Skip to main content

Posts

Showing posts with the label Short Stories

மனநிம்மதி தரும் துறவி கதை | Buddha Story

கசப்பான நிகழ்வுகளை கடந்து மனநிம்மதி தரும் துறவி கதை

மனைவி அமைவதெல்லாம்!

திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒரு வித உற்சாகத்துடனும்,பரவசத்துடன ும் நாட்களை கடத்தினேன். கனவுகள் வராத நாள் கிடையாது. வரும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புகளும்,கற்பனைக ளும் சுவாரஸ்யத்தை கூட்டியது. நெறைய பாலகுமாரன் புத்தகங்களை சேமித்து வைத்து இருந்தேன் வருகிறவளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் ஒருவேளை அவளும் பாலகுமாரன் ரசிகையாக இருந்தா ... ல் ..? நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது. கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை எல்லாம் தூசு தட்டி எடுத்து பார்வையில் படும்படி வைத்தேன் . இளையராஜா பாடல்கள் தொகுப்புகளை வாங்கி வைத்தேன்.எஸ் .ஜானகி பாடல்களை தனியே பதிவு செய்து வைத்தேன்.கேரம் ,செஸ் போர்டு எல்லாம். இன்னும் பல விஷயங்கள் . ஒரு பெரிய கற்பனை கோட்டையில் வாழ துவங்கி இருந்தேன் . ஒரு சுபயோக சுபதினத்தில் திருமணம் இனிதே நடந்தது..! விருந்து முதற்கொண்ட சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தது. கீழ்க்கண்ட உரையாடல்கள் சில தினங்களில் சில தினங்கள் இடைவெளியில் நடந்தது. புத்தகம் எல்லாம் படிக்கும் பழக்கம் இருக்கா ? இல்லங்க நான் எந்த புக்கும் படிச்சது இல்ல..! எந்த புக்கும் படிச்சது இல்லையா ? ஆமாங்...

நீ எதைக் கொண்டு வந்தாய்.. இழப்பதற்கு?

  தலைசிறந்த பொருளாதார நிபுணரான ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள் தலைமையில் ஒரு சிறு சேமிப்புத் திட்ட ஆதரவு விழா, ராஜாஜி ஹாலில் நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய கலைவாணர், ஒரு சந்தேகத்தை எழுப்பினார். "ஓர் ஓட்டலில் வந்து இறங்கிய பிரயாணி, கேஷியரிடம் 100 ரூபாய் நோட்டைக் கொடுத்து, ஊருக்குப் போகும்போது வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். கேஷியர் தர வேண்டிய பாக்கியைக் கேட்டு ஒரு மளிகைக் கடைக்காரர் வந்தார். உடனே, அந்த 100 ரூபாயை எடுத்து அவரிடம் தந்தார் கேஷியர். மளிகைக் கடைக்காரர் அந்த நோட்டை, தனக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்குத் தந்தார். மறுநாள் டாக்டர், ஒரு டீ பார்ட்டி வகையில் அந்த ஓட்டலுக்குத் தர வேண்டிய பாக்கிக்காக, அதே நோட்டை ஓட்டலுக்குக் கொடுத்து அனுப்பினார். அன்று மாலை, ஓட்டலில் தங்கியதற்கான பணத்தைத் தந்துவிட்டு, அதே 100 ரூபாய் நோட்டைத் திரும்ப வாங்கிக்கொண்டார் அந்தப் பிரயாணி. அப்போது கேஷியரிடம், 'இது ஒரு செல்லாத நோட்டு. செலவாணி ஆகிறதா என்று பார்ப்பதற்காகவே உங்களிடம் தந்தேன்' என்று சொல்லிக் கொண்டே, அந்த நோட்டைக் கிழித்தெறிந்தார். இதில் யாருக்கு நஷ்டம் என...

ஒரு 'பிட்டு' காதல் கதை

  "அண்ணே! நீங்க எனக்கு கதை சொல்லி ரொம்ப நாள் ஆச்சு. எதாச்சும் சுவாரசியமான கதை இருந்தா சொல்லுங்கண்ணே" "கதை சொல்றேன்! அது சுவாரசியமா இருக்கா, இல்லியான்னு நீதான் சொல்லணும்." "சரி சொல்லுங்க" "இது என்னோட காதல் கதை. இந்த கதை நடக்கும்போது நான் +2 படிச்சுக்கிட்டு இருந்தேன்." "என்னது படிச்சீங்களா?" "சரி +2 க்ளாஸ்ல தினமும் போய் உக்காந்துகிட்டு இருந்தேன். அப்போ என்னோட க்ளாஸ்ல ப்ரீத்தின்னு புதுசா ஒரு பொண்ணு வந்து சேந்தா. அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு ஒரு பக்கம் இருந்து பாத்தா அப்பிடியே த்ரிஷா மாதிரி இருப்பா." "அப்போ இன்னொரு பக்கம் இருந்து பாத்தா கமலா காமேஷ் மாதிரி இருப்பங்களாண்ணே." "டேய்! மூடிகிட்டு கதையை கேளு." "சரி சரி சொல்லுங்க. அந்த பொண்ணு வந்ததும் பசங்க கிளாஸ் கட் அடிக்கிறதே குறைஞ்சு போச்சு. எல்லாரோட கண்ணும் அந்த பொண்ணு மேலதான். நல்ல வேலையா எங்க பள்ளி கூடத்துல பசங்களும் பொண்ணுங்களும் பேசிக்க கூடாதுன்னு ரூல் இருந்ததால அவ தப்பிச்சா" "புரியுது. ஈ மொய்க்காத பலா பழம் இருக்...

இங்கே கணவர்கள் விற்கப்படும்..!

ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது....அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க .. அது என்னன்னா...! 1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம். 2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும். ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது .. அப்டியே வெளிய தான் போக முடியும். இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா......கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது முதல் தளத்துல அறிக்கை பலகைல "முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " அப்டின்னு போட்டுருந்துச்சு இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நி...

மதுரனந்தபுரம் -- கி.பி.2212

நண்பன் கிருஷின் வற்புறுத்தலால் இந்தியா செல்லும் சுற்றுப் பயணத்திற்கு சம்மதித்தான் மூர் . அவர்களது குடும்பம் அமெரிக்காவில் குடியேறி நான்கைந்து தலைமுறைகளைக் கடந்துவிட்டது. தாத்தா என்றால் அத்தனை பிரியம் மூருக்கு. அவர் இறந்து பல வருடங்கள் கடந்துவிட்டாலும் , இப்போது இந்திய சுற்றுப் பயணத்திற்கு சம்மதித்தது கூட தாத்தா பாசத்தால் தான். ஒரு தடவையாவது இந்தியாவையும் குறிப்பாக தமிழகத்தையும் தனது மூதாதையர்கள் வாழ்ந்த ஊர்களையும் பார்க்கவேண்டும் என ஆசைப்பட்டார். அவரால் ஆசைதான் பட முடிந்ததே தவிர , அதை செயல்படுத்த முடியவில்லை. எனவே அவர் ஆசைப்பட்டு , செல்ல முடியாத ஒரு இடத்திற்கு தான் போகப் போகிறோம் என நினைத்து சந்தோஷப்பட்டான் மூர். பயணத்திற்குத் தேவையானவற்றை எடுத்துவைக்கும்போது தாத்தவுடைய " டூரிஸ்ட் ப்லேசஸ் இன் இண்டியா " புத்தகதையும் எடுத்துக் கொண்டான். லீவ் அப்ரூவாகி , டிக்கெட் புக் செய்து , ஒருவழியாக இந்தியா வந்தே விட்டார்கள் இருவரும். டெல்லி விமான நிலையத்தில் இறங்கிய அந்த நொடி தாத்தவைத்தான் நினைத்துக் கொண்டான் மூர். வடஇந்தியாவில் பல இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு டெ...

கண்ணம்மா !

“ தம்பி இதுல கண்ணம்மான்னு ஒரு பேரிருக்கும். எடுத்துக்குடு ” - அந்தப் பெரியவர் தன் சீட்டிலிருந்து என்னிடம் அவரது நோகியாவை நீட்டினார். நோகியா 1100. பலரது ஆல்டைம் ஃபேவரைட் மொபைல். பேருந்தில் ஏறும் வாசலை ஒட்டிய , இடதுபுற இரட்டை சீட்டில் நானும் உமாவும் அமர்ந்திருந்தோம். வலது புறம் அந்தப் பெரியவர் அமர்ந்திருந்தார். நான் கண்ணம்மாவைத் தேடினேன். மொபைலில். ம்ஹும். ‘K' வரிசையில் அப்படி ஒரு பெயரே இருக்கவில்லை. “ ஐயா.. அந்தப் பேரே இல்லீங்களே.. ” “ அடென்ன தம்பி.. உன்ரகூட ரோதனையாருக்கு. நமக்கு அதெல்லாம் பார்க்கத் தெரியாததாலதானே கேட்கறேன்.. ரெண்டு நாள் பேசலைன்னா நம்பர் அவிஞ்சு போயிருமா.... இல்லீன்ற ?” என்றார் கொஞ்சம் , கோபமும் கொஞ்சம் எரிச்சலும் கலந்த தொனியில். “ இல்லைங்கய்யா.. கே-ல கண்ணம்மாங்கற பேர் இல்லைங்க... ” “ அதெ எவன்கண்டான் கேயாவது ஏயாவது... நல்லாப் பார்த்து எடுத்துக்குடு.. வூட்டுல சமைக்கச் சொல்லோணும் ” என்றார். மணி இரவு ஒன்பதரை. கோவையிலிருந்து திருப்பூர் சென்று கொண்டிருந்தது பேருந்து. நான் மறுபடி தேடிவிட்டு “ இல்லைங்க... ” என்றேன். அவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு , ...

கன்னுகுட்டி காதல்!

எங்கோ ஆட்டோ சத்தம் கேட்டு கண் விழித்தேன். தலை விண்ணென்று வலித்தது. இரவு லேட்டாக தூங்கியதின் விளைவு. தலையை லேசாக திருப்பி, நைட் ஸ்டாண்டில் இருந்த செல்ஃபோனை எடுத்து மணி பார்த்தேன், காலை மணி 5.00. தலையணையை கட்டிலில் நேராக சாய்த்து அதில் தலை வைத்தபடி எழுந்து அமர்ந்தேன். அருகில் படுத்திருக்கும் வருண்.....அன்றைய குறும்பு காதலன் ,இன்றைய என் ஆசை கணவன் தூக்கத்தில் புரண்டு படுத்தார். தூங்கும் போது கூட, மீசையின் கீழ் அதே குறும்பு புன்னகை......'கனவில் ஜொள்ளு விட்டுகிட்டு இருப்பாரா இருக்கும், இல்லீனா தூங்கும்போது கூடவா உதடு சிரிச்சுட்டே இருக்கும்', மனம் பொறுமினாலும்.........என்னை மயக்கி கட்டி போடும் அந்த வசீகர புன்னகையிலிருந்து என் பார்வையை விளக்க மனமில்லை. வைத்தகண் வாங்காமல் அவரையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். நிச்சயம் இவரை பிரியத்தான் வேண்டுமா?? நாளையிலிருந்து காலையில் நான் எழுகையில் இந்த மந்திரப்புன்னகையை ரசிக்க முடியாதா? இருவரும் பரஸ்பரம் பேசி, சேர்ந்து எடுத்த முடிவுதானே..........பின் ஏன் பிரிவை நினைத்து மனம் இரகசியமாய் உள்ளுக்குள் அழுகிறது. மீண்டும் புரண்டு ப...

இது எப்படி இருக்கு....

ராமசாமியும் கிருஷ்ணசாமியும் நண்பர்கள். சிறு வயது முதலே இருவரும் கிரிக்கெட் விளையாடுவார்கள். இப்போது இருவருக்கும் எண்பது வயது. கிருஷ்ணசாமி படுத்த படுக்கையாக இருக்கிறார் என்று தெரிந்து அவரைப் பார்க்க வந்தார் ராமசாமி. நண்பரை சமாதானப் படுத்த எண்ணிய ராமசாமி, "கவலைப்படாதே கிருஷ்ணசாமி, உலகக் கோப்பை முடியறவரைக்கும் நீ சாகமாட்டே" என்றார். கிருஷ்ணசாமி சமாதானமாகவில்லை. "எனக்கு சாகறதைப் பத்திக் கூடக் கவலை இல்லைடா, என்னைப் பிரிஞ்சு நீ எப்படி வாழப் போறியோன்னு தான் கவலை" என்றார். ராமசாமி, "உண்மைதான்டா, சரி நீ ஒண்ணு மட்டும் செய், ஒரு வேளை இறந்து போயிட்டா மேல் உலகத்தில கிரிக்கெட் விளையாட முடியுமான்னு என் கனவில வந்து சொல்றியா?" என்று கேட்டார். "அதுக்கென்னடா, நிச்சயம் சொல்றேன்"னு சொல்லிட்டு கொஞ்ச நாளில் இறந்துவிட்டார். ஒரு நாள் இரவு, ராமசாமி தூங்கும்போது கனவில் கிருஷ்ணசாமி வந்தார். நண்பனைப்பார்த்து ஆனந்தமாகக் கேட்டார், "அந்த உலகத்தில ஏதாவது விசேஷம் உண்டா?" "உண்டு, ஒரு நல்ல செய்தி, கெட்ட செய்தி ரெண்டு இருக்கு, எதை முதல்ல சொல்லட...

எடுத்த காரியம் வெற்றிகரமாக முடிக்க ரஜினி சொல்லும் மந்திரம்..!

வாழ்க்கையில் வெற்றி பெறுவது முக்கியம் அல்ல. கிடைச்ச வெற்றியை , தொடர்ந்து தக்க வைக்க தெரிஞ்சு இருக்கணும். அதுக்கு குறுக்கு வழி வேலைக்கு ஆகாது. திறமை , நேர்மை ரெண்டும் வேணும். ரஜினிகாந்த் நமது சம கால சரித்திரம். அந்த மாமனிதரின் , இத்தகைய இமாலய வெற்றிக்கு, என்ன காரணம் என்பதை , நம் ஒவ்வொருவரும் தனித்தனியாக யோசனை செய்து பாருங்கள். அந்த பண்புகளை , முடிந்தவரையில் கடை பிடிக்க பாருங்கள் ! ஒரு சாதாரண மனிதரா இருந்தவருக்கு, வானத்தில இருந்து எந்த தேவதையும் ஆசீர்வாதம் கொடுத்திட்டு , ஒரே நாள்ல அவர் பெரிய ஆளா ஆகிடலை. இலக்கு, உழைப்பு, பணிவு , சக மனிதனை மதிக்க தெரிஞ்ச குணம் - இது எல்லாத்துக்கும் மேல , ஆண்டவனை பரிபூரணமா நம்பி , அவன் கிட்ட எல்லாத்தையுமே ஒப்படைச்சது... இப்படி...நெறைய.. எனக்கு தனிப்பட்ட முறையில பிடிச்ச விஷயம்.. " நல்லவன் மாதிரி நடிக்கிறது இல்லை, முடிஞ்ச அளவுக்கு நல்லவனா வாழ்ந்து காட்டும் குணம்."! இன்னைக்கு தமிழ் பேச தெரிஞ்ச , உலகத்தில் உள்ள அத்தனை உள்ளங்களும் நேசிக்கும் - ஒரு மகா மனிதன் , நிஜமாகவே காந்தம்..! சமீபத்துல நான் படிச்ச கட்டுரை ஒன்னு, நம்ம வாசகர்கள...

பரமார்த்த குரு கதை - பத்திரிகை

"குருநாதா! நாம் ஒரு ஓலைச் சுவடி பத்திரிகை ஆரம்பித்தால் என்ன?" என்று கேட்டான் முட்டாள். "பத்திரிகையா? அதனால் நமக்கு என்ன லாபம்?" என்றார் பரமார்த்தர். "தினம் தினம் நம்மைப் பற்றிப் புகழ்ந்து எழுதிக் கொள்ளலாம். நமக்குப் பிடிக்காதவர்களை விருப்பம் போல் திட்டலாம்" என்றான் மூடன். "அப்படியானால் நம் பத்திரிகைக்குத் 'தினப் புளுகு' என்று பெயர் வைக்கலாம்" என்றார் குரு. "பெயருக்குக் கீழே "கெட்டிக்காரன் புளுகு - எட்டு நாள் உண்மை!" என்று போடலாம்" என்றான் மண்டு. அன்று முதல் பரமார்த்தரின் மடம், பத்திரிகை அலுவலகம் ஆயிற்று. பரமார்த்தர், 'தினப் புளுகு' நாளிதழின் ஆசிரியராக பதவி ஏற்றுக் கொண்டார். மட்டியும், மடையனும் நிருபர்களாக நியமிக்கப்பட்டனர். இருட்டத் தொடங்கியதும், நிருபர்களான மட்டியும், மடையனும் வெளியே புறப்பட்டனர். அப்போது அந்த நாட்டு அரசன், நகர சோதனை செய்வதற்காக மாறு வேடத்தில் புறப்பட்டான். அதைக் கண்ட மட்டி, "அரசர் ஏன் மாறு வேடத்தில் போகிறார்?" என்று கேட்டான். "திருடுவதற்காக இருக்கும்" என்றான் ...

முட்டாள் சீடர்களும் பரமார்த்த குருவும் - நொண்டிக்குதிரை

பரமார்த்த குருவுக்கு ஒரு பணக்காரன் இலவசமாக ஒரு குதிரையைக் கொடுத்தான். அந்தக் குதிரையோ கிழடு தட்டிப் போயிருந்தது. ஒரு கண் நொள்ளை! ஒரு காது மூளி! முன் கால்களில் ஒன்று நொண்டி! பின் கால்கள் வீங்கிப் போய் இருந்தன. உடம்பு பூராவும் சொறிபிடித்து, பார்ப்பதற்கு அசிங்கமாக இருந்தது. இருந்தாலும், பரமார்த்தருக்கும் சீடர்களுக்கும் பரம சந்தோஷம். 'பணம் செலவு செய்யாமல் இலவசமாகக் கிடைத்ததே!' என்று நினைத்தனர். "குருவே! கடிவாளம் கட்டுவதற்கு வார் இல்லை. அதனால் வைக்கோல் பிரியைச் சுற்றி விடலாம்!" என்று அப்படியே செய்தான் மட்டி. குரு உட்காருவதற்காக, கிழிந்து போன பழைய கந்தல் கோணி ஒன்றைக் குதிரைமேல் போட்டான் மண்டு. எருக்கம் பூவைப் பறித்து மாலையாக்கி குதிரையின் கழுத்தில் அணிவித்தான், முட்டாள். இவர்கள் செய்வதைப் பார்ப்பதற்கு ஊரே கூடி விட்டது. குதிரைக்கு எல்லா அலங்காரமும் முடிந்தது. தொந்தியும், தொப்பையுமாய் இருக்கும் பரமார்த்தர், குதிரையின் மேல் பெருமையோடு ஏறி உட்கார்ந்தார். அவ்வளவுதான்! கனம் தாங்காமல் வலியால் குதிரை அலற ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாய் அப்படியே படுத்து விட்டது. "...

நாலணா நண்பேன்டா!

திடுதிப்புன்னு இப்படி பண்ணுவாங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கலை பாஸ்.. பொசுக்குன்னு இனிமே நாலணா செல்லாதுன்னுட்டாங்க.. நாலணா நம்ம வாழ்க்கைல எப்படி எல்லாம் விளையாடி இருக்கு. என்னமோ டிவி சீரியல்ல கால்ஷீட் சொதுப்புற நடிகைக்கு போட்டோ மாட்டி மாலை போட்டுவிடற மாதிரி, நாலணாவுக்கு கல்தா குடுத்துட்டாங்க. என்ன போங்கா இருக்கு பாருங்க.. ஸ்கூல் போகும்போது பாக்கெட் மணியா எப்பவாச்சும் 25 காசு குடுப்பாங்க. அந்த வயசுல பாக்கெட்ல அந்த நாலணா காயின் இருக்கும் போது ஒரு சந்தோஷம் பொங்கும் பாருங்க. இன்னிக்கு பாக்கெட்ல கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுன்னு நாலு கார்டு வெச்சிருந்தாலும் அந்த நாலணா காசுக்கு இதெல்லாம் ஈடாகாது பாஸ்! பத்து காசா இருந்தா அன்னிக்கே செலவாகிடும். நாலணாவா இருந்ததுன்னா அதை செலவு பண்ண 4 நாள் ஆகும். அதை எப்படி செலவு பண்ணினா அதிகபட்சமா அனுபவிக்க முடியும்னு பெரிய லெவல்ல திட்டம் போடணும். இண்டெர்வெல்ல ஸ்கூல் வாசல்ல இருக்க ஆயா கடைக்கு போனா, அங்கே செமத்தியான கும்பல் இருக்கும். கய்யாமுய்யான்னு பசங்க ஒரே சத்தம் போட்டுகிட்டு இருப்பாங்க. நெல்லிக்கா, கமர்கட், எலந்த பழம், கலாக்கா, மாங்கா பத்தை, பேரு தெரியாத...