Thursday, June 16, 2011

அழுக்கு பெண்ணை வர்ணிக்கும் வைரமுத்து!


கம்பி மாத்தாப்பு கண்ணு கண்ணு
வண்ண மாத்தாப்பு பொண்ணு பொண்ணு
தூரத்தில் பார்த்தா காதல் வராது
பக்கத்துலே பார்த்தா காமம் வராது
மானும் இல்ல மயிலும் இல்ல தூணும் இல்ல குயிலும் இல்ல
இருந்தும் மனசு விழுந்து போச்சுதோ

அவ மூக்கு மேலே வியர்வை ஆகணும்
இல்ல நாக்கு மேலே வார்த்தை ஆகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போத்தி படுக்கும் போர்வை ஆகணும்

அழுக்கு துணியை உடுத்தி அவ தடுக்கி நடக்கும் போதும்
சுளுக்கு பிடிச்ச மனது அட சொக்குது சொக்குதுடா
சுத்தமான தெருவில் அவ துப்பி செல்லும் போதும்
எச்சில் விழுந்த இடத்தில் மனது நிக்குது நிக்குதுடா

அவ தூங்கி எழுந்தா பிள்ளை அழகு
அவ சோம்பல் முறிச்சா கொள்ளை அழகு
அவ சொல்லுக்கு அடங்கா முடியும்
சூடிக்க சங்கிய மலரும்
என்னை இழுக்கும் கண்ணை மயக்கும்
தெத்துப்பல்லு கண்டு பித்து பிடிக்கும்

விளக்குமாறு பிடிச்சு அவ வீதி பெருக்கும் போது
வளவு நெளிவு பாத்து மனம் வழுக்க பாக்குதுடா
குளிச்சு முடிச்சு வெளியில் அவ கூந்தல் துவட்டும் போது
தெளிச்சு விழுந்த துளியில் மனம் தெறிச்சு போகுதுடா

அவ வளவி ஒலிக்கும் வாசல் அழகு
அவ கொலுசு ஒலிக்கும் வீதி அழகு
ஒரு விக்கல் எடுக்குற போதும் தும்மி முடிக்குற போதும்
அவஸ்தையிலும் அவள் அழகு
குற்றம் குறையிலும் மத்த அழகு

                                                       - கவிப்பேரரசு வைரமுத்து, விகடனிலிருந்து!!

No comments:

Post a Comment

You may also like