Skip to main content

Posts

Showing posts from July, 2012

அப்பா :)

4 வயதில்--"எங்கப்பா போல ஒரு ஆளைப் பார்க்கவே முடியாது." 6---"அவருக்கு எல்லா விஷயமும் அத்துபடி" 10---"தங்கமானவர்.ஆனால் பொசுக் பொசுக்கு கோபம் வந்திடும். மிட்டாய் தின்னதுக்காக என்னை அடிச்சிட்டாரு." 12---"நான் சின்னப்பிள்ளையா இருந்தபோது, என்னை நல்லா கவனிச்சிக்கிட்டாரு 14--"அவருக்கு சீக்கிரம் திருப்தியே வராது,நாப்பது மார்க் எடுத்தால் அய்ம்பது எடுக்கணும்பாரு.99மார்க் எடுத்தாகூட--ஒரு மார்க்கை ஏன் கோட்டை விட்டே'ம்பாரு' 16---என்னைச் சுத்தி என்ன நடக்கிதுங்கிரதை புரிஞ்சிக்கவே மாட்டேன் என்கிறாரு. பழங்காலத்து மனுஷனாவே இருக்காரு." 18---"எடுத்தேன் கவிழ்த்தேன்னுதான் எல்லா நடவடிக்கையும்." 20---"அப்பப்பா,அந்த மனுஷனை புரிஞ்சுக்கவே முடியல. அம்மா எப்படிதான் காலம் தள்ளறாங்களோ?" 25---"எது கேட்டாலிம் 'கிடையாது','இல்லை','கூடாது'ங்கிற பேச்சுதான். இவரெல்லாம் ஒரு மனுஷனா?" 30--என் பையனை சமாளிக்கிறது கஷ்டமா இருக்கு. என்னை எங்கப்பா எப்படித்தான் சமாளிச்சாரோ?" 40--"என்னை எங்கப்பா எவ்வளவு ஒழுக்கத்தோட, ...

என் நண்பர்கள் :)

நனைந்த என் விழிகளை நாசுக்காக துடைத்துவிட்டு பூட்டிய என் இதழ்களில் புன்னகையை மலரவிட்டு நல்லவற்றை நையாண்டியாய் எடுத்துரைத்து நான்கு பக்கமும் நான் உண்டு என்று நம்பிக்கை தரும் உறவாய்...... -- கருத்தவன்

காந்திஜி கொல்லப்பட்ட வழக்கில் கோட்சே யின் வாக்குமுலம்

காந்தி கொலை செய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பு. வீரசவர்க்கார் உள்பட வேறு எவருக்கும் தொடர்பு இல்லை" என்று கோட்சே கூறினான். டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கோட்சே தொடர்ந்து வாக்குமூலம் அளித்தான். வாக்கு மூலத்தின் பின்பகுதி ... வருமாறு:- ஜின்னாவின் இரும்புப்பிடி, எக்கு உள்ளத்தின் முன் காந்திஜியின் ஆத்ம சக்தி, அகிம்சைக் கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டன. ஜின்னாவிடம் தம் கொள்கை ஒருக்காலும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் அவர் கொள்கையை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார். தம் தோல்வியையும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. மற்ற மேதைகள் ஜின்னாவுடன் பேசி அவரை முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலைப் போன்ற பெரிய தவறுகளைச் செய்த வண்ணம் இருந்தார். நாட்டைப் பிளந்து துண்டு துண்டாக்கியவரைத் "தெய்வம்" என மற்றவர் மதித்தாலும் என் உள்ளம் ஏனோ அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, அவர் மீது கோபம்தான் வருகிறது. காந்தியைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பதை அறிவேன். சிறிதும் சந்தேகம் இல்லாமல் என் எதிர்காலம் பாழாய்ப்போவது உறுதி. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலி...