Skip to main content

Posts

Showing posts with the label Good things

மனநிம்மதி தரும் துறவி கதை | Buddha Story

மனைவி அமைவதெல்லாம்!

திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒரு வித உற்சாகத்துடனும்,பரவசத்துடன ும் நாட்களை கடத்தினேன். கனவுகள் வராத நாள் கிடையாது. வரும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புகளும்,கற்பனைக ளும் சுவாரஸ்யத்தை கூட்டியது. நெறைய பாலகுமாரன் புத்தகங்களை சேமித்து வைத்து இருந்தேன் வருகிறவளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் ஒருவேளை அவளும் பாலகுமாரன் ரசிகையாக இருந்தா ... ல் ..? நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது. கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை எல்லாம் தூசு தட்டி எடுத்து பார்வையில் படும்படி வைத்தேன் . இளையராஜா பாடல்கள் தொகுப்புகளை வாங்கி வைத்தேன்.எஸ் .ஜானகி பாடல்களை தனியே பதிவு செய்து வைத்தேன்.கேரம் ,செஸ் போர்டு எல்லாம். இன்னும் பல விஷயங்கள் . ஒரு பெரிய கற்பனை கோட்டையில் வாழ துவங்கி இருந்தேன் . ஒரு சுபயோக சுபதினத்தில் திருமணம் இனிதே நடந்தது..! விருந்து முதற்கொண்ட சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தது. கீழ்க்கண்ட உரையாடல்கள் சில தினங்களில் சில தினங்கள் இடைவெளியில் நடந்தது. புத்தகம் எல்லாம் படிக்கும் பழக்கம் இருக்கா ? இல்லங்க நான் எந்த புக்கும் படிச்சது இல்ல..! எந்த புக்கும் படிச்சது இல்லையா ? ஆமாங்...

அன்புடன் மகேந்திரன் !!

அன்றாடத் தேவைகளின் முக்கியத்தை உணர்ந்து, அதை நிறைவேற்றியபடியே உனது அடுத்த இலக்குக்காக முயல்வதும்... உன்னை மேலும் மேலும் 'அப்டேட்' செய்துகொண்டு, வாழ்வைக் கவனித்து கவனித்து உனது கலை மனசைக் கூர்மைப்படுத்திக் கொள்வதும்தான் அதிமுக்கிய மாகப்படுகிறது. ஆனால், இவற்றைவிடவும் பெரிதான ஒன்று உண்டு. இந்தப் பாடத்தை எனக்குக் கற்றுத் தந்தவர் எனது மாமா. ஒருநாள் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். ஒரு சிறு பருக்கை கீழே சிதறிவிட்டது. அவர் புன்னகையோடு சொன்னார், ''இந்தப் பருக்கையோட நிலையைப் பாத்தியா... பாவம்!'' நான் வியப்பாக ''ஏன்?'' என்றேன். ''இந்தப் பருக்கை எத்தனை இடத்தில் தப்பிச்சிருக்கு. அறுவடையில, களத்து மேட்டுல, அரவை ஆலையில, கடையில, அரிசி களைகையில, சாதம் வடிக்கையில... அப்படின்னு எத்தனை இடங்கள்! எங்கேயும் தவறாம அதோட பயனுக்காக எவ்வளது தூரம் கடந்து வந்துச்சு. இப்பப் பாரு... சாதமா மாறி உன் கைக்கு வந்து, கடைசி நொடியில் தவறி விழுந்துடுச்சே... எவ்வளவு பாவம் அது!'' நான் அதிர்ந்து, அப்படியே சிலையாக நின்றுவிட்டேன். எவ்வளவு எளிமையான மனிதரி டம் இருந்து எவ்வ...

அப்பா :)

4 வயதில்--"எங்கப்பா போல ஒரு ஆளைப் பார்க்கவே முடியாது." 6---"அவருக்கு எல்லா விஷயமும் அத்துபடி" 10---"தங்கமானவர்.ஆனால் பொசுக் பொசுக்கு கோபம் வந்திடும். மிட்டாய் தின்னதுக்காக என்னை அடிச்சிட்டாரு." 12---"நான் சின்னப்பிள்ளையா இருந்தபோது, என்னை நல்லா கவனிச்சிக்கிட்டாரு 14--"அவருக்கு சீக்கிரம் திருப்தியே வராது,நாப்பது மார்க் எடுத்தால் அய்ம்பது எடுக்கணும்பாரு.99மார்க் எடுத்தாகூட--ஒரு மார்க்கை ஏன் கோட்டை விட்டே'ம்பாரு' 16---என்னைச் சுத்தி என்ன நடக்கிதுங்கிரதை புரிஞ்சிக்கவே மாட்டேன் என்கிறாரு. பழங்காலத்து மனுஷனாவே இருக்காரு." 18---"எடுத்தேன் கவிழ்த்தேன்னுதான் எல்லா நடவடிக்கையும்." 20---"அப்பப்பா,அந்த மனுஷனை புரிஞ்சுக்கவே முடியல. அம்மா எப்படிதான் காலம் தள்ளறாங்களோ?" 25---"எது கேட்டாலிம் 'கிடையாது','இல்லை','கூடாது'ங்கிற பேச்சுதான். இவரெல்லாம் ஒரு மனுஷனா?" 30--என் பையனை சமாளிக்கிறது கஷ்டமா இருக்கு. என்னை எங்கப்பா எப்படித்தான் சமாளிச்சாரோ?" 40--"என்னை எங்கப்பா எவ்வளவு ஒழுக்கத்தோட, ...

காமராஜர் - The King Maker

மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற 'கே.பிளான்' போட்டுக் கொடுத்த இவரே முதல் ஆளாகப் பதவி விலகினார். 'எனக்கு எந்தப் பற்றும் இல்லைன்னு காட்டினாதான் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண முடியும்' என்றார்! ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசுவார். பத்திரிகையாளர் சாவி ஒருமுறை சந்திக்கச் சென்றபோது ஜான் கன்டர் எழுதிய இன்சைட் ஆப்பிரிக்கா என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்தாராம்! அவரளவுக்குச் சுருக்கமாக யாராலும் பேச முடியாது. உ.பி-யில் ஒரு பிரஸ்மீட். 50 கேள்விகளுக்கு ஏழு நிமிடத்தில் பதில் சொன்னாராம். இரண்டரை மணி நேரத்தில் எட்டு ஊர்களில் கூட்டம் பேசியிருக்கிறார். இசை விழாவைத் தொடக்கிவைக்க அழைத்தார்கள். 'இசை விழாவைத் தொடக்கிவைப்பதில் பெருமைப்படுகிறேன்' என்று மட்டுமே சொல்லி விட்டு இறங்கினார்! நாற்காலியில் உட்காருவது அவருக்குப் பிடிக்காது. சோபாவில் இரண்டு பக்கமும் தனது நீளமான கைகளை விரித்தபடி உட்காரவே விரும்புவார். முதல்வராக இருந்தபோதும் தலைமைச் செயலகத்தில் பிரத்யேகமாக சோபா வைத்திருந்தார்...

எடுத்த காரியம் வெற்றிகரமாக முடிக்க ரஜினி சொல்லும் மந்திரம்..!

வாழ்க்கையில் வெற்றி பெறுவது முக்கியம் அல்ல. கிடைச்ச வெற்றியை , தொடர்ந்து தக்க வைக்க தெரிஞ்சு இருக்கணும். அதுக்கு குறுக்கு வழி வேலைக்கு ஆகாது. திறமை , நேர்மை ரெண்டும் வேணும். ரஜினிகாந்த் நமது சம கால சரித்திரம். அந்த மாமனிதரின் , இத்தகைய இமாலய வெற்றிக்கு, என்ன காரணம் என்பதை , நம் ஒவ்வொருவரும் தனித்தனியாக யோசனை செய்து பாருங்கள். அந்த பண்புகளை , முடிந்தவரையில் கடை பிடிக்க பாருங்கள் ! ஒரு சாதாரண மனிதரா இருந்தவருக்கு, வானத்தில இருந்து எந்த தேவதையும் ஆசீர்வாதம் கொடுத்திட்டு , ஒரே நாள்ல அவர் பெரிய ஆளா ஆகிடலை. இலக்கு, உழைப்பு, பணிவு , சக மனிதனை மதிக்க தெரிஞ்ச குணம் - இது எல்லாத்துக்கும் மேல , ஆண்டவனை பரிபூரணமா நம்பி , அவன் கிட்ட எல்லாத்தையுமே ஒப்படைச்சது... இப்படி...நெறைய.. எனக்கு தனிப்பட்ட முறையில பிடிச்ச விஷயம்.. " நல்லவன் மாதிரி நடிக்கிறது இல்லை, முடிஞ்ச அளவுக்கு நல்லவனா வாழ்ந்து காட்டும் குணம்."! இன்னைக்கு தமிழ் பேச தெரிஞ்ச , உலகத்தில் உள்ள அத்தனை உள்ளங்களும் நேசிக்கும் - ஒரு மகா மனிதன் , நிஜமாகவே காந்தம்..! சமீபத்துல நான் படிச்ச கட்டுரை ஒன்னு, நம்ம வாசகர்கள...

கோபம்

சில ஆண்டுகளுக்கு முன், சென்னையில் ஒருநாள் இரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்வதற்கு நான் வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். வரிசை மிக நீளமாக இருந்தது. இவ்வளவு கூட்டம் இருந்தும், ஒரே ஓர் அலுவலர் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தார். எப்படியும் நான் அந்த முன்பதிவு சன்னல் பக்கம் செல்ல இன்னும் அரை மணி நேரம் ஆகும் என்று தெரிந்தது. வேறு வழியின்றி, நான் கொண்டுவந்திருந்த புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அரைமணி நேரம் சென்றது. நான் பதிவு செய்யும் சன்னலை நெருங்கி விட்டேன். நான்தான் அடுத்தது. அந்த நேரம் பார்த்து, மற்றொரு அலுவலர் அடுத்த சன்னலைத் திறந்தார். எனக்குப் பின் வரிசையில் வெகு குறைந்த நேரமே நின்றுகொண்டிருந்த பலர் அந்தச் சன்னலுக்குச் சென்றனர். முன்பதிவை ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவர் எனக்கு முன் தன் வேலையை முடித்துவிட்டுப் போனார். அவர் என்னைப் பார்த்துச் சிரித்ததைப் போல் எனக்குத் தோன்றியது. எனக்குள் ஏகப்பட்ட எரிச்சல், கோபம். நான் அரைமணி நேரமாய் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், எனக்குப் பின் வந்தவர்கள் அவ்வளவு நேரம் வரிசையில் நிற்கவில்லையே என்ற எரிச்சல். வீட்டுக்குத் திரும்பியதும், ...

வாழ்க்கை வசப்படும்

சில பொழுதாவது சோகப்படு, ஆனந்தத்தின் அருமை புரியும். யாருக்காவது கண்ணீர் விடு, புன்னகையின் பெருமை புரியும். ஒருநாளாவது பணமில்லாமல் ஊர்சுற்று, வறுமையின் கொடுமை தெரியும். மாளிகைவிட்டு மண் குடிசைக்கு வா, அன்றாடங்காய்ச்சியின் அழுகுரல் புரியும். மொழிபுரியாத தேசத்திற்க்குச் செல், கல்வியின் அவசியம் தெரியும். அன்பிற்குரியவர்களிடமிருந்து விலகிப்பார், மரணத்தின் வேதனை புரியும். குற்றவாளிகளின் கதறலைக் கேள், முன்கோபத்தின் பின்விளைவு புரியும். காலைப்பத்திரிகை விற்பனை பின்தொடர், வாழ்க்கையின் வேகம்தெரியும். கடற்கரையில் குடிநீர் விற்பனைக் கேள், வாழ்க்கையின் தாகம் புரியும். உழைக்கும் சிறுவர்களை சற்றுப்பார், வாழ்க்கையின் அச்சம் தெரியும். உயர்ந்தவர்களின் வரலாறு படி,  வாழ்க்கையின் வலி புரியும். -- வலைபதிவிலிருந்து

பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...?

மூன்று மதத் துறவிகளும் கடவுள் மறுப்பாளரும் சந்தித்துக் கொண்ட ஒரு அற்புத நிகழ்வு அது. அவரவர் மதத்தின் மீது அவரவருக்கு எவ்வளவு பற்று இருக்கிறது என்பதைப் பரிசோதிக்க நினைத்த ஒருவர், அந்தத் துறவிகள் ஒவ்வொருவரிடமும் ஒரு கேள்வி கேட்க விரும்பினார். துறவிகளின் அனுமதி கிடைத்ததும் அவர் மூன்று மதத் துறவிகளிடமும் ஒரே கேள்வியைத்தான் கேட்டார். "உங்களை யாருமில்லாத தனித்தீவில் விட்டுவிடுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது உங்க்ளுடன் ஒரே ஒரு புத்தகத்தை எடுத்துச் செல்லலாம் என்று அனுமதித்தால், நீங்கள் எந்தப் புத்தகத்தை உங்களுடன் எடுத்துச் செல்லுவீர்கள்...?". கேள்வியைக் கேட்டதும் அந்தக் கிறிஸ்துவத் துறவி சொன்னார். "நான் என்னுடன் எப்போதும் பைபிள் இருப்பதையே விரும்புவேன். அதனால், நான் பைபிளைத்தான் எடுத்துச் செல்வேன்..!". முகம்மதியரான அந்தத் துறவி மிகுந்த பெருமையுடன் சொன்னார். "என் உயிரினும் மேலான எங்கள் திருமறையான குர்-ஆன் ஒன்றே, நான் என்னுடன் எடுத்துச் செல்லும் புத்தகமாய் இருக்கும்..!". இந்துத் துறவியோ,"கீதை தவிர உயர்ந்தது எதுவும் உண்டோ. அதுவே நான் எடு...

பழையகதை, புதிய கருத்து

நமக்கு எல்லாருக்கும் தெரிந்திருக்கும் ஒரு பழைய கதைக்குள் இருக்கும் புதிய கருத்தைப் பற்றி பார்ப்போம். முயலுக்கும், ஆமைக்கும் நடந்த ஓட்டப்பந்தயக் கதை நாம் அறிந்ததுதான். முயலுக்கும் ஆமைக்கும் இடையே ஓட்டப்பந்தயத்தில் யார் முதலில் வருவார்கள் என்று வாக்குவாதம் நடந்தது. ஓட்டப்பந்தயம் வைப்பது என்று முடிவானது. ஓட்டப்பந்தயம் தொடங்கிய அடுத்த சில நிமிடங்களில் முயல் ஓட்டப்பந்தய எல்லைக்குப் பக்கத்தில் இருந்தது. நாம் சிறிது நேரம் தூங்கினாலும் கூட. சுலபமாக இலக்கை அடைந்து வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்து சிறிது நேரம் கண் அயர்ந்தது. நன்றாக உறங்கியும் விட்டது. மெல்ல நடந்து முன்னேறிய ஆமை இலக்கை அடைநது வெற்றி பெற்றது. இதில் இருந்து நாம் கற்றுக்கொண்டது என்ன? நிதானமாக செயல்பட்டால், வெற்றி இலக்கை முதலாவதாக அடையலாம் என்பதுதான் நாம் அறிந்து கொண்டது. மேல் கூறிய கதையைத்தான், ஆண்டாண்டு காலமாக நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதற்குப் பிறகு என்ன நடந்தது என்று பார்ப்போம். உறங்கிக் கண் விழித்த முயல் மிகவும் வேதனை அடைந்தது. ஏன் தான் தோல்வி அடைந்தோம் என்று ஆராய்ந்தது. தான் மிகவும் மெத்தன...

நாம் நாமாக இருப்போம்..

நம்மில் பலருக்கு வாழ்நாள் முழுவதும் ஒரு கவலை இருந்து கொண்டேதான் இருக்கிறது. அவர் எவ்வளவு செழிப்பாக வாழ்கிறார். அவரைப் போல நாம் இல்லையே என்று பிறரைப் பார்த்து கவலைப்படும் மனோபாவம். பணக்காரனை பார்த்து ஏழை இப்படி நினைக்கிறான். பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பவன் பிரச்சினைகள் ஏதுமின்றி மகிழ்ச்சியாய் உள்ளவனைப் பார்த்து கவலைப்படுகிறான். ஆரோக்கியமானவனைப் பார்த்து உடல் நலம் குன்றியவன் அவனைப் போல் நாம் ஆரோக்கியமாக இல்லையே என்று கவலைப்படுகிறான். கருப்பாக இருப்பவன் சிவப்பாய் இருப்பவனைப் பார்த்து நாம் அவரைப் போல சிவப்பாக இல்லையே என்று கவலைப்படுகிறான். ஒரு நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரன் முதல் பணக்காரனைப் பார்த்து அவனைப் போல நாம் இல்லையே என்று கவலை கொள்ளுகிறான். அவனுக்கு எல்லா வசதிகளும் இருக்கின்றன. அவன் நினைத்தால் பணத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். ஆனாலும் அவனுக்கும் ஒரு கவலை இருக்கத்தான் செய்கிறது. ஒரு நாட்டின் முதல் பணக்காரனோ உலகத்தின் முதல் பணக்காரனைப் பார்த்து கவலைப்படுகிறான். அவனைப் போல நாம் இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறான். உலகின் முதல் பணக்க...

Stop Stressing... Start Living...

"Give your Stress wings and let it fly away"   stress ('stres) bodily or mental tension resulting from factors that tend to alter an existent equilibrium   "Stress is not what happens to us. It's our response TO what happens. And RESPONSE is something we can choose" Stress is our natural way of responding to the demands of our ever-changing world. Although we all experience change and demands regularly, the way that we interpret these internal and external changes directly affects the degree to which we feel stress. As a result, not all individuals interpret the same events as stressful; what may seem stressful to you may not be the same for your best friend, and vice versa.   "Pressure and stress is the common cold of the psyche " Although some stress is a natural and inevitable part of our lives, feeling burdened or unable to cope can be problematic and can seriously affect your mental and physical well-being. Constantly being exposed to...

ஆசை...

ஒருவன் பாறைகளிலிருந்து கல்லுடைக்கும் வேலையைச் செய்து வந்தான். கடுமையான வேலை, குறைவான கூலி. அதனால் அவன் வேலையின் மீது அதிருப்தி கொண்டான். அவன் ஒரு நாள் தெய்வமே நான் உன்னை தினமும் வணங்குகிறேன், நீ என்னை பணக்காரனாக்கக் கூடாதா? என்னை பட்டு மெத்தையில் படுக்க வைக்கக் கூடாதா? என்று பிரார்த்தித்தான். தெய்வம் அவன் முன் தோன்றி "நீ விரும்பிய வண்ணமே ஆவாய்" என்று வரம் கொடுத்தது. அவன் பணக்காரனாகி விட்டான். பட்டு மெத்தையில் படுத்திருந்தான். ஒரு நாள் அந்த நாட்டு அரசன் அவன் மாளிகை வழியாக அழகிய தேரில் முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் சென்றான். அதைப் பார்த்ததும் அவனுக்கு அரசனைப் போல் இருக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. தெய்வமே என்னை அரசனாக்கக் கூடாதா? என்று வேண்டினான். தெய்வமும் "அப்படியே ஆவாய்" என்றது. அவன் அரசனாகி விட்டான். முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் தேரில் ஊர்வலம் போனான். அப்போது கடுமையான வெயிலடித்தது. அவன் வெயிலின் கொடுமையால் வெந்து புழுங்கினான். அவன் "தெய்வமே அரசனை விட சூரியனே அதிக சக்தி படைத்ததாகத் தெரிகிறது. எனவே நீ என்னை சூரியனாக்கி வி...

All Habits Are Impossible To Break If You Do This

“There is nothing wrong with change, if it is in the right direction.” ~ Winston Churchill When was the last time you changed things in your world? Taking the time to evaluate where you are in the hustle and bustle of life can help you gain the perspective you need to make the small adjustments that will improve your quality of life and enhance your confidence. When you make a plan and set a goal for 30 days, you will be manufacturing a means to find a much more capable, confident you by the end of the month. 1. Choose a hobby. There is no shortage of hobbies to choose from. Rock climbing, jogging, pottery, cooking, photography. Any activity that engages your mind and holds your attention is well worth your minutes. Hobbies are an investment of time and usually require a certain skill. Take an inventory of your interests, then research your choice and socialize with people that have the same interests. With passion and a desire to enjoy something new, you’ll be well on y...