Skip to main content

Posts

Showing posts from September, 2011

கோபம்

சில ஆண்டுகளுக்கு முன், சென்னையில் ஒருநாள் இரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்வதற்கு நான் வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். வரிசை மிக நீளமாக இருந்தது. இவ்வளவு கூட்டம் இருந்தும், ஒரே ஓர் அலுவலர் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தார். எப்படியும் நான் அந்த முன்பதிவு சன்னல் பக்கம் செல்ல இன்னும் அரை மணி நேரம் ஆகும் என்று தெரிந்தது. வேறு வழியின்றி, நான் கொண்டுவந்திருந்த புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அரைமணி நேரம் சென்றது. நான் பதிவு செய்யும் சன்னலை நெருங்கி விட்டேன். நான்தான் அடுத்தது. அந்த நேரம் பார்த்து, மற்றொரு அலுவலர் அடுத்த சன்னலைத் திறந்தார். எனக்குப் பின் வரிசையில் வெகு குறைந்த நேரமே நின்றுகொண்டிருந்த பலர் அந்தச் சன்னலுக்குச் சென்றனர். முன்பதிவை ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவர் எனக்கு முன் தன் வேலையை முடித்துவிட்டுப் போனார். அவர் என்னைப் பார்த்துச் சிரித்ததைப் போல் எனக்குத் தோன்றியது. எனக்குள் ஏகப்பட்ட எரிச்சல், கோபம். நான் அரைமணி நேரமாய் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், எனக்குப் பின் வந்தவர்கள் அவ்வளவு நேரம் வரிசையில் நிற்கவில்லையே என்ற எரிச்சல். வீட்டுக்குத் திரும்பியதும், ...

வாழ்க்கை வசப்படும்

சில பொழுதாவது சோகப்படு, ஆனந்தத்தின் அருமை புரியும். யாருக்காவது கண்ணீர் விடு, புன்னகையின் பெருமை புரியும். ஒருநாளாவது பணமில்லாமல் ஊர்சுற்று, வறுமையின் கொடுமை தெரியும். மாளிகைவிட்டு மண் குடிசைக்கு வா, அன்றாடங்காய்ச்சியின் அழுகுரல் புரியும். மொழிபுரியாத தேசத்திற்க்குச் செல், கல்வியின் அவசியம் தெரியும். அன்பிற்குரியவர்களிடமிருந்து விலகிப்பார், மரணத்தின் வேதனை புரியும். குற்றவாளிகளின் கதறலைக் கேள், முன்கோபத்தின் பின்விளைவு புரியும். காலைப்பத்திரிகை விற்பனை பின்தொடர், வாழ்க்கையின் வேகம்தெரியும். கடற்கரையில் குடிநீர் விற்பனைக் கேள், வாழ்க்கையின் தாகம் புரியும். உழைக்கும் சிறுவர்களை சற்றுப்பார், வாழ்க்கையின் அச்சம் தெரியும். உயர்ந்தவர்களின் வரலாறு படி,  வாழ்க்கையின் வலி புரியும். -- வலைபதிவிலிருந்து

பரமார்த்த குரு கதை - பத்திரிகை

"குருநாதா! நாம் ஒரு ஓலைச் சுவடி பத்திரிகை ஆரம்பித்தால் என்ன?" என்று கேட்டான் முட்டாள். "பத்திரிகையா? அதனால் நமக்கு என்ன லாபம்?" என்றார் பரமார்த்தர். "தினம் தினம் நம்மைப் பற்றிப் புகழ்ந்து எழுதிக் கொள்ளலாம். நமக்குப் பிடிக்காதவர்களை விருப்பம் போல் திட்டலாம்" என்றான் மூடன். "அப்படியானால் நம் பத்திரிகைக்குத் 'தினப் புளுகு' என்று பெயர் வைக்கலாம்" என்றார் குரு. "பெயருக்குக் கீழே "கெட்டிக்காரன் புளுகு - எட்டு நாள் உண்மை!" என்று போடலாம்" என்றான் மண்டு. அன்று முதல் பரமார்த்தரின் மடம், பத்திரிகை அலுவலகம் ஆயிற்று. பரமார்த்தர், 'தினப் புளுகு' நாளிதழின் ஆசிரியராக பதவி ஏற்றுக் கொண்டார். மட்டியும், மடையனும் நிருபர்களாக நியமிக்கப்பட்டனர். இருட்டத் தொடங்கியதும், நிருபர்களான மட்டியும், மடையனும் வெளியே புறப்பட்டனர். அப்போது அந்த நாட்டு அரசன், நகர சோதனை செய்வதற்காக மாறு வேடத்தில் புறப்பட்டான். அதைக் கண்ட மட்டி, "அரசர் ஏன் மாறு வேடத்தில் போகிறார்?" என்று கேட்டான். "திருடுவதற்காக இருக்கும்" என்றான் ...