- நான் தொடங்கிய வார்த்தைகளை என்னை விட அழகாகவே முடிக்கிறாய்!! முந்திக்கொள்பவன் நான் என்றால் முற்றுப்புள்ளி நீயாகஇருக்கிறாய்!
- என் அன்பு பேசும் மொழிகளை என்னோடு பகிர்ந்து கொள்கிறாய்! பின் நீ, நான் என்னும் ஒருமை ,பன்மையாகிப் போகிறது !
- மற்றவர்களிடம்.., ஏன் உன்னிடமே நீ என்னை விட்டுக்கொடுப்பதில்லை! நானென்றால் உனக்கு அவ்வளவு பிரியம்!
- உன்னையும் நான் எங்குமே விட்டுகொடுக்காமல் பேசும் என் உள்ளுணர்வு பிடித்திருக்கிறது !
- ஆயிரம் வாட்ஸ் ஓரவிழிப் பார்வையில் அசராமல் என்னை சாய்க்கும் உன் பார்வை!
- மைவிழிக் குடைக்குக்கீழ் மலர்ந்திருக்கிற நிலவு (கண்கள்)! கண்ணிமைக்காமல் கனம்ஒன்றும் அதை பார்க்கப் பிடிக்கும்!
- நீயும் உன் நினைவுகளும் இல்லாத நாட்களில் என் உயிர்போன இதயத்தின் "இல்லாத துடிப்புகள்" பிடித்திருக்கிறது !
- என் வழியில் நானுனை கூட்டிச்செல்லும் போது எங்கோ நீ தொலைந்து விடுகிறாய் ! எனக்கும் பாதை மறந்து விடுகிறதே! உன்னைத் தேடும் தேடல் பிடிக்கும்!
- மாலைநேரக் கடற்கரை மணலில் நானும் என் நிலவும் சேர்ந்து ரசிக்கிற சூரிய அஸ்தமனம் ! கோடி கொடுத்தாலும் கொஞ்சம் கூட வேறெங்கும் கிடைக்காத சுகம் அது !
- நிலாக்குளிர் நீளும் வரை நீளும் நம் கைப்பேசி உரையாடல்கள், விடிந்த போதும் விடாமல் தொடரும் அழகு பிடிக்கும்!
- என் இன்பதுன்பங்கள் யாவும் உன் தோள்களில் மட்டுமே பாரமாக வேண்டும் என்ற உன் கோரிக்கை! பிடித்திருந்தது !
- என் வாழ்கை துணைக்கான தேடல் பட்டியலில் எல்லா இடங்களையும் நீயே ஆக்கிரமித்த உரிமை! பிடிக்கும்!
- உன்னோடு நானும் என்னோடு நீயும் இருக்கும் போது ! நம்மோடு நாம் என்று மாறிவிடுகிறோம் நாம்! அது பிடிக்கும்!
- நான் உன்னைப்போல அழகில்லையேடி! ஏன் என்னை போய் தேர்ந்தெடுத்தாய் என்று நான் கேட்ட போது ! நான் உன்னோடு இருந்தால் நீ என்னை விட அழகு என்றாய்! கிறுக்கி ! அந்த நிமிஷத்தை நான் எப்படி மறக்க முடியும் ?
- நிலவிற்கு சிரிக்கத் தெரிந்தால் அது கண்டிப்பாய் உன்னை போலத்தான் சிரித்திருக்கும்! உன் கள்ளசிரிப்பென்றால் எனக்கு கொள்ளை ஆர்வமடி அழகி!
- எல்லோரையும் போலவே நமக்குள்ளும் சண்டை வரத்தான் செய்கிறது ! பிடிவாதம் யாருடையதாய் இருந்தாலும் விட்டுக்கொடுப்பவள் நீயாக மட்டுமே இருக்கிறாய்! எனக்காக மட்டும் !
- உனக்கும் எனக்கும் அடிக்கடி போட்டிகள் வருகிறது ! உன்னை விட்டுக் கொடுத்து என்னை ஜெயிக்க வைக்கிறாய் நீ ! மனைவியின் இலக்கணம் நீதாண்டி கிறுக்கி!
- என் கண்களும் இதயமும் விழித்திருந்தால் அப்போது உன் நினைவுகள் மட்டுமே எங்கும் பிராதானமாய் இருக்கிறது ! இந்தப் புதிரான காரணம் பிடிக்கும்!
- உனக்கு எதெல்லாம் பிடிக்காது என்று எனக்கு தெரிவிக்கும் ஆசிரியன்! - "உன் கோபம்"! அது ரொம்பவே பிடிக்கும்!
- ஒரு வார்த்தை கூட பேசாமல் பேசும் உன் திறமை எனக்கு இல்லையே! அது பிடிக்கும்!
- நாமிருவரும் எதிரெதிரில் கடந்து போகும் போது ! நாம் இருவரும் பேசநினைக்கும் வார்த்தைகளை நமக்கு முன்னே நம் கண்கள் பேசி விடுகிறதே! அந்த நுட்பம் பிடித்திருக்கிறது!
- கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருந்தாலும் என் கைவிரல்களுக்குல்லேயே இருக்கிறது உன் வாசம்! அது நிறைய பிடிக்கும்!
- என்னை விட நீ வசதியேடி? எப்படி நமக்கு ஒத்துவரும் என்றேன்! ஆயிரம் கோடிக்கு நான் அதிபதி என்றாலும் உன் அன்பிற்கு முன் நான் இரப்பவள்(பிச்சைக்காரி) தான் என்றாய்! கொன்னுட்டடி அழகி !
- ஒரு ஓவருக்கு எத்தனை பந்துகள் என்றுகூட தெரியாத போதிலும் ! என்னோடு சேர்ந்து மட்டை விளையாட்டை ரசிக்கிறாய்! எனக்கு பிடித்தது உனக்குப் பிடிக்காமல் போய்விடக்கூடாதே ! என்னை புரிந்துகொண்டமைக்கு நன்றி டி .!
- என்னுடைய நண்பர்களை என்னைபோலவே நீயும் புரிந்து வைத்திருக்கிறாய்! அது பிடிக்கும்!
- எனக்கு பிடித்தவைகளை மட்டுமே உனக்கும் பிடித்தவைகளாய் மாற்றிக்கொண்டாய் ! நான் கொடுத்துவைத்தவன் டி அழகி.!
- பொறாமைக்கோ, கர்வத்திற்கோ, நம்மிடம் வேலையே இல்லை ! இதைவிட வேறென்ன வேண்டும்!
- போடி வாடி என்று யாரழைத்தாலும் பிடிக்காதென்று சொன்னாய்! உன்னை பார்த்த நொடி முதலே அப்படித்தானே கூப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்! எனக்கு நீ கொடுத்த " விதி விளக்கு " நம் காதலை ஊருக்கு முரசடிக்கிரதடி.!
- யாருடைய அதட்டலுக்கும் அசராத நானோ உன் அன்பிற்கு முன் அடிமையானது எப்படியோ தெரியவில்லை! அது பிடிக்கும்!
- யாருடைய அதட்டலுக்கும் அசராத நீயும் என் அன்பிற்கு முன் அடிமையானது எப்படியோ தெரியவில்லை! அதுவும் பிடிக்கும்!
- நேரில் கேட்பதற்கு நேர்மாறாய் தொலைபேசியில் கேட்குமுன் வசீகரக் குரல் பிடித்திருக்கிறது !
- "கிறுக்கா!" யார் கண்டுபிடித்தானோ தெரியவில்லை இந்த வார்த்தையை! நீ என்னை இப்படி அழைக்கையில் எழும் சந்தோஷத்தை நான் சொல்ல வார்த்தை எந்த மொழியிலும் இல்லை!
- நாமிருவரும் இணைந்திருக்கையில் நமக்குள் இருக்கும் 'ஒருமை" பிடிக்கும்!
- காற்றைப் போல மேன்மயானவலும் நீ! புயலை போல வலியவலும் நீயே! அது பிடிக்கும்!
- காதல் திரைப்படங்களின் வசனங்கள் நம்மிடம் தோற்றுப் போகிறதை நாம் உணர்ந்திருக்கிறோம்! நம் ஒருநாள் சண்டையே ஒரு படமாக எடுக்கலாம் அழகி!
- என் உயிரோட்டம் எதனால் நடக்கிறதோ தெரியவில்லை., ஆனால் அத்தனைக்கும் நீயே காரணமாய் இருக்கிறாய் !
- நமக்குள் எத்தனை ஒற்றுமை இருப்பினும் ஒரே ஒரு விடயத்தில் என்னை வேற்றுமைப் படுத்தி விடுகிறாய் ! நான் ஆண் என்பதால் உன்னை விட நான் மேல் தான் என்று என்னும் உன் பெண்மை ! எவ்வளவோ பிடித்திருக்கிறது ! ஆனாலும் நீதான் என்னைவிட மேல்!
- சோகங்களில் நான் சுருண்டு விழும் போது ஆழம் விழுதாய் எனக்குள் பரவி என்னை தாங்குகிறாய்! துன்பம் என்னுடையதென்றால் அதற்குரிய வலிகளை உன்னுடயதாய் ஆக்கிகொள்கிறாய்! என்ன பெண்ணோ நீ! பிடிச்சுருக்கு !
- எப்படி என்னை பார்த்துக்கொள்வாய் என்று நான் கேட்டதற்கு , குழந்தை மாதிரி என்றாய்.!சந்தோஷம் !என் இரண்டாம் தாய் கிடைத்துவிட்டாள் !
- நம் அஞ்சு விரல்களும் ஒன்றோடொன்றாய் இருக்கையில் என் கோடி துன்பங்களும் கால்தூசி ஆகிப்போகிறது !
- காதலிக்கும் போது முத்தம் கொடுத்துக் கொள்வதில் தவறில்லை என்று உனக்கு நீயே நீதி சொல்லிக்கொண்டு என் உதடுகளில் உன் ஈரம் பதித்தாய் ! கள்ளி ! அப்போதே என்னைநீ முற்றிலும் வீழ்த்திவிட்டாயடி !
- என் தோள்களில் நீ சாய்ந்திருக்கும் போது சட்டென எழுந்து என்னை ஒரு பார்வை பார்க்கிறாய்! ஐயோ ! எனக்கு ! வார்த்தைகள் வரவில்லையடி! ஒரு முறை உன்னை கட்டி அனைத்துக் கொள்கிறேனே! ப்ளீஸ் !
- சொன்னதையே நான் மறுபடி மறுபடி சொன்னாலும் சலிக்காமல் கேட்டுக்கொண்டே இருக்கிறாய் ! சொல்பவன் நானாக இருப்பதானால் மட்டும்!
- ஊரார் பார்வைக்கு நான் கார்மேகம் ! உன் பார்வைக்கு மட்டும் ஏனோ நான் வெள்ளைநிலா !
- "போடா கருவாயா" என்று நீ ஒரு நாள் அழைக்காமல் இருந்தாலும் அன்றிரவு தூக்கம் கெட்டுப்போகிற காரணம் எனக்கு புரியவில்லை அதை தெரிந்துகொள்ளவே உன்னை காதலிக்க ஆசை !
- உன் காது மடல்களின் கீழ் படர்ந்திருக்கும் கார்கரும்கூந்தலின் ஒட்டுமொத்த ரசிகனும் நான் மட்டும் தான் !
- உன் ஒட்டுமொத்த பிடிவாதத்தையும் யாரோ ஒருவனுக்காய் விட்டுக்கொடுக்கிறாய்! அந்த யாரோ ஒருவன் நான் மட்டும் தான் என்பதை அறிந்தும் உன்னை எப்படி காதலிக்காமல் இருக்க முடியும் !
- ரெண்டு நாள் உன்னோடு பேசப்போவதில்லை என்று சொல்லி தொலைபேசி அழைப்பைத் துண்டிக்கிறாய் ! ரெண்டு நொடி கடந்ததும் மறுபடி அழைத்துச் சொன்னாய் ! என்னால உன்கூட பேசாம இருக்க முடியாது பிரபா!
- ஒவ்வொரு முறை உன்னைப் பார்க்கும் போதும் உன் அழகு எனக்கே தெரியாமல் என் பெருமூச்சை பரிசாகப் பெற்றுக்கொள்கிறது !
- "நீயும்" வேண்டும் என்று ஆரம்பித்தது நம் உறவு ! "நீ" வேண்டும் என்று அது தொடர்ந்தது! இன்று "நீ மட்டும் " வேண்டும் என்று முடிவிற்கே வந்துவிட்டது!
- வெகுநாட்கள் என்னைப் பார்க்காமல் இருந்து பின் எனைப்பார்க்கும் போது என் கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொல்வாய் ! அது பிடித்துப்போனது எனக்கு!
- இதழ் முத்தம் பதிக்க எத்தனையோ இடமிருந்தும் உன் நெற்றியில் நான் கொடுக்கிற முத்தத்தை ரசிப்பதாகச் சொன்னாய்!உன்னை அப்போது இன்னும் அதிகமாய் காதலித்தேன் !
- இந்த நிமிடம் இறந்து நான் போனாலும் எந்தக்கவலையும் எனக்கில்லை ! என் மேல் அன்பு செய்வதற்காகவே கடவுளால் உலகிற்கு அனுப்பப்பட்ட தேவதையை நான் அடையாளம் கண்டுவிட்டேன் !
- உன் அதிகாலை உளறல்களில் புதைந்து கிடக்கும் மழழை மொழி கேட்கவே ஏழு சென்மமும் உனைக் காதலிக்கலாம்!
- என் வீட்டில் வீற்றிருக்கும் நிசமான நிலவே ! நீ தூங்கும் அழகினை கால்நூறு கம்பர் வந்தாலும் வர்ணிக்க முடியாதடி! பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கிறேன் ! பறந்து போய்க்கொண்டே இருக்கிறது நிமிஷங்கள் !
- தமிழ் மொழி நிசமாகவே அமிழ்தினும் இனியது தான் ! ஆனால் அதனினும் இனியது ஒன்றிருக்கிறது ! அது "உன் தமிழ்" !
- மனதிலும் மலர்கொடி உடம்பிலும், என்ன வலியோ, எதுவாய் இருந்தாலும், என் மடியில் படுத்துக்கொண்டே என் கைகளை இறுகப் பிடித்துக்கொள்கிறாய் ! உன் வலிகளை என் வருடல்கள் தீர்த்துவைக்கும் என்ற உன் எண்ணம் பிடிக்கும்!
- என்னை பிடிச்சுருக்கா ? என்று கேட்டேன் ! "ம்ம்" என்றாய்! என்னைப் பார்த்துக்கொள்கிறாயா என்று கேட்டேன் ! அதற்கும் "ம்ம்" என்றாய் ! கேட்ட முதல் நொடியே என்னைப் புரிந்து கொண்டவள் நீ மட்டும் தான் அழகி!
- சமைக்கத் தெரியுமா? என்று ஒருமுறை கேட்டேன் ! நீயோ அதற்குத் தானே உன்னைக் காதலிக்கிறேன் என்றாய் குறும்பாக! சமையல் தெரியாத காதலியோடு தினமும் சண்டை போட வேண்டும் என்றஎன் நெடுநாள் ஆசை இப்போது உன்னால் நிறைவேறப் போகிறதடி கிறுக்கி!
- ஆயிரம் பேர் நம்மை சுற்றி இருந்தாலும் உன் ஒவ்வொரு பார்வையிலும் என்னை மட்டுமே நிறைக்கிறாய் நீ ! இது எந்த காதலனுக்கும் கிடைக்காத வரம் !
- வெளியே எங்காவது செல்லும் போது வெட்கத்தை எல்லாம் எங்கோ தூக்கி எறிந்துவிட்டு என் கைகோர்த்து நடக்கிறாய்! அது பிடிக்கும்!
- தவறோ ,சரியோ என் பாதைகள் தெரியவில்லை! அத்தனையிலும் என்னோடே நடந்து வருகிறாய்! அப்படி என்மேல் நீ வைத்திருக்கும் நம்பிக்கை பிடிக்கும்!
- பிடிக்குமா என்னை ? என்று முதன் முதலாய்க் கேட்டேன்! பிடிக்காது என்றாய்! பதில் சொன்னவளோ என் நெஞ்சினை அப்போதே ஆக்கிரமித்துவிட்டாள் !
- பிறைபோன்ற கொடிஇடையை ரசிக்க எத்தனை சென்மமிருந்தாலும் அத்தனையிலும் உன் காதலானாகவே பிறக்க வேண்டும் !
- யாருக்கும் எந்தத் தீங்கும் நினைப்பதில்லை ! உன்னைத் துன்பப் படுத்துபவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாய்! நீ என்பது நானேதான் அழகி!
- என்னோடு இருக்க விரும்புகிறாய் ! இன்னும் குறிப்பாய் சொல்லப்போனால் என்னோடு மட்டும்!
- நான் உன்னை காதலிக்கிறேன் ! கொஞ்சம் எனக்காக ! நிறைய உனக்காக !
- இருபத்தி நான்கு மணி நேரம் பேசினாலும் அலுத்துபோகாமல் இருக்கிறது நம் தொலைபேசி உரையாடல்கள்! ஆசை பேசும் மொழி கூட சிலநேரம் சலித்துப் போகக்கூடும் ! அன்பு பேசும் மொழி எப்படி அலுத்துப்போகும் ?
- எனக்குப்பிடித்த பைத்தியக்காரத் தனங்கள் அத்தனையும் உனக்கும் பிடித்திருக்கிறது!பின் எப்படி உன்னை எனக்குப்பிடிக்காமல் போகும் ?
- என் எந்தஒரு செய்கையையும் நீ கேலி பேசுவதில்லை ! அது பிடித்திருக்கிறது!
- என் இதயக்கப்பலை மகிழ்ச்சிக்கரைக்கு செல்ல வழிகாட்டும் ஒரே பெரிய கலங்கரை விளக்கம் நீ ! என் ஆண்மைக்கேற்ற பெண்மை!
- இறுக்கமாக என் விரல்களை நீ பிடித்துக் கொள்கையில் இருவரின் வலிகளும் தெரிவதில்லை! வலிகள் பாதை தெரியாமல் எங்கோ ஓடி தொலைந்துவிட்டது ! வருடல்களில் வலியை குறைக்கும் இந்த வித்தையை யாரிடம் கற்றுக்கொண்டாய் நீ ?
- அன்பு மட்டும் போதாது காதலுக்கு! நம்பிக்கை அதைவிடத்தேவை என்று சொன்னாய்! அவ்வாறே வாழ்ந்தும் காட்டினாய்! அது பிடித்திருந்தது!
- என்னை சிரிக்க வைக்கும் வழியும் நீ அறிவாய்! அழவைக்கும் வழியையும் நீ மட்டுமே அறிவாய்!
- திசைகள் நான்கு என்றேன்! இல்லை ஒன்றே ஒன்றுதான் என்றாய்! என்னவென்று கேட்டதுமே சட்டென சொல்கிறாய்! "உன் வழி" தான்டா கிறுக்கா" உன்னுடையது மட்டும்!
- உன் தோள்களில் நான் முதலில் சாயும் போது கண்கள் நனைந்துபோனது ! கடைசி வரைக்கும் நீ நிலைக்கப் போவதில்லையே என்றெனை பயமுறுத்தியது நெஞ்சு!
- எவ்வளவு பாரங்கள் இருந்தாலும் எல்லாம் தீர்ந்து இலகுவாகிறது மனம் ! உன் சிரிப்பிர்ற்கு முன்னால் மட்டும் !
- உனக்கு ஏற்றவன் நான் மட்டுமே ! எனக்கு ஏற்றவள் நீ மட்டுமே!
- நீயில்லாமல் நானும், நானில்லாமல் நீயும் "கம்பி அறுந்த வீணை!
- எப்படி அன்பு செய்வது என்று எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறாய்! கிறுக்கி! வாழ்கை முழுதும் உன்னிடமே படிக்க விரும்புகிறேனடி!
- வேறெதற்கும் பிறக்காமல் உன்னை காதலிக்க மட்டுமே பிறந்தது போலத்தான் என் உள்ளுணர்வு பேசிக்கொள்கிறது !
- தூக்கமில்லாமல் என் வளர்ச்சிக்காகவே ஒவ்வொரு விஷயத்தையும் நீ செய்கிறாய்! அது பிடித்திருக்கிறது !
- எனக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் தூண்டுகோல் நீ! நீ மட்டுமாய் இருக்கிறாய் !
- நிமிடத்திற்கு எத்தனை தடவை துடிக்கிறதோ தெரியவில்லை என் நெஞ்சம் ! ஆனால் என் அத்துனை துடிப்பிலும் உன் நினைவுகள் கலந்திருக்கிருக்கிறது அழகி!
- உன்னைப்பார்க்கும் ஒவ்வொரு நொடியிலும் என் இதயத்துடிப்பில் ஒன்று எங்கோ காணாமல் போய்விடுகிறது !
- பொக்கிஷமாக்கப் படவேண்டிய நினைவுகள் என்று நான் சொல்லிக்கொள்வது உன் நினைவினை மட்டும் தான்!
- என் இதய ஆழத்தில் ஒளிந்திருக்கும் உணர்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடியவள் ! நீ மட்டும் தான்!
- அளக்கமுடியாத சந்தோஷங்கள் நிறைந்த வாழ்கை ! நீ வந்ததற்குப் பின் சாமி கொடுத்த வரம் ! கடவுளே வரமாய் எனக்குக் கிடைத்துவிட்டது போல இருக்கிறது !
- நாளை என்ன நடக்குமோ யாமறியேன் ! ஆனால் நடந்து கொண்டிருக்கிற நிமிடங்கள் யாவும் மறக்க முடியாதவை! நீ என்னோடு இருப்பதால் மட்டும்!
- சோக எழுத்துக்களை மட்டும் சுமந்துகொண்டிருந்த என் வாழ்கை பக்கங்கள் நீ வந்தது முதல் சுகங்களை மட்டும் சுமப்பது புதுமை !
- வார்த்தைகளில் இல்லாமல் செயல்களிலும் சந்தோஷத்தை நிகழ்த்திக்காட்டக்கூடிய வலிமை உன்னிடம் மட்டுமே நான் அதிகம் பார்த்திருக்கிறேன்!
- காதல் என்பது எவ்வளவு தூய்மையானதோ அவ்வளவு தூய்மையையும் உணர்ந்தது நீ என்னை காதலித்த போது தான்!
- காதல் என்பதற்கு என்ன அர்த்தமோ அதை விட ஆழமான அர்த்தத்தினை எனக்கு நீ தெரியப்படுத்தி இருக்கிறாய் !
- என் வாழ்க்கைக் கப்பலின் சிறந்த மாலுமி நீ மட்டுமே ! சோகப் புயல்களுக்கு நடுவில் நீ என்னைக் கூட்டிப்போகும் அழகினை அமைதியாய் உட்கார்ந்து கொண்டு ரசிப்பது மட்டுமே என் வேலை!
- உனக்கு மிகவும் இஷ்டமான பொழுது போக்கினை என்பொருட்டு நீ மறந்து போகிறாய் ! என்னோடு இருக்க வேண்டுமென்ற ஒரே ஆசையில் !
- என் இதழ் வாசலில் முதன் முதலில் சிவப்புச்சாயம் பூசியவள் நீ! நீ மட்டுமே!
- எனக்கென ஒதுக்கப்பட்ட நேரம் இருக்கிறது ! அவை அத்தனையும் உனக்காகவே செலவழித்து கொண்டிருக்கிறேன் நான்! நீ என் வாழ்வில் வந்தது முதல் !
- என் ஆதிமுதல் அந்தம் வரை உனக்கு அத்துப்பிடி ! ஆம்., ஏனோ உனக்கு மட்டும்!
- என் ரகசிய தேசத்தின் காவலாளி நீ! உன்னைமீறி என் ரகசியங்கள் எங்கும் போவதில்லை!
- நீ ! என் அழகியடி! அதனால் தான் உன்னை காதலிக்கிறேன்!
- இப்படி! ஒரு நிமிட யோசனையில் நூறு காரணங்கள் எழுதும் அளவிற்கு என்னையும் ஒரு கவிஞனாக்கியது நீ மட்டும் தான் அழகி ! உன்னால் மட்டுமே இத்தனையும் நிகழ்ந்தது
இந்தக் காரணங்களை எழுதத் துணையாய் இருந்த என் அழகிக்கு இது சமர்ப்பணம் !
-- Karur Prabha @ Anaadhaikathalan
Wowww.... Super Nice!!!
ReplyDelete