******* எல்லாவற்றிலும் எனக்குப் பிடித்ததையே நீ தேர்ந்தெடுத்தாய் உனக்குப் பிடித்ததையே நான் தேர்ந்தெடுத்தேன் அதனால்தான் நட்பு நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறது ******* கடற்கரையின் முகம் தெரியாத இரவில் பேசிக் கொண்டிருந்த நம்மை நண்பர்களாகவே உணரும் பாக்கியம் எத்தனைக் கண்களுக்கு வாய்த்திருக்கும் ******** உனக்கு மடல் எழுத உட்காருகிற போது மட்டும்தான் அப்புறம் எழுதிக் கொள்ளலாம் என்பதற்கான அர்த்தமற்ற காரணங்கள் மிக எளிதாய் எனக்குக் கிடைத்து விடுகின்றன ********* போக்குவரத்து அதிகமுள்ள அந்தச் சாலையோரத்தில் நாம் பேசிக்கொண்டிருந்த பொழுது எத்தனை முறை காதுகளுக்குத் திரும்பினோம் என்று சொல்லிவிட முடியுமா உன்னால். *********** பேருந்து நிறுத்தத்திற்குச் சற்றுத் தள்ளிநின்று பேசுகிறவர்கள் காதலர்கள் நிறுத்தத்திலேயே நின்று பேசுகிறவர்கள் நண்பர்கள் *********** போகிற இடத்தில் என்னை விட அழகாய் அறிவாய் ஒருவன் இருந்து விடுவானோ என்கிற பயம் நல்லவேளை நட்பிற்கு இல்லை *********** -- கவிஞர் அறிவுமதி
நான் படித்த கவிதைகள் கதைகள் கட்டுரைகள் பிடித்த ஒரு தொகுப்பு..!!