Skip to main content

Posts

Showing posts from May, 2011

விழி ஈர்ப்பு விசை தொகுப்பிலிருந்து...

சற்று முன் நீ கடந்து போன தடயம் எதுவுமின்றி அமைதியாய் கிடக்கிறது வீதி. எனினும் அதிவேக ரயுலோன்று கடந்து போன தண்டவாளம் போல இன்னும் அதிர்கிறது என் இதயம். -- தபு ஷங்கர்

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்?

ஒரு ஞானியை அணுகிய சீடன்,காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான். `   அதற்கு அந்த ஞானி, ''அது இருக்கட்டும்.முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது. ''என்றார்.கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, ''எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? ''என்று கேட்டார். சீடன் சொன்னான், 'குருவே,வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது.அதை விட உயரமான செடி இருக்கக் கூடும்என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது. `   ' புன்முறுவலோடு ஞானி சொன்னார்,''இது தான் காதல்.'' `   பின்னர் ஞானி,'...