தெளிவாய் செய்துவிட்டாலும், குற்ற உணர்ச்சியில் டேனியையோ, அவன் வீட்டு ஆட்களையோ ரெண்டு மூணு நாட்கள் பார்க்காமலேயே சுற்றிக் கொண்டிருந்தார் தில்லுதுர.

ஆனால், சனிக்கிழமை மாலை காரை கொண்டு நிறுத்தியபோதே வாசலில் விளையாடிக் கொண்டிருந்த டேனி, தில்லுதுரயைப் பார்த்து ஓடி வந்தான்.

"அங்கிள்... உங்களுக்கு தெரியுமா.? என்னோட கிளி ஸ்நூஃபி செத்துப்போச்சு..!".

பாசமாய் சொல்லும் டேனியின் முகத்தை பார்க்க முடியாமல் தில்லுதுர, வருத்ததுடன் சொன்னார்.

"அப்படியாடா... பாவம் ஸ்நூஃபி. என்னாச்சு..?".

தில்லுதுர கேட்டதும் டேனி கண்களை விரித்துக் கொண்டு ஆச்சர்யமாய் சொன்னான்.

"அங்கிள்... அது ஒரு நாள் கூண்டுக்குள்ளயே செத்துக் கிடந்தது அங்கிள். எனக்கு பயங்கரமா அழுகை அழுகையா வந்துச்சு. அப்பறம், அதை நானும் அப்பாவும் அதை எடுத்துட்டு போயி ஃப்ளாட்டுக்கு பின்னாடி தோட்டத்துல பொதச்சுட்டோம். அதுக்கு அப்பறம், அப்பா என்னையும் அம்மாவையும் சாப்பிட வெளிய கூட்டிட்டு போயிட்டாரு. திரும்பி வந்து பார்த்தா யாரோ ஸ்நூஃபிய பொதச்ச எடத்துலருந்து எடுத்து குளிப்பாட்டி, திரும்ப அதோட கூண்டுலயே கொண்டு வந்து போட்டிருந்தாங்க அங்கிள். ஸோ ஃபன்னி..!" என்றான் டேனி.

-- மின்மினி தேசம்

Wednesday, March 30, 2011

இத படிக்காதீங்க.. கடுப்பாய்டுவீங்க...

“ஆபீஸ்ல ஒரு சின்ன மீட்டிங். நான் வீட்டுக்க வர லேட் ஆகும். நீ சாப்ட்டு தூங்கு“.. கிருஷ்ணா போனில் சொன்னதும் வசந்திக்கு கோபம் வந்துவிட்டது. “என்னங்க திடீருனு இப்டி சொல்றீங்க?? இப்பவே மணி 10.30 ஆய்டுச்சு. தனியா இருந்தா நா பயப்புடுவேனு உங்களுக்கு தெரியாதா??? ப்ளீஸ் சீக்கிரம் வந்துடுங்க“னு அழுகாத குறையாக கணவனிடம் கெஞ்சினாள். “வந்துட்றேன் செல்லம். முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் வந்துட்றேன்டா. நீ கதவெல்லாம் பூட்டிட்டு லைட் ஆஃப் பண்ணிட்டு தூங்கு. நா வந்துட்றேன்“னு சொல்லி மனைவியை ஒருவழியாக சமாதானப்படுத்திவிட்டு மீட்டிங்கை தொடர்ந்தான்.
இங்கு..... வசந்தி வாட்ச்சைக் கவலையோடு பார்த்துவிட்டு எழுந்து மெதுவாக நடந்தாள்.. நடந்தாள்.. வாசலுக்கு வெளியே வந்து சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒரே இருட்டு. வலதுபுறம் இடதுபுறம் முன்புறம் எல்லா பகுதியும் ஒரே இருட்டாக இருந்தது. அக்கம்பக்க வீடுகள் அதிகமில்லாத ஏரியா அது. இனம்புரியாத பயம் அவளைப் பிடித்துக்கொண்டது. மெதுவாய் உள்ளே சென்று வாசற்கதவைப் பூட்டி தாழ் போட்டாள். மேல் தாழ், நடுத்தாழ் இரண்டையும் போட்டுவிட்டு திரும்பி நடந்தாள்.. நடந்தாள்..
அங்கு..... அலுவலகத்தில் மீட்டிங் நடந்துகொண்டிருந்தது. கிருஷ்ணா அவர்களுடன் விவாதித்துக்கொண்டிருந்தான்.
இங்கு..... திரும்பி நடந்த வசந்தி கிச்சனுக்குள் சென்றாள். சாப்பாட்டை ஒரு தட்டில் போட்டுக்கொண்டு டைனிங் டேபிளுக்கு சென்று உட்கார்ந்தாள். சாதத்தைப் பிசைந்தாள். வாயருகே கொண்டு சென்றாள்.. திடீரென அப்படியே அசையாமல் இருந்தாள்.. அப்படியே இருந்தாள்.. இன்னும்.. இன்னும்... பிறகு சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள். பெருமூச்சு விட்டுக்கொண்டபடியே சாப்பிடாமல் அதிலேயே கை கழுவினாள்.
அங்கு..... ஒரு வழியாக மீட்டிங் முடிந்தது. கிருஷ்ணா அலுவலகத்திலிருந்து புறப்பட்டான். மெதுவாக தன் பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.
இங்கு..... சாப்பிடாமல் எழுந்த வசந்தி டிவி ஆன் செய்தாள். சோபாவில் உட்கார்ந்து சேனல் மாற்ற ஆரம்பித்தாள். மாற்றினாள்.. மாற்றினாள்.. அடுத்த சேனல்.. அதற்கடுத்த சேனல்.....
“........னங்..........“ திடீரென மாடியில் ஏதோ சத்தம் கேட்க அதிர்ந்தாள். பயத்துடனே மெதுவாக எழுந்தாள். டிவிஐ ஆஃப் செய்துவிட்டு மாடிப்படி அருகே வந்தாள். மெதுவாக எட்டிப் பார்த்துவிட்டு படிகளில் ஏறினாள்......... ஏறினாள்......... ஏறினாள்..
அங்கு........ கிருஷ்ணா பைக்கில் வந்துகொண்டிருந்தான். வேகமாக வந்துகொண்டிருந்தான். வாகனங்களைத் தாண்டி படு வேகமாக வந்துகொண்டிருந்தான்.
இங்கு....... மாடி ஏறிய வசந்தி சத்தம் வந்த திசையில் பார்த்தாள். அங்கே........ அங்கே......... அங்கே............
“மியாவ்.“. ஒரு கருப்புப் பூனை. பயம் தெளிந்து மீண்டும் மாடியிலிருந்து இறங்கினாள். இறங்கினாள். மெதுவாக.. மெதுவாக.. இறங்கினாள்.
அங்கு...... கிருஷ்ணா இன்னும் வந்துகொண்டிருந்தான்.. வந்துகொண்டிருந்தான். வேகமாக வந்துகொண்டிருந்தான்.
இங்கு..... வசந்தி படிகளில் மெதுவாக இன்னும் இறங்கிக் கொண்டிருந்தாள்..
அங்கு.... பைக்கில் கிருஷ்ணா வந்துகொண்டிருந்தான்.
இங்கு....... கடைசிப் படியில் கால் வைத்தாள் வசந்தி... பட்டென கரெண்ட் போனது. எதிர்பாராத அந்த நொடியினால் அவளுக்கு பயத்தால் உடல் வியர்த்து நடுங்கியது. எங்கும் ஒரே அமைதி....... அமைதி.......... அமைதி..
அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது...
“டொக் டொக்“ கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அதிர்ச்சியில் வசந்தி உரைந்துவிட்டாள். தைரியத்தை வரவழைத்து “யாரது“ என்று கேட்டாள். பதிலில்லை. மறுபடியும் தட்டும் ஓசை... “யாருனு கேக்குறேன்ல“ வசந்தியின் குரல் நடுக்கத்துடன் வந்தது. பதிலேதுமில்லை. அந்த இருட்டுக்குள்ளும் அவளுடைய கண்கள் பயத்தில் மின்னியது. “டொக் டொக்“ கதவு தட்டப்பட்டது.. வசந்தி பயத்துடன் உள்ளே நின்றுகொண்டிருந்தாள்.
“டொக் டொக்“...... “டொக் டொக்“....
மெதுவாக கதவருகே சென்றாள் வசந்தி.. கதவின் தாழ்ப்பாளை விளக்கும் நோக்கத்தில் அதன் அருகே கையை கொண்டுசென்றாள். கைகள் நடுங்கியது.
இப்போது கதவு பலமாக தட்டப்பட்டது. “டொக் டொக் டொக்“.. வசந்தியின் கைகள் நடுங்கியது.... “டொக் டொக்“... நடுக்கம்.. “டொக் டொக்“.. நடுக்கம்..
மெதுவாக கதவின் தாழ்ப்பாள் நீக்கித் திறந்தாள். அங்கே.. அங்கே... அங்ங்ங்ங்கே..
தொடரும்“னு கொட்ட எழுத்துல போட்டுட்டாய்ங்க..
என்ன முறைக்குறீங்க??? அதான் படிக்காதீங்கனு சொன்னோம்ல... படிச்சு முடிக்கிறதுக்குள்ள கடுப்பாய்ருப்பீங்களே.. படிச்சதுக்கே இப்டினா டிவில பாத்த எனக்கு எப்டி இருக்கும். அட ஆமாங்க.. இது ஒரு மெகா தொடரோட ஒரு அத்தியாயம். :)

-- இந்திரா

Friday, March 18, 2011

எப்படி இருந்த பயலை எப்படி மாத்திட்டாளுக!

ஒரு பையன் ஒரு பெண்
இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்
வெவ்வேறு வயதுகளில்:


@எல்கேஜி:
பெண்: "பென்சில் தருவியா..?"
பையன்: "மிஸ்கிட்ட சொல்லிடுவேன்..!"


@5ம் வகுப்பு:
பெண்: "பென்சில் தருவியா..?"
பையன்: "இந்தா..!"


@10ம் வகுப்பு:
பெண்: "பேனா இருந்தா கொடுக்க முடியுமா..?"
பையன்: "ஓ மை காட்... ப்ளாக் வேணுமா., ரெட் வேணுமா., ப்ளூ வேணுமா., க்ரீன் வேணுமா.?"


@12ம் வகுப்பு:
பெண்; (ஒன்றுமே கேட்கவில்லை)
பையன்: "2உன்னோட பென் சரியா எழுதலைனு நெனைக்கிறேன். இந்தா என்னோட பென்... இதை யூஸ் பண்ணிக்க..!"


@காலேஜ்:
பையன்: "புதுசா ஒரு பென் வாங்கினேன்... எழுதிப் பாத்துட்டுக் குடு...!".



நீதி:

"எப்படி இருந்த பயலை
எப்படி மாத்திட்டாளுக பாத்தீங்களா..?"

- மீனாக்க்ஷி சுந்தரம் 



 

Tuesday, February 22, 2011

ரத்த சரித்திரம்

டேனி படிக்கும் வகுப்பில் உயிரியலில் ரத்த ஓட்டத்தைப் பற்றி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார் அறிவியல் ஆசிரியர்.

மிகத் தெளிவாக பாடம் நடத்தும் ஆசிரியர் என்பதால், எல்லோருக்கும் புரியும்படியான எளிமையான உதாரணத்தைக் கையில் எடுத்தார் அவர்.

"மாணவர்களே... நம் எல்லோருக்கும் நடக்கும் ஒரு உதாரணத்தைச் சொல்லுகிறேன். இப்போது நான் தலைகீழாய் நிற்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.அப்போது, ரத்தமானது என் தலையை நோக்கி அதிவேகமாய்ப் பாய்கிறது. அதனால், எனது முகம் இன்னும் அதிகமாய் சிவக்கிறது... இல்லையா..?".

மாணவர்கள் எல்லோரும் கோரசாய், "ஆமாம் சார்..!" என்றார்கள்.

ஆசிரியர் அடுத்துக் கேட்டார்.

"அப்படியானால்... நான் நேராய் நிற்கும்போது, அதே ரத்தமானது, ஏன் என் கால்களில் அவ்வாறு பாய்வதில்லை..? ஏன், என் கால்கள் சிவப்பதில்லை..?".

எல்லா மாணவர்களும் சற்றே யோசனையில் அமைதியாய் இருக்கும்போது, டேனியின் பளிச்சென்று கேட்டது.

"ஏனென்றால், உங்களுடைய கால் காலியாய் இல்லை..!".
--  மின்மினி தேசம்


Friday, February 11, 2011

ஜெருசலேமில் தில்லுதுர

தில்லுதுர தன் மனைவி குழந்தைகள் மற்றும் மாமியாருடன் ஜெருசலேம் டூர் போயிருந்தார்.

நண்பர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த லோ பேக்கேஜ் டூர் அது.

கிளம்பியதில் இருந்து நல்ல விதமாகவே போய்க் கொண்டிருந்த அந்த 15 நாள் டூரின் நடுவில், சரியாக எட்டாவது நாளில் அந்தப் பிரச்சினை வந்தது.

எட்டாவது நாள் இரவில்தான் தில்லுதுரயின் மாமியாருக்கு நெஞ்சு வலி வந்தது.

நள்ளிரவு நேரம், பாஷை தெரியாத ஊர்.

என்ன செய்வது என்று முடிவு எடுத்து ஹாஸ்பிடல் கொண்டு சேர்ப்பதற்குள் மாமியாரின் கதை முடிந்தே விட்டது.

டாக்டர், 'மாமியாரின் கதை முடிந்தது...' என்று கையை விரித்ததும், மனைவியும் குழந்தைகளும் அழுது புலம்ப தில்லுதுர தனக்கு டூர் அரேஞ்ச் செய்த நண்பனை போனில் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னான்.

நண்பன் அங்கே இங்கே என்று விசாரித்துவிட்டு தில்லுதுரயின் போனுக்கு வந்தான்.

"தில்லு.. மாமியார இங்கயே புதைச்சுட்டா நம்மூருப் பணத்துல இருபதாயிரம் தான் ஆகுமாம். அதே பாடிய நம்மூருக்கு கொண்டு போகணும்னா அஞ்சு லட்சத்தத் தாண்டுமாம். என்ன பண்ணனும்னு முடிவு பண்ணிச் சொல்லு..!".

அழுது கொண்டிருந்த மனைவி தில்லுதுரயின் முகத்தைப் பார்க்க, தில்லுதுர நண்பனிடம் போனில் சொன்னான்.

"இதோப்பாருடா... அஞ்சு லட்சமில்ல, அம்பது லட்சமானாலும் பரவாயில்ல. என் மாமியார எங்க ஊர்லதான் அடக்கம் பண்ணனும். ஏற்பாடு பண்ணு...!".

தில்லுதுர சொன்னபடி மாமியாரின் உடல் சென்னை வந்து அடக்கம் செய்யும் போது, செலவு கிட்டத்தட்ட ஏழு லட்சம் ஆகியிருந்தது.

வந்தவர்களில் தில்லுதுரயின் நெருங்கிய நண்பன் ஒருவன் கேட்டான்.

"ஏன்டா... அங்கயே எல்லாத்தையும் முடிச்சுட்டு வந்திருந்தா இந்த ஏழு லட்சம் மிச்சம்தானே..?".

நண்பன் கேட்டதும் சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு, தில்லுதுர தணிந்த குரலில் தன் நண்பனிடம் சொன்னான்.

"அங்கயே பொதச்சிருக்கலாம்தான். ஆனா, அந்த ஊர்லதான் யேசு கிறிஸ்து செத்துப் போன மூணாம் நாளே உயிரோட வந்தாராமே..! கைடு அன்னிக்கு காலைலதான் சொன்னான். சரி, மாமியார் விஷயத்துல எதுக்கு அந்த ரிஸ்க் எடுக்கணும்தான் செலவானாலும் பரவாயில்லேனு இங்கயே கொண்டு வந்துட்டேன்..!" என்றான்.
-- மின்மினி தேசம்


Monday, January 17, 2011

லேடீஸ்.. ஆன்சர் மீ... (Ladies... Answer Me...)

1) வண்டில ஃப்ரண்ட் பிரேக், பேக் பிரேக்ன்னு ரெண்டு இருக்கும் போது (காலால) லெக்  பிரேக் போட்டு தட்டி தட்டி நிறுத்தறீங்களே.. உங்க மனசுல என்ன ஷேன் வார்னேன்னு நினைப்பா?
2) இன்கமிங் காலுக்காகவும், மிஸ்டு காலுக்காகவுமே மொபைல் வாங்குறீங்களே. ஒரு வேளை மிஸ் எல்லாம் விடுற கால் என்பதால் தான் மிஸ்டு கால்ன்னு பேரு வந்ததா?

3) அஃபிஷியல் கால்ன்னா எதிர்ப்பக்கம் பேசுற ஆளு இருக்கிற திசையை நோக்கி நேரா பேசுற மாதிரி காட்டுக் கத்தல் போடுற நீங்க, பெர்சனல் கால்ன்னா மட்டும் உதடே அசையாம பேசுறீங்களே.. இதுக்கெல்லாம் தனியா ஸ்பெஷல் கிளாஸ் எதுனா போனீங்களா?

4) தலைமுடிய தவிர எல்லாத்திலும் பிங்க் கலர் தேடுறீங்க ஓக்கே. அதுக்குன்னு தேசியக்கொடி தந்தா கூட பிங்க கலர் இல்லையான்னு கேட்கிறது டூ மச்ச, இல்லையில்ல, ட்விண்டி மச்சா தெரியல உங்களுக்கு?

5) ஃபோன்ல பேசிட்டே வண்டி ஓட்டின குத்தம் சொல்றாங்க. ஆனா ஃபோன்ல பேசிட்டே குறுக்குல வந்து, கரெக்ட்டா பச்சை சிக்னல் பார்த்து ஓட்டுற எங்கள பார்த்து “humpty dumpty sat on the wall” ன்னு ஏதோ இங்கிலீஷ்ல திட்டுறீங்களே. இப்ப நான் கேட்கிறேன்.  “baba black sheep have u any wool?

6) ஜீன்ஸ், டீஷர்ட், கார்கோன்னு எங்க டிரெஸ் ஒண்ணு விடாம போட்டுட்டு சுத்துறீங்க. நாங்க கிண்டலா செய்றோம்? ஆனா நாங்க டைட்டா டீ ஷர்ட் போட்டா மட்டும் ஜாக்கெட்ன்னு சொல்றீங்க. குர்தா போட்டா துப்பட்டா எங்கப்பான்னு கலாய்க்கறீங்க. உங்களுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா?

7) 30 வயச தாண்டிய ஷாலினியையோ, மாளவிகாவையோ பிடிக்கும்ன்னு சொன்னா உடனே “ஆண்ட்டி பண்டாரம்ன்னு” பேரு வைக்கறீங்க. ஆனா நீங்க மட்டும் “ஐ லவ் கமல்ப்பா”, சூப்பர்ஸ்டார அடிச்சிக்க முடியுமான்னு ஜொள்ளு விடுறீங்க. உங்கள ”அங்கிள் பைத்தியங்க” சொன்னா சும்மாவா விடுவீங்க?

8) ஒரே பொண்ணுக்கு பல பேரு நூல் விட்டா சூப்பர் ஃபிகர்ன்னு மிதப்புல சுத்தறீங்க. அதே ஒரு பையன் பல பொண்ணுக்கு லெட்டர் தந்தா பொறுக்கின்னு பேரு வைக்கறீங்க. ஐ வாண்ட் டூ நோ த ரீசன் நவ். கமான் டாக் மீ.
-- From my friend's buzz :)

Friday, January 7, 2011

காக்காவும் அதன் கக்காவும்

தில்லுதுர அவரது நண்பர் ராஜாவுடன் பார்க்கில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது, ஒரு காக்கா தில்லுதுர மீது பறந்தபடியே கக்கா பண்ணிவிட்டது.

அசிங்கமாகிவிட்ட சட்டையைத் துடைக்க தண்ணீர் எடுத்துவர, ராஜா வேகவேகமாய் பக்கத்திலிருந்த பைப்பை நோக்கி ஓடினார்.

தில்லுதுர நண்பரைப் பார்த்துச் சொன்னார்.

"யூஸ் இல்ல, விட்டுடுங்க...!".

குழப்பமாய்த் தன்னைப் பார்த்த ராஜாவிடம் தில்லுதுர தொடர்ந்து சொன்னார்.

"எப்புடியும் நீங்க தண்ணியப் புடிச்சுட்டு வர்றதுக்குள்ள, அந்தக் காக்கா இன்னும் அஞ்சாறு கிலோமீட்டர் பறந்து போயிருக்குமே...!" என்றார்.

-- Minmini Desam

Wednesday, January 5, 2011

ஆட்டு நாக்கு

அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், தில்லுதுர வீட்டில் பிரியாணி செய்யச் சொல்லியிருந்தார்.

டிபார்ட்மென்டல் ஸ்டோரில் முட்டை மற்றும் தேவையான ஐட்டங்களை வாங்கிக் கொண்டு, நேராக மட்டன் கடையில் வந்து பைக்கை நிறுத்தினார் தில்லுதுர.

நல்ல கூட்டம் கடையில்.

காய்கறி இன்னபிற உள்ள பையை பைக்கிலேயே வைத்துவிட்டு, முட்டையை மட்டும் பத்திரமாகக் கையில் எடுத்துக் கொண்டு தன்னுடைய டர்னுக்காக காத்திருக்கும் போதுதான், அவர் கறிக் கடைக்காரர் மட்டன் வெட்டும் அந்த அடிமரக் கட்டையின் மேலிருந்த ஆட்டின் நாக்கைப் பார்த்துவிட்டுக் கேட்டார்.

"இன்னாதுப்பா அது..?".

கறிக் கடைக்காரர் எப்போதும்போல் உற்சாகமாய் பதில் சொன்னார்.

"ஆட்டோட நாக்கு சார்.ஒரு அம்மா எடுத்து வைக்கச் சொல்லிட்டுப் போயிருக்கிது..!".

தில்லுதுர ஆச்சர்யமாய்க் கேட்டார்.

"ஆட்டோட நாக்கை எல்லாமா தின்னுவாங்க..?".

கறிக்கடைக் காரர் சிரித்தார்.

"இன்னா சார் இப்பிடிக் கேட்டுட்ட.? ஷோக்கா இருக்கும். உனக்கு வோணுமா..?".

தில்லிதுர அருவருப்புடன் பதில் சொன்னார்.

"சேச்சே... ஒரு மிருகத்தோட வாயிலருந்து வந்ததை என் வாயில போடறதா..? சான்ஸே இல்லை..! கருமம்..கருமம்..".

கடையில் நின்றிருந்தவர்கள் எல்லோரும் திரும்பிப் பார்க்க, கறிக் கடைக்காரர் தில்லுதுர சொன்ன எதைப் பற்றியும் கவலைப்படாமல் கறியை வெட்டியபடியே கேட்டார்.

"அதென்ன சார் கையில வச்சிருக்கீங்க... முட்டையா..?" என்றார்.


-- மின்மினி தேசம்

Monday, January 3, 2011

கார்த்திக்... அனிதா.... காதல்...

கார்த்திக்..
சிவந்த நிறம், நல்ல உயரம். ஏதோ ஒரு சினிமா ஹீரோவின் சாயலை ஒத்த தோற்றம். தினமும் உடற்பயிற்சி செய்பவன் என்பதை அவனது ஃபிட்டான உடற்கட்டே சொல்லியது. ஏற்றி சீவப்பட்ட கேசம் அவ்வப்போது நெற்றியில் தவழ்ந்து அழகூட்டியது. தனியார் நிறுவனம் ஒன்றில் பொறுப்பான வேலையில் சேர்ந்து கைநிறைய சம்பாதிப்பவன். வீட்டிற்கு ஒரே பிள்ளை.
அன்று ஞாயிற்றுக் கிழமை, எனினும் சீக்கிரமாக வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தான். கூடுதலான அவனது உற்சாகமே கூறியது, தனது காதலியைப் பார்க்கப் போகிறானென்று. அவர்கள் வழக்கமாக சந்திக்கும் காஃபி ஷாப்புக்கு அவளை 10 மணிக்கு வரச் சொல்லியிருந்தான். சரியாக 9.45க்கு தனது கருப்பு நிற பல்சரைக் கிளப்பிப் பாய்ந்தான்.
காஃபி ஷாப்புக்குள் நுழையும்போது அவனது வாட்ச் மணி 10ஐ காட்டியது. திருப்தி அடைந்தவனாய் உள்ளே நுழைந்து பார்வையை சுழற்றினான். அவள் இன்னும் வரவில்லை. ஏனோ அன்றைக்கு ஆட்கள் அதிகமாக ஷாப்புக்குள் அமர்ந்திருந்தனர். யோசனையாய் ஒரு டேபிளில் அமர்ந்த கார்த்திக், தனக்கு ஒரு காஃபியை ஆர்டர் செய்துவிட்டு தனது காதலியின் வருகைக்கு காத்திருக்க ஆரம்பித்தான்.
.................................
அனிதா..
அழகி என்று சொல்ல முடியாதெனினும் நல்ல லட்சணமானவள். அழகான முகவெட்டு. உடலமைப்பிற்கேற்றபடி அந்தப் பச்சை நிற காட்டன் புடவை கச்சிதமாக அவளுக்குப் பொருந்தியிருந்தது. கார்த்திக்கை விட மூன்று வயது இளையவள். ஒரு அண்ணன் இருக்கிறான்.
கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ஒரு கணிணி மையத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டாள். போதுமான சம்பளமும் சுதந்திரமும் கிடைக்கிற திருப்தியில் இருக்கும்போது தான் வீட்டில் திருமணத்திற்கு வரண் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். அனிதாவுக்கோ தனது காதலனை கைப்பிடிக்கும் நோக்கம். அதனால் மேற்கொண்டு வீட்டில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து பேச தனது காதலனை பார்க்கக் கிளம்பிக்கொண்டிருந்தாள்.
அம்மாவிடமும் அண்ணனிடமும் சமாளித்துவிட்டு கிளம்பிவதற்குள் அனிதாவிற்குப் போதும் போதும் என்றாகி விட்டது. ஸ்டாப்பிற்கு வந்து சிறிது நிமிடம் காத்திருப்பிற்குப் பின் பஸ் வந்தது. தனக்காக அவன் வந்து காத்திருப்பானே என்ற கவலையுடனான 20 நிமிடப் பயணத்திற்குப் பின் இறங்கி ஷாப் இருக்கும் வழி நோக்கி நடந்தாள்.
ஒருவழியாக 10.15க்கு காஃபி ஷாப்பின் உள்ளே நுழைந்தாள். வழக்கத்தை விட இன்று கூட்டமாயிருக்கிறதே என்று குழப்பமாய் சுற்றிப் பார்த்தபடி கார்த்திக் இருந்த டேபிளை நோக்கி நகர்ந்தாள் அனிதா.
.................................
கார்த்திக் அவ்வப்போது வாட்சைப் பார்த்துக்கொண்டான். அனிதா அவனெதிரில் சென்று உட்கார்ந்தாள். தனது கைப்பையை மடியில் வைத்து சௌகரியமாய் உட்காரவும் வெய்ட்டர் வந்து ஆர்டர் கேட்கவும் சரியாக இருந்தது. யோசித்தவளாய் தனக்கும் காஃபியே ஆர்டர் செய்தாள். வெய்ட்டர் நகர்ந்தவுடன் இருவருமே மௌனமாய் இருந்தனர்.
இரண்டு நிமிடங்களில் காஃபி வந்தது. எடுத்து மெதுவாய்க் குடிக்க ஆரம்பித்தாள். ஆனாலும் அவர்களுக்குள் மௌனம் மட்டுமே இருந்தது. பில்லுக்கான பணமும் கொடுத்தாயிற்று.
கார்த்திக் அடிக்கடி அனிதாவை ஓரக் கண்ணால் பார்த்துக்கொண்டான். அவளோ எதுவுமே பேசாமல் வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு நிமிடம் அல்ல இரண்டு நிமிடம் அல்ல.. முழுதாகப் பதினைந்து நிமிடம் இந்த மௌனப் போராட்டம் நடந்தது. அதற்குப் பின் பொறுமையிழந்தவனாய் அந்தக் காரியத்தை செய்தான் கார்த்திக்..
வேகமாய் வெளியேறி தனது பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பிவிட்டான். ஆனால் அனிதாவிடம் எந்த சலனமுமில்லை. தொடர்ந்து அமர்ந்திருந்தாள்.
.................................
என்ன முழிக்கிறீங்க??? யாரோ ஒருத்தன் வேகமா வெளிய போனா அனிதா எதுக்கு கவலைப்படணும்??
அனிதாவும் கார்த்திக்கும் லவ் பண்றாங்கனு நா சொன்னேனா??? கார்த்திக் தன்னோட காதலி வரலனு கோவமா போயிட்டான். அனிதா தன்னோட காதலனுக்காக வெய்ட் பண்றா. அவ்ளோ தான். அதுக்கெதுக்கு ஒரே டேபிள்ல உட்காரணும்னு கேக்குறீங்களா?? அட என்னங்க சின்னப்புள்ளத் தனமா கேக்குறீங்க?? அன்னைக்கு தான் காஃபி ஷாப் கூட்டமாயிருந்துச்சுல.. இடம் இல்லனு தான் எதிரெதிர்ல உக்காந்தாங்க. இது ஒரு தப்பா??
இப்ப என்ன தான் சொல்ல வரேன்னு கேக்குறீங்க.. அதானே..
ஒண்ணுமில்லங்க.. பதிவெழுதனும்னு முடிவாய்டுச்சு.. எதையாவது எழுதனும்ல.. ஐ மீன் கிறுக்கணும்ல.. (அப்பாடா.. ப்ளாக்கோட தலைப்பு வந்துடுச்சு)
அட என்ன பண்றீங்க..
நோ நோ இங்கல்லாம் துப்பக்கூடாது.
பின்னூட்டத்துல போய் காரிதுப்பிட்டு வேலையப் பாருங்க.
அடுத்த பதிவுல சந்திக்கலாம். வரட்டுமா..

--- இந்திரா 
 
 

Saturday, January 1, 2011

காதலிக்கு ஓர் கடிதம்!

ஒரு கோயம்புத்தூர் குசும்புக்கார அன்பரின் கைவண்ணமே இங்கு நீங்கள் காண்பது.


காதலிக்கு ஓர் கடிதம்!



அன்பே!


நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். அலுவலகத்தில் இருக்கிறேன் நீல்கிரிஸில் சாயங்கலாம் சந்திக்கலாம்’ என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன்.

சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது ‘எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!’ என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது. மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான். அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம் இருந்த அனைத்தையும் தீன்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன். சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குப் பின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார் ஐம்பது ஓட்டங்கள் எடுத்தான் சர்வர். ராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ புஃல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை என்பதைக் கண்டுகொண்டேன். வேழ முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே…

அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில் இருந்தபோது ‘ தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லபா… வயசாச்சில்ல…’ என தன் திருவாய் மலர்ந்தார். திடப்பொருட்களிலிருந்து ரோஸ்மில்க் போன்ற திரவப் பொருட்களுக்கு மாறினார். அப்பாடா, முடித்து விட்டார் என்ற ஆசுவாசத்தை ‘ ஒரு கஸாடா’ என்ற வார்த்தையில் உடைத்தார். கஸாட்டாவும், ஜர்தா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதைத் தவிர
திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்கு காத்திருக்கும் கோவில்
யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை. ‘தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பா’ என்ற அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.

‘சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்’ என்று மெல்ல பேச்சைத் துவங்கினேன். ‘ அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச ‘ஆனந்த பவனுக்கு’ வந்தது நீங்க இல்லையா தம்பி?!’ என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். ”

“தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது. நீங்க ஒன்னு பண்ணுங்க… நாளக்கி சாயங்காலம் அன்னபூர்ணா வந்துடுங்க… அப்ப பேசிக்கலாம்” என்ற உனது தகப்பனைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம் துப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.

இப்படிக்கு,
இரை தேடும் குடும்பத்திற்கு இரையாகி விடாமல் இறையருளால் தப்பித்த உன்னுடைய முன்னாள் காதலன்.

(ஆக்கம் என்னுடையதல்ல! மின்னஞ்சலில் வந்தது.
எழுதிய அன்பர் பெயர் தெரியவில்லை. அவர் எங்கிருந்தாலும் வாழ்க!)
   

You may also like