Thursday, June 16, 2011

அழுக்கு பெண்ணை வர்ணிக்கும் வைரமுத்து!


கம்பி மாத்தாப்பு கண்ணு கண்ணு
வண்ண மாத்தாப்பு பொண்ணு பொண்ணு
தூரத்தில் பார்த்தா காதல் வராது
பக்கத்துலே பார்த்தா காமம் வராது
மானும் இல்ல மயிலும் இல்ல தூணும் இல்ல குயிலும் இல்ல
இருந்தும் மனசு விழுந்து போச்சுதோ

அவ மூக்கு மேலே வியர்வை ஆகணும்
இல்ல நாக்கு மேலே வார்த்தை ஆகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போத்தி படுக்கும் போர்வை ஆகணும்

அழுக்கு துணியை உடுத்தி அவ தடுக்கி நடக்கும் போதும்
சுளுக்கு பிடிச்ச மனது அட சொக்குது சொக்குதுடா
சுத்தமான தெருவில் அவ துப்பி செல்லும் போதும்
எச்சில் விழுந்த இடத்தில் மனது நிக்குது நிக்குதுடா

அவ தூங்கி எழுந்தா பிள்ளை அழகு
அவ சோம்பல் முறிச்சா கொள்ளை அழகு
அவ சொல்லுக்கு அடங்கா முடியும்
சூடிக்க சங்கிய மலரும்
என்னை இழுக்கும் கண்ணை மயக்கும்
தெத்துப்பல்லு கண்டு பித்து பிடிக்கும்

விளக்குமாறு பிடிச்சு அவ வீதி பெருக்கும் போது
வளவு நெளிவு பாத்து மனம் வழுக்க பாக்குதுடா
குளிச்சு முடிச்சு வெளியில் அவ கூந்தல் துவட்டும் போது
தெளிச்சு விழுந்த துளியில் மனம் தெறிச்சு போகுதுடா

அவ வளவி ஒலிக்கும் வாசல் அழகு
அவ கொலுசு ஒலிக்கும் வீதி அழகு
ஒரு விக்கல் எடுக்குற போதும் தும்மி முடிக்குற போதும்
அவஸ்தையிலும் அவள் அழகு
குற்றம் குறையிலும் மத்த அழகு

                                                       - கவிப்பேரரசு வைரமுத்து, விகடனிலிருந்து!!

Wednesday, June 8, 2011

வெட்கத்தை அடை காப்பவள் - காதலி அப்டேட்ஸ்

உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்று கேட்டால் எனக்கு சாக்லேட் பிடிக்கும், தனிமை பிடிக்கும், மழை பிடிக்கும் , என் குடும்பம் பிடிக்கும் , சாய்பாபா பிடிக்கும், இயற்கையை ரசிக்க பிடிக்கும் , எங்க வீட்டு மொட்ட மாடி பிடிக்கும், பக்கத்து வீட்ல இருக்கும் குட்டி குட்டி பசங்க பிடிக்கும்ன்னு நிறைய பிடிக்கும் சொன்னாயே தினமும் உனக்கு ஐஸ்கிரீம் சாக்லேட் வாங்கித்தர்றேனே என்னைப்பிடிக்காதா என்று கேட்டால் ''நீ தான் என்னைபிடிச்சிருக்கியேன்னு'' ஹி ஹின்னு நக்கலா சொல்றாப்பா...!!!

அன்னிக்கு ஒரு நாள் உன்னுடைய மீசை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னாயே எங்கே மீசையைப்பற்றி ஒரு கவிதை சொல்லு பார்ப்போம்ன்னா, ''என் முகத்தாளில் அன்போவியம் வரையும் தூரிகைன்னு'' சொல்லிட்டா, நான் கேட்டேன் அய்யய்யோ அப்போ கருப்பா இருக்குற என் மீசையை கலராக்கிடுவியான்னு, அட லூசே இதெல்லாம் ஒரு மீசைன்னு சொல்லி கவிதை சொன்னா கிண்டல் பண்றியான்னு சொல்லி மீசைய பிடிச்சு இழுத்திட்டா, படு பாவி வலிக்குதுடி இதுக்கெல்லாம் வட்டியும் முதலுமா மீசைய வச்சே உனக்கு ஊசி போடறேன் இருன்னா வவ்வவ்வேன்னு வக்கனை காட்டறாங்க...!

வெட்கப்பட்டிருக்கியான்னு ஒரு நாள் கேட்டேங்க அவகிட்ட , வெட்கப்பட்டிருக்கேன் ஆனா ஆம்பிளைப்பசங்கள பார்த்து வெட்கப்பட்டதே இல்லைன்னா ஏன்னு கேட்டா இது வரைக்கும் அவ மனசுக்கு பிடிச்ச யாரையுமே பார்க்கலைன்னா, ''ஏன் வெட்கத்தையெல்லாம் அடை காத்து வெட்ககுஞ்சு பொறிக்கப்போறியா'' ன்னு கேட்டதும் ஆமான்னு சொல்லிட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறா அப்போதாங்க கவனிச்சேன் எப்போவும் வெளீர்ன்னு இருக்கிற அவ முகம் அன்னிக்கு சிகப்பாகிருந்திச்சு...! ஹைய்யா முதல் வெட்ககுஞ்சு பொறிச்சிடுச்சேன்னு மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டேனுங்க...!!!

ஒரு நாள் என் ரூமுக்கு என்னைப்பார்க்க வந்தவளை கொஞ்சம் இங்கேயே உட்கார்ந்திருன்னு நான் குளிச்சிட்டு வந்திடறேன்னு அவளை ஹால்ல விட்டுட்டு நான் பாத்ரூம் போயிட்டேனுங்க உள்ள போனதுக்கப்பறம் வெளில இருந்து அவ யார் கூடவோ பேசிட்டு இருந்தது கேட்டுச்சு என்ன பேசுறான்னு ஒட்டுக்கேட்டா ''என்ன திமிர் இருந்தா எனக்கு முன்னாடியே அவனுக்கு நீ கிஸ் குடுப்ப இந்தப்பக்கம் உன்னை இனி பார்த்தேன் பிஞ்சிம்ன்னு'' சொன்னது தெளிவா கேட்டுச்சு , ஹைய்யய்யோ நான் யாரையும் தொட்டு கூட பார்த்ததில்லையே இவ என்னடான்னா கிஸ்ஸடிச்சேன்னு சொல்றாளேன்னு பதறிப்போய் வெளில வந்து பார்த்தா வில்ஸ் பாக்கெட்டை எடுத்து அதுல இருக்குற சிகரெட்டெல்லாம் நச்சு நச்சுன்னு பிச்சு போட்ருக்கா...!!!

''அப்பாகிட்ட சம்மதம் வாங்கிட்டியா''ன்னு மெதுவாத்தாங்க கேட்டேன் ஹேய் லூசே அதுக்குள்ள என்ன நம்ம கல்யாணத்துக்கு அவசரம் இப்போன்னு கேட்டாள், அட லூசே நேத்து உனக்கு நல்ல கம்பெனியில வேலை கிடைச்சிருக்குன்னும் உன்னோட அப்பா அந்த வேலைக்கு போக விடமாட்டேங்கிறார் அப்படின்னு சொன்னியே ஞாபகம் இருக்கா? அந்த வேலைக்கு போகத்தான் அப்பாகிட்ட சம்மதம் வாங்கிட்டியான்னு கேட்டேன்.பின்ன உன்னையெல்லாம் எவன் கட்டிக்குவான் எனக்கு ராத்திரி கனவுல ஒருத்தி வருவான்னு சொல்லியிருக்கேனே அவளையே கட்டிக்குவேன்னதும், மகனே உனக்கு நிஜத்துல மட்டுமில்ல கனவுலயும் நான் மட்டும்தான் மனைவியா இருக்கணும்ன்னு மீறி யாராவது வந்த மாதிரி தெரிஞ்சதுன்னு சொல்லி ஓங்கி வயித்துல ஒரு குத்து விட்டுட்டாங்க ... !!  அய்யோ அம்மா கொலை பண்றா!!!

என்னடி இன்னிக்கு ரொம்ப லேட்டுன்னு கேட்டா வீட்ல நிறைய வேலை இன்னிக்கு துணி துவைச்சு அதை காயப்போட்டு மடிச்சு வச்சி, வீடு கிளீன் பண்ணி,குளிச்சிட்டு, சாமி கும்பிட்டு விளக்கேத்தி வச்சிட்டு வந்தேன் அதான் லேட்டாகிடுச்சுன்னு சொன்னா நான் சொன்னேன் உனக்குத்தான் வீட்டு வேலையெல்லாம் தெரியுதே யாரையாவது இளிச்ச வாயன சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்கலாம்லன்னு , அவ சொல்றா எனக்கு இனிமேல் உன்னை மாதிரி ஒரு நல்ல இளிச்சவாயன் கிடைக்கமாட்டான்னு ... !!!

ஒகே ஜூட்ட் ...

-- ப்ரியமுடன் வசந்த்

Thursday, June 2, 2011

நச்சுனு! 101 ஒரு காரணங்கள் - நான் ஏன் உன்னை காதலிக்க வேண்டும்!

  1. நான் தொடங்கிய வார்த்தைகளை என்னை விட அழகாகவே முடிக்கிறாய்!! முந்திக்கொள்பவன் நான் என்றால் முற்றுப்புள்ளி நீயாகஇருக்கிறாய்!                                                                                                                                  
  2. என் அன்பு பேசும் மொழிகளை என்னோடு பகிர்ந்து கொள்கிறாய்! பின் நீ, நான் என்னும் ஒருமை ,பன்மையாகிப் போகிறது !
  3. மற்றவர்களிடம்.., ஏன் உன்னிடமே நீ என்னை விட்டுக்கொடுப்பதில்லை!  நானென்றால் உனக்கு அவ்வளவு பிரியம்! 
  4. உன்னையும் நான் எங்குமே விட்டுகொடுக்காமல் பேசும் என் உள்ளுணர்வு பிடித்திருக்கிறது !
  5. ஆயிரம் வாட்ஸ் ஓரவிழிப் பார்வையில் அசராமல் என்னை சாய்க்கும் உன் பார்வை!
  6. மைவிழிக் குடைக்குக்கீழ்  மலர்ந்திருக்கிற நிலவு (கண்கள்)! கண்ணிமைக்காமல் கனம்ஒன்றும் அதை பார்க்கப் பிடிக்கும்!
  7. நீயும் உன் நினைவுகளும் இல்லாத நாட்களில் என் உயிர்போன இதயத்தின் "இல்லாத துடிப்புகள்" பிடித்திருக்கிறது !
  8. என் வழியில் நானுனை கூட்டிச்செல்லும் போது எங்கோ நீ தொலைந்து விடுகிறாய் ! எனக்கும் பாதை மறந்து விடுகிறதே! உன்னைத் தேடும் தேடல் பிடிக்கும்!
  9. மாலைநேரக் கடற்கரை மணலில் நானும் என் நிலவும் சேர்ந்து ரசிக்கிற சூரிய அஸ்தமனம் ! கோடி கொடுத்தாலும் கொஞ்சம் கூட வேறெங்கும் கிடைக்காத சுகம் அது !
  10. நிலாக்குளிர் நீளும் வரை நீளும் நம் கைப்பேசி உரையாடல்கள், விடிந்த போதும் விடாமல் தொடரும் அழகு பிடிக்கும்!
  11. என் இன்பதுன்பங்கள் யாவும் உன் தோள்களில் மட்டுமே பாரமாக வேண்டும் என்ற உன் கோரிக்கை! பிடித்திருந்தது    !
  12. என் வாழ்கை துணைக்கான தேடல் பட்டியலில் எல்லா இடங்களையும் நீயே ஆக்கிரமித்த உரிமை! பிடிக்கும்!
  13. உன்னோடு நானும் என்னோடு நீயும் இருக்கும் போது ! நம்மோடு நாம் என்று மாறிவிடுகிறோம் நாம்! அது பிடிக்கும்!
  14. நான் உன்னைப்போல அழகில்லையேடி! ஏன் என்னை போய் தேர்ந்தெடுத்தாய் என்று நான் கேட்ட போது ! நான் உன்னோடு இருந்தால் நீ என்னை விட அழகு என்றாய்! கிறுக்கி ! அந்த நிமிஷத்தை நான் எப்படி மறக்க முடியும் ?
  15. நிலவிற்கு சிரிக்கத் தெரிந்தால் அது கண்டிப்பாய் உன்னை போலத்தான் சிரித்திருக்கும்! உன் கள்ளசிரிப்பென்றால் எனக்கு  கொள்ளை ஆர்வமடி அழகி!
  16. எல்லோரையும் போலவே நமக்குள்ளும் சண்டை வரத்தான் செய்கிறது ! பிடிவாதம் யாருடையதாய் இருந்தாலும் விட்டுக்கொடுப்பவள் நீயாக மட்டுமே இருக்கிறாய்! எனக்காக மட்டும் !
  17. உனக்கும் எனக்கும் அடிக்கடி போட்டிகள் வருகிறது ! உன்னை விட்டுக் கொடுத்து என்னை ஜெயிக்க வைக்கிறாய் நீ ! மனைவியின் இலக்கணம் நீதாண்டி கிறுக்கி!
  18.  என் கண்களும் இதயமும் விழித்திருந்தால் அப்போது உன் நினைவுகள் மட்டுமே எங்கும் பிராதானமாய் இருக்கிறது ! இந்தப் புதிரான காரணம் பிடிக்கும்!
  19. உனக்கு எதெல்லாம் பிடிக்காது என்று எனக்கு தெரிவிக்கும் ஆசிரியன்! - "உன் கோபம்"! அது ரொம்பவே பிடிக்கும்!
  20. ஒரு வார்த்தை கூட பேசாமல் பேசும் உன் திறமை எனக்கு இல்லையே! அது பிடிக்கும்!
  21. நாமிருவரும் எதிரெதிரில் கடந்து போகும் போது ! நாம் இருவரும் பேசநினைக்கும் வார்த்தைகளை நமக்கு முன்னே நம் கண்கள் பேசி விடுகிறதே! அந்த நுட்பம் பிடித்திருக்கிறது!
  22. கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருந்தாலும் என் கைவிரல்களுக்குல்லேயே இருக்கிறது உன் வாசம்! அது நிறைய பிடிக்கும்!
  23. என்னை விட நீ வசதியேடி? எப்படி நமக்கு ஒத்துவரும் என்றேன்! ஆயிரம் கோடிக்கு நான் அதிபதி என்றாலும் உன் அன்பிற்கு முன் நான் இரப்பவள்(பிச்சைக்காரி) தான் என்றாய்! கொன்னுட்டடி  அழகி !
  24. ஒரு ஓவருக்கு எத்தனை பந்துகள் என்றுகூட தெரியாத போதிலும் ! என்னோடு சேர்ந்து மட்டை விளையாட்டை ரசிக்கிறாய்! எனக்கு பிடித்தது உனக்குப் பிடிக்காமல் போய்விடக்கூடாதே ! என்னை புரிந்துகொண்டமைக்கு நன்றி டி .!
  25. என்னுடைய நண்பர்களை என்னைபோலவே நீயும் புரிந்து வைத்திருக்கிறாய்! அது பிடிக்கும்!
  26. எனக்கு பிடித்தவைகளை  மட்டுமே உனக்கும் பிடித்தவைகளாய் மாற்றிக்கொண்டாய் ! நான் கொடுத்துவைத்தவன் டி அழகி.!   
  27. பொறாமைக்கோ, கர்வத்திற்கோ, நம்மிடம் வேலையே இல்லை ! இதைவிட வேறென்ன வேண்டும்!
  28. போடி வாடி என்று யாரழைத்தாலும் பிடிக்காதென்று சொன்னாய்! உன்னை பார்த்த நொடி முதலே அப்படித்தானே கூப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்! எனக்கு நீ கொடுத்த " விதி விளக்கு " நம் காதலை ஊருக்கு முரசடிக்கிரதடி.!
  29. யாருடைய அதட்டலுக்கும் அசராத நானோ உன் அன்பிற்கு முன் அடிமையானது எப்படியோ தெரியவில்லை! அது பிடிக்கும்!
  30.  யாருடைய அதட்டலுக்கும் அசராத நீயும்  என் அன்பிற்கு முன் அடிமையானது எப்படியோ தெரியவில்லை! அதுவும் பிடிக்கும்!
  31. நேரில் கேட்பதற்கு நேர்மாறாய் தொலைபேசியில் கேட்குமுன் வசீகரக் குரல் பிடித்திருக்கிறது !
  32. "கிறுக்கா!" யார் கண்டுபிடித்தானோ தெரியவில்லை இந்த வார்த்தையை! நீ என்னை இப்படி அழைக்கையில் எழும் சந்தோஷத்தை நான் சொல்ல வார்த்தை எந்த மொழியிலும் இல்லை!
  33. நாமிருவரும் இணைந்திருக்கையில் நமக்குள் இருக்கும் 'ஒருமை" பிடிக்கும்!
  34. காற்றைப் போல மேன்மயானவலும்  நீ! புயலை போல வலியவலும் நீயே! அது பிடிக்கும்!
  35. காதல் திரைப்படங்களின் வசனங்கள் நம்மிடம் தோற்றுப் போகிறதை நாம் உணர்ந்திருக்கிறோம்! நம் ஒருநாள் சண்டையே ஒரு படமாக எடுக்கலாம் அழகி!
  36. என் உயிரோட்டம் எதனால் நடக்கிறதோ தெரியவில்லை., ஆனால் அத்தனைக்கும் நீயே காரணமாய்    இருக்கிறாய் !
  37. நமக்குள் எத்தனை ஒற்றுமை இருப்பினும் ஒரே ஒரு விடயத்தில் என்னை வேற்றுமைப் படுத்தி விடுகிறாய் !  நான் ஆண் என்பதால் உன்னை விட நான் மேல் தான் என்று என்னும் உன் பெண்மை ! எவ்வளவோ பிடித்திருக்கிறது ! ஆனாலும் நீதான் என்னைவிட மேல்!
  38. சோகங்களில் நான் சுருண்டு விழும் போது ஆழம் விழுதாய் எனக்குள் பரவி என்னை தாங்குகிறாய்! துன்பம் என்னுடையதென்றால் அதற்குரிய வலிகளை  உன்னுடயதாய் ஆக்கிகொள்கிறாய்! என்ன பெண்ணோ நீ! பிடிச்சுருக்கு !
  39. எப்படி என்னை பார்த்துக்கொள்வாய் என்று நான் கேட்டதற்கு , குழந்தை மாதிரி என்றாய்.!சந்தோஷம் !என் இரண்டாம் தாய் கிடைத்துவிட்டாள் !
  40. நம் அஞ்சு விரல்களும் ஒன்றோடொன்றாய் இருக்கையில் என் கோடி துன்பங்களும் கால்தூசி ஆகிப்போகிறது !
  41. காதலிக்கும் போது முத்தம் கொடுத்துக் கொள்வதில் தவறில்லை என்று உனக்கு நீயே நீதி சொல்லிக்கொண்டு என் உதடுகளில் உன் ஈரம் பதித்தாய் ! கள்ளி ! அப்போதே என்னைநீ முற்றிலும் வீழ்த்திவிட்டாயடி !
  42. என் தோள்களில் நீ சாய்ந்திருக்கும் போது சட்டென எழுந்து என்னை ஒரு பார்வை பார்க்கிறாய்! ஐயோ ! எனக்கு ! வார்த்தைகள் வரவில்லையடி! ஒரு முறை உன்னை கட்டி அனைத்துக் கொள்கிறேனே!  ப்ளீஸ் !
  43.  சொன்னதையே நான் மறுபடி மறுபடி சொன்னாலும் சலிக்காமல் கேட்டுக்கொண்டே இருக்கிறாய் ! சொல்பவன் நானாக இருப்பதானால் மட்டும்!
  44. ஊரார் பார்வைக்கு நான் கார்மேகம் ! உன் பார்வைக்கு மட்டும் ஏனோ நான் வெள்ளைநிலா !
  45. "போடா கருவாயா" என்று நீ ஒரு நாள் அழைக்காமல் இருந்தாலும் அன்றிரவு தூக்கம் கெட்டுப்போகிற காரணம் எனக்கு புரியவில்லை அதை தெரிந்துகொள்ளவே உன்னை காதலிக்க ஆசை ! 
  46. உன் காது மடல்களின் கீழ் படர்ந்திருக்கும் கார்கரும்கூந்தலின் ஒட்டுமொத்த ரசிகனும் நான் மட்டும் தான் !   
  47. உன் ஒட்டுமொத்த பிடிவாதத்தையும் யாரோ ஒருவனுக்காய் விட்டுக்கொடுக்கிறாய்! அந்த யாரோ ஒருவன் நான் மட்டும் தான் என்பதை அறிந்தும் உன்னை எப்படி காதலிக்காமல் இருக்க முடியும் !
  48. ரெண்டு நாள் உன்னோடு பேசப்போவதில்லை என்று சொல்லி தொலைபேசி அழைப்பைத் துண்டிக்கிறாய் ! ரெண்டு நொடி கடந்ததும் மறுபடி அழைத்துச் சொன்னாய் ! என்னால உன்கூட பேசாம இருக்க முடியாது பிரபா! 
  49. ஒவ்வொரு முறை உன்னைப் பார்க்கும் போதும் உன் அழகு எனக்கே தெரியாமல் என் பெருமூச்சை பரிசாகப் பெற்றுக்கொள்கிறது !
  50. "நீயும்" வேண்டும் என்று ஆரம்பித்தது நம் உறவு ! "நீ" வேண்டும் என்று அது  தொடர்ந்தது! இன்று "நீ மட்டும் " வேண்டும் என்று முடிவிற்கே வந்துவிட்டது! 
  51.  வெகுநாட்கள் என்னைப் பார்க்காமல் இருந்து பின் எனைப்பார்க்கும் போது என் கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொல்வாய் ! அது பிடித்துப்போனது எனக்கு!
  52. இதழ் முத்தம் பதிக்க எத்தனையோ இடமிருந்தும் உன் நெற்றியில் நான் கொடுக்கிற முத்தத்தை ரசிப்பதாகச் சொன்னாய்!உன்னை அப்போது இன்னும் அதிகமாய் காதலித்தேன் !
  53. இந்த நிமிடம் இறந்து நான் போனாலும் எந்தக்கவலையும் எனக்கில்லை ! என் மேல் அன்பு செய்வதற்காகவே கடவுளால் உலகிற்கு அனுப்பப்பட்ட தேவதையை நான் அடையாளம் கண்டுவிட்டேன் ! 
  54. உன் அதிகாலை உளறல்களில் புதைந்து கிடக்கும் மழழை மொழி கேட்கவே ஏழு சென்மமும் உனைக் காதலிக்கலாம்!
  55.  என் வீட்டில் வீற்றிருக்கும் நிசமான நிலவே ! நீ தூங்கும் அழகினை கால்நூறு   கம்பர் வந்தாலும் வர்ணிக்க முடியாதடி! பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கிறேன் ! பறந்து போய்க்கொண்டே இருக்கிறது நிமிஷங்கள் !  
  56.  தமிழ் மொழி நிசமாகவே அமிழ்தினும் இனியது தான் ! ஆனால் அதனினும் இனியது ஒன்றிருக்கிறது ! அது  "உன் தமிழ்" !
  57. மனதிலும் மலர்கொடி உடம்பிலும், என்ன வலியோ, எதுவாய் இருந்தாலும், என் மடியில் படுத்துக்கொண்டே என் கைகளை இறுகப் பிடித்துக்கொள்கிறாய் ! உன் வலிகளை என் வருடல்கள் தீர்த்துவைக்கும் என்ற உன் எண்ணம் பிடிக்கும்!
  58.  என்னை பிடிச்சுருக்கா ? என்று கேட்டேன் ! "ம்ம்" என்றாய்! என்னைப் பார்த்துக்கொள்கிறாயா என்று கேட்டேன் ! அதற்கும் "ம்ம்" என்றாய் ! கேட்ட முதல் நொடியே என்னைப் புரிந்து கொண்டவள் நீ மட்டும் தான் அழகி! 
  59. சமைக்கத் தெரியுமா? என்று ஒருமுறை கேட்டேன் ! நீயோ அதற்குத் தானே உன்னைக் காதலிக்கிறேன் என்றாய் குறும்பாக! சமையல் தெரியாத காதலியோடு தினமும் சண்டை போட வேண்டும் என்றஎன் நெடுநாள் ஆசை இப்போது உன்னால் நிறைவேறப் போகிறதடி கிறுக்கி!
  60. ஆயிரம் பேர் நம்மை சுற்றி இருந்தாலும் உன் ஒவ்வொரு பார்வையிலும் என்னை மட்டுமே நிறைக்கிறாய் நீ ! இது எந்த காதலனுக்கும் கிடைக்காத வரம் !
  61.  வெளியே எங்காவது செல்லும் போது வெட்கத்தை எல்லாம் எங்கோ தூக்கி எறிந்துவிட்டு என் கைகோர்த்து நடக்கிறாய்! அது பிடிக்கும்!
  62. தவறோ ,சரியோ என் பாதைகள் தெரியவில்லை! அத்தனையிலும் என்னோடே நடந்து வருகிறாய்! அப்படி என்மேல் நீ வைத்திருக்கும் நம்பிக்கை பிடிக்கும்!
  63.  பிடிக்குமா என்னை ? என்று முதன் முதலாய்க் கேட்டேன்! பிடிக்காது என்றாய்! பதில் சொன்னவளோ என் நெஞ்சினை அப்போதே ஆக்கிரமித்துவிட்டாள் ! 
  64. பிறைபோன்ற கொடிஇடையை ரசிக்க எத்தனை சென்மமிருந்தாலும் அத்தனையிலும் உன் காதலானாகவே பிறக்க வேண்டும் !
  65.  யாருக்கும் எந்தத் தீங்கும் நினைப்பதில்லை ! உன்னைத் துன்பப் படுத்துபவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாய்! நீ என்பது  நானேதான் அழகி!
  66.  என்னோடு இருக்க விரும்புகிறாய் ! இன்னும் குறிப்பாய் சொல்லப்போனால்  என்னோடு மட்டும்!
  67. நான் உன்னை காதலிக்கிறேன் ! கொஞ்சம் எனக்காக ! நிறைய உனக்காக !
  68. இருபத்தி நான்கு மணி நேரம் பேசினாலும் அலுத்துபோகாமல் இருக்கிறது நம் தொலைபேசி உரையாடல்கள்! ஆசை பேசும் மொழி கூட சிலநேரம் சலித்துப்  போகக்கூடும் ! அன்பு பேசும் மொழி எப்படி அலுத்துப்போகும் ?
  69.  எனக்குப்பிடித்த பைத்தியக்காரத் தனங்கள் அத்தனையும் உனக்கும் பிடித்திருக்கிறது!பின் எப்படி உன்னை  எனக்குப்பிடிக்காமல் போகும் ?
  70. என் எந்தஒரு செய்கையையும் நீ கேலி பேசுவதில்லை ! அது பிடித்திருக்கிறது!
  71. என் இதயக்கப்பலை மகிழ்ச்சிக்கரைக்கு செல்ல வழிகாட்டும் ஒரே பெரிய  கலங்கரை விளக்கம் நீ ! என் ஆண்மைக்கேற்ற பெண்மை!
  72.  இறுக்கமாக என் விரல்களை நீ பிடித்துக் கொள்கையில் இருவரின் வலிகளும் தெரிவதில்லை! வலிகள் பாதை தெரியாமல் எங்கோ ஓடி தொலைந்துவிட்டது ! வருடல்களில் வலியை குறைக்கும் இந்த வித்தையை யாரிடம் கற்றுக்கொண்டாய் நீ ?
  73.  அன்பு மட்டும் போதாது காதலுக்கு! நம்பிக்கை அதைவிடத்தேவை என்று சொன்னாய்! அவ்வாறே வாழ்ந்தும் காட்டினாய்! அது பிடித்திருந்தது!
  74.  என்னை சிரிக்க வைக்கும் வழியும் நீ அறிவாய்! அழவைக்கும் வழியையும் நீ மட்டுமே அறிவாய்!
  75.  திசைகள் நான்கு என்றேன்! இல்லை ஒன்றே ஒன்றுதான் என்றாய்! என்னவென்று கேட்டதுமே சட்டென சொல்கிறாய்! "உன் வழி" தான்டா கிறுக்கா" உன்னுடையது மட்டும்!
  76. உன் தோள்களில் நான் முதலில் சாயும் போது கண்கள் நனைந்துபோனது ! கடைசி வரைக்கும் நீ நிலைக்கப் போவதில்லையே என்றெனை பயமுறுத்தியது  நெஞ்சு!
  77.  எவ்வளவு பாரங்கள் இருந்தாலும் எல்லாம் தீர்ந்து இலகுவாகிறது மனம்  ! உன் சிரிப்பிர்ற்கு முன்னால் மட்டும் !
  78.  உனக்கு ஏற்றவன் நான் மட்டுமே ! எனக்கு ஏற்றவள் நீ மட்டுமே!
  79.  நீயில்லாமல் நானும், நானில்லாமல் நீயும் "கம்பி அறுந்த வீணை!
  80.  எப்படி அன்பு செய்வது என்று எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறாய்! கிறுக்கி! வாழ்கை முழுதும் உன்னிடமே படிக்க விரும்புகிறேனடி!
  81. வேறெதற்கும் பிறக்காமல் உன்னை காதலிக்க மட்டுமே பிறந்தது போலத்தான் என் உள்ளுணர்வு பேசிக்கொள்கிறது !
  82.  தூக்கமில்லாமல் என் வளர்ச்சிக்காகவே ஒவ்வொரு விஷயத்தையும் நீ செய்கிறாய்! அது பிடித்திருக்கிறது !
  83.  எனக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் தூண்டுகோல் நீ! நீ மட்டுமாய் இருக்கிறாய் !
  84.  நிமிடத்திற்கு எத்தனை தடவை துடிக்கிறதோ தெரியவில்லை என் நெஞ்சம் ! ஆனால் என் அத்துனை துடிப்பிலும் உன் நினைவுகள் கலந்திருக்கிருக்கிறது அழகி!
  85.  உன்னைப்பார்க்கும் ஒவ்வொரு நொடியிலும் என் இதயத்துடிப்பில் ஒன்று எங்கோ காணாமல் போய்விடுகிறது !
  86.  பொக்கிஷமாக்கப் படவேண்டிய நினைவுகள் என்று நான் சொல்லிக்கொள்வது  உன் நினைவினை மட்டும் தான்!
  87. என் இதய ஆழத்தில் ஒளிந்திருக்கும் உணர்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடியவள்  ! நீ மட்டும் தான்!
  88.  அளக்கமுடியாத சந்தோஷங்கள் நிறைந்த வாழ்கை ! நீ வந்ததற்குப் பின் சாமி  கொடுத்த வரம் ! கடவுளே வரமாய் எனக்குக் கிடைத்துவிட்டது போல இருக்கிறது !
  89.  நாளை என்ன நடக்குமோ யாமறியேன் ! ஆனால் நடந்து கொண்டிருக்கிற நிமிடங்கள் யாவும் மறக்க முடியாதவை! நீ என்னோடு இருப்பதால் மட்டும்!
  90.  சோக எழுத்துக்களை மட்டும் சுமந்துகொண்டிருந்த  என் வாழ்கை பக்கங்கள் நீ வந்தது முதல் சுகங்களை மட்டும் சுமப்பது புதுமை !
  91. வார்த்தைகளில் இல்லாமல் செயல்களிலும் சந்தோஷத்தை நிகழ்த்திக்காட்டக்கூடிய வலிமை உன்னிடம் மட்டுமே நான் அதிகம் பார்த்திருக்கிறேன்!
  92.  காதல் என்பது எவ்வளவு தூய்மையானதோ அவ்வளவு தூய்மையையும் உணர்ந்தது நீ என்னை காதலித்த போது தான்!
  93.  காதல் என்பதற்கு என்ன அர்த்தமோ அதை விட ஆழமான அர்த்தத்தினை எனக்கு நீ தெரியப்படுத்தி இருக்கிறாய்  !
  94.  என் வாழ்க்கைக் கப்பலின் சிறந்த மாலுமி நீ மட்டுமே ! சோகப் புயல்களுக்கு நடுவில் நீ என்னைக் கூட்டிப்போகும் அழகினை அமைதியாய் உட்கார்ந்து கொண்டு ரசிப்பது மட்டுமே என் வேலை!
  95.  உனக்கு மிகவும் இஷ்டமான பொழுது போக்கினை என்பொருட்டு நீ மறந்து போகிறாய் ! என்னோடு இருக்க வேண்டுமென்ற ஒரே ஆசையில் !
  96.  என் இதழ் வாசலில் முதன் முதலில் சிவப்புச்சாயம் பூசியவள் நீ! நீ மட்டுமே!
  97.  எனக்கென ஒதுக்கப்பட்ட நேரம் இருக்கிறது ! அவை அத்தனையும் உனக்காகவே செலவழித்து கொண்டிருக்கிறேன் நான்! நீ என் வாழ்வில் வந்தது முதல் !
  98. என் ஆதிமுதல் அந்தம் வரை உனக்கு அத்துப்பிடி ! ஆம்., ஏனோ உனக்கு மட்டும்! 
  99. என் ரகசிய தேசத்தின் காவலாளி நீ! உன்னைமீறி என் ரகசியங்கள் எங்கும் போவதில்லை!
  100. நீ ! என் அழகியடி! அதனால் தான்  உன்னை காதலிக்கிறேன்! 
  101. இப்படி! ஒரு நிமிட யோசனையில் நூறு காரணங்கள் எழுதும் அளவிற்கு என்னையும் ஒரு  கவிஞனாக்கியது  நீ மட்டும் தான் அழகி ! உன்னால் மட்டுமே இத்தனையும் நிகழ்ந்தது 
இந்தக் காரணங்களை எழுதத் துணையாய் இருந்த என் அழகிக்கு இது சமர்ப்பணம்   !  

-- Karur Prabha @ Anaadhaikathalan

Wednesday, June 1, 2011

முள்ளு!

ஒரு சின்ன முள்ளால என் வாழ்க்கையே தடம் மாறிப் போச்சு... பாஸ்..! எப்படியா..?
அடுத்தவன் உருப்படாம போனதை தெரிஞ்சுக்கறதுல என்ன ஒரு ஆர்வம்..?!
சரி, சொல்றேன்.. அதுக்கு முன்னாடி..
எப்பவாச்சும் கால்ல முள்ளு குத்தியிருக்கா உங்களுக்கு..? குத்தின முள்ளை எடுக்கற சுகம் இருக்கே.. ஹய்ய்ய்யோ.. அதை அனுபவிச்சு பாத்தா தான் தெரியும்!
பெரிய முள்ளு குத்தினா எடுக்கறது ஈஸி.. ஆனா, சின்ன முள்ளு குத்தி, அதை எடுக்கறது இருக்கே.. அதுதான் சேலஞ்ச்.. என்ன சொல்றீங்க..?
சின்ன முள்ளு தானேன்னு நீங்க சாதாரணமா அதை வெளில எடுத்துட முடியாது.. அது தொகுதில செல்வாக்குள்ள சுயேட்சை எம்.எல்.ஏ மாதிரி. காரியம் முடியற வரைக்கும் அதுக்கு குடுக்க வேண்டிய மரியாதைய குடுத்தே ஆகணும்.
முள்ளு குத்தின நேரத்துல அது பெரிசா வலிக்காது. ராத்திரி நேரம் ஆக ஆக, லைட்டா யாரோ கால்ல குண்டூசியால குத்தற மாதிரி இருக்கும். மறுநாள் காலைல 'இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க' நாம நடக்கும்போது தான் சின்ன முள் தன் சுயரூபத்தை காட்ட ஆரம்பிக்கும்.
மொதல் காரியமா முள்ளு குத்தின பாதத்தை நல்லா கழுவிட்டு, வாகான இடமா பாத்து உக்காந்து கால் மேல காலை மடக்கி போட்டுக்கிட்டு தயார் ஆவோம்.. முள்ளு குத்தினதால வலிக்குமே தவிர, கரெக்ட்டா இங்க தான் முள்ளு குத்தியிருக்குன்னு கண்டுபிடிக்க முடியாது.
முள்ளு குத்தின இடத்தோட சுத்து வட்டாரத்து மேல விரலால அமுக்கி, வலிக்குதான்னு பாப்போம்.. அதை செய்யும் போது, ஒரு ராக்கெட்டை தயார் பண்ற விஞ்ஞானி ரேஞ்சுக்கு நம்ம முகத்துல ஒரு சீரியஸ்னஸ் தெரியும்.
ஒரு ரெண்டு நிமிஷ போராட்டத்துக்குப் பிறகு, குத்துமதிப்பா முள்ளு இருக்க இடம் பிடிபடும். முள்ளு மேல சதை மூடியிருக்கும்.. முள்ளு எப்படி அவ்ளோ உள்ளே போச்சுன்னு யோசிக்கறதே ஒரு சந்தோஷ புதிரா இருக்கும்.
ஒரு குண்டூசியையோ, சேஃப்டி பின்னையோ வெச்சு முள்ளு குத்தின இடத்தை சுத்தி மெதுவா குத்துவோம். கால்ல கிணறு வெட்ற மாதிரி முள்ளை சுத்தி தோண்ட ஆரம்பிப்போம். ஒரு சிசேரியன் பண்ற நினைப்போட, முனைப்போட அந்த வேலையை செய்வோம்.
ஒரு கட்டத்துல முள்ளு லேசா தெரிய ஆரம்பிக்கும். ஆஹா.. நம் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.. வெள்ளை பாதத்துல அந்த சின்ன கருப்பு முள்ளு.. குகையின் மறுமுனையில் சிறிது வெளிச்சம்..!
இப்ப குண்டூசிக்கு ரெஸ்ட் குடுத்துட்டு, கட்டை விரலுக்கு வேலை குடுப்போம்.
முள்ளை சுத்தி கட்டை விரலால அழுத்து அழுத்துன்னு அழுத்தினாலும், சின்ன முள் லேசுல வெளிய வராது. எவ்ளோ அவமானப்படுத்தினாலும் ராஜினாமா பண்ணாத அரசியல்வாதி மாதிரி இடத்தை விட்டு நகராம அங்கேயே கம்முன்னு இருக்கும்.
நாமளும் விடாம தம் கட்டி அமுக்குவோம். ம்ஹூம்.. வராது. அமுக்கினதால ரத்தம் பாய்ஞ்சு முள்ளு ஏரியாவுல பாதம் சிவந்து இருக்கும்.
அந்த நேரம் பாத்து அம்மாவோ, அக்காவோ வந்து "முள்ளா..? நான் எடுக்கறேன்.."-ன்னு பக்கத்துல உக்காந்துக்குவாங்க.. வேண்டாம் வேண்டாம்னு நாம சொல்ல சொல்ல கேக்காம, நம்ம கைல இருக்க குண்டூசிய வாங்கி, ஜாக்கிரதையா குறி பாத்து, கரெக்ட்டா தப்பா முள்ளு மேலயே குத்திடுவாங்க.. "ஐயோ.."-ன்னு கத்திகிட்டே நாம ஒத்த கால்ல பரதநாட்டியம் ஆட ஆரம்பிச்சுடுவோம்.
"சாரி.. சாரி.. முள்ளு மேல பட்டுடுச்சாச்சா"ன்னு சிரிச்சுகிட்டே சொல்லுவாங்க. "உக்காரு.. ரெண்டே நிமிஷத்துல முள்ளை எடுத்துடறேன்.."
'வள்'ளுனு அவங்களை திட்டி அனுப்பிட்டு, நாம நம்ம அகழ்வாராய்ச்சியை தொடர்வோம். கண்ல தெரிஞ்ச கொஞ்ச நஞ்ச முள்ளும் இப்ப நல்லா உள்ளே போயிருக்கும். இப்ப முள்ளு குத்தின இடத்தை தொட்டுப் பாத்தா, அதுக்கு ஜுரம் வந்தா மாதிரி லைட்டா சூடா இருக்கும்.
வெய்யில் காலத்துல ரோட்ல தண்ணி லாரி பக்கத்துல டூவீலர்ல போற நம்ம மேல தண்ணி தெரிக்கும் போது, ஜில்லுனு இதமா இருக்கும் இல்லை.. அதை மாதிரி இந்த முள்ளு குத்தின பாதம் சூடா இதமா இருக்கும்.
மறுபடியும் கட்டை விரலால அழுத்து அழுத்துன்னு அழுத்தி, முள்ளு வெளிய வர வசதியா குண்டூசியால குத்தி வழி பண்ணி.. ஒருவழியா அந்த முள்ளை எடுப்போம். அது ரொம்ப குட்டியா, பொறந்த குழந்தை மாதிரி இருக்கும். அதை விரல்ல வெச்சு கொஞ்ச நேரம் பாத்துட்டு, கை காலை கழுவிட்டு வரும்போது என்னவோ பெரிய சாதனை பண்ணிட்ட மாதிரி ஒரு பெருமிதம் நம்ம முகத்துல தெரியும்.
முள்ளு கதைய விடுங்க.. நம்ம மேட்டருக்கு வருவோம்..
நான் ப்ளஸ் டூ படிக்கும்போது எனக்கு டியூஷன் எடுத்தவர் ஜெயராமன் சார். என்னை மாதிரி மக்குப் பசங்களை கூட நல்லா படிக்க வெச்சு பாஸ் பண்ண வெச்சுடுவார். க்ளாஸ்ல என்னை அப்பப்ப பொண்ணுங்க எதிரே அவர் திட்டுவார். இருந்தாலும், எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்.
ஒரு நாள் ஜெயராமன் சார் விந்தி விந்தி நடந்து வந்தார். அதைப் பாத்து காயத்ரி, பூஜா, கவிதா மூணுபேரும் தங்களுக்குள்ள ஏதோ கிண்டல் பண்ணி சிரிச்சிட்டிருந்தாங்க. எனக்கு கடுப்பாயிடுச்சு.
நேரா ஜெயராமன் சார்கிட்ட போனேன்.
"கால் என்ன சார் ஆச்சு..?"
"ஒரு சின்ன முள்ளு குத்திடுச்சு.. நேத்து அதை எடுத்தப்ப முள்ளு உடைஞ்சு பாதி இன்னும் உள்ளேயே இருக்கு போலருக்குடா.."
"சார்.. அதை வெளிய எடுக்க ஈசியான வழி இருக்கு.. இதோ வர்றேன் சார்..."
எங்க ஸ்கூல் பக்கத்துல நிறைய எருக்கஞ்செடி இருக்கு. அதுலேந்து ஒரு நாலஞ்சு இலைய பறிச்சுகிட்டு வந்தேன். ஜெயராமன் சார் கால்ல, முள்ளு இருந்த இடத்துல இலைலேந்து நாலு சொட்டு பாலை விட்டேன்.
"இன்னும் 5 நிமிஷத்துல முள்ளு தானா வெளில வந்துடும் பாருங்க சார்.." நமக்கு கொஞ்சம் கைவைத்தியமும் தெரியும்ல..!
5 நிமிஷம் ஆச்சு, 10 நிமிஷம் ஆச்சு.. கரெக்ட்டா 12-வது நிமிஷம் வந்துடுச்சு.. முள்ளு இல்லை, ஜெயராமன் சாருக்கு கோவம்..! பின்ன கோவப்படாம என்ன பண்ணுவாரு.. கால்ல பாலை சொட்டினதுல பாதம் சூடாகி, எரிச்சல் அதிகமாயிடுச்சு. சூடு தாங்க முடியாம தண்ணி பக்கெட்ல காலை விட்டுட்டாரு. எனக்கு செம திட்டு.!
கோவமா மாடிப்படி ஏறிட்டிருந்தார். அவர் பின்னாடியே போனேன். "சார்.. காலை காட்டுங்க சார்.. இப்பவே முள்ளை எடுத்துக் காட்டறேன்.."
அரை மனசோட படிக்கட்டுல உக்காந்தார். குண்டூசியை வெச்சு, அவர் பாதத்துல உத்து பாத்து குத்தினேன். கொஞ்ச நேரத்துல முள்ளு கண்ல தென்பட்டது. ஜெயராமன் சார் முகத்துல லேசா ஒரு வெளிச்சம் தெரிஞ்சது.
கவனமா முள்ளுக்கு பக்கத்துல குண்டூசியால குத்தும்போது தானா எனக்கு தும்மல் வந்து தொலைக்கணும்..?! குண்டூசிய குத்திகிட்டே தும்மினதுல... குண்டூசி முழுசா அவர் பாதத்துக்குள்ள போயிடுச்சு பாஸ்..! அவர் கத்திகிட்டே குனிய, நான் நிமிர, ஜெயராமன் சாரோட முன்வரிசை பல்லு ரெண்டு பணால் ஆயிடுச்சு..! அதுல ஒரு பல்லு என் தலைமுடியில போய் ஒளிஞ்சுகிச்சு.
நான் பதட்டப்பட்டு "சாரி சார்.. சாரி சார்"ன்னு சொல்லிகிட்டே அவரை பாக்கறேன்.. பல்லில்லாத ஜெயராமன் சாரை பாத்து சிரிப்பு சிரிப்பா வருது.. அதை அடக்க முடியாம, வாயை பொத்துகிட்டு ரிவர்ஸ்லயே படியிறங்கிட்டேன்.. 'முள்ளால வந்தது பல்லோட போச்சு'ன்னு பெரிய மனசு பண்ணி விட்டுடாம, அவர் என்னை அடிக்க அவசரமா படியிறங்க, கால் வழுக்கி... படிக்கட்டுல உருட்டி விட்ட சூட்கேஸ் மாதிரி தடக் தடக் தடக்கு உக்காந்த வாக்குலயே வழுக்கி கடைசி படிக்கட்டு வரைக்கும் வந்துட்டார்.
பயத்தோட அவர்கிட்ட போய்.. " சார்.. சாரி சார்.. அந்த முள்ளை எடுக்..."
பல்லு போனதால, அவர் என்னை மழலைல திட்ட ஆரம்பிச்சுட்டார்.. ஜெயராமன் சாருக்கு கெட்ட வார்த்தை எல்லாம் கூட தெரியுங்கறது அன்னிக்கு தான் எனக்கு தெரிஞ்சுது.
"சார்.. முள்ளை எடுத்துடறேன் சார்.. உள்ள இருந்தா ஆபத்து.."
"தேய்.. வேண்தாம்தா.. முள்ளு உள்ளயே இருக்கத்தும்.. எனக்கு சுகர் இருக்கு, BP இருக்கு.. அது மாதிரி இதுவும் இருந்துட்டு போகத்தும்.. என் முன்னாதி நிக்காத.. போ.. போதா.!".
ஜெயராமன் சார் ஒரு கைல தன்னோட உடைஞ்ச பல்லை கைல வெச்சிருந்தார்.. இடுப்பை பிடிச்சுகிட்டு பிள்ளைத்தாச்சி மாதிரி நடந்தபடி இன்னொரு பல்லை தேடிகிட்டே போனாரு.
மறுநாள் அவரை பாக்கலாம்னு போனேன்.
அப்பறம் எனக்கென்ன ஆச்சா..?
நான் ப்ளஸ் டூ முடிக்க ஒரு 2 வருஷம் ஆயிடுச்சு பாஸ்..!

- பட்டாணி


You may also like