Monday, April 25, 2011

தேவதையை கண்ட நாள்

முதன் முதலில் உன்னை சந்தித்த
அந்த நாளை நினைக்கையில்
என் பழைய நினைவுகள்
இப்பவும் புத்தம் புதிதாய்

உன்னை காணும் முன்
வழியெல்லாம் கற்பனைகள்
ஆயிரமாயிரம் ஆசைகள்- நீ
அறிந்திட வாய்ப்பில்லையடி

உன்னை பார்த்த பின்பும்
அறியாதவன் போலிருந்த- என்னை
எப்படியடி அடையாளம் கண்டாய்
நான் தான் உன்னவனென்று

நீ அழைத்த பின் பக்கம் வந்து
திருட்டு முழி விழித்து –உன்
அழகை ரசித்ததாலே
பசித்த வயிறும் பசி மறந்து போனதடி

தெற்றுப்பல் தெரிய செவ்விதழில்
நீ சிரிக்கையில் – என்
எண்ணங்கள் விண்ணில் மறைந்ததை
நீ எப்படியடி அறிவாய்

மறந்திடமாட்டிகளே என்று
வழியனுப்பிய போது
எனக்குள் உன்மீது கோபம்தான்
எப்படியடி உன்னால் கேட்க முடிந்தது

திரும்பும் வழியெல்லாம்
உன் நினைவுகள்
என் நினைவுகளை மட்டுமல்ல – என்
உயிரையும் உன்னிடம் தான் விட்டு வந்தேன்

இடையறா வேளைப்பளுவின்
இருக்கத்தை தளர்த்த கூட- உன்
உருவத்தின் பிம்பம் தேவையென்பதை
நீ எப்படியடி மறந்து போனாய்!

-- ஞானசேகர்



No comments:

Post a Comment

You may also like